திங்கள், ஏப்ரல் 25, 2011

தி இந்து நாளிதழில் குடுமிபிடிச் சண்டை!




"வீதிக்கு வந்தது மவுண்ட் ரோடு மகா விஷ்ணுவின் அவதாரம்!!"

"சவுக்கு இணைய தளத்தில் இந்துவுக்கு சவுக்கடி!!!"

 என்.ராம்                                 என்.ரவி



இந்து பத்திரிக்கை தான் இப்படி கருணாநிதியால் அன்போடு மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று அழைக்கப் பட்டது. இந்து பத்திரிக்கைக்கு, ஒரு மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. வீரப்பனைப் பற்றி புத்தகம் எழுதிய கர்நாடகாவின் முன்னாள் டிஜிபி ஒரு நபர் இறந்த செய்தியை மூன்று நாள் கழித்து, அந்த நபரின் வீட்டுக்கே தெரியப் படுத்தும் தந்தியைப் போன்றது என்று இந்து நாளிதழை வர்ணித்திருந்தார்.

இந்து நாளேடு அப்படி சில நேரங்களில் செய்திகளை தாமதாக வெளியிட்டாலும், இந்து நாளேட்டில் ஒரு செய்தி வந்து விட்டால், அந்தச் செய்தி 100% உண்மை என்று எடுத்துக் கொள்ளும் அளவுக்கு, அந்த நாளிதழுக்கு ஒரு நம்பகத் தன்மை உண்டு. படித்த வர்க்கத்தின் மத்தியில் இந்த நாளிதழுக்கு, மிகுந்த ஆதரவு உண்டு.



ஈழப் போரின் போது, இந்த நாளிதழ் எடுத்த நிலைபாடுகள், நேரடியான தமிழின விரோத நிலைபாடு. இந்த நாளிதழின் ஆசிரியர், என்.ராமின் புலிகள் விரோத கொள்கையின் காரணமாகவே, பல்வேறு சமயங்களில் சிங்கள அரசுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் நிலைபாடுகளை எடுத்தது. இவ்வாறு தொடர்ச்சியாக இந்து எடுத்த தமிழின விரோத நிலைபாடுகளின் காரணமாகவே, சிங்கள அரசு, என்.ராமுக்கு லங்கா ரத்னா விருது கொடுத்து கவுரவித்தது.



யார் இந்த ராம் ? இந்த ராம் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொள்பவர். இடது சாரிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் தொடர்பான செய்திகளுக்கு இந்துவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படுகின்றன என்பது உண்மையே. ஆனாலும் தன்னை கம்யூனிஸ்ட், அழைத்துக் கொள்ளும் இந்த லங்கா ரத்னா, செய்து கொண்டிருக்கும் காரியங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

அதற்கு முன், இந்து பத்திரிக்கையின் வரலாறு என்ன என்பதைப் பார்ப்போம்,

20 செப்டம்பர் 1878ல் இந்து பத்திரிக்கையின் முதல் இதழ் வெளிவருகிறது. தஞ்சை மாவட்டம், திருவையாற்றைச் சேர்ந்த சுப்ரமண்ய அய்யர் வீரராகாவச்சாரியார், டிடி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், கேசவராவ் பந்துலு, மற்றும் சுப்பாராவ் பந்துலு ஆகியோராடு சேர்ந்து, ஒரு ரூபாய் 12 அணா முதலீட்டில் தொடங்கப் பட்டது.



பின்னாளில் மற்றவர்கள் விலகிக் கொள்ள, வீரராகவாச்சாரியார் மற்றும் சுப்ரமண்ய அய்யங்கார் மட்டும் இந்துவை தொடர்ந்து நடத்தினர்.



முதலில் வார இதழாக ஒவ்வொரு புதனன்றும், மாலையில் வெளி வந்தது. சென்னை மின்ட் தெருவில் தான் அச்சடிக்கப் பட்டது. வாரத்திற்கு 80 காப்பிகள் மட்டுமே அடிக்கப் பட்டன. 1 அக்டோபர் 1883 முதல், வாரத்திற்கு மூன்று இதழ்கள் வெளி வந்தது.   அப்போது இந்த பேப்பரின் சைஸ், இப்போது வரும் பேப்பரில் கால் பாகம். 1 ஏப்ரல் 1889 முதல், நாளிதழாக வெளி வரத் தொடங்கியது.



அக்டோபர் 1898ல் இந்து நாளிதழின் சர்குலேஷன் பெருமளவில் குறையவும், சுப்ரமணிய அய்யர் விலகிக் கொள்கிறார். பிறகு சில நாள், வீரராகவாச்சாரியார் மட்டும் நாளிதழை தொடர்ந்து நடத்தகிறார். அவருக்கும் கட்டுப்படயாகாததால், இந்துவை விற்க முடிவெடுக்கிறார்.



அப்போது, இந்த பத்திரிக்கையின் சட்ட ஆலோசகராக இருந்த, கும்பகோணத்தைச் சேர்ந்த கஸ்தூரி ரங்க ஐயங்கார், இந்து நாளிதழை விலை கொடுத்து வாங்குகிறார்.



இந்து நாளிதழ் கஸ்தூரி & சன்ஸ் என்ற பெயரில், ஜி.நரசிம்மன், எஸ்.பார்த்தசாரதி, எஸ்.ரங்கராஜன், ஜி.கஸ்தூரி, ஆகியோரால் நிர்வகிக்கப் பட்டு வருகிறது.



