புதன், அக்டோபர் 22, 2008

படித்ததில் பிடித்தது...

"தமிழில் சொற்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது"- நாஞ்சில் நாடன்
ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் இருந்த மொழி காலபோக்கில் பத்தாயிரம் சொற்கள்அக குறைந்து போக வாய்ப்புள்ளது. எனவேதான், பிடிவாதமாக, பழமையான சொற்களை பயன்படுத்தி வருகிறேன் . தமிழ் மொழி அழிந்து விடக்கூடாது என்று இதை செய்கிறேன். வாசகர்களுக்கான புரிதல் பற்றி கவலை எனக்கு இரண்டம்பட்சம்தான். இளநீரை 'கருக்கு' என்றுதான் பிடிவாதமாக பயன்படுத்துகிறேன்.
இதேபோல் அகராதியில் மட்டும் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு உயிர் கொடுக்க வேண்டியுள்ளது.
பிறமொழிகளில் இருந்து சொல்லை, கருவை, எதையும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே நம் சங்க இலக்கியங்களில் இருக்கிறது.
அண்மையில் சாகித்திய அகதமி சார்பாக திருச்சியில் நடந்த எழுத்தாளர்கள் சந்திப்பின்போது நஞ்சில் நாடன் கூறிய கருத்து.

நன்றி தினமணி.

புதன், அக்டோபர் 15, 2008

அரசியல் கோமாளித்தனம்.....

சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டம்


இலங்கையில் இரண்டு வாரத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்கத்தை சேர்ந்த அனைத்து லோக்சபா எம்., பி., களும் ராஜினாமா செய்யா நேரிடும் என்று தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதில் என்ன கோமாளித்தனம் இருக்கு என்று என்னலாம்...



அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக,மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை.



இன்று உலகில் இரண்டரை லட்சம் ஈழ தமிழர்கள் வீடிழந்து, வாசலிழந்து, அகதிகளாக உள்ளனர். தமிழர்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் போல் கட்டிக்கொள்ளும் ஜெயலலிதா, வைகோ, விசயகாந்த் போன்ற கோமாளிகள் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.



தமிழர்கள் தங்கள் கட்சி பேதம் மறந்து இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது உணர்ச்சிபூர்வமான ஆதரவை தெரிவித்துள்ளனர். அதோடு மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.



இத்தகைய உணர்ச்சிபூர்வமான கூட்டத்தில் கலந்துகொள்ளாத இவர்களை என்னவென்று சொல்வது.



அதுசரி! தமிழர்களை பற்றி இவர்களுக்கு என்ன கவலை. இவர்கள் தமிழர்களாக இல்லாத பட்சத்தில்....



-தோழன் மபா



செவ்வாய், அக்டோபர் 14, 2008

ஈழ தமிழர் வாழ்வில் புது நம்பிக்கை


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஆதிரடி சர்வே....

ஈழ தமிழர்கள் பற்றி பேசவே பயந்தார்கள், ஆதரித்தால் தடா பாயும் என்றார்கள். தமிழனுக்கு குரல் கொடுக்க தமிழனே தயங்கினான், அட்சி பீடத்தில் இருப்பவர்கள் அரவணைக்க தயங்கினார்கள், இதனால் ராஜபக்சே தனி ராஜ்ஜியம் நடத்தி தமிழர்களை கொன்று குவிக்கிறார்.
இவர்களுக்கு ஆதரவு எவருமில்லை என்ற வேளையில், எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு அக்டோபர் பதினோராம் தேதி அன்று ஒரு துணிச்சலான கருத்து கணிப்பு ஒன்றை வெளி யிட்டது.

ராணுவத்தின் கடுமையான தாக்குதலைஇச் சந்தித்துவரும் இலங்கை தமிழர்களின் இன்னலை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மேலும் கவனம் செலுத்தவேண்டும். ராணுவத்தின் தாக்குதலை உடனே நிறுத்தவேண்டும், தாக்குதலுக்கு உள்ளன தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்ற அத்யாவசியமான பொருட்களை உடனடியாகா அனுப்பி உதவ வேண்டும். இதற்கு தடங்கல் வருமானால் மத்திய அரசிலிருந்து தி மு கா விலக வேண்டும்.

என்று தமிழ்நாட்டின் பத்து பெரிய நகரங்களில்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.



  1. இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை இந்திய அரசு வழங்க கூடாது.

