வியாழன், டிசம்பர் 23, 2021

இந்து தேசியம் -தொ.பரமசிவன்

சென்னை புத்ததக் காட்சி நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அதையொட்டி அடுத்த பத்து நாட்களுக்கு (ஜனவரி1 வரை) நீங்கள் படித்த புத்தகங்களை சிறு குறிப்பு கொண்டு வெளியிடுங்கள் என்று 'புத்தகம் பேசுது' மாத இதழ் வாயிலாக பாரதி நாகராசன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு இருந்தார்கள்.



இன்றைய தேதியில் நமது தமிழ் இளைஞர்கள் அறிவார்ந்த புத்தகங்களை தேடிச்சென்று படிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
அந்த வகையில் ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய புத்தகம் தமிழ் பேராசிரியரும் பண்பாட்டு ஆய்வாளருமான தொ.பரமசிவன் எழுதிய 'இந்து தேசியம்'.
நான் இந்துவல்ல நீங்கள்?
சங்கர மடம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,
இந்து தேசியம்,
இதுதான் பார்ப்பனியம்,
புனா ஒப்பந்தம் ஒரு சோகக்கதை
இந்திய தேசியமும் திராவிட தேசியமும் : உறவுகளும் முரண்களும் என்று ஐந்துக்கும் மேற்பட்ட குறுநூல்களின் தொகுப்பாக இந் நூல் வெளிவந்திருக்கிறது.
இந்து, திராவிடம், நீதிக்கட்சி, வேதம், பார்ப்பனீயம்,சாதியம், மடங்கள், தமிழர் பண்பாடு என்று இன்றைய இளைஞர்கள் விடை தேடித் துடிக்கும் பல்வேறு கேள்விகளுக்கான விடை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
எளிய நடையும், பொட்டிலடித்தாற் போன்ற ஆதாரங்களும், வரலாற்றுத் தரவுகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வெளியிட்ட நாள் முதல் பல பதிப்புகளை கண்டு, தமிழர்களிடையே ஏக போக வரவேற்புக் கண்டதே இந் நூலுக்கான வெற்றியாகும்!
பக்கம் 144
விலை ரூ.160

திங்கள், அக்டோபர் 04, 2021

'செம்மீன்' மலையாள நாவல் !


          தென்னவோ, தகழியின் 'செம்மீன்' படித்து முடித்தப்பின், கருத்தம்மா - ஃபரீக்குட்டியின் நினைவாகவே இருக்கிறது. தொடக்கத்தில் பரிக்குட்டி பெண் குட்டி என்றே நினைத்தேன். பிற்பாடுதான் தெரிந்தது அது ஃபரீக் குட்டி என்று.
மலையாளிகளின் இலக்கிய பிரஸ்தாபத்தில் செம்மீனுக்கு முக்கிய இடமுண்டு. 1956 ல் செம்மீன் நாவல் வெளிவந்த போது, அந்நாட்களில் இந் நாவல் பல பெரிய பாராட்டுகளையும், சில பல கடும் விமர்சனங்களையும் எதிர் கொண்டிருக்கிறது. 
 

சாகித்ய அகாடமி (1959) விருது பெற்ற இந் நாவலை, தகழி சிவசங்கரப் பிள்ளை 20 நாட்களில் எழுதி முடித்துவிட்டாராம்?! என்னவோரு அசாத்திய வேகம்? 
 
1956 ல் செம்படவச் சேரிகளின் நிலையையும், அரையர்களின் இனவரைவியலுமாக இக்கதை நகர்கிறது. கட்டிய கணவன் கடல் மீதேறி போகையில், கரையில் இருக்கும் மனைவியின் ஒழுக்கம்தான், கடலாடும் மீனவனை காப்பாற்றுகிறது. கடலில் அவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் என்றால், அதற்கான முழு பொறுப்பையும் தயவுதாட்சன்யமின்றி பெண்ணின் மீதே சுமத்தி வைக்கிறது இச் சமூகம். 
 
