வியாழன், ஜூலை 28, 2011

இஞ்சி கொத்தமல்லி காபி - எளிதாக தயாரிக்கலாம்சுக்கு கொத்தமல்லி காபி போன்றுதான் இஞ்சி கொத்தமல்லி காபியும்.  பிளாக் டீ போன்று இதுவும் தாயரிக்க மிக எளிதானது. ஜீரண சக்திக் கொண்டது. இதில் பால் சேர்க்கவில்லை என்பதால் தேவையற்ற அஜீரண தொந்திரவும் இல்லை.   
இஞ்சி, கொத்தமல்லிவிதை (தனியா ), வெல்லம்
இப்படி கொதிக்க வைத்து...

இஞ்சி கொத்தமல்லி காபி தயாரிக்க சிறிதளவு இஞ்சி, கொத்தமல்லி விதை, அச்சுவெல்லம் அல்லது நாட்டு வெல்லம், தேவையான அளவு தண்ணீர் இது மூன்றும் போதும்.

கொத்தமல்லி விதையை தண்ணீரில் கழுவி பிழிந்து கொள்ளவேண்டும். இஞ்சியை அரிந்துக் கொள்ளவெண்டும். அடுப்பில் தண்ணீர் வைத்து கொதிக்க தொடங்கியதும். இஞ்சி கொத்தமல்லி விதை, வெல்லம் இந்த  மூன்றையும் போட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டி இறக்க வேண்டும்.

இதில் வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையோ அல்லது ஜீனியையோ சேர்க்கவேண்டாம்.

தேவைப்பட்டால் கொஞ்சம் மிளகையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஜலதோஷம், மூக்கடைப்பு உடல் சேர்வுக்கு சிறந்த உற்சாக டானிக் இது.


Share/Bookmark

கருத்துகள் இல்லை :