எண்பதுகளில், இவர்களின் வாரிசுகள் பொறுப்பேற்கிறார்கள். நரசிம்மனின் பிள்ளைகள், என்.ராம், என்.ரவி மற்றும் என்.முரளி.   பார்த்தசாரதியின் வாரிசுகள், மாலினி பார்த்தசாரதி, நிர்மலா லட்சுமணன், மற்றும் நளினி கிருஷ்ணன்.   ரங்கராஜனின் வாரிசுகள், ரமேஷ் ரங்கராஜன், விஜய அருண் மற்றும், அகிலா அய்யங்கார். கஸ்தூரியின் வாரிசுகள், கே.பாலாஜி, கே.வேணுகோபால் மற்றும், லட்சுமி ஸ்ரீநாத். (அது எப்டி கரெக்டா எல்லாரும் மூணு பிள்ளை பெத்துருக்காங்க ?)



இப்போது இந்த வாரிசுகளுக்குள் உள் குத்து உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வாரிசு மோதலில், முக்கிய பங்கை வகிப்பவர், என்.ராம். இவரை இந்து நாளேட்டின் கருணாநிதி என்று தாராளமாக வர்ணிக்கலாம். ஏனென்றால், 87 வயதிலும், அடுத்த முதல்வர் நான் தான் என்று பெற்ற பிள்ளைகளுக்குக் கூட வழி விடாமல், அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருப்பது போலத்தான் என்.ராமும் பண்ணிக் கொண்டிருக்கிறார்.



இந்த நாளேட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60.   ஆனால், என்.ராம் மட்டும், 65 வயது வரை ஆசிரியராக தொடர்ந்தார்.   நிர்வாகக் குழுவில் இதற்குத் தகுந்தார்ப் போல, விதிகளை மாற்றிக் கொண்டார்.



இப்போது எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால், 65 வயது முடிந்தும் கூட, ராம் ஓய்வு பெற மறுப்பதுதான்.   என்.ராம், இந்து நாளேட்டின் கருணாநிதி தானே ?



இப்போது ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் என்.ரவியை அந்தப் பதவியில் இருந்து நீக்க ராம் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இந்த முயற்சியை ஒட்டி, ராமின் சகோதரரும், இந்து பத்திரிக்கையின் மற்றொரு ஆசிரியருமான ரவி, இந்து பத்திரிக்கையின் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இதோ.

அன்பார்ந்த சக பணியாளர்களே,                     

 என்.ரவி



நாம் இப்போது நுழையும் அடுத்த விநாடியிலிருந்து, மிக நீண்டதொரு போராட்டமும், பிரச்சினையும் மிகுந்த ஒரு தருவாயில் நுழையப் போகும் சூழலில், உங்களின் புரிதலை வேண்டி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

மோசமான நடத்தையின் காரணமாக என்னைக் கவலையடையச் செய்யும் வகையில், என்.ராம் மற்றும் சில நிர்வாக இயக்குநர்கள் கடந்த 18 ஏப்ரல் 2011 அன்று கூடி, என்னை ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, 2004ல் இந்துவில் சேர்ந்த சித்தார்த் வரதராஜனை ஆசிரியராக்க முடிவெடுத்தள்ளனர்.

 

இந்தப் பத்திரிக்கையில் நிருபராகச் சேர்ந்த 1972ம் ஆண்டு முதல், நான் பல ஆண்டுகளாக, அனைவரின் நிறைவுக்கும் ஏற்ற வகையில் பணியாற்றி வருகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நாளிதழின் முன்னேற்றத்திற்காக, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் பணியாற்நி வருவதை நீங்கள் அறிவீர்கள். 1991ம் ஆண்டு நான் பொறுப்பேற்றதிலிருந்து, சென்னையை மையமாகக் கொண்டு வெளியாகி வந்த இந்த நாளிதழை, மாநிலத்தின் பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்ததோடு, ஒரே பக்கமாக இருந்த உள்ளுர் செய்திகளை நான்கு பக்கங்களாக மாற்றியதோடு, தேசிய அளவுச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு கவர்ச்சிகரமான பகுதிகளை அறிமுகப் படுத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.   வாசகர்களின் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி, வாசகர்களுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி இச்செய்தித்தாளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதையும் நீங்கள் அறிவீர்கள்.   செய்தித்தாளின் நேர்மையான கொள்கை மாறாமல், பல்வேறு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள், நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக, அச்சமின்றி இச்செய்தித்தாள் செயல்பட்டு வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.



பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், நான் பொறுப்பேற்ற, ஜனவரி 1991ல் 4,52,918ஆக இருந்த இந்நாளேட்டின் விற்பனை, ஜுன் 2003 அன்று உள்ளபடி 9,33,458ஆக உயர்ந்துள்ளது.   குறிப்பாகச் சொன்னால், 4,80,540 காப்பிகள் (106%) விற்பனை உயர்ந்துள்ளது.   ஆனால், சமீபத்தில், இந்துஸ்தான் டைம்ஸுக்கு நிகராக இருந்த, இந்து பத்திரிக்கையின் விற்பனை, தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது.   சமீபத்திய சந்தை ஆய்வின் படி, வாசகர்கள், இந்து நாளேட்டின் மீது கோபத்தில் உள்ளதாகவும், பத்திரிக்கையில் உள்ள செய்திகள், ஆர்வக் குறைவை ஏற்படுத்துவதாகவும், இடதுசாரி அரசியலின் மீது, காழ்ப்புணர்வோடு இருப்பதாகவும் வாசகர்கள் கருதுவதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 4 மே 2010 அன்று 65 வயதை அடைந்த ராம், தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி, நான் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.   ஆனால், தீய எண்ணத்தோடு, ராம் இந்த ஒப்பந்தத்தை மீறியதால், தலைமை ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்கும் விவகாரம் அப்படியே நின்று போயுள்ளது.