ஒரு ஆணும் பெண்ணும், அங்கே இங்கே பேசிக் கொண்டு நின்றால் போதும்....உடனே கதை கட்டிவிடுகிறார்கள். அதுவும் என்னேரமும் காத்து வீசும் பட்டிணச் சேரியில் கேட்கவா வேண்டும்? அது ஊதி ஊதி பெரிதாக்கப்படுகிறது. அப்படியான ஒரு சுழலில்தான் கறுத்தம்மாவும் முஸ்லிமான பரீக்குட்டியும் சிக்கிக் கொள்கிறார்கள். ஒரு வகையில் கருத்தம்மாவின் தந்தைக்கு பரீக்குட்டி சின்ன முதலாளி. 
 
'மரக்காத்தியின் ஒழுக்கம்தான் மரக்கானுக்குச் சொத்து' என்பது போலவே பெண்கள் இச் சமூகத்தில் வளர்க்கப்படுகிறாள். பெண்ணின் ஒழுக்க நெறியின் ஊடே, இக் கதை பயணிக்கிறது. இந்தக் காலத்தோடு அந்தக் கதையை பொறுத்திப்பார்க்க முடியாது;அது அபத்தம். ஒரு அபப் புனைவாகத்தான் இக் கதை படைக்கப்பட்டிருக்கிறது. சுந்தரராமசாமியின் தேர்ந்த மொழி பெயர்ப்பு நம்மை மலையாள மூல நாவலை வாசிப்பது போன்றே இருக்கிறது. மொழி பெயர்ப்பு நாவல் என்ற எண்ணமே நமக்கு வரவில்லை. 
 
செம்மீனின் ஏகோபித்த வரவேற்பையொட்டி... அது திரைப்படமாக 1965ல் எடுக்கப்பட்டது. ஒரிஜனல் நாவல் போலவே, படமும் செம ஹிட்! எட்டு லட்சம் முதல் போட்டு எடுக்கப்பட்ட இத் திரைப்படம் 40 லட்சத்தை சம்பாதித்து தந்திருக்கிறது. அந்தக் காலத்தில் அது ஜாக்பாட்! 
 
மலையாளிகளின் சுக ஜீவிதத்தில், ஒரு தேசிய கீதம் உண்டெங்கில் அது...
'கடலின் அக்கரை போனோரே
காணாப் பொன்னுக்காய்ப் போனோரே....'  என்ற செம்மீன் பாடல் தான். இன்றளவும் மலையாள திரைப்பட பாடல்களின் அடையாளமாக, கலாச்சாரமாக இப்பாடலே இருக்கிறது. காலத்தால் அழியாத இப்பாடலை உருவாக்கியவர் திரையிசை மேதை சலீல் செளத்ரி அவர்கள். 
 
 
 
 
()()()()
 
சீர்காழிக்கு அருகில் எனது மாமா (மாமனார் வீடும் கூட) வீட்டிலிருந்து... கூப்பிடும் தூரத்தில் தான் சின்ன கொட்டாய்மேடு கடல் இருக்கிறது. நல்ல வெள்ளை மணல் போர்த்திய கடல்கரை அது. தண்ணீர் அப்படியே ஸ்படிகமாட்டாம் மின்னும். அப்படி ஒரு சுத்தம். செம்மீன் வாசித்தப் பிரேமையில் அப்படியே கடற்கரை ஓரம் நடந்தேன். கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோனியில் ஃபரீக் குட்டி போல் படுத்துக் கிடந்தேன். 
 
வானில் நட்சத்திரங்கள் மின்ன தொடங்கியிருந்தன...நினைத்துப் பார்த்தால் நம்முள்ளும் ஒரு கடல் இருக்கிறது. அது சதாசர்வகாலமும் நினைவுகளோடு ஆர்பரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 
 
 
இப்படியான கடற்கரைகளில்தான் எத்தனை எத்தனை கருத்தம்மாக்களும் ஃபரீக்குட்டிகளும், பழனியும் வாழ்ந்திருப்பார்கள்? அவர்களின் துயர் மிகுந்த கதையைதான் இந்தப் பெருங்கடல் மீண்டும் மீண்டும் நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. 
 