  2. அப்படி, இலங்கை ராணுவத்துக்கு ஆதரவு தொடர்ந்தால் மத்திய அரசிலிருந்து தி மு கா விலக வேண்டும்.

  3. தலைவர் பிரபாகரன் சுற்றி வளைக்க படும் நிலை ஏற்படுமானால் தமிழர்களுக்கு உதவ இந்திய இராணுவம் இலங்கை செல்லவேண்டும்.

  4. விடுதலை புலிகள் அமைப்பு என்பது ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் ஒரு அமைப்பு, விடுதலை புலிகள் இல்லாமல் ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடுதலை இல்லை.

  5. ஈழத் தமிழர்களின் ஒரே உண்மையான பிரதிநிதி விடுதலை புலிகள் அமைப்பு மட்டும் தான்.

என்று தமிழ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டில் பெரிய பாதிப்பை உண்டு பண்ணுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாற்பது சதவித பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.


பிரபாகரனை கைது செய்ய கூடாது என்று பெருவாரியான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இந்த கருத்துக் கணிப்பு காலத்திற்கேற்ற ஒரு நல் மருந்து.


-தோழன் மபா


வெள்ளி, அக்டோபர் 10, 2008

கடவுளுக்கு ஒரு கடிதம்...

Letter to god
A little boy wanted Rs.50 very badly and prayed for weeks, but nothing
happened.

Finally he decided to write God a letter requesting the Rs.50.

When the postal authorities received the letter addressed to God, INDIA,
they decided to forward it to the President of the India as a joke.

The President was so amused, that he instructed his secretary to send the
little boy Rs.20.

The President thought this would appear to be a lot of money (Rs.50) to a
little boy, and he did not want to spoil the kid.

The little boy was delighted with Rs...20, and decided to write a thank
you note to God, which read:

"Dear God: Thank you very much for sending the money.
However, I noticed that you sent it through the Rashtrapati Bhavan in New
Delhi, and those donkeys deducted Rs.30 as tax ....... "Â Â Â

செவ்வாய், அக்டோபர் 07, 2008

ஒரு கிராமத்துகாரனின் டைரி குறிப்பு...

எனது ஊர், எனது வாழ்க்கைப் பற்றிய சில பதிவுகள்....


திருவாலங்காடு.

எழிற் கொஞ்சும் காவிரி கரையின் தென் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்.
தஞ்சைமாவட்டத்தில், மாயவரம் தாலுகாவில் அமைந்துள்ளது. (தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது)

கடல் அலைகள் வந்து வந்து மோதுவதுபோல், எனது ஊரைப்பற்றிய நினைவுகள் மனதில் வந்து வந்தது மோதுகின்றன... இதில் எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியவில்லை.

எனது ஊரை சுற்றி பல மகா இசை பெரியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் உள்ளது.

கும்பகோணம் வழியாக வந்தால் நரசிங்கன்பேட்டை யும், மாயவரம் வழியாக வந்தால் குத்தாலம், மாதிரிமங்கலம் தாண்டித்தான் ஊருக்கு வரமுடியும்.

ஊரின் தொடக்கத்தில் ஆலமரம் உள்ளது. ஆலமரம் என்றால் காவேரி யின் இரு கரை தொட்டு ஆலம்விழுதுகளோடு மிக பிரமாண்டமாய் காட்சி தரும். காலத்தை கடந்த

அதன் கடைசி விழ்துகலோடுதன் எனக்கு பரிச்சியம்.

கூட்டம் கூட்டம் மாக இருந்த ஆலம் மரங்கள் இருந்ததால் எங்கள் ஊருக்கு திரு ஆலம் காடு என்று பெயர் இருந்தது . பின்னர் கொஞ்சம் கொஞ்சம் மாக மருகி திருவாலங்காடு என்றுஅனது.

-நினைவுகள் தொடரும்.



சனி, அக்டோபர் 04, 2008

பேசும்போது கவனிக்கவும்.... ஜாக்கிறதை!

மொபைல் போனில் பேசிக்கொண்டு ரோடு மற்றும் ரயில்வே லயனை கடக்கும்போது
நிறைய பேர் விபத்தில் சிக்கி உயிரை விடுகின்றனர்.

இத்தகைய விபத்து நாமாக தேடிக்கொள்வது. அதனால் சாலை மற்றும் ரயில்வே லயனை கடக்கும்போது மொபைல் போன் பயன்படுதவேண்டம்.