ராமின் நம்பிக்கை துரோகத்தின் ஒரு பகுதியாக, இயக்குநர்கள் குழுமத்திலிருந்த என்.முரளியின் அதிகாரங்களை பறித்து அவரை நீக்கியதை, கம்பெனி லா போர்டு (தீர்ப்பாயம்) ரத்து செய்ததோடு, மோசமான, நியாயமற்ற நடவடிக்கை என்றும் தீர்ப்பளித்துள்ளது.   இவ்வாறு தீர்ப்பு வந்த நான்கே மாதங்களுக்குள், அதே போன்ற நியாயமற்ற மற்றொரு நம்பிக்கை துரோகத்தின் வடிவாக ராமும், அவரது குழுவைச் சேர்ந்த மற்ற இயக்குநர் குழு உறுப்பினர்களும், இந்நாளேட்டின் பாரம்பரியத்திற்கு எதிராகவும், கம்பெனி லா போர்டின் தீர்ப்புக்கு எதிராகவும், நான் ஆசிரியர் பொறுப்பேற்பதை தடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.



ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியான ஓய்வு தேதிக்கு ஒரு ஆண்டு கழித்தும், கம்பென் லா போர்டின் தீர்ப்புக்கு பிறகு, பதவியில் தொடர எவ்வித அருகதையும் இல்லாத ராம், ஐம்பதுகளில் இருக்கும் மற்ற ஆசிரியர் குழு உறுப்பினர்களை, அழிக்கும் உத்தேசத்தோடு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கூட ஆசிரியர் பொறுப்புக்கு வரக் கூடாது என்ற நோக்கில் ஒரு தீய திட்டத்தை இயற்றியுள்ளார்.   அடுத்து யார் ஆசிரியர் என்பதை முடிவு செய்யும் திட்டத்திற்கு பதிலாக, ஒட்டு மொத்தமாக, எல்லோரையும் அழிக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார்.   திடீரென்று, விதிகளை மாற்றி இந்து நாளிதழின் உரிமை வேறு, நிர்வாகம் வேறு, என்று பிரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, என்னோடு சேர்த்து, இணை ஆசிரியர் நிர்மலா லட்சுமணன் மற்றும் மற்றொரு ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி ஆகியோரும் பதவி விலக நிர்பந்திக்கப் படும் படி திட்டமிடப் பட்டுள்ளது.



இது போல பதவி நீக்கம் செய்வதைத் தவிர்த்து, 2003ல் தலைமை ஆசிரியராக பொறுப் பேற்றதிலிருந்து, ஆசிரியர் குழுவின் அமைப்பை மாற்றும் பல்வேறு திட்டங்களை எங்கள் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி வந்துள்ளார்.



ஆசிரியர் குழுவின் விவாதங்களின் போது, சில அரசியல் சக்திகளுக்கு தேவையற்ற ஆதரவை தருவதும், சில இடது சாரித் தலைவர்களுக்கு கூடுதலாக கவரேஜ் தருவதும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராசாவுக்காக வக்காலத்து வாங்கியதும், இதே போல ஊழல் குற்றச் சாட்டுகளில் சம்பந்தப் பட்ட, சுரேஷ் கல்மாடி அஷோக் சவாண் மற்றும் எடியூரப்பாவை பதவி விலக வற்புறுத்திய அதே வேளையில் இதே போல ஊழலில் ஈடுபட்டு, ஏராளமான ஆதாரங்கள் குவிந்தும், ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லாமல் தவிர்த்தது, சீன நாட்டுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது, சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது, இவை எல்லாவற்றையும் விட எந்த தலைமை ஆசிரியிரும் செய்யாத வகையில், என்.ராம் ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்களின் படங்களை பத்திரிக்கையில் பிரதானமாக வெளியிட்டு தனக்கே விளம்பரம் தேடிக் கொண்டது, ஆகிய செயல்கள், பன்னாட்டு முதலாளிகள் நடத்தும் நாளிதழ்களே வெட்கப் படக் கூடிய செயல்களாகும்.

இந்த நாளேடானது, மற்ற எல்லா விஷயங்களையும் விட, கொள்கையில் நேர்மையையே தனது முக்கிய குறிக்கோளாய் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், சமீப காலமாக, இந்தக் கொள்கையையே கேள்விக்குறியாக்கும் வகையில், விளம்பரம் மூலமாக பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிடும் அளவுக்கு இந்து நாளேடு தரம் தாழ்ந்து விட்டது.   விளம்பரத்துக்கும், செய்திகளுக்கும் இடையே இருந்து வந்த மதில் சுவரை, மதில் சுவருக்கு பதிலாக ஒரு நூலாக மாற்றும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது.



