புதன், பிப்ரவரி 18, 2009

"ஒரு வெங்காயமும் புரியவில்லை...?"

ந்தச் செய்தி சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. கண்ணதாசன், சுந்தரராமசாமி, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, பேரா.வையாபுரிப் பிள்ளை, டாக்டர் மு. வரதராசனார் உள்ளிட்ட 28 பேர்களின் படைப்புகளை நாட்டுடமை யாக்குவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதில் என்ன ஆட்சர்யம் இருக்குன்னு கேட்க்கலாம் ? அந்த ஆட்சர்யம் என்னவென்று பின்பு கூறுகிறேன்.

இந்த அறிவிப்பு; படைப்பாளிகளின் குடும்பத்தில் பெரும் கூக்குரலை ஏற்ப்படுத்தி உள்ளது. காந்தி கண்ணதாசன் (கவிஞர் கண்ணதாசனின் மகன்) சற்று காட்டமாகவே கேட்டுள்ளார். " கண்ணதாசனின் நூல்களை நாட்டுடமை யாகுவதை எங்கள் குடும்பம் எக் காலத்திலும் ஒத்துக்கொண்டதில்லை. இனியும் ஒத்துக்கொள்ள போவதில்லை, எங்களைப் பொறுத்தவரை கண்ணதாசனின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும் நிலையில் இல்லை. அவருடைய எழுத்துக்களை தக்க முறையில் மக்களிடையே எடுத்துச் செல்கிறோம்" என்கிறார்.

கண்ணன் (எழுத்தாளர் சுந்தரராமசாமியின் மகன்) கூறும்போது "ஒரு படைப்பாளி இறந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்னரே அவரது படைப்புகள் நாட்டுடமையாகும். ஆனால், சுந்தரராமசாமி இறந்து 3 ஆண்டுகள் ஆகும் முன்னரே அவரது படைப்புகள் நாட்டுடமை யாக்குவது, அவரது சொத்தை அபகரிப்பதுபோல்" என்று குமுறுகிறார். (இருக்காதபின்னே...!)

இப்படி படைப்பாளிகளின் குடும்பத்தின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு, ஏன் தந்தை பெரியாரின் எழுத்துகளை இது வரையில் நாட்டுடமை யாக்கவில்லை. இதை தான் ஆட்சர்யம் என்றேன்.

தந்தை பெரியாரின் எழுத்துகளை நாட்டுடமையாகி விட்டால் அவரது எழுத்துகளைப் போட்டு கல்லாக் கட்ட முடியாதே என்று நினைக்கிறார் கீ. வீரமணி. பெரியாரின் படைப்புக்களை கால வரிசைப்படி வெளியீட முயன்றார் கொளத்தூர் மணி. படைப்புகள் தயாராகி வெளயிடும் முன் நீதி மன்றத்தில் இடைக் கால தடை உத்திரவு வாங்கினார் வீரமணி. தந்தை பெரியாரின் எழுத்துகள் தன்னைத் தவிர வேறு யாரும் வெளியிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இருக்கிறார் வீரமணி.

உயர்ந்த நோக்கத்தில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தந்தை பெரியாரின் கொள்கைகள் இன்னும் நாட்டுடமை யாக்கவில்லை என்பது அவரது கொள்கைகளுக்கு எதிரானது அல்லவா? பலருக்கும் இந்த சேதி சற்று அதிர்ச்சி யாகத்தான் இருக்கிறது.

பல கழக அரசுகள் வந்து வந்து போகும் நிலையில், தந்தை பெரியாரின் எழுத்துகள் எப்படித்தான் இத்தனை நாட்கள் நாட்டுடமை ஆகாமல் இருந்ததோ தெரியவில்லை. "ஒரு வெங்காயமும் புரியவில்லை...?"

கருத்துகள் இல்லை:

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...