செம்மீன் காலத்தால் அழியாத காவியம்!

திங்கள், ஜூலை 26, 2021

2000-2020 சிறந்த படைப்பாக்கங்களின் தொகுப்பு .



லகமே இந்தக் கரோனா காலத்தில் சுணங்கிக் கிடந்த போதும், சுறுசுறுப்பாக இயங்கி 2000 to 2020 ஆண்டுக்கான, தமிழ் படைப்பாளர்களின் ஆகச் சிறந்த படைப்புகளை தொகுத்து வெளியீட்டு இருக்கிறது கலைஞன் பதிப்பகம்.
முன்னூற்றி சொச்சம் கவிஞர்கள், குறிப்பிடத்தக்க கட்டுரையாளர்கள், சிறந்த சிறுகதைகள் என்று மாபெரும் தொகுப்பினை இரண்டு தொகுதிகளாக வெளியீட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியும் 320 பக்கங்கள்! 
 
தமிழகக் கவிஞர்கள் மட்டுமல்லாமல், இலங்கை, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் என்று சர்வதேச கவிஞர்களின் படைப்புகள் இத் தொகுதிகளில் இடம் பெற்றுள்ளது.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் என்று பெரும் படைப்பாளர்களின் படைப்புகளை தேர்ந்தெடுத்து அதை அச்சிலேற்றி,பிழைத் திருத்தி, செப்பனிட்டு புத்தகமாகக் கொண்டு வருவதெல்லாம் லேசுப்பட்ட விஷயம் இல்லை. பெரும் நடிக பட்டாளத்தைத் திரட்டி, நீண்ட கால தயாரிப்பில், பெரும் பட்ஜெட்டில் சினிமா எடுப்பது போன்ற விஷயம் இது. அதை மிக அநாயசமாக செய்திருக்கிறது கலைஞன் பதிப்பகம்.
இரண்டு தொகுதிகளைக் கொண்டு வந்ததுமல்லாமல், அவற்றை உரிய படைப்பாளர்களுக்கு, தமது சொந்த செலவில் கூரியர் மூலம் அனுப்பவும் செய்கின்றனர். பொருளாதார நெருக்கடி மிகுந்த இந்த கரோனா காலத்தில் இப்படியான முன்னெடுப்பு பாராட்டுக்குரியது!
இத் தொகுப்பின் இரண்டாவது தொகுதியில் எனது 'ஆதி நிலத்து தேவதை' கவிதையும் இடம்பெற்றுள்ளது. இக் கவிதை காலத்தே பதிவு செய்யப்பட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது நிகழ்ந்திருக்கிறது. சர்வதேசிய கவிஞர்களின் கவிதைக்கிடையே எனது கவிதையும் வந்திருக்கிறது, மகிழ்ச்சி!
புதிய முயற்சிகளை மேற் கொள்வதில் கலைஞன் பதிப்பகம் நந்தன் சார் அவர்கள் எப்போதுமே வித்தியாசமானவர். பதிப்புத் துறையில் பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுப்பார். மலேஷியா, சிங்கப்பூர் பல்கலைக்கழங்களோடு இணைந்து பல புதிய படைப்புகளைக் வெளியீட்டு இருக்கிறார். மலேயா, சிங்கை படைப்பாளர்களை தமிழில் அறிமுகம் செய்திருக்கிறார்.
மலாய் மற்றும் தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து, 'கவிதையாய் விரியும் வாழ்வு' என்ற தொகுப்பினை
2014 ஆம் ஆண்டு வாக்கில் வெளியீட்டு இருக்கிறார் நந்தன் அவர்கள். அதன் தொடர்ச்சியே தற்போது வெளிவந்திருக்கும் இந்த இரண்டு தொகுதிகளும்.
கவிதையாய் விரியும் வாழ்வு தொகுதியில், படைப்பாளர்கள் பற்றிய சிறு குறிப்பு இடம் பெற்றிருந்தது. அதே போன்று இந்தத் தொகுதிகளிலும் படைப்பாளர்களைப் பற்றிய சிறு குறிப்பு இடம் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பொறுப்பாசிரியர்: கவிஞர் எஸ், சண்முகம், தொகுப்பாசிரியர்கள்: முனைவர் அபிதா சபாபதி, முனைவர் அரங்க.பாரி, முனைவர் கிருஷ்ணன் மணியம், கவிஞர் தமிழ் மணவாளன், கவிஞர் ஆசு யுகாந்தன் என்று ஒரு பெரிய டீமே இத் தொகுப்பிற்காக உழைத்திருக்கிறார்கள். இவர்களது உழைப்பு வீண் போகாமல், தமிழ் இலக்கிய உலகிற்கு நல் ஆவணமாகக் கிடைத்திருக்கிறது.
வாழ்த்துக்கள்
!!
 