இது போல ஒரு தந்திரமான உடன்பாட்டின் வெளிப்பாடாக, 22 மே 2010 அன்று, ராசாவின் லைசென்ஸ் கொடுத்த செயல்களை நியாயப் படுத்திய ஒரு பேட்டி வெளி வந்தது. இந்தப் பேட்டியை பிரதம மந்திரி தனது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்தப் பேட்டிக்கு கைமாறாக, அவசர அவசரமாக அதே நாளன்று, ராசாவால், தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளிக்கப் பட்ட தொலைத் தொடர்புத் துறையின் முழுப் பக்க வண்ண விளம்பரம் வெளியிடப் பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது. பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இது போன்ற நடவடிக்கைகளை தொடர்வதற்காகவே, ஆசிரியர் குழுவிற்கு இருக்கும் சுதந்திரத்தை மாற்றி, நாளிதழின் ஆசிரியர், வணிக பிரதிநிதிகள் உள்ள இயக்குநர் குழு சொல்வதைக் கேட்டு செயல்படும் கைப்பாவையாக ஆக்கும் வகையில், விதிகளை மாற்ற, முயற்சி நடைபெற்று வருகிறது. இந்துவின் மதிப்பீடு மற்றும் செயல்பாடுகளின் (Editorial function) மீது தொடுக்கப் பட்ட இது போன்ற நடவடிக்கைகள் இந்து நாளேட்டின் ஆன்மாவின் மீத தொடுக்கப் பட்ட தாக்குதலாகும்.   இது போல மோசமான செயல்பாடுகளில் ஈடுபட்டு விட்டு, இந்துவின் செய்திக் கொள்கை மிக அதிக மதிப்பீடுகளை கொண்டது என்று இப்போது அறிவித்திருப்பது வெற்று கோஷமேயன்றி வேறல்ல.



அனைத்து வகையான முதலீட்டாளர்களும் ஊடகங்களை தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரத் துடிக்கும் நேரத்திலும், ஊடகங்கள், பலப் பல கவர்சிகரமான விஷயங்களைக் கொண்டு வந்து வாசகர்களை கவர போட்டி போடும் நேரத்தில், இந்துவுக்கு இந்த நெருக்கடி, வந்துள்ளது.   பத்திரிக்கையாளர்களின் ஒரு அங்கம் என்ற முறையில், நீங்கள் அனைவரும் இந்து பத்திரிக்கையின் வளர்ச்சிக்கும், கடும் போட்டி நிலவும் ஒரு சூழலில் இந்துவின் கொள்கையை விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறீர்கள்.   அரை குறை உண்மைகளோடு பரவும் வதந்திகளைத் தடுக்கும் பொருட்டு, என்ன நடக்கிறது என்ற உண்மைகள், இயக்குநர் குழுவின் அறையோடு நின்று விடாமல், இந்தப் பத்திரிக்கையின் ஒரு அங்கம் என்ற முறையில் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.



இந்த உத்வேகத்திலேயே நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.   மேலும், இந்தச் சதித் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று உறுதியையும் நான் உங்களுக்கு அளிக்கிறேன். நம் அனைவருக்கும் மிகவும் நெருக்கமான, இந்துவின் நேர்மையான கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற இந்தப் போராட்டத்தில், உங்களின் புரிதலையும், ஆதரவையும் வேண்டியே இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.



என்.ராம் என்ற போலி கம்யூனிஸ்ட்டின் உண்மையான முகம் தெரிகிறதா ?   தன்னுடைய சொந்த நலன் காக்கப் பட வேண்டும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்.



ராமின் இந்த முடிவை எதிர்த்து, மீண்டும் நீதிமன்றத்தை அணுக இருப்பதாக, ரவி தலைமையிலான டீம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 ந்து நாளேட்டின் 50 பங்குதாரர்களின் கூட்டம் மே 20 அன்று, கூட்டப் பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.



உரிமை உள்ள மற்றவர்களை வீழ்த்தி, இந்து பத்திரிக்கையை சட்ட விரோதமாக கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே ராம், 2006 முதலாகவே, கருணாநிதியின் கைப்பாவையாக ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார் என்பதை, அவரது சொந்தத் தம்பி எழுதிய கடிதம் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.



ராசாவைக் காப்பாற்றுவதற்காக, ராசாவின் பேட்டியை வெளியிட்டதோடு, ராசாவுக்கும் மன்மோகனுக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தையும் முழுமையாக வெளியிட்டு, அனைத்து விவகாரங்களும், மன்மோகனுக்கு தெரிவிக்கப் பட்ட பின்னரே நடந்தது போலவும், செய்தி வெளியிட்டது என்.ராம் தான். 66 கோடி ரூபாய் ஊழலான போபர்ஸ் ஊழலை தொடர்ந்து வெளியிட்டு, ஒரு அராசாங்கத்தையே கவிழ்த்த ஒரு நாளேட்டை தனது சொந்த நலனுக்காக, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலை மறைக்க பயன்படுத்துகிறார் என்றால், ராசாவை தலித் இனத்தின் “தகத்தகாய கதிரவன்” என்று அழைத்த கருணாநிதியை விட மோசமானவர் அல்லவா ?   இந்து என்.ராம் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் வலம் வரும், ஒரு மிக மோசமான தீய சக்தி என்றே சவுக்கு பார்க்கிறது.

