சனி, பிப்ரவரி 22, 2014

கணையாழி உயரிய விருதுகள் அறிவிப்பு!


                            விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. 


          மிழ் இலக்கிய உலகில் தவிற்க முடியத அடையாளம் 'கணையாழி'.  முன்னாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக  துணைவேந்தர்  ம.இராசேந்திரன் அவர்களின் சீரிய முயற்சியால், கணையாழி மீண்டும் வெளிவந்து இலக்கிய ஆர்வலர்களின் விருப்பப் பட்டியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டது.

இலக்கிய கர்த்தாக்களுக்கான கணையாழியின் உயரிய விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.  சிறுகதைக்கான 'ஜெயகாந்தன் விருது' எஸ்.டி.ஏ. ஜோதிக்கும், கவிதைக்கான 'ஆண்டாள் விருது' கவிஞர் மலர்மகளுக்கும், கட்டுரைக்கான 'கா.சிவத்தம்பி விருது' முனைவர் பழ.அதியமானுக்கும் வழங்கப்படுகிறது.  சாகித்ய அகாதமி விருதுப் பெற்ற ஜோ.டி. குரூஸூக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.

இவ் விழாவில் நல்லி குப்புசாமி, நீதியரசர் கே.சந்துரு, கவிஞர் கலாப்ரியா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமன்பிரகாஷ், எஸ்.கே.பி கல்வி நிருவனங்களின் தலைவர் கு.கருணாநிதி போன்றோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

விருது வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை 22/02/2014) மாலை 5 மணிக்கு சென்னை முத்தமிழ் பேரவை அரங்கில் திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம் அரங்கம், (சத்யா ஸ்டூடியோ எதிரில்) நடைபெறுகிறது.

அனைவரும் வருக!

Share/Bookmark

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... தகவல் பகிர்வுக்கு நன்றி...

Chellappa Yagyaswamy சொன்னது…

ஒரு நாள் முன்னதாகத் தகவல் தெரிந்திருந்தால் உரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு நான் வந்திருக்கலாம். துரதிர்ஷ்டமாக இந்த நிமிடம்தான் உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். அடுத்த முறை தயவுசெய்து எனது மின்னஞ்சலுக்கும் ஒரு தகவல் தந்துவிடுங்கள் என்று கேட்பது நாகரிகமானதா என்று தெரியவில்லை.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விழா சிறப்பாக அரங்கேறியிருக்கும் .
பகிர்விற்கு நன்றி ஐயா

இரா. விவரணன் நீலவண்ணன் சொன்னது…

விழா சிறப்பிக்கவும், விருதாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றிகள்.

:)