 குறிப்பு: முதல் தொகுதியில் படைப்பாளர்களின் பட்டியல் கைக்குக் கிடைத்தவுடன் இங்கு பதிவேற்றப்படும் ....
 

இரண்டாம் தொகுதியில் இடம் பெற்ற படைப்பாளர்களின் பெயர்கள்:

 

கவிஞர்கள்:

1. அ. வெண்ணிலா
2. அகச்சேரன்
3. அகராதி
4. அஞ்சலி பொன்னம்மா
5. அம்பிகா குமரன்
6. அமிர்தம் சூர்யா
7. அமீர்ஜான்
8. அய்யப்பமாதவன்
9. அராரதா
10. அன்பாதவன்
11. அன்றிலன்
12. அஸீஸ் எம்பாயிஸ்
13. ஆகாசமுத்து
14. ஆதி பார்த்தீபன்
15. ஆர் கே இராமநாதன்
16. ஆலா
17. ஆனந்தி சுப்பையா
18. இரா மோகன்ராஜன்
19. இரா. கவியரசு
20. இராய செல்லப்பா
21. இளந்தென்றல் திரவியம்
22. இளம்பிறை
23. உமையவன்
24. எம். பாண்டியராஜன்
25. என்.டி. ராஜ்குமார்
26. எஸ். குமாரகிருஷ்ணன்
27. எஸ். திலகவதி
28. எஸ். பி. பாலமுருகன்
29. ஏ. ஏ. பைசல்
30. க. ராஜகுமாரன்
31. கண்ணம்மாள் மனோகரன்
32. கண்மணி ராசா
33. கதிர்காமன்
34. கருணாகரன்
35. கலாநிதி கந்தசாமி வாகீசர்
36. கனகாபாலன்
37. கனிவுமதி
38. காலையூர் நெய்தல்நாடன்
39. குறிஞ்சியூர் செந்தமிழி
40. கே. ஜீ. வீரமணி
41. கோ. நவமணி
42. கோகுலா
43. ச. ராச்
44. சக்திவேல்
45. சசிகலா எத்திராஜ்
46. சத்தியானந்தன்
47. சந்திரா மனோகரன்
48. சப்னாஸ் ஹாசிம்
49. சமரபாகு சீனா உதயகுமார்
50. சரசுவதி காயத்ரி
51. சாகிப்கிரான்
52. சிவராஜ்
53. சீராளன் ஜெயந்தன்
54. சு. சா. அரவிந்தன்
55. சுகதேவ்
56. சுகன் கலாபன்
57. சுபா செந்தில்குமார்
58. சுரேஷ்பாபு ராசேந்திரன்
59. சூரியதாஸ்
60. செ. கார்த்திகா
61. செங்கான் கார்முகில்
62. செஞ்சி தமிழினியன்
63. செந்தி
64. செம்மலர் செல்வன். கே
65. சேலம் ராஜா
66. சொர்ணபாரதி
67. சோலச்சி
68. சோலை மாயவன்
69. டீன் கபூர்
70. த. அரவிந்தன்
71. த. பழமலய்
72. தபு சங்கர்
73. தமிழ் உதயன்
74. தமிழன்பன்
75. தர்மினி (ஃபிரான்ஸ்)
76. திருமதி. இராம.பெருமாள் ஆச்சி
77. தென்றல் சிவக்குமார்
78. தேவசீமா
79. தோழன். ம. பா
80. நர்சிம்
81. நா. கோகிலன்
82. நா. திங்களன்
83. நா.வே. அருள்
84. நான்சிகோமகன்
85. நிறோஷ் ஞானச்செல்வம்
86. நிஷாந்தன்
87. நௌஃபால்
88. நௌபல் (முகம்மது)
89. ப. உ. தென்றல்
90. பச்சியப்பன்
91. பா. கிருஷ்ணன்