நன்றி: சவுக்கு இணைய தளம்.
http://savukku.net/home/735-2011-04-24-12-16-08.html

சனி, ஏப்ரல் 23, 2011

'கோடை விடுமுறையும் - பாலியல் நோயும்'



கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்!



அப்போ நான் எட்டாம் வகுப்போ அல்லது ஒன்பதாம் வகுப்போ படித்துக்கொண்டு இருந்தேன். கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு செல்வது சகஜமான ஒன்று. எங்கள் மாமா வீடு கொல்லுமாங்குடியில் (அப்போ அது தஞ்சை மாவட்டம், இப்போ திருவாரூர் மாவட்டம்) இருந்தது, எங்கள் மாமா டாக்டர் கலைமோகன் மருத்துவம் முடித்து சொந்த ஊரிலேயே கிளினிக் வைத்திருந்தார்.



சம்மர் விடுமுறைக்கு சொன்ற நான், கிளினிக்கில் அவருக்கு உதவியாளராய் மாறினேன். மாலை மட்டும் கிளினிக் என்பதால், அவ்வப்போது சினிமாவுக்கு மாயவரம் சென்றுவிடுவோம். அப்போ விஜயா தியேட்டரில் 'அச்சமில்லை அச்சமில்லை' படம் பார்த்ததாக நினைவு. தினமும் மாமாவோடு கிளினிக் செல்வது வாடிக்கையாகிவிட்டது.



அங்கு கடைத்தெருவில் சூடாக வடை போடுவார்கள். அது என்ன வகை வடையென்றே நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. மொறு மொறுவென்று 'இரால்' சேர்த்து வடை 'சூப்பரா' இருக்கும். சும்மா..... வாசனை கடைத்தெருவே தூக்கும். அப்புறமென்ன " மாமா... வடை வாங்கட்டுமா?" என்பேன். அவர் சட்டையிலிருந்து பணம் எடுத்துத் தர ஓட்டமாய் ஓடினால்.... "இருங்க..." அங்க ஒரே கூட்டமாய் இருக்கும். எல்லோரும் கையை நீட்டிக் கொண்டு இருக்க.... வடை சுட சுட காலியாகிவிடும். வடை தீர்ந்து விடுமே... என்று மனம் வேறு 'பக்கு பக்குன்னு அடிச்சிக்கும். நல்ல வேளை கடைகார பாய் நம்மைப் பார்த்ததும் , டாக்டருக்கென்று உடனே வடையை மடித்து கொடுத்துவிடுவார். அதனால் 'வடை போச்சே' என்ற கவலையில்லாமல் வாங்கிவந்துவிடுவேன்.



பெரும்பாலும் அதிக கேஸ்கள் வராது. மாமா அப்போதுதான் எம்பிபியஸ் முடித்திருந்ததால் இன்னும் நிறைய பேருக்கு தெரியாமல் இருந்தது. இதில் வருபவர்களும் தெரிந்தவர்களாக இருந்ததால் பெரும்பாலும் ஓசி வைத்தியம்தான். சில நேரங்களில் அவருக்கு துணையாக நானும் குமுதம் ஆனந்த விகடன் படித்துக் கொண்டு இருந்தேன்!?



அப்படி இருக்க...ஒரு நாள் ஏழு மணி இருக்கும். ஒரு நடுத்தர வயது கிராமத்து இளைஞன் கைலியை கட்டிக்கொண்டு சற்று அவஸ்த்தையோடு காலை அகட்டிவைத்து நடத்துவந்தான். ஒரு படத்தில் விவேக் வருவதுபோல். கூட துணைக்கு அவனது கூட்டாளி. வேதனையின் உச்சத்தில் இருந்த அவன், வந்த வேகத்தில் பெஞ்சில் சுருண்டு படுத்துவிட்டான். அவனது கூட்டாளிதான் 'விளக்கி' சொன்னான். அதாவது... அவனது கைலியை 'விலக்கி' சொன்னான்.



"பாபு ...." என்று என்னை கூப்பிட்டார் மாமா. "அந்த டார்ச்ச லைட்டை எடுத்துக்கிட்டு வா..." என்றார்.



அவனது கைலி முழுவதும் ஆங்காங்கே நனைந்திருந்தது. மாமா கையுறை மாட்டிகொண்டு அவனது கைலியை விலக்க...அவனது ஆண் குறி வீங்கி....முனையில் தண்ணீர் பந்து போல் ஒரு பெரும் கொப்பளம் இருந்தது. டார்ச்லைட் அடித்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதுவரையில் ஒப்படி ஒரு காட்சியை நான் பார்த்தில்லை. ஆண் குறியிலிருந்து நீர் வடிந்துக் கொண்டு இருந்தது.



"என்னப்பா ஆச்சி..."



" ஒரு பொம்பளைக்கிட்ட போனேன்... டாக்டர், முதல்ல லேசா அரிச்சது, அப்புறம் வீங்கிக்கிட்டு 'சீழ்' வச்சி கொப்பளமா மாறிட்டது" என்றான்.



"ஏன்யா.... இப்படி ஆழம் தெரியாம காலை விடுறிங்க, பாதுகாப்பா இருக்க வேண்டியதுதானே? " என்று அவனை திட்டிக் கொண்டே சிகிச்சை அளித்தார்.



"..கல்யாணம் ஆச்சா...?" " என்ற கேள்விக்கு; இல்லை என்று அவஸ்த்தையோடு தலைஅசைத்தான்.



"ஏய்யா...நிரோத் போட்டுக்க வேண்டியதுதானே..."



