ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

இந்திரா காந்தி கொலையாளிகளுக்கு 'தியாகிகள்' பட்டம்.

இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கிய கொலையாளிகள் நியூசிலாந்து நாட்டில் கவுரவிக்கப்பட்டனர்.


1984 ல் பொற்கோவிலில் நுழைந்த இந்தியப் படை 'ஆப்பரேஷன் புளு ஸ்டார்' என்ற பெயரில் சீக்கியர் மீது தாக்குதல் நடத்தியதால், சினம் கொண்ட சீக்கிய அமைப்புகள் இந்திரா காந்தியை கொலை செய்தனர்.

இந்திய முன்னால் பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களாக இருந்த பீந்த் சிங், சத்வந்த் சிங் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவர்களை மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கொலை சதியில் ஈடுபட்ட பாதுகாவலர் சேகர் சிங் மட்டும் உயிருடன் பிடிபட்டார். அவரும் விசாரனைக்குப் பிறகு தூக்கில் போடப்பட்டார்.

இந்த 3 பேரையும் நியூசிலாந்து நாட்டில் மனுகாவ் என்ற இடத்தில் வசிக்கும் சீக்கியர்கள் இந்திராவை கொன்றவர்களை தியாகிகளாக சித்தரித்து கொளரவித்தனர். அங்கு உள்ள சீக்கியர் கோவிலில் அவர்கள் உருவப்படங்கள் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன.

இந்த சம்பவம் அங்கு உள்ள மற்ற இந்தியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இது பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆக்லாந்தில் உள்ள சீக்கியர் கோவில் நிர்வாகிகள், இந்திராவை கொன்றவர்கள் மதத்துக்காக தங்கள் இன்னுயிரை விட்டுள்ளனர். அவர்களை தியாகிகளாக நினவு கூர்ந்து உள்ளோம் என்று விளக்கம் அளித்தனர்.

இலங்கையில் இந்திய அமைதிப் படை, தமிழனை கொன்று தமிழச்சியை கர்ப்பழித்து ஆடிய ருத்ரதாண்டவம் நாம் அறியாததல்ல. இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையில் மருந்துக்குக் கூட தமிழன் இல்லை. அதுதான் உண்மையும் கூட... அப்படி ஒரு தமிழன அழிப்புப் போரை இலங்கையில் நடத்தியது இந்திய அமைதிப் படை. அதன் மறு வினைதான் 'ராஜீவ் காந்தி படுகொலை'.

இந்திராவை கொன்றவர்கள் தியாகிகள் என்றால், ராஜீவை கொன்றவர்களும் தியாகிகள்தானே?


ராஜீவ் கொலை தொடர்பான நூல்:

ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது யார்?
-இ.அன்னபாண்டியன்
தமிழம்மா பதிப்பகம்
59, வினாயகபுரம் முதல் தெரு, அரும்பாக்கம், சென்னை -106

6 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

//இந்திராவை கொன்றவர்கள் தியாகிகள் என்றால், ராஜீவை கொன்றவர்களும் தியாகிகள்தானே?//

ஒரு தவறை சரியென்று வாதிப்பதால் இன்னொரு தவறும் சரியே என்ற வாதம் சரியாகாது.

மாயாவி சொன்னது…

சீக்கியர்கள் வீரமானவர்கள், மானமுள்ளவர்கள்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

ராஜ நடராஜனுக்கு...

'ஒரு தவறை சரியென்று வாதிப்பதால் இன்னொரு தவறும் சரியே என்ற வாதம் சரியாகாது.'

இத்தகைய என்னத்தால் தான் ஈழத் தமிழர் தலையில் (வாழ்வில்) இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து மிளகாய் அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் சொன்னது…

ஒரு பிரிவினர் மதிக்கும் விசயங்களை அவமதித்த குற்றத்திற்காகவே இந்திராவின் மரணம் நிகழ்ந்தது.

இலங்கைக்கு உதவி செய்து தமிழ் இனத்தை அழித்தமைக்காக ராஜிவின் மரணம் நிகழ்ந்தது.

காரணங்கள் வேண்டுமானால் மாறலாம், ஆனால் மரணம் தண்டனையாகவே கொடுக்கப்பட்டது.

இந்தியத் தலைவர்கள் என்று பாராமல் பொதுவாய் சிந்தனை செய்யுங்கள். என் கருத்து உங்களுக்குப் புரியும்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

தவறு செய்தவனுக்கு மரணம் தான் தண்டனை என்றால், அந்த தண்டனையை தந்தவன் தியாகிதானே. ஒரு இனத்துக்கான மீட்சியை அந்த இனத்தில் மிச்சம் இருப்பவன்தனே செய்யமுடியும்.

என் பதிவை நீங்கள் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இந்திராவை கொன்ற சீக்கிய இனத்தைச் சார்ந்த மன்மோகன் சிங்தான் இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். சீக்கிய இனத்தை தீவிரவாதியாக பார்த்த இந்திய திருநாடு இன்று தனது பார்வையை மாற்றிக்கொண்டுள்ளது. அப்படி இருக்கா... ராஜிவை கொன்ற விடுதலை புலிகளைமட்டும் ஏன் இன்னும் தீவிரவாதியாக பார்கவேண்டு, அவனும் ஒரு இனத்தின் விடுதலைக்ககத்தானே 'அதை' செய்தான்.

எனது பதிவின் சாரம்சம் என்னவென்றால் இந்திராவை கொன்றவர்கள் தியாகியால் என்றால், ராஜிவை கொன்றவர்களும் தியாகிகள்தான். இது மறுக்கமுடியாத உண்மை.

-அன்புடன்
தோழன் மபா

அருண்முல்லை சொன்னது…

வளர்க்கப்பட்டக்கடா மார்மீது பாயுமென்பர், ஆராய்ந்துப்பார்த்தால்
இன்று இந்தியாவால் வளர்க்கப்பட்ட
கடா இலங்கை, நாளை சைனாவையோ பாகித்தானையோ
துணைக்கழைத்து இந்தியாவின்
மார்மீது பாயலாம், எப்போதுமே
இலங்கை இந்தியாவை மிரட்டியே
காரியம் சாதித்து வந்திருக்கிறது.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...