சாலை மற்றும் ரயில்வே லயனை கடக்கும்போது மொபைல் போன் அடித்தல் எடுக்காதிர்கள், பேசுவது எமனாக கூட இருக்கலாம். ஜாக்கிறதை!

குடிகாரர்களின் கூடாரம்...

"நாட்டில் படிக்காதவனை விட குடிக்காதவனே இல்லை என்றாகிவிட்டது"
இன்று தி மு க அரசு, குடிகாரர்களின் வருவயில்தான் அரசாங்கம் நடத்துகிறது.
இதற்கு வித்திட்டவர் ஜெயலலிதா, அவருக்கு தமிழர்களின் வாழ்வூ பற்றி கவலை இல்லை.
தமிழ் இளைய சமுதாயம் இன்று குடித்துவிட்டு தெருவில் கிடக்கிறார்கள்.

தி மு க காரர்கள் சிண்டிகட் அமைத்துக்கொண்டு மதுபான விற்பனையில் சக்கை போடு போட்டுகொண்டு இருப்பதை பார்த்துவிட்டுத்தான், அன்றைய ஜெ அரசு மதுபான விற்பனையை கையில் எடுத்தது
அது அரசாங்கத்துக்கு வருமானம் தரும் முக்கிய வழியாகமைந்துவிடது.
இன்று கருணாநிதி அரசும் அதே வழியை பின் பற்றி அட்சி நடத்துகிறார்கள். மதுபான கடைகள்
ஊருக்கு வெளியே ஒதுக்குபுரம்பக எல்லாம் அமைவதில்லை மெயின் ரோடில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தன் விற்பனை கன ஜோராக நடைபெருகிறது.
பள்ளிகள்,கோயில்கள், மசூதிகள், சர்ச்கள், மக்கள் கூடும் இடம் என்று டாஸ்மாக் அரக்கன் இன்று தமிழ் நாடெங்கும் viyapithullan.
இத்தகைய நிலை குடிகதவனயும் குடிக்க வைத்துவிடும்.

அரசாங்கமே ஊத்தி கொடுத்தால், குடிமகன்கள் குப்புற அடிச்சிதான் கிடபார்கள்.
அப்புறமென்ன ஊரை அடிச்சி உலையில போடவேண்டியதுதான்.
தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழனுக்கு தண்ணி காட்ட வேண்டியதுதான்..
-தோழன் மபா

புதன், அக்டோபர் 01, 2008

அன்புமணி க்கு தைரியம் இருக்கிறதா?

வரும் இரண்டாம் தேதி முதல் பொது இடங்களில் சிகரட் பிடிக்க தடை!

" சிகரட்டின் ஒரு முனையில் தீ இருக்கிறது
மறு முனையில் முட்டாள் இருக்கிறான்" என்றார் பெர்ணண்ட்ஷா.
வாஸ்துவமான உன்மை. ஒத்துகொள்ள வேண்டியதுதான்.
ஆனால் இந்த முதுகு எலும்பு இல்லாத அசியாளர்கள் சிகரட் தயாரிபளர்களை விட்டுவிட்டு
அப்பாவி மக்களை தண்டிகிரர்கள்.

இவர்களுக்கு நெஞ்சில் வீரமிர்ந்தல் அவர்களை தண்டிக்கட்டும்.
அதை விட்டுவிட்டு இப்படி குறுக்கு சால் ஓட்டினால் என்ன நியாயம்.

அன்புமணி க்கு தைரியம் இருந்தால் பண முதலைகளை எதிர்த்து போராடட்டும்.
சிகரட் தயாரிக்க அனுமதி உண்டாம் பயன்படுத்த அனுமதி இல்லையாம்.
எந்தஊரு நியாயம்.

இதுவரையி ல் வந்த எந்த அரசியல் தலைவர்களும் பொது மக்களை தான் தண்டிகிரர்கள். அவர்களுக்கு சிகரட் தயாரிபாளர்களின் பணம் வேண்டும். அதனால் சட்டம் அவர்களின் மிது பைவதுஇல்லை
அன்புமணி வித்தியாசமான அரசியல் வாதியை இருந்தால் பிடிபவர்களை விட்டுவிட்டு இந்த முறையாவது தயாரிபளர்களை தண்டிக்கட்டும்.
சிகரட் டை ஒழிக்க இதுதான் நிரந்தரமான வழி!
செய்வாரா அன்புமணி?
- தோழன் ம பா


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...