சனி, அக்டோபர் 31, 2009

இந்த முறை முன்கூட்டியே வருகிறது சென்னை புத்தகக் காட்சி

வருடம் தோறும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி பொங்கல் விடுமுறை வரை நடைபெறும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய புத்தகக் காட்சியாக விளங்கும் 'சென்னை புத்தகக் காட்சி' இந்த முறை டிசம்பர் இறுதி வாரத்தில் தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைப் பெற்றது. சங்கத்தின் தலைவராக கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், செயலாளராக லெட்சுமணன் (உமா பதிப்பகம்), பொருளாளராக யுனிவர்சல் பதிப்பகத்தின் ஷாஜகான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை தலைவர்களாக சண்முகம் (செண்பகா பதிப்பகம்) , சுப்பிரமணியன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.


கடந்த இரண்டு வருடமாக அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்று வரும் சென்னை புத்தகக் காட்சி, இந்த முறை பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் டிசம்பர் முப்பதில் தொடங்கி ஜனவரி பத்தாம் தேதி வரை இப் பள்ளி வளாகத்தில் நடை பெறுகிறது. இதனால் பொங்கல் விடுமுறைக்கு முன்பே புத்தகக் காட்சி முடிந்து விடும், என்பது சற்று வருத்தமான செய்தி

பெருவாரியான புத்தகப் பிரியர்களும், பொது மக்களும் புத்தகக் காட்சியை பார்ப்பதற்கும், புத்தகம் வாங்குவதற்கும் இந்த பொங்கல் விடுமுறையைதான் பயன்படுத்திக் கொள்வர். அப்படி இருக்க அந்த விடுமுறை தினத்திற்கு முன்பே சென்னை புத்தக் காட்சியை முடிப்பதேன்பது பொது மக்களின் புத்தகம் வாங்கும் ஆர்வத்திருக்கு தடையாக இருக்கும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், சென்னை புத்தக காட்சியை பொங்கல் விடுமுறை வரை நீட்டிக்க வேண்டும் என்பது பெருவாரியான புத்தகப் பிரியர்களின் கருத்து.

செய்வார்களா....? ◦
Share/Bookmark

2 கருத்துகள் :

Manoj Manjunath சொன்னது…

சென்னை புத்தகக் கண் காட்சியின் சிறப்பே அது பொங்கல் விடுமுறையில் வருவதால் தான். அந்த
விடுமுறையில் வந்தால் எங்களைப் போன்ற வாசகர்களுக்கு அது பேர் ஊதவியாக இருக்கும்.

மேகநாத்

அகநாழிகை சொன்னது…

புத்தக கண்காட்சி முன்கூட்டி ஆரம்பிப்பது சரியான முடிவு அல்ல என்றுதான் படுகிறது. பொங்கல் விடுமுறை வரை இருப்பது கூடுதல் வருகையாளர்களை கொண்டு சேர்க்கும்.
000
‘சங்கமம்‘ நிகழ்ச்சிக்கு புத்தக கண்காட்சியினால் பார்வையாளர் வருகை குறைந்து விடுவதாக எண்ணியே இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- பொன்.வாசுதேவன்