புதன், ஏப்ரல் 13, 2011

இன்று மற்றுமொரு விடுமுறை நாளா?

அப்படி இப்படி என்று நாம் காத்திருந்த நாளும் வந்துவிட்டது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநில சட்டசபைக்கு இன்று ஓரேகட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.உடனே கிளம்புங்கள்

முன்பெல்லாம் 70-80 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறும். மக்கள் ஆர்வமாக வாக்களிக்க செல்வார்கள். இப்போதெல்லாம் வாக்குபதிவு சதவீதம் வெகுவாக குறைந்து வருகிறது. கிராமப்புரங்களில் மக்கள் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்ற எப்போதும் தவறியதில்லை. ஆனால் நகர மேட்டுக்குடி மக்கள் ஓட்டுப்பதிவு நாளை 'மற்றொமொரு விடுமுறை நாளாக' பார்க்கின்றனர்.


ஓட்டளிக்க செல்லாமல் வீட்டில் இருந்துவிட்டு, வீட்டில் செய்யும் பலகாரங்களை சுவைத்துவிட்டு அடுத்த நாள் அலுவகத்தில் வந்து அவிழ்த்துவிடுவார்கள். "நமக்கெல்லாம் இந்த அரசியல் வாதிகள் மீதும் ஓட்டளிப்பதன் மீதும் நம்பிக்கை கிடையாது... " இவங்க சம்பாரிக்க நாம வாக்களிக்க வேண்டுமா?" என்று தனக்குத்தானே கேட்டுவிட்டு ஓட்டுசாவடிக்கே செல்லாமல் இருந்துவிடுவார்கள்.இவர்கள்தான் இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள். இந்த ஜனநாயகத்தை புரட்டி போடக் கூடிய சக்தி நம்மிடம் இருக்கிறது என்ற உண்மையை உணராமலேயே இருப்பவர்கள்.இங்கு நிறைய பேர்... 'நான் ஓட்டளிக்கவில்லை....எனக்கு ஓட்டே கிடையாது" என்று பெருமையாக சொல்லுவார்கள். அரசாங்கம் பல கேடிகளை கொட்டி இந்த தேர்தலை நடத்துகிறது. அதில் நாமும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும்.கிழே உள்ள விபரங்களை கண்டாலே நமக்கு தேர்தலின் விஸ்வரூம் புரியம். அப்படி ஒரு மகத்தான 'ஜனநாயகத் திருவிழா' இதில் நாமும் ஒரு அங்கமாக இருக்கவேண்டும்.தமிழ்நாடு

தொகுதிகள் : 234

மொத்த வாக்காளர்கள் : 4,71,16,687


ஆண் வேட்பாளார்கள் : 2,612


பெண் வேட்பாளார்கள் : 136


வாக்குச்சாவடிகள் : 54,314புதுச்சேரி

தொகுதிகள் : 30


மொத்த வாக்காளர்கள் : 8,10,635


ஆண் வேட்பாளார்கள் : 181


பெண் வேட்பாளார்கள் : 6


வாக்குச்சாவடிகள் : 867கேரளம்

தொகுதிகள் : 140


மொத்த வாக்காளர்கள் : 2,31,47,871


ஆண் வேட்பாளார்கள் : 893


பெண் வேட்பாளார்கள் : 78


வாக்குச்சாவடிகள் : 2118
தீவிர பாதுகாப்பு

நீங்கள் சுதந்திரமாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிருந்து துணை ராணுவப்படையினர் 24 ஆயிரம் பேர் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிகளிலிம் வெப் காமிரா பொருத்தப்பட்டு, நடவடிக்கைகள் கண்கானிக்கப்பட்டு உடனுக்குடன் அவை நேரலையாக மாற்றப்பட்டு புனித ஜார்ஜ் கேட்டையில் இருக்கும் தலைமை தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் கம்யூட்டரில் காட்டப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும் நடவடிக்கைகளும் வீடியோவில் பதியப்படுகிறது.வாக்குப்பதிவு முடிந்தபின்னர், வாக்கு எந்திரங்கள் வேட்பாளர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். தமிழகத்தில் 91 இடங்களில் வாக்கு எண்ணப்பட உள்ளன. சென்னையில மூன்று இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றது.மெஜாரிட்டி அரசை உருவாக்குவோம்

நாம் அனைவரும் ஒன்று திரண்டு வாக்களித்தால்தான் ஒரு பெரும்பான்மை மிக்க அரசாங்கத்தை நிறுவமுடியும் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டும்.  ஒரு மெஜாரிட்டி அரசை உருவாக்குவது நமது கடமை.


அதனால் நாம் அனைவரும் சிரமம் பார்க்காமல் ஓட்டுச் சாவடிக்கு சென்று நமது ஜனநாயகக் கடைமையை ஆற்ற வேண்டும்.  இன்று ஒரு நாள் விடுமுறை நாளாக எண்ணி டிவியின் முன் அமர்ந்துவிடாதீர்கள். வாக்குச் சாவடிக்கு உடனே கிளம்புகள்.

இதோ நானும்.....!


Share/Bookmark

கருத்துகள் இல்லை :