வெள்ளி, ஏப்ரல் 26, 2013

இந்தா படி 'சாபம்'


 


நூலின் பெயர்      : சாபம்.
எழுத்தாளர்            : சல்மா.
பக்கம்                       : 142
வெளியீடு               : காலச்சுவடு 
                                      669 கே.பி.சாலை, 
                                      நாகர்கோவில், 629001.

விலை          : ரூ.110/-


நவீன இலக்கிய உலகில் நாம் விலகிச் செல்ல முடியாத எழுத்து  கவிஞர் சல்மாவுடையது.  காலச்சுவடு மற்றும் தலித்  இதழ்களில்  சல்மா எழுதிய  11 சிறுகதைகள் 'சாபம்' என்ற தலைப்பில் தனி சிறுகதை தொகுப்பாக காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. 

எழுத்திற்கு ஆண் பெண் பேதமில்லை என்ற போதிலும் சல்மாவின் கதைகளில் வரும்    கதாப்பாத்திரங்கள் நிறைய மவுனங்களை சுமந்து கொஞ்சமே கொஞ்சமாக வார்த்தைகளை பிரசுவிக்கிறார்கள்.  மெதுவாக நகரும் கதைக் களங்களில் மெல்லிய பிளாக் அண்ட் ஒயிட் படம் பேன்றே கதை பாத்திரங்கள் நமது மனப் பிம்பங்களில் நகருகின்றன.

 பெண்கள் பல துறைகளில் கால் ஊன்றி ஆண்களுக்கு நிகராக பரிணமித்தாலும், நடைமுறை வாழ்வியலில் பெண் மிகுந்த வலியும் வேதனையும் சுமப்பவளாகவே இருக்கிறாள். மிக அழுத்தமான கதைகளில் அவளது மவுனமும், யாருமற்ற அண்ட வெளியில் அவள் தனிமைப்பட்டு நிற்கும் போது நம்மையும் அருகில் நிற்கவைத்து அந்த வலியை உணரச் செய்கையில் தெரிகிறது   சால்மாவின் எழுத்தின் ஆளுமை.

   இதில் முத்தாய்ப்பாக 'வலி' என்ற சிறுகதையில்  அவளும் அவனுமே கதைகளை நகர்த்துகின்றனர்.  அவர்கள் யார்? பெயர் என்ன? என்ற கேள்விகளுக்குள் நம்மை போக விடாமல் அந்த வலியை மட்டுமே உணரச் செய்கிறார். இதை ஒரு யுத்தி என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

கதைகள் வெவ்வேறான காலகட்டத்தில் எழுதப்பட்டாளும் அதை ஒரு சேர படிக்கும் போது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பது போன்ற சாயலை ஏற்படுத்துகிறது. 

 இத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் மைய்யமாக பெண்ணே இருக்கிறாள்.  அவளே ஆதியும் அந்தமுமாய் நின்று கதை நகர்த்தலில் முக்கிய பங்கு வகிக்கிறாள். மனத்தின் மிக நுட்ப போராட்டங்களையும், சிக்கலாகிவிட்ட ஆண் பெண் உறவின் சுமுகமற்ற  புரிதலையும் மிக அனாயசமாக கடந்து செல்கிறது இச் சிறுகதை தொகுப்பு. 

இச்  சிறுகதை தொகுப்பை படிக்காதவர்களுக்கு இந்த ப(பி)டி 'சாபம்' என்று கையில் கொடுக்கலாம்.


6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சாபம் வேண்டாம்.. வாங்கி படித்து விடுகிறேன்... ஹிஹி...

நன்றி...

இராய செல்லப்பா சொன்னது…

சல்மா ஒரு நல்ல எழுத்தாளர். சென்னை போனதும் ‘சாபம்’ கேட்டு வாங்கிக் கொள்கிறேன். சரியா?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி DD.

படித்தப்பின் நீங்களும் விமர்சனம் எழுதுங்கள்.


-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Chellappa Yagyaswamy.

// ‘சாபம்’ கேட்டு வாங்கிக் கொள்கிறேன்.//

நல்ல விமர்சனம். நன்றி சார்.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

நீங்கள் கொடுத்த நல்ல ”சாபம்”. வாய்ப்பு அமையும்போது படித்து விடுகிறேன்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@தி.தமிழ் இளங்கோ. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்!.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...