92. பா. தேவேந்திர பூபதி
93. பா. ராஜா
94. பாட்டாளி
95. பாபுசசிதரன்
96. பாம்பாட்டிச் சித்தன்
97. பாரிகபிலன்
98. பாலா
99. பாவலர் மலரடியான்
100. பி. கே. சிவகுமார்
101. பிரபுசங்கர். க
102. புத்தொளி ஆறுமுகம்
103. பெரு விஷ்ணுகுமார்
104. பேனா மனோகரன்
105. பொ. திராவிடமணி
106. பொன் குமார்
107. மா. காளிதாஸ்
108. மா. செந்தில்குமார்
109. மாயன்
110. மாரி மகேந்திரன்
111. மாரிமுத்து சிவகுமார்
112. மாலினி மாலா
113. மிஸ்ரா ஜப்பார்
114. மீ. விசுவநாதன்
115. மீன் கொடி
116. மு. குலசேகரன்
117. மு. பாலசுப்ரமணியன்
118. மு. முருகேஷ்
119. முனைவர் ஏ. இராஜலட்சுமி
120. முனைவர் ஜி. சத்திய பாலன்
121. முஷிதா
122. மேகலன்
123. மௌனன் யாத்ரிகா
124. யுகயுகன்
125. ராசி அழகப்பன்
126. ராம் பெரியசாமி
127. ருஸ்னா நவாஸ்
128. லதா நாகராஜன்
129. லலிதானந்த்
130. லாவண்யா சுந்தரராஜன்
131. வசந்ததீபன்
132. வண்ணை வளவன்
133. வானவன்
134. வி. அல்விற்
135. வெ. நிலாக்கதிர்
136. வெற்றிப்பேரொளி
137. வே. நி. சூர்யா
138. வே. முத்துக்குமார்
139. வேதிசா தேவி சுமதி
140. ஜமீல்
141. ஜானகி இராஜா
142. ஜி. சிவக்குமார்
143. ஜீவா
144. ஜெகன் மோகன்
145. ஜெம்சித் ஸமான்
146. ஜே. பிரோஸ்கான்
147. ஸ்டாலின் சரவணன்
148. ஸ்ரீ பிரசாந்தன்
149. ஸ்ரீதர்பாரதி
150. ஸ்ரீரசா
151. ஸ்ரீஷங்கர்
152. ஸ்ருதி ரமணி
153. ஹரணி

கதையாசிரியர்கள்

1. முனைவர் அரங்க. மணிமாறன்
2. நாராயணிகண்ணகி
3. கே. முருகேசன்
4. ஸிந்துஜா
5. கே. எஸ். சுதாகர்
6. கனகா பாலன்
7. வசந்ததீபன்
8. ஷேக் சிந்தா மதார்
9. செல்வராஜ் ஜெகதீசன்
10. துரை. அறிவழகன்
11. மிகையிலான்
12. தனாட் ஜெனெ
13. ருஸ்னா நவாஸ்
14. மலையரசி சீனிவாசன்
15. தமிழ்ச்செல்வி
16. அண்டனூர் சுரா
17. மா. அரங்கநாதன்
18. நிரஜா
19. சுஜாதா
20. வை. கிருஷ்ணன்
21. மணிமாலா மதியழகன்
22. ஆர். ரவிசங்கர்
23. சக்தி அருளானந்தம்
24. மு. கோபி சரபோஜி
25. நாகா செல்வா
26. சோ. சுப்புராஜ்
27. சுதாராஜ்
28. ரா. பிரசன்னா
29. ந. மோகன்ராஜ்
30. கே. நிருபமா
31. ரமேஷ் கல்யாண்
32. ராமு
33. நாகபிரகாஷ்
34. கோ. மிதுராங்கன்
35. பாக்கியம் சங்கர்
36. பி. கே. அருணா

கட்டுரையாசிரியர்கள்

1. சோழ நாகராஜன்
2. மு. முருகேஷ்
3. பானுமதி பாஸ்கோ
4. எம். பாண்டியராஜன்
5. சிந்து பாஸ்கர்
6. சொ. ஞானசம்பந்தன்
7. பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
8. த. சுந்தரராஜ்
9. முனைவர் கிருஷ்ணன் மணியம்
10. சண்முக விமல்குமார்
11. நிதா எழிலரசி
12. ஆர். சிவக்குமார்
13. எம். டி. முத்துக்குமாரசாமி
14. அ. மார்க்ஸ்
15. பா. சகாதேவன்
16. மத்தீன்
17. முனைவர் பொ. திராவிடமணி
18. ரவிசுப்ரமணியன்
19. மணா லக்ஷ்மணன்
20. தமிழச்சி தங்கபாண்டியன்
21. சுகதேவ்
22. கே. வைத்தியநாதன்
23. கே.எஸ். ராதாகிருஷ்ணன்
24. யுகாந்தன்
 
 
 
 

புதன், ஜூலை 21, 2021

சீர்காழி அருகில் சிறு தீவு - கொடியம்பாளையம்

   யிலாடுதுறை மாவட்ட அரசு நிர்வாகம், ஓட்டு பெட்டி முதற்கொண்டு தடுப்பூசி போடுவதுவரை இன்றளவும் நிர்வாக ரீதியாக, மாதானம், புதுப்பட்டினம் வழியாக பழையார் வந்து அங்கிருந்து படகுகளில்தான் பிரயாணம் செய்கிறது. முப்புரமும் கடல் சூழ்ந்து இருக்க...புன்னைவனக் காடுகளின் மத்தியில் இருக்கிறது கொடியம்பாளையம் கிராமம். சிதம்பரத்திலிருந்து மினி பஸ் வருகிறது. பஸ்டாண்ட என்பதற்கு அடையாளமாக இரண்டு டீ கடைகள் இருக்கிறது.
கொடியம்பாளையம் கிராமம்

இங்கு இருக்கும் பாப்பா மெஸ்ஸில், நாம் முன்பே சொல்லி வைத்துவிட்டால், மீன், நண்டு, இறால், கடம்பா என்று கடல் உணவுகளை மண்ணின் மனத்துடன் சுடச்சுட சமைத்துத் தருகிறார்கள். சமீப காலமாக சிதம்பரம் நகர வாசிகள், காரில் இங்கு வந்து கடலில் குளித்து, கடல் உணவுகளை ருசித்து வார விடுமுறையைக் கழிக்கிறார்கள்.
கடற்கரையில் எந்தவித கடைகளும் இல்லை. இரவு நேரங்களில் புன்னைவனக் காடுகளிலிருந்து நரிகள் வெளியில் வந்து கடற்கரையில் நண்டு வேட்டை ஆடுவதைப் பார்க்க முடிகிறது. சுய பாதுகாப்பு அவசியம்.
கொடியம்பாளையம் கிராமத்தில் இருக்கும் டீ கடை 

ஒற்றையடிப்பாதை, சதுப்பு நிலம், புன்னைவனக் காடுகள், அமைதித் தவழும் நீண்ட கடற்கரை என்று இயற்கையை விரும்பும் எவருக்கும் கொடியம்பாளையம், காசு செலவில்லாத மினி மெரினாதான் !

