![]()  | 
| விளம்பரம் | 
டிவிஸ் நிறுவனரின் வியாபர உத்தி!
    டிவிஸ் நிறுவனர் சுந்தரம் ஐயங்கார் இங்கிலாந்து நாட்டிலிருந்து கார்களை விற்பனை செய்ய டீலர்ஷிப் எடுத்திருந்தார். 
தமிழ் நாட்டில் அப்போது நிறைய சீமான்களும், ஜமீன்தார்களும் செல்வா செழிப்போடு வாழ்ந்துவந்தனர். 
அவர்கள் எல்லோரும் குதிரை பூட்டிய சாரட் வண்டிகளையே பயன்படுத்தி வந்தனர். அவர்களிடம் காரை விற்க ஐயங்கார் படாதபாடு பட்டிருக்கிறார். சாரட்டின் சுகம் கண்ட அவர்களுக்கு காரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் பிரயாணம் செய்ய பயம். 
முதலில் ஐயங்காருக்கு ஒன்றும் புரியவில்லை? எப்படி இவர்களிடம் காரை விற்பது என்று முழி பிதுங்கி போனார். என்னதான் பேசினாலும் எந்த ஜமீன்தாரும் மசிவதாகத் தெரியவில்லை. 
பின்னர் தனது விற்பனையில் புதிய உத்தியை புகுத்தி வெற்றி கண்டார்.  
எப்படி....? 
காரை ஒட்டிக் கொண்டு போய் " ஜமீன்தார்வால் நான் ஒரு மூனு மாசம் வெளியூர் போறேன், அதனால் இந்த காரை வைத்துக் கொள்ளுங்கள். மூணு மாசம் கழித்துவந்து காரை எடுத்துச் செல்கிறேன். அதுவரையில் உங்கள் சாரட் வண்டி என்னிடம் இருக்கட்டும்." என்று காரையும் கார் டிரைவரையும் விட்டுவிட்டு சாரட் வண்டியை ஒட்டிக் கொண்டு போய்விடுவார். டிரைவரும் ஜமீன்தாரை காரில் வைத்து அழகாக சுற்றிவருவார். அந்த ஜமீன்தாரும் காரில் மூனு மாசம் ஜாலியாக வளம் வருவர். 
ஜமீன்தாருக்கு காரின் சுகம் பிடிபட்டுவிடும்!. 
மூனு மாசம் கழித்து வரும் ஐயங்காரிடம் " என்ன ஓய்...நல்ல ரேட்டா சொல்லும், நானே காரை வாங்கிக் கொள்கிறேன்" என்பார்களாம். 
பிறகென்ன.... டிவிஸ் நிறுவனர் சுந்தரம் ஐயங்கார் தனது வியாபார உத்தியால் மிக அழகாக காரை விற்றுவிடுவார். 
சிறு வயதில் படித்தது.     இன்றும் என் நினைவில் பசுமையோடு இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக