செவ்வாய், டிசம்பர் 16, 2008

வெள்ளைகாரன்தான் நமக்கு அப்பனா?

தமிழரிடத்தில் சில நூற்றாண்டுகளாக ஒரு பழக்கம், தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறது. அறியாமையால் தெரிந்தோ தெரியாமலோ [வெள்ளை காரன் காலத்தில்] தொடங்கிய இந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது.

அது!
தனது பெயருக்கு முன்னால் உள்ள தலை எழுத்தை ஆங்கிலத்தில் எழுதுவது. அதாவது தனது பெயரை தமிழிலும், தனது தந்தை பெயரை ஆங்கிலத்திலும் எழுதும் மகா கொடுமை.

உதாரணத்திற்கு

M. இளமாறன் என்ற பெயரை பாருங்கள். இதில் இளமாறனின் தந்தை மாடசாமியாக இருக்கலாம். அப்போ இளமாறனுக்கு முன்பாக " மா " என்ற தமிழ் எழுத்து தானே தலை எழுத்தாக இருக்க முடியும். அதை விட்டு ஆங்கில " M" என்ற எழுத்து எப்படி தலை எழுத்தாக இருக்க முடியும்?.

கிருத்துவத்தில் ஒன்று சொல்வார்கள் "பிதாவே இவர்கள் செய்யும் பாவம் என்னவென்று அறியாதவர்கள். இவர்களை மன்னியும்" என்று. அதை போல் தன் இது நமக்கு தவறு என்றே படவில்லை.


தமிழர்களாகிய நமக்கு இதை எடுத்து சொல்ல ஒரு நாதி இல்லை. தமிழ் ஆர்வலர்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை. இல்லை இதெல்லாம் தப்பு இல்லையென்று நினைக்கிறார்களோ என்னவோ ?



சாலையில் செல்லும்போது பாருங்கள், சாலை விளம்பரங்களில் இத்தகைய கொடுமை வழி எங்கிலும் இருக்கும். மெத்த படித்தவர்களே தங்கள் வீட்டு திருமண பத்தரிகையில் அப்படித்தான் போடுகிறார்கள். சில தமிழ் அமைப்பு நிகழ்ச்சிகளில் கூட இத்தகைய அவலம் அரங்கேறுகிறது.



திருமண பத்திரிகைகள், சுவரொட்டிகள், கடைகளில் உள்ள தகவல் பலகைகள், அரசு அலுவலகங்கள் என்று எங்கும் இந்த தவறு நீக்கமற நிறைந்துள்ளது.



இதில் இணைக்கப்பட்ட திருமண பத்திரிக்கையை பாருங்கள். உண்மை புரியும்.


இதில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களில் தான், இந்த கொடுமை அதிகம் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பா ம க போன்ற கட்சிகள் தான் நல்ல தமிழை பயன்படுத்துகிறார்கள்.


மக்களிடயே இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதற்கு ராமதாசும் திருமாவளவனும் முன் வருவார்களா..?
இதில் கலைஞரையும் சேர்த்துகொள்ளலாம் தப்பில்லை.

-தோழன் மபா

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...