சனி, நவம்பர் 28, 2009

தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்காக ஓர் ஆண்டில் ரூ.31 கோடி செலவு.

தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்காக ஓர் ஆண்டில் ரூ.31 கோடி செலவு.

என்ன செய்தியைப் படித்ததும் பக்குன்னு இருக்கா...?




இந்தியாவிற்குள் புகுந்து பல உயிர்களைப் பலிக்கொண்ட ஒரு தீவிரவாதிக்கு ஒரு ஆண்டில் முப்ப்ப்ப்பபப...................து கோடி செலவாம்?

இந்திய இரையாண்மையை கட்டிக் காக்கும் உங்களுக்கும் எனக்கும் இந்த அரசு செய்யும் செலவு என்ன.....?



மும்பையில் உலகம் கலங்க நடத்தப் பட்ட ஒரு தாக்குதலுக்கு ஆமை வேகத்தில் ஒரு விசாரணை. ஒரு வருடம் கடந்துவிட்டது. இது வரை கசாப் விசாரணையில் எந்தவித முன்னேற்றுமும் இல்லை. அஜ்மல் கசாப்புதான் தினமும் மட்டன் பிரியாணியும், தந்தூரி சிக்கனும் சாப்பிட்டு இந்தியா வந்ததற்கான பலனை முழுமையாக அனுபவித்து வருகிறான். அந்த காலத்தில் முகளாய அரசர்கள் இந்தியா மீது படையெடுத்து தின்றதைப் போல...

அஜ்மல் காசப்புக்கு மராட்டிய அரசு (இல்லையென்றால் ராஜ் தாக்கரே கோபித்துக் கொள்வார்) தினமும் 8 1/2 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது.

மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு, இந்தியா ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் அங்கிருந்து ஒரு கடிதம் அனுப்புவார்கள். 'எங்களுக்கும் மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று. உடனே இந்தியா ஒரு கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பும் "பாகிஸ்தான் பொய் சொல்கிறது" என்று. இப்படித்தான் இந்த ஒரு வருடத்தையும் ஓட்டியது இந்திய அரசு. இன்னும் ஓட்டும்...!


ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் இருக்கும் கசாப்புக்கு உயர்தர சிகிக்சை, அங்கேயே ஒரு சிறப்பு நீதி மன்றம், அவனுக்கு ஏவல் செய்ய அரசு அதிகாரிகளின் கூட்டம்,அவன் முகம் சுளிக்காமல் இருக்க சுவையான அசைவ உணவு வகைகள் என்று ஒரு அரசு விருந்தினன் போன்றுதான் தனது வாழ் நாளை கழித்து வருகிறான்.

அதோடு, ஆர்தர் ரோடு சிறை வளாகத்தில் கசாப்புக்காக கூடுதல் பாதுகாப்புடன் கூடிய தனி அறை கட்டப்பட்டு உள்ளது. லாரி நிறைய வெடி குண்டுகளை ஏற்றிச் சென்று மோதினாலும் சேதம் அடையாத வகையில் இந்த அறை கட்டப்பட்டு வருகிறது.

இதேபோல், கசாப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜே.ஜே மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் தனி அறை கட்டப்பட்டு உள்ளது.

இதுதவிர அஜ்மல் கசாப்புக்காக வாதடும் அரசு வக்கீல் மற்றும் பிற வக்கீல்களுக்கு கட்டணமாக கணிசமான ஒரு தொகை செலவிடப்
படுகிறது!

என்ன...இப்பவே கண்ண கட்டுதா.....?

164 பேர் பலியாக காரணமாக இருந்த ஒரு கொலைகாரர்களில் ஒருவனுக்கு எதற்காக இத்தகைய சலுகைகள். அவனிடமிருந்து நாம் இன்னும் என்ன எதிர்ப்பார்கிறோம். அஜ்மல் கசாப் பாகிஸ்தானின் பரீத்கோட் என்ற இடத்தைச் சேர்ந்தவன் என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனியாக' தெரியும் போது இன்னும் ஏன் விசாரணையை நீட்டிக்க வேண்டும்.


அஜ்மல் காசப்பை பாதுகாத்து என்ன செய்யப் போகிறது இந்திய அரசு. சீனவின் துணை கொண்டு இந்தியாவில் சமுக சீரழிவை செய்துவருகிறது பாகிஸ்தான். கொள்கை அளவிலும், இராணுவ ரீதியாகவும் இரு நாடுகளும் இந்தியாவை எதிரி நாடாகத்தான் பார்க்கிறது. இலங்கைக்கும், பகிஸ்தானுக்கும் ஆயுதங்களை வழங்கி இந்தியாவை பதம் பார்க்கத் துடிக்கிறது சீனா.

இந்தியாவில் நடத்தப் படும் பல்வேறு தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் பங்குண்டு. மும்மை தாக்குதலும் பாகிஸ்தான் பிரஜைகளால் தான் நடத்தப் பட்டது என்று ஒரு சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானும் ஒத்துக் கொண்டது.

இன்னிலையில் கசாப்பை பாதுகாப்பதால் யாருக்கு என்ன லாபம்? அஜ்மல் கசாப்பை கொலை செய்தால் யாருக்கு நழ்டம்? அஜ்மல் கசாப்புக்கு கொடுரமான முறையில் தூக்குத்தண்டனை வழங்கினால் தான் இந்தியவிற்கு எதிரான சதிகளை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும்.

இப்படி விசாரனையை நீட்டிக்க....நீட்டிக்க..... ஒரு நாள் அஜ்மல் கசாப் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, சிறைச்சாலையிலிருந்து மலர் மாலைகள், மேளத்தாளத்துடன் பாகிஸ்தானியர் புடை சூழ வெளியில் வருவான்.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...