"இல்ல டாக்டர்..... அவசரத்தில கிடைக்கில..." (என்ன அவசரமோ...எவனுக்குத் தெரியும்)



"இது வீட்டுக்கு தெரியுமா...?"



"தெரியாதுங்க டாக்டர்.... இப்போ ஃபிரண்டு வீட்டில இருக்கேன். ஒரு வாரமா வீட்டுக்கு போகல... வேலைன்னு அம்மாகிட்ட பொய்சொல்லிட்டு வந்தேன். இது யாருக்கும் தெரியாது" என்று அழுதவாறே சொன்னான்.



மாமா அவனிடம் பேசிக்கொண்டே மருத்துவம் செய்ய... செய்ய... நான் கை வலிக்க... டார்ச் லைட்டைக் அடித்துக் கொண்டு இருந்தேன். அவனது கூட்டாளி கைலியை விலக்கிப் பிடித்தவாறு இருந்தான். மாமா 'அதை' நன்றாக துடைத்து சுத்தம் செய்து மருந்துகள் போட்டு கட்டினார். அவனுக்கு உபத்திரம் குறைய அங்கேயே மாத்திரை சாப்பிட வைத்து... சற்று நேரம் ஓய்வெடுக்கவைத்தார்.



அவன் போனதும். " இது என்ன நோய் மாமா....." என்றேன். ஆர்வம் தாங்காமல்.



"உனக்கு சொன்னா புரியாதுடா..." என்றார்.



"ப்ச்....சொல்லுங்க" என்றேன்.



" இத VDன்னு (Venereal Disease) சொல்லுவாங்க. தவறான பொம்பளைங்ககிட்ட போனா இப்படிதான் வரும். இதை கிராமப்புறங்களில் 'இரகசிய நோய்'ன்னும் சொல்லுவாங்க. ரொம்ப ஆபத்தான நோய். ஒழுக்கமாக இருந்தா இந்த நோய் வராதுடா..." என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இந்த 'பிலக்கா' பையனிடம் எதுக்கு விரிவா சொல்லனும் என்று நினைத்தாரோ என்னவோ...?!

ஆணுறை அவசியமா?


அப்போதெல்லாம் செக்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எயிட்ஸ் பற்றியும் நாம் அறிந்திருக்கவில்லை. ஆண் பெண் உறவின் போது ஆணுறை (நிரோத்) பயன்படுத்துவதும் அப்போது எளிதானதாக இல்லை. இப்போது போல் அப்போது நிரோத் கடைகளிலும் கிடைக்காது. சுகாதார ஆய்வாளர்கள் அல்லது செவிலியர்கள், மக்கள் தொகையை கட்டுப் படுத்த கிராமங்கள் தோறும், வீதிகள் தோறும் நிரோத்தை விநியோகம் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் ஒரு சாதனமாகத்தான் நிரோத் அப்போது பார்க்கப்பட்டது. பால்வினை நோயை தடுக்கும் ஒரு காரணியாகவும் பிரபலப் படுத்த அரசாங்கம் முணையவில்லை.



அதுவும் நிரோத்தின் பயன்பாடு அரியாத பெரிசுகள், அதை சிறுவர்களிடம் விளையாட கொடுத்துவிடுவார்கள். அதை அவர்கள் பலூன் போல் ஊதி விளையாடிய கொடுமையும் உண்டு. அந்தளவிற்கு செக்ஸ் அறிவு நம்மிடம் இருந்தது?!.



அதனால் கிராமப்புறங்கள் என்றில்லாமல் நகரப்புறங்களில் கூட பால்வினை நோய் பற்றிய அடிப்படை அறிவு இல்லை. தற்போது ஊடங்களில் வரும் நிகழ்ச்சிகளால், இளைய சமுதாயம் செக்ஸ் பற்றி, பால்வினை நோய் பற்றி தமக்கு தேவையான அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருக்கின்றனர்.



மேற்கூறிய சமாச்சாரங்கள்... கூட நான் இப்போது அறிந்ததுதான்.



சரி போகட்டும்....





பிற்பாடு மாமா DO முடித்து கண் மருத்துவராகிவிட்டார். திருச்சி அரசு மருத்துவமணையில் RM ஆக இருந்து, இப்போ மலேஷியாவில் பணிபுரிந்துக் கொண்டு இருக்கிறார்.



இப்படியாக அந்த மாத கேடை விடுமுறை சற்று வித்தியாசமாகக் கழிந்தது எனக்கு!!!.


()()()()()()()()()()




வியாழன், ஏப்ரல் 14, 2011

கணையாழி இதழ் ஜெயகாந்தன் வெளியீடு



சிற்றிலக்கியங்களில் முதன்மையானதும் தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதுமான கணையாழி வெளியீட்டு விழா நேற்று சென்னை தி நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது.

 
  

இடையில் சில காலம் நின்று போயிருந்த கணையாழி இதழை தசரா அறக்கட்டளை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.

'கணையாழி' கலை இலக்கிய திங்களிதழை எழுத்தாளர் ஜெயகாந்தன் வெளியீட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ம. ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசும் போது " கணையாழியில் நான் எழுதியதில்லை, ஆனால் கணையாழி என்னை பற்றி எழுதியது..., எதற்காகச் சொல்கிறேன் என்றால், கணையாழி தொடாத விஷயம் ஒன்றும் இல்லை என்பதற்காகத்தான். எழுத்தை எழுதுவது ஒரு சுகம், எழுதாமல் இருப்பது ஒரு சுகம், பிறர் எழுத்தை வாசிப்பதும் சுகம்" என்றார். கூடவே " கணையாழியில் நானும் எழுதுவேன்" என்ற போது அரங்கம் அதிர்ந்தது.



