செவ்வாய், பிப்ரவரி 28, 2023

வெட்பாலை

     

 


வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! செடியாக கிடைக்கவில்லை, விதையாகக் கிடைத்தது.  ஊரில் வீட்டில் வைப்பதற்காக,  சென்னையிலிருந்து ஆர்டர் செய்தேன், இரண்டே நாளில் டெலிவரி செய்துவிட்டார்கள்.

வெட்பாலை இலைகள் சருமத்திற்கும்  கேசத்திற்கும் நல்லது. சுத்தமான  தேங்காய் எண்ணையில் வெட்பாலை இலைளைப் போட்டு  ஏழு நாட்களுக்கு ஊரவைத்து....வெயிலில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். அடுப்பில் வைத்து சூடு  பண்ணக் கூடாது.  வெட்பாலையில் ஊர வைத்த தேங்காய் எண்ணெய்... பார்க்கப் அடர் பிங்க் நிறத்தில், ஒயின் போல மாறிவிடும்.   தலையில் தொடர்ந்து தடவி வர, தலை முடி கருகருவென இருக்கும். பொடுகைப் போக்கும்.

இந்த வெட்பாலை எண்ணை  காளாஞ்சுப்படை எனப்படும் சொரியாசிஸ் நேய்க்கு மிகச் சிறந்த மருந்தாகும்.  சொரியாசிஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல்  வெட்பாலைக்கு உண்டு.  வறண்ட சருமத்திற்கு இயற்கையின் கொடை வெட்பாலை.  நாட்டு மருந்துக் கடைகளில் வெட்பாலை எண்ணெய் கிடைக்கும்.

வெப்பாலை என்பது ஒருவகை மரமாகும். இதற்கு வெட்பாலை, நிலப்பாலை, பாலை, நிலமாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது பழந்தமிழகத்தில் பலை என அழைக்கப்பட்டது.

அமேசானில் வெட்பாலை மட்டும் ஆர்டர் செய்யாமல், கூடவே  எலுமிச்சை மற்றும் மனோரஞ்சிதம் செடிகளையும் ஆர்டர் செய்திருந்தேன்.   மனோரஞ்சிதம் செடிகளைப் பார்க்க கத்திரிக்காய் செடி போன்று இருந்தது.  வளர்ந்தபின்தான் தெரியும் இது வாசம் தரும் மனோரஞ்சிதமா இல்லை அரிப்புத் தரும் கத்திரிக்காய் செடியா என்று ?!

பி.கு:

ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது  வெட்பாலை மரம்  என்கிறார்கள். இதிலிருந்தே இந்த மரத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.  கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும்.  பாலை நில தாவரத்தை மருத நிலத்தில் வளர்க்க முயற்சி செய்கிறேன், பார்ப்போம். 

படம்: எலுமிச்சை மற்றும் மனோரஞ்சிதம் செடிகள். 

#வெட்பாலை
#Wrightiatinctoria
#சொரியாசிஸ்

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...