திங்கள், ஜனவரி 18, 2010

புத்தகக் காட்சியில் நான் வாங்கியது என்ன?

இடைவிடாத பணிச் சுமையின்(?) காரணமாக, சென்னை புத்தகக் காட்சிக்கு போகமுடியாமல் போய் விடுமோ என்று கூட நினைத்தேன். நல்ல வேலை கடைசி நாள்தான் செல்ல முடிந்தது. மக்கள் கடலில் நீந்தி கடக்க தனித் திறமை வேண்டும்.

"என்ன சார் புத்தகக் காட்சி பக்கம் ஆளயே... காணும், எப்ப வரப் போறிங்க...", தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் யுனிவர்ஷல் சாஜகான் சாரிடமிருந்து கேள்வி வரும்.

இனியும் போகாமல் இருந்தால், இந்த தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்காது என்பதால், ஆபிசுக்கு டேக்கா (ச்சும்மா...) குடுத்து கிளம்பிவிட்டேன்.

புத்தக் காட்சி நடந்த 10 நாளும் தினமணி, புத்தகக் காட்சி தொடர்பாக முழு பக்கச் செய்தியை தொடர்ந்து வழங்கி வந்தது. வேறெந்த நாளிதழும் இந்தளவிற்கு புத்தகக் காட்சிப் பற்றி எழுதவில்லை. தினமணியின் துணை வர்த்தக மேலாளர் என்பதால் BAPASI யோடு (தினமணிக்காக) ஒப்பந்தம் செய்வது எனது வேலை. தினமணிக்காக புத்தககாட்சி அமைப்பாளர்களோடு தொடர்பு கொள்ளுவதும் எனது பணிகளில் ஒன்று.

போகட்டும். இனி புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் பற்றி கூறுகிறேன்.

இப் புத்தகங்கள் பற்றி விரிவான செய்திகள், எதிர் வரும் பதிவுகளில்....

1 தமிழ் நாட்டு வரலாறு
சோழப் பெருவேந்தர் காலம்
-முதல் தொகுதி.

சோழப் பெருவேந்தர் காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் பெருமையும்,
செழுமையும் வாய்ந்த பகுதியாகும். இவர்கள் ஆண்ட 430 ஆண்டுக்
காலத்தை (கி.பி.850-1250) தமிழக வரலாற்றின் காப்பியக் (Epic Age)
காலம் எனலாம்.

வெளியீடு: தமிழ் வளர்ச்சித்துறை . ரூ.125/-


2 ஐயர் THE GREAT
வ.வே.சு.ஐயரின் மயிர்க்கூச்செறிய வைக்கும் வீர வாழ்க்கை
எழுத்து: இலந்தை சு. இராமசாமி
ரூ.70/-

3 கலைவாணி
ஒரு பாலியல் தொழிலாளியின் கதை

எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு இதெல்லாம்
இவர்களுக்கு இல்லை. காலத்தின் கோலம் இவர்கள் உடலில் ஆண்களால்
வக்கிரமாக எழுதப்படுகிறது.
எழுத்து வடிவம்: ஜோதி நரசிம்மன்
ரூ.80/-

4 திபெத்
அசுரப் பிடியில் அழகுக் கொடி

சீனாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் திபெத். நெகிழ்வூட்டும் அரசியல்
சரித்திரம்.
எழுத்து-மருதன்
ரூ.80/-

5 இடி அமின்
உகாண்டா மட்டுமல்ல உலகமே உச்சரிக்கப் பயந்த ஒரு பெயர்.
திடுக்கிட வைக்கும் திகில் வாழ்க்கை.
எழுத்து: ச.ந. கண்ணன்.

மேற்கண்ட நான்கு நூல்களும், வெளியீடு- கிழக்கு பதிப்பகம்.

6 "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா"
வேலையை வேகமாக முடிக்காததால் வெட்டப்பட்ட கறுப்பின
மக்களின் கைகளில் ரப்பர் பால் வழியும் காங்கோ...கறுப்புத்தோலை
உரிதெடுக்கும் சூடானின் கட்டித் தங்கங்கள்... ஆப்பிரிக்கர்களை
ஆட்டிவித்த ஐரோப்பியர்களின் இருண்ட முகம்.

எழுத்து: கலையரசன்.
வெளியீடு: கீழைக் காற்று
ரூ.50/-

7 கரீபியன் கடலும் கயானாவும்
எழுத்து: ஏ.கே.செட்டியார்.
கயானாவைப் பற்றிய விரிவான ஒரு நூல்.
வெளியீடு: அகல்
ரூ.65/-

8 ஆப்கான் அவலம்
உலக நாடுகளின் அலட்சியத்தால் அழிக்கப்படும் நாடு.
எழுத்து: மோசென் மக்மல்பாப்
வெளியீடு: தமிழோசை
ரூ.30/-

9 குறவர் பழங்குடி
இனவரைவியல் ஆய்வு
தமிழகத்தின் தொல் வரலாறும் தொல் பண்பாடும் கொண்ட ஒரு
சமூகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதற்கான, சுய
அடையாளம் தேடுவதற்கான ஒரு பதிவே இந்நூல்.
எழுத்து: மணி கோ. பன்னீர்செல்வம்
வெளியீடு: வல்லினம்
ரூ.160/-

10 தமிழ் இலக்கணம் - ஓர் எளிய அறிமுகம்
தமிழ் இலக்கணம் பற்றி அனா, ஆவன்னா அறிய நாட்டம்
கொள்வர்களுக்கு இந்நூலை நாடுதல் நலம்.
எழுத்து: கோ. குமரன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
ரூ.100/-


இன்னும் இருக்கிறது... ◦
Share/Bookmark

கருத்துகள் இல்லை :