முன்னதாக தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச் செய்தி விழாவில் படிக்கப்பட்டது.



எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தனது தலைமை உரையில் "1965 வாக்கில் தில்லியில் கஸ்தூரிரங்கன் கணையாழியை தொடங்கும் போது, அது அரசியல் இதழாகத்தான் இருந்தது. பிற்பாடு நான், அசோகமித்ரன், சுஜாதா போன்றோர் சேர்ந்தபிறகு அது இலக்கிய இதழாக மாறியது" என்றார். "கணையாழிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு" என்று கூறிய எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி; கணையாழியின் 'பொறுப்பாசிரியராக' தனது பொறுப்பை ஏற்றுள்ளார்.



தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரும், கணையாழியின் ஆசிரியருமான ம. ராஜேந்திரன் பேசும்போது கணையாழி "அணிகலன் அல்ல அது ஒரு அடையாளம். இவ்வளவு நாட்களாக நின்று போயிருந்த கணையாழி 'விதை உறக்கக் காலத்தில் இருந்தது' எனலாம். ஒரு விதை போட்டவுடன் உடனே முளைத்து விடுவதில்லை. அது முளைக்க சிறிது காலம் ஆகலாம், அது போல்தான் இதுவும். கணையாழி விதை போன்றது. அது இப்போது முளைத்திருக்கிறது" என்றார். தொடர்ந்து " கணையாழி என்றாலே அது கை மாறுவதுதான்" என்ற போது அரங்கம் அதிர்ந்தது. ஒவ்வொரு முறையும் அது நன்முறையில் மாறியிருக்கிறது" என்றார்.



நடிகர் நாசர் விழா துவங்கி அரைமணி நேரம் கழித்துதான் வந்தார். காலம்தாழ்த்தி வந்தமைக்கு மன்னிப்பு கேட்டுகொண்ட அவர், " போதுவாக நடிகர்கள் என்றாலே, விழா துவங்கி சிறிது நேரம் கழித்துதான் வருவார்கள் என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள். அப்படி தலைவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது வந்தால்..... என்ன சலசலப்பு நடக்கும், அதனால் என்ன நிகழும் என்பது நமக்கு தெரியும்....?! சரி... நாம் அதற்குள் போக வேண்டாம். நான் லேட்டாக வந்ததற்கு காரணம், சென்னையின் டிராபிக்தான்" என்றவர் தொடர்ந்து நனெல்லாம் 1983ல்தான் கதைகள் படிக்கத் தொடங்கினேன். பின்பு இலக்கியம் மீது அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதே கணையாழி இதழை கையில் வைத்துக் கொண்டுதான் திரிவேன்" என்றார். "இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து யாருக்கும் சொல்ல வில்லை, சொன்னால் அது அரசாங்கத்திற்கு எதிராக போய்விடுமோ என்பதால் சொல்லவில்லை " என்றபோது அரங்கம் கைத்தட்டளில் அதிர்ந்தது.





தசரா அறக்கட்டளை.  தமன் பிரகாஷ், சாமிநாதன், ராஜேந்திரன் எனும் மூவரின் முதல் எழுத்துக்களைக் கொண்ட 'தசரா' 1994 அக்டோபரில் கலை இலக்கிய மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட அமைப்பாகும். இதில் தமன் பிரகாஷ் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு மார்வாடி. அவர் அட்சரசுத்தமாக தமிழ் பேசியது காதுகளுக்கு இனிமையாக இருந்தது. இவர்களின் மூலதனம்தான் கணையாழியை மூண்டும் தமிழர்களின் விரல்களில் அணிவித்தது.

முன்னதாக நா. சுவாமிநாதன் வரவேற்புரையாற்ற, தமன் பிரகாஷ் முன்னிலை வகித்தார். விழாவில் ட்ராஸ்கி மருது, பாடலாசிரியர் நா.முத்துகுமார், ரெ.பாலகிருஷ்ணன்,கவிஞர் குட்டி ரேவதி போன்றோர் சிறப்புரையாற்றினார்கள். விழா முடிவில் கவிதா பதிப்பகம் சேது. சொக்கலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினர்.



கீழே


விழா அரங்கம் இளைஞர்களால் நிறைந்திருந்தது.


கணையாழி ஆண்டு சந்தா கட்ட நிறைய பேர் ஆர்வம் காட்டினார்கள்.


விழாவில் ஞானி, ஈரோடு தமிழன்பன் ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், கனித்தமிழ் ஆண்டோ பீட்டர் போன்றோரை பார்க்க முடிந்தது.


விழா தொடங்கும் முன்னர் அங்கிருந்த கேண்டினில் அனைவருக்கும் டீ, பிஸ்கட் தரப்பட்டது.


விழா ஏற்பாடுகளை கவிதா பதிப்பகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

















விழாத் துளிகள்!?

புதன், ஏப்ரல் 13, 2011

இன்று மற்றுமொரு விடுமுறை நாளா?





