சனி, அக்டோபர் 08, 2011

'ஜெ', -ஆட்சியில் பச்சைக்கு மாறும் பேருந்துகள்!

பச்சைக்கு மாறிய பேருந்து

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் போதும், அரசு அலுவலகங்களிலும், பேருந்துகளிலும் உடனடியாக ஒரு மாற்றத்தை காணமுடியும்.  அது பெயர் மாற்றம் மற்றும் கலர் மாற்றம். 

அரசு அலுவலகங்கள் என்றால், முந்தைய ஆட்சியாளர்களின் புகைப்படத்தை அகற்றுவதும், புதிய ஆட்சியாளரின் புகைப்படத்தை வம்படியாக மாட்டுவதும்  நாம் காணும் காட்சிதான்.

இதற்கு அடுத்தப்படிதான், ஆட்சியாளர்களுக்கு பிடித்த வர்ணத்தை (?) பேருந்துகளில் பூசுவது.  இதை ஆட்சியாளர்களே சொல்லிச் செய்கிறார்களா... இல்லை இவர்களே... அவர்களை 'காக்கா' பிடிக்க அப்படி செய்கிறார்களா என்றால்..... தெரியவில்லை...?!.
பச்சைக்கு மாறிய பெயர் பலகை
     

சமீபத்தில் சென்னையில்,  பேருந்துகள் படிப்படியாக பச்சை நிறத்துக்கு  மாற்றும் வேலையை, சத்தம் இல்லாமல் செய்துவருகிறது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்.  ஜெயலலிதாவிற்கு பிடித்த 'பச்சை' நிறத்தை பேருந்துகளின் பக்கவாட்டிலும், பெயர் பலகையிலும் பூசி வருகின்றனர்.   இதனால் நிறத்துகு ஒன்றாய் பேருந்துகள் சென்னையில் வலம் வருகின்றன.

பேருந்தின் பக்கவாட்டு டிசைன், பெயர் பலகை, பேருந்தின் உள்புற டிசைன் என்று கானும் இடத்தில் எல்லாம் பச்சையை வாரியிறைத்திருக்கின்றனர்.அதோடு இல்லாமல், இதுநாள் வரையில் ஜெ.ஜெ நகராக இருந்ததை, ஜெ.ஜெயலலிதா நகர் என்று மாற்றியிருக்கின்ற்னர்.   இப்படி ஆளும் கட்சிக்கு முதுகு சொறியும் இத்தகைய அரசு ஊழியர்களை என்னவென்று சொல்லுவது.

  ஒரு நாளைக்கு 167 லட்சம் மக்கள் சென்னை மாநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். 1984லில் தொடங்கப்பட்ட இந்தப் போக்குவரத்துக் கழகம், தனது பாரம்பரியம் மறந்து,  இப்படி கலர் மாறுவது கண்டிக்கத்தக்கது.

இந்தச் செயலை போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும்  மிக கனகச்சிதமாக செய்துவருகின்றனர்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
::::::::::::::::::::::::::::::::::
::::::::::::::::::
::::::::::
:::::
Share/Bookmark

2 கருத்துகள் :

பூங்குழலி சொன்னது…

அம்மாவே பச்சையிலிருந்து மாறியாச்சு போலிருக்கே

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.