புதன், டிசம்பர் 31, 2008

எங்கே சொல்லுங்கள் பார்போம்?

தமிழில் நீங்கள் தங்கு தடை இன்றி பேச சில பயிற்சிகள்உள்ளன. அதில் இரண்டு உங்கள் கவனத்திற்கு. சும்மா பேசி பாருங்க...
"அடடா, நரி கரடேருதடா அந்நரியில் ஒரு
செந்நரி செந்நரி முதுகில் ஒரு பிடி நரை மயிர்"


" நூறு சோள தோசையில் ஒரு சோள தோசை
சொத்த சோள தோசை"

எங்கே இதை தொடர்ந்து பத்து முறை சொல்லுங்க பார்க்கலாம் ? அப்படி
தொடர்ந்து பிசிராமல் சொன்னால் உங்களுக்கு "செம்மொழி வாய் நம்பி" என்ற பட்டத்தை நீங்களே சூட்டிக் கொள்ளலாம்.

-தோழன் மபா

செவ்வாய், டிசம்பர் 30, 2008

கவிதை - வெறுப்பின் சுவடுகள் !



ஒரு வெறுப்பின்


உள்நோக்கம் -எதுவாக


இருக்கமுடியும் ?



கடந்தும்


மறைந்தும்


செல்லும் - முன்னைய


வாழ்வின் மிட்சங்களில்,


கனவுகள்


நடைமுறை-கூவத்தில்


மிதக்கின்றன...



எப்போதாவது


பயனற்று -கிடக்கும்


நேரங்களில் கோபம்


யார் மீதாவது


பயணம் செய்யும்,


அந்த


தருணங்களில்


புரிபடும்;


ஒரு


நேர்காணல்


முடிவுற்றிருக்கும்.


-தோழன் மபா

செவ்வாய், டிசம்பர் 23, 2008

சு கியின் அபா...

ஒரு குட்டி சிறுவன் திருவிழாவில் நுழைந்தால் எப்படி வேடிக்கை பார்பானோ அப்படி இருக்கிறது மன நிலை . புதிய புதிய பதிவுகள், வித்தியாசமான சிந்தனைகள், இளம் படைபாளிகளின் ஜனரஞ்சகமான படைப்புகள் என்று ப்லோக் தோறும் திருவிழா கொண்டாட்டம் தான். அதுவும் சில பதிவுகளை பார்க்கும்போது தான் தெரிகிறது, நாம் இன்னும் எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டிவுள்ளது என்று.


"நமக்கோ மாச மாசம் புள்ள பெக்கிற வேல , அதாங்க மார்க்கெட்டிங் ஜாப். நீங்க என்னதான் ஒரு மாசம் ஒரு கோடி ருபாய் குடுத்தாலும், அது அந்த மாதத் தோடயே முடிந்து விடும். பிறகு மறுபடியும் ஓட வேண்டும். இப்படித்தான் நம்ம வாழ்க்கை. இதில் ப்லோக்கை பராமரிப்பென்பது சிறிது கடினமாக உள்ளது. அதனாலேயே ஒரு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் நிறைய இடைவெளி." நிச்சயம் தொடர்ந்து கிறுக்கிதான் ஆகா வேண்டும்.


நான் அதிசயத்து பார்ப்பது நண்பர் சுரேஷ் கண்ணனின் "பிட்சை பாத்திரம் " ப்லோகை தான். நேர்த்தியான எழுத்தாற்றல் மூலம் தனது ப்லோகை மிக அற்புதமா செதுக்கி வருகிறார். அவரது எழுத்துகள் நவீன எழுத்துலகின் முக்கிய அடையாளமாக மாறிவருகிறது. அந்த சரளமான வாக்கிய நடை அவரை பத்திரிகை உலகிற்கு அழைத்து வரும் என்று நம்புகிறேன். இனி அதை அவரே நினைத்தாலும் குடத்தில் இட முடியாது. சுரேஷ் கண்ணனிடம் இருப்பது பிட்சை பாத்திரம் அல்ல, அது அட்சய பாத்திரம்!.

செவ்வாய், டிசம்பர் 16, 2008

வெள்ளைகாரன்தான் நமக்கு அப்பனா?

தமிழரிடத்தில் சில நூற்றாண்டுகளாக ஒரு பழக்கம், தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறது. அறியாமையால் தெரிந்தோ தெரியாமலோ [வெள்ளை காரன் காலத்தில்] தொடங்கிய இந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது.

அது!
தனது பெயருக்கு முன்னால் உள்ள தலை எழுத்தை ஆங்கிலத்தில் எழுதுவது. அதாவது தனது பெயரை தமிழிலும், தனது தந்தை பெயரை ஆங்கிலத்திலும் எழுதும் மகா கொடுமை.

உதாரணத்திற்கு

M. இளமாறன் என்ற பெயரை பாருங்கள். இதில் இளமாறனின் தந்தை மாடசாமியாக இருக்கலாம். அப்போ இளமாறனுக்கு முன்பாக " மா " என்ற தமிழ் எழுத்து தானே தலை எழுத்தாக இருக்க முடியும். அதை விட்டு ஆங்கில " M" என்ற எழுத்து எப்படி தலை எழுத்தாக இருக்க முடியும்?.

கிருத்துவத்தில் ஒன்று சொல்வார்கள் "பிதாவே இவர்கள் செய்யும் பாவம் என்னவென்று அறியாதவர்கள். இவர்களை மன்னியும்" என்று. அதை போல் தன் இது நமக்கு தவறு என்றே படவில்லை.


தமிழர்களாகிய நமக்கு இதை எடுத்து சொல்ல ஒரு நாதி இல்லை. தமிழ் ஆர்வலர்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை. இல்லை இதெல்லாம் தப்பு இல்லையென்று நினைக்கிறார்களோ என்னவோ ?



சாலையில் செல்லும்போது பாருங்கள், சாலை விளம்பரங்களில் இத்தகைய கொடுமை வழி எங்கிலும் இருக்கும். மெத்த படித்தவர்களே தங்கள் வீட்டு திருமண பத்தரிகையில் அப்படித்தான் போடுகிறார்கள். சில தமிழ் அமைப்பு நிகழ்ச்சிகளில் கூட இத்தகைய அவலம் அரங்கேறுகிறது.



திருமண பத்திரிகைகள், சுவரொட்டிகள், கடைகளில் உள்ள தகவல் பலகைகள், அரசு அலுவலகங்கள் என்று எங்கும் இந்த தவறு நீக்கமற நிறைந்துள்ளது.



இதில் இணைக்கப்பட்ட திருமண பத்திரிக்கையை பாருங்கள். உண்மை புரியும்.


இதில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களில் தான், இந்த கொடுமை அதிகம் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பா ம க போன்ற கட்சிகள் தான் நல்ல தமிழை பயன்படுத்துகிறார்கள்.


மக்களிடயே இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதற்கு ராமதாசும் திருமாவளவனும் முன் வருவார்களா..?
இதில் கலைஞரையும் சேர்த்துகொள்ளலாம் தப்பில்லை.

-தோழன் மபா

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...