அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனிய பல்கலைகழகத்தில் வரும் ஜூன் 17 ம் தேதி தொடங்க உள்ள பத்தாவது தமிழ் இணைய மாநாட்டுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
கணினியினூடே செம்மொழி' என்ற மையக் கருத்தைக் கொண்டு ஜூன் 17 முதல் 19 வரை
நடைபெறும் இம் மாநாட்டில் கட்டுரைகளை சமர்பிக்க விரும்புவோர் தங்கள்
கட்டுரைகளை மார்ச் 15 க்குள் ti2011@infitt.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
கணினி வழி தமிழ்ச் சங்க இலக்கிய ஆய்வு, தமிழ் கணினி நிரல்கள் தரவு, மென்பொருள், தமிழ் குறித்தன நிரலிகள், மற்றும் கணினி செயலாக்கிகள், தமிழைப் பயன்படுத்தும் வகையிலான கையடக்க கருவிகள், கையடக்கத் தொலைபேசிகள், அவற்றின் தர நிர்ணயப்படுத்தல், இக்கருவிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்க் கணினி நிரலிகள். இயற்கை மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழி பெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சு பகுப்பாய்வு நிரல்கள், தேடு பொறிகள், தமிழ் திறனாய்வு நிரல்கள், தமிழ் தேடு பொறிகள்.
தமிழ் வலைப்பூக்கள்,விக்கிபீடியா நிரலிகள், செய்திப் பரப்பி நிரலிகள், தமிழ்க் கல்வி நுழைவுப் பக்கங்கள், தமிழ் மின் வணிக நிரலிகள், இணையம் மற்றும் கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல்.
மேற்கூறிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரை சமர்பிக்கலாம்.கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.
தமிழில் உள்ள கட்டுரைகளை யுனிகோட்டில் மட்டுமே அனுப்பவேண்டும். தேர்வு செய்யப் படும் கட்டுரையாளர்களை ஏப்ரல் 15 க்குள் தொடர்பு கொள்ளப்படும்.
கட்டுரைகள் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் இருக்கவேண்டும்.
மேற்கண்ட தகவல்களை மாநாட்டின் இந்தியப் பொறுப்பாளர் மா.ஆண்டோ பீட்டர் தெரிவித்தார்.
மேலும் விரிவான தகவல்களுக்கு கிழே சொடுக்கவும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக