'பாதகனை கண்டால் பழி வந்து சேரும்' இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ.... கண்டிப்பாக திருமாவளவனுக்கு பொருந்தும்.
இலங்கை சென்ற தமிழக எம்.பிகள் குழுவில் திருமா செல்லாமல் தவிர்த்து இருக்கவேண்டும். லட்சக் கணக்கான தமிழர்களை கொன்ற, அவர்களின் உறவுகளை பிரித்து அவர்களின் வாழ்வை சிதைத்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை தமிழக எம்பிகள் சந்தித்ததே தவறு.
அவனை பார்த்தால் கை குலுக்க வேண்டும், சால்வை போர்த்த வேண்டும், சிரித்து பேசவேண்டும் என்பன போன்ற பல இடர் பாடுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிந்தே இந்த குழுவினர் எப்படி அங்கு சென்றனர்?
டி.ஆர்பாலு, அழகிரி,விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், ஆருன், ஹெலன் டேவிட்சன் போன்றோரை விட கனிமொழியும், திருமாவளவனும் தீவிர தமிழ் பற்றாளார் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒன்று. அங்கே சென்றால் அந்த நாயிடம் கை குலுக்க வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியாதா?
கனிமொழி, கலைஞர் சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டு. அனால், திருமாவுக்கு எங்கே போனது புத்தி. மிகப் பெரிய சமுக மாற்றங்களை முன்னெடுத்து செல்லும் போராளியான திருமாவளவன், எது நல்லது எது கேட்டது என்பதை சீர் துக்கிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.
காங்கிரஸ் நடத்திய இந்த நாடகத்திற்கு திருமாவும், தெரிந்தோ தெரியாமலயோ அரிதாரம் பூசிவிட்டார். அங்கு உள்ள தமிழர் முகாம்கள் , 'உலக துயரத்தின் வெளிப்பாடாக' இருக்கிறது என்று திருமா சொல்லப் போக... அது காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்து உள்ளது என்கின்றனர். விஷயம் தெரிந்தவர்கள்.
இதனால்தான் தி.மு.க. மத்திய அமைச்சர் ராஜாவின் துறையில் மத்திய புலனாய்வு துறை 'செப்க்ட்றோம் ஒதுக்கீடு' தொடர்பாக விசாரணை மேர்க்கொண்டுள்ளது. இது ஆளும் தி.மு.க. அரசை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
தி.மு.க.கூட்டணியில் உள்ள திருமாவளவன், இலங்கயில் உள்ள அகதிகள் முகாமின் அவல நிலையை கூட்டம் போட்டு எடுத்து சொல்லியதும், ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கூறியதையும் தி.மு.கவும், காங்கிரசும் விரும்பவில்லை.
இதற்கிடையே இலங்கை சென்றது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க, பிரதமரைப் சந்திக்கச் சென்ற எம்.பிகள் குழுவில் திருமா இடம்பெயரவில்லை. தி.மு.க. தலைமை, தற்போது திருமாவளவனை தவிர்த்து வருகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
இது கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றத்தான் இந்த நடவடிக்கை என்கின்றனர் வி.சிகள்.
இதற்கிடையே, "நீங்களும் பிரபாகரனோடு இருந்திருந்தால் உங்களையும் கொன்று இருப்பேன்' என்று திருமாவளவனைப் பார்த்து ராஜபக்ஷே சொன்னதாக ஊடகங்களில் செய்திவந்துள்ளது. இதை மறுத்துள்ள திருமா, ' ராசபக்ஷி நகைசசுவை' யாகத்தான் சொன்னார் என்று எரியும் தீயில் நெய்யை ஊற்றிவுள்ளார். இது தற்போது வலை தளங்களில் பற்றி எரிந்துக் கொண்டு இருக்கிறது. பலரும் திருமாவை 'குருமா' வைத்து வருகின்றனர்.
எது எப்படியோ....'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' யாகிவிட்டார் திருமாவளவன்.
3 கருத்துகள்:
அருமை தோழா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
வணக்கம் தோழர் மபா,
தங்களின் இந்த ஆக்கத்தை இணையத்தளத்தில் சிறப்புக்கட்டுரை பகுதியில் மீள் பிரசுரித்துள்ளோம்.கட்டுரையின் கீழ் தங்கள் வலைப்பதிவிற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
செய்தி பிரிவு சார்பில்
தோழமையுடன்
மொழிவேந்தன்
வணக்கம் தோழர் மபா,
தங்களின் இந்த ஆக்கத்தை www.tamiljournal.comஇணையத்தளத்தில் சிறப்புக்கட்டுரை பகுதியில் மீள் பிரசுரித்துள்ளோம்.கட்டுரையின் கீழ் தங்கள் வலைப்பதிவிற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
செய்தி பிரிவு சார்பில்
தோழமையுடன்
மொழிவேந்தன்
கருத்துரையிடுக