வியாழன், அக்டோபர் 24, 2013

"தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா?" பாலியல் கட்டுரை.                சன் நியூஸில் பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு நேயரின் கேள்வி பின்வருமாறு இருந்தது.

"சார், உடலுறவின் போது 20 செகண்டிலேயே எனக்கு விந்து வெளியாகி விடுகிறது. இது எனக்கு மிகுந்த மனக் குழப்பத்தைத் தருகிறது. கல்யாணத்திற்கு முன்பு சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் இருந்தது அதனால்தான் என்று நினைக்கிறேன். இதற்கு நல்லதொரு ஆலோசனை சொல்லுங்க சார்" என்று அந்த நிகழ்ச்சி நடத்துபவரிடம், நேயர் போனில் கேட்கிறார்.

அதற்கு அந்த நிகழ்ச்சி நடத்துபவர் "சுய இன்பம் பழக்கம் இருக்குன்னு சொல்லிறீங்க, அப்புறம் ஏன் கல்யாணம் பன்னிகிட்டிங்க?. தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா?" என்றார்.

இதைக் கேட்டதும் எத்தகையை  ஒரு முட்டாள்தனமான நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது.


 சுய இன்பம் செய்பவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்றால் உலகில் 99 சதவீத ஆண்களுக்கு திருமணமே நடைபெறாது. (மீதி 1 சதவீதம் என்னவென்று கடைசியில் சொல்கிறேன்.) சுய இன்பம் என்பது இயற்கையானது என்பது நவீன உலகில் நிறுபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதை வைத்து பிழைப்பு நடத்தும் உட்டாலக்கடி மருத்துவர்களுக்குதான் அது கொடிய பழக்கம். அந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் அவர்களை சந்தித்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று டீவிக்களிலும் பத்திரிகைகளிலும் பகிரங்கமாக விளம்பரம் தரக் கூடியவர்கள். 

இந்தியாவை பொறுத்தவரை பாலியல் தொடர்பான விழிப்புணர்வு இன்னும் சராசரி குடிமகனுக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தவறான ஆலோசனைத் தரும் போலி மருத்துவர்கள்தான், செக்ஸ் தொடர்பான பிரச்சனைக்களுக்கு தீர்வு தருகிறார்கள். எனக்கு தெரிந்த மருத்துவரின் நண்பர் ஒருவர் தில்லி மும்பை என்று   பறந்து செக்ஸ் ஆலோசனை சொல்லி பெட்டி பெட்டியாய் பணம் அள்ளிக் கொண்டு வருவார்.

மருத்துவரோடு உதவிக்கு கூட சென்ற நண்பர், பிற்பாடு அவரோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக தொழில் (?) செய்ய தொடங்கினார். பல போலி செக்ஸ் மருத்துவர்கள் இப்படிதான் அனுபவத்தின் அடிப்படையில் தோன்றுகிறார்கள்.
()()()

                                                                                                                                                     போகட்டும்...
நாம் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு வருவோம்.

'கைமைதுனம்' தொடர்பான கேள்வியை கேட்ட, அதே நேயரிடம் டாக்டர் அடுத்த கேள்வியை கேட்கிறார்.

"உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை வருடமாகிறது...?"

"நான்கு வருஷமாச்சி  டாக்டர்"

"செக்ஸ் எப்போல்லாம் வைத்துக் கொள்வீர்கள்?"

"15 நாளுக்கு ஒரு வாட்டி இல்லன்னா, மாசத்திற்கு ஒரு வாட்டி,  அதே நேரத்தில் கட்டிங் போட்டுட்டு செக்ஸ்ல ஈடுபட்டா கொஞ்சம் அதிகம் நேரம் செய்ய முடியுது டாக்டர் " என்றார்.

டாக்டருக்கு தலையே சுற்றிவிட்