 #கொடியம்பாளையம் 
#mabacliks 
#மயிலாடுதுறைமாவட்டம்

திங்கள், ஏப்ரல் 26, 2021

கரோனா எதிர்ப்பு போரில் குஜராத்தை மிஞ்சும் தமிழகம் !

வர் குஜராத் பெண்மணி. பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். அதனால் தமிழ் அட்சரம் பிசகாமல் வரும். ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். அவரது உறவினர்கள் அடையார், புரசைவாக்கம், செளகார்பேட்டை என்று சென்னை முழுவதும் வியாபித்து வாழ்கிறார்கள்.
இதுனால் வரைக்கும் எங்க குஜராத் அப்படி, எங்க குஜராத் இப்படி என்று வம்படியாக கம்பு சுற்றிக் கொண்டு இருந்தார். மோடி, அமித்ஷா வகையராக்களின் வீர தீர பராக்கிரமங்களை வாய் வலிக்க வியாக்கியானம் பாடுவார். அவர் என்று இல்லை, அவரது உறவுகள் முழுவதுமே அப்படிதான். குஜராத்திகளின் பெருமைகளை அவர்கள் பேசும் போது கேட்க வேண்டுமே? காதில் ரத்தம் வந்துவிடும். ரொம்ப உக்கிரம் காட்டுவார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் வாழும் அவரது உறவினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூரார், ஸ்டான்லி , ராஜீவ்காந்தி போன்ற அரசு மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டு நல்ல சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குஜராத் அம்மணி பேஸ்தடித்துக் கிடக்கிறார். குஜராத்தில் உள்ள அவரது உறவினர்களில் பலர் கரோனாவால் பீடிக்கப்பட்டு கிடக்கிறார்களாம். பாசிட்டிவ் ரிசல்ட் வந்தவுடன் அரசுக்கு தெரியப்படுத்தினால், அரசிடமிருந்து எந்தப் பதிலும் வருவதில்லையாம். மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறதாம். இதனால் பலர் உயிரிழக்க நேர்கிறதாம். என்று சோக கீதம் வாசித்தார்.
'அந்த வகையில் நம்ம தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லைப்பா.... (கவனிக்க...நம்ம தமிழ்நாடு). பாசிட்டிவுன்னு அரசாங்கத்துக்கு தகவல் தெரிந்தவுடன், சுகாதார ஆய்வாளர்கள் வீட்டுக்கு நேரடியாகவே வர்றாங்க. சுவாப் மற்றும் சிடி ஸ்கேன் டெஸ்ட் மூலம் கரோனா தொற்றின் நிலை குறித்து தெரிந்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சையா...? இல்லை வீட்டில் தனிமைப்படுத்துதல் போதுமா என்று முடிவெடுத்து நோயாளிகளை காப்பாற்றுகின்றனர்' என்றவர் முத்தாய்ப்பாக 'thank god' என்றார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தொற்றின் நிலை அறிந்து தன்னை மேம்படுத்திக் கொணடிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. கரோனா நோய்க்கு எதிரான முன் களப்பணி, கரோனா நோய்க்கு பிந்தைய நலவாழ்வு என்று அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி இருக்கின்றது தமிழகம்.
மருத்துவ துறையில் இப்படி நிலையான வளர்ச்சிக்கு சுயமாய் சிந்தித்த திராவிட ஆட்சியாளர்களே காரணம். இது வட மாநிலங்களில் மிஸ்ஸிங்.
அதனாலேயே உண்மை நிலை உணர்ந்து அந்த குஜராத் பெண்மணி இப்போது கதறுகிறார்.
ஆனால் சில மேதாவிகள், குஜராத் பற்றிய போலி பிம்பங்களை இங்கு பரவவிட்டும், 'தமிழகத்தை திராவிட கட்சிகள் வீணடித்து விட்டன' என்றும் கூக்குரலிட்டு வருகிறார்கள்.
-மபா
No photo description available.

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்

                            ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...