![]() |
தர்மேந்திர பிரதான் |
செவ்வாய், மார்ச் 11, 2025
தர்மேந்திர பிரதான் - தமிழர்களுக்கு பொது எதிரியா ???
ஞாயிறு, மார்ச் 09, 2025
'இது பெண்களுக்கான நேரம்'
நினைத்துப் பார்த்தால் ஆண் பெண் என்ற பேதம் ஒரு ஹம்பக் என்றே தோன்றுகிறது.
அம்மா, அக்கா, தங்கை, மகள் என்று பெண்கள் சூழ் பெரு உலகமாக நமது உலகம் தொன்று தொட்டு வருகிறது. தினந்தோறும் அவர்களுடன்தான் பொழுது புலர்கிறது, சாய்கிறது. அவர்களின் நமக்கான நாட்கள் என்றுமே தொடங்கப்படுவதில்லை.
"மனிதகுலத்தின் போக்கை ஆண்கள் மட்டுமே வழி நடத்துகிறார்கள் என்று நம்பவைக்கப்பட்டது. அவர்கள் விரும்பிய வரலாற்றை அடைய குழந்தை பருவத்திலிருந்தே நம்மில் பலருக்கு அப்படியே சொல்லப்பட்டது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கண்ணோட்டம் தலைகீழாக மாறிவிட்டது. இது பெண்களுக்கான நேரம்" என்றார் மெக்ஸிக்கோவின் அதிபர் கிளாடியா ஷீன்பாம் தனது பதவியேற்பு உரையில்.
திங்கள், செப்டம்பர் 23, 2024
'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்
புதன், செப்டம்பர் 04, 2024
வெள்ளி, ஏப்ரல் 26, 2024
கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !
![]() |
கவிஞர் ரவி சுப்ரமணியன் |
ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
தொடர் வேலைப் பளுவால் அது தள்ளிக் கொண்டே போனது. இவ்வளவிற்கும் அலுவலகம் போகும் வழியில்தன் அவரது வீடும் இருக்கிறது. இன்று திடுதிப்பென்று அவரைப் பார்க்க கிளம்பிவிட்டேன். புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் இருக்கிறது அவரது வீடு.
போன் செய்ததும், ஆர்வமாக வரவேற்றார்.
புரசைவாக்கம், கெல்லீஸ், அயனாவரம் என்று திரும்பிய திசையெங்கும் மெட்ரோ ரயில் வேலை நடைபெறுகிறது. 'இன்றைய சிரமம், நாளைய வசதிக்காக' என்று நினைத்துக் கொண்டு ஒரு வழியாக புரசை தானா தெரு வழியாக உள் நுழைந்து, ஜமாலியா, ஓட்டேரி, அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை தாண்டி அவரது விலாசத்தை அடைந்துவிட்டேன்.
"வேறு யாராக இருந்தாலும், ஐந்து வாட்டியாவது அட்ரசைக் கேட்டு போன் செய்திருப்பார்கள், நீங்கள் டக்கென்று வந்துவிட்டீர்களே...?" என்றார் ரவி சார்.
என்னை போன்ற மார்கெட்டிங் மனிதர்களுக்கு விலாசம் தேடுவது பெரிய சிரமமான வேலை இல்லை, அது எளிதானது. எந்த ஒரு விலாசத்திற்கு ஒரு கீ வேர்ட் இருக்கும், அதை பிடித்துக் கொண்டால் போதும்.
காலை உணவு இல்லை என்பதால், Mid Morning Meals ஐ அப்போதுதான் முடித்து அமர்ந்திருந்தார் கவிஞர் ரவி சுப்ரமணியன். அடர்த்தியான சிகை, சரியான திராவிடக் கலர், அதிராத மென் குரல், புன்னகை தளும்பாத முகம் என்று ஒரு படைப்பாளிக்கான சர்வலட்சணமும் அவரிடத்தில் இருந்தது.
இசையின் மீது தீராப் பற்றும், அவரது மென் குரல் பாடல்களும் இலக்கிய மேடைகளில் ஏக பிரபல்யம்.
தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநரான ரவி சுப்பிரமணியன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன், ஜெயகாந்தன், சேக்கிழார் அடிப் பொடி, டி.என்.ராமசந்திரன், திரிலோக சீதாராம் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார்.
எழுத்தாளர்கள் எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, மா, அரங்கநாதன், தேனுகா போன்றோரிடம் நெருங்கிப் பழகியவர்.
எம்.வி.வி.தனது கடைசி காலத்தில் , 'ரவி சுப்ரமணியன் மெட்ராஸ் போய்ட்டான்...இனி வரமாட்டான்' என்று ஆதங்கத்தோடு கேட்கும் அளவிற்கு தனது அன்பை அவர்களிடத்தில் பதியம் செய்தவர்.
எத்தனை எத்தனை இலக்கிய ஜாம்பவான்களைப் பார்த்து இருப்பார், பழகி இருப்பார். ஒரு இலக்கிய ஆளுமையாக இருந்தாலும், எந்தவித படாடோபமும் இன்றி எளிய மனிதராக என்னோடு பேசிக் கொண்டு இருந்தார்.