அப்படி இப்படி என்று நாம் காத்திருந்த நாளும் வந்துவிட்டது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநில சட்டசபைக்கு இன்று ஓரேகட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.



உடனே கிளம்புங்கள்

முன்பெல்லாம் 70-80 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறும். மக்கள் ஆர்வமாக வாக்களிக்க செல்வார்கள். இப்போதெல்லாம் வாக்குபதிவு சதவீதம் வெகுவாக குறைந்து வருகிறது. கிராமப்புரங்களில் மக்கள் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்ற எப்போதும் தவறியதில்லை. ஆனால் நகர மேட்டுக்குடி மக்கள் ஓட்டுப்பதிவு நாளை 'மற்றொமொரு விடுமுறை நாளாக' பார்க்கின்றனர்.


ஓட்டளிக்க செல்லாமல் வீட்டில் இருந்துவிட்டு, வீட்டில் செய்யும் பலகாரங்களை சுவைத்துவிட்டு அடுத்த நாள் அலுவகத்தில் வந்து அவிழ்த்துவிடுவார்கள். "நமக்கெல்லாம் இந்த அரசியல் வாதிகள் மீதும் ஓட்டளிப்பதன் மீதும் நம்பிக்கை கிடையாது... " இவங்க சம்பாரிக்க நாம வாக்களிக்க வேண்டுமா?" என்று தனக்குத்தானே கேட்டுவிட்டு ஓட்டுசாவடிக்கே செல்லாமல் இருந்துவிடுவார்கள்.



இவர்கள்தான் இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள். இந்த ஜனநாயகத்தை புரட்டி போடக் கூடிய சக்தி நம்மிடம் இருக்கிறது என்ற உண்மையை உணராமலேயே இருப்பவர்கள்.



இங்கு நிறைய பேர்... 'நான் ஓட்டளிக்கவில்லை....எனக்கு ஓட்டே கிடையாது" என்று பெருமையாக சொல்லுவார்கள். அரசாங்கம் பல கேடிகளை கொட்டி இந்த தேர்தலை நடத்துகிறது. அதில் நாமும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும்.



கிழே உள்ள விபரங்களை கண்டாலே நமக்கு தேர்தலின் விஸ்வரூம் புரியம். அப்படி ஒரு மகத்தான 'ஜனநாயகத் திருவிழா' இதில் நாமும் ஒரு அங்கமாக இருக்கவேண்டும்.



தமிழ்நாடு

தொகுதிகள் : 234

மொத்த வாக்காளர்கள் : 4,71,16,687


ஆண் வேட்பாளார்கள் : 2,612


பெண் வேட்பாளார்கள் : 136


வாக்குச்சாவடிகள் : 54,314



புதுச்சேரி

தொகுதிகள் : 30


மொத்த வாக்காளர்கள் : 8,10,635


ஆண் வேட்பாளார்கள் : 181


பெண் வேட்பாளார்கள் : 6


வாக்குச்சாவடிகள் : 867



கேரளம்

தொகுதிகள் : 140


மொத்த வாக்காளர்கள் : 2,31,47,871


ஆண் வேட்பாளார்கள் : 893


பெண் வேட்பாளார்கள் : 78


வாக்குச்சாவடிகள் : 2118




தீவிர பாதுகாப்பு

நீங்கள் சுதந்திரமாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.



அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிருந்து துணை ராணுவப்படையினர் 24 ஆயிரம் பேர் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிகளிலிம் வெப் காமிரா பொருத்தப்பட்டு, நடவடிக்கைகள் கண்கானிக்கப்பட்டு உடனுக்குடன் அவை நேரலையாக மாற்றப்பட்டு புனித ஜார்ஜ் கேட்டையில் இருக்கும் தலைமை தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் கம்யூட்டரில் காட்டப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும் நடவடிக்கைகளும் வீடியோவில் பதியப்படுகிறது.



வாக்குப்பதிவு முடிந்தபின்னர், வாக்கு எந்திரங்கள் வேட்பாளர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். தமிழகத்தில் 91 இடங்களில் வாக்கு எண்ணப்பட உள்ளன. சென்னையில மூன்று இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றது.



மெஜாரிட்டி அரசை உருவாக்குவோம்

நாம் அனைவரும் ஒன்று திரண்டு வாக்களித்தால்தான் ஒரு பெரும்பான்மை மிக்க அரசாங்கத்தை நிறுவமுடியும் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டும்.  ஒரு மெஜாரிட்டி அரசை உருவாக்குவது நமது கடமை.


அதனால் நாம் அனைவரும் சிரமம் பார்க்காமல் ஓட்டுச் சாவடிக்கு சென்று நமது ஜனநாயகக் கடைமையை ஆற்ற வேண்டும்.  இன்று ஒரு நாள் விடுமுறை நாளாக எண்ணி டிவியின் முன் அமர்ந்துவிடாதீர்கள். வாக்குச் சாவடிக்கு உடனே கிளம்புகள்.

இதோ நானும்.....!

திங்கள், ஏப்ரல் 04, 2011

இன்று பெ.சுந்தரம் பிள்ளையின் பிறந்த நாள்!





இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தவர் சுந்தரம் பிள்ளை.




இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய சாத்திர நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.



1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராக சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.



மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையை தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்பட வகித்தார். 1878இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.



பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.

நன்றி! 'அதே தரண'
               இலங்கை வலைத்தளம்.


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...