கும்பகோணம், காவிரி, டைமண்ட் தியேட்டர், புருஷோத் விஹார், அரசு கலைக் கல்லூரி, பெரியக் கடைத் தெரு என்று பேசிக் கொண்டு இருந்தோம். கும்பகோணம் அருகில்தான் எனது ஊரும் என்பதால், அவரோடு மிக எளிதாக பொருந்திப் போக முடிந்தது.
இயக்குநர்கள் அரவிந்த ராஜ், லிங்குசாமி, கவிஞர் பிருந்தாசாரதி என்று கும்பகோணத்திலிருந்து கிளைத்தெழுந்த படைப்பாளிகளைப் பற்றி சிலாகித்து பேசினார்.
தனது பெரும் மதிப்பு மிக்க சொத்துக்களை, உறவுகளுக்கு கொடுத்துவிட்டு, தன்னை முழுமையாக இலக்கியத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட உயர்ந்த மனிதர்.
அவரது படைப்புக்களில் மிளிரும் அழகியல் போன்றே அவரது உரையாடலும் அழகாக இருந்தது.
உரையாடலின் இறுதியில் நான் எடுத்த படங்களை அவருக்கு வாட்ஸ்ப்பில் அனுப்பி வைத்திருந்தேன். படத்தைப் பார்த்தவர்... "செழியன் எடுத்தா மாதிரி இருக்கு, தேர்ந்த ஒளிப்பதிவாளர் எடுத்தா மாதிரி அழகாக எடுத்து இருக்கீங்க" என்று பாராட்டினார்.
மதிய வெயில்...உக்கிரம் குறைந்து நிலா போன்று காய்ந்து கொண்டிருந்தது !
-மபா
#ரவிசுப்ரமணியன்
#கும்பகோணம்
#mabaclicks
செவ்வாய், பிப்ரவரி 28, 2023
வெட்பாலை
வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம், அமேசானில் கிடைத்தது ! செடியாக கிடைக்கவில்லை, விதையாகக் கிடைத்தது. ஊரில் வீட்டில் வைப்பதற்காக, சென்னையிலிருந்து ஆர்டர் செய்தேன், இரண்டே நாளில் டெலிவரி செய்துவிட்டார்கள்.
வெட்பாலை இலைகள் சருமத்திற்கும் கேசத்திற்கும் நல்லது. சுத்தமான தேங்காய் எண்ணையில் வெட்பாலை இலைளைப் போட்டு ஏழு நாட்களுக்கு ஊரவைத்து....வெயிலில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். அடுப்பில் வைத்து சூடு பண்ணக் கூடாது. வெட்பாலையில் ஊர வைத்த தேங்காய் எண்ணெய்... பார்க்கப் அடர் பிங்க் நிறத்தில், ஒயின் போல மாறிவிடும். தலையில் தொடர்ந்து தடவி வர, தலை முடி கருகருவென இருக்கும். பொடுகைப் போக்கும்.
இந்த வெட்பாலை எண்ணை காளாஞ்சுப்படை எனப்படும் சொரியாசிஸ் நேய்க்கு மிகச் சிறந்த மருந்தாகும். சொரியாசிஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் வெட்பாலைக்கு உண்டு. வறண்ட சருமத்திற்கு இயற்கையின் கொடை வெட்பாலை. நாட்டு மருந்துக் கடைகளில் வெட்பாலை எண்ணெய் கிடைக்கும்.
வெப்பாலை என்பது ஒருவகை மரமாகும். இதற்கு வெட்பாலை, நிலப்பாலை, பாலை, நிலமாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது பழந்தமிழகத்தில் பலை என அழைக்கப்பட்டது.
அமேசானில் வெட்பாலை மட்டும் ஆர்டர் செய்யாமல், கூடவே எலுமிச்சை மற்றும் மனோரஞ்சிதம் செடிகளையும் ஆர்டர் செய்திருந்தேன். மனோரஞ்சிதம் செடிகளைப் பார்க்க கத்திரிக்காய் செடி போன்று இருந்தது. வளர்ந்தபின்தான் தெரியும் இது வாசம் தரும் மனோரஞ்சிதமா இல்லை அரிப்புத் தரும் கத்திரிக்காய் செடியா என்று ?!
பி.கு:
ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது வெட்பாலை மரம் என்கிறார்கள். இதிலிருந்தே இந்த மரத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும். பாலை நில தாவரத்தை மருத நிலத்தில் வளர்க்க முயற்சி செய்கிறேன், பார்ப்போம்.
படம்: எலுமிச்சை மற்றும் மனோரஞ்சிதம் செடிகள்.
#வெட்பாலை
#Wrightiatinctoria
#சொரியாசிஸ்
புதன், அக்டோபர் 26, 2022
பாஸ்கர பட்டேலரும் தொம்மியின் ஜீவிதமும் (விதேயன்)

சனி, அக்டோபர் 08, 2022
இளையத் தலைமுறைக்கு தமிழர் பெருமை போதிக்கும் பொன்னியின் செல்வன்.
தர்மேந்திர பிரதான் - தமிழர்களுக்கு பொது எதிரியா ???
தமிழர்களுக்கு காலம்தோறும் ஒரு பொது எதிரி உருவாவார்கள் போலும்....?? தர்மேந்திர பிரதான் முன்பு இலங்கை அதிபர் ஜெயவர்தனா, பின்பு அதே இலங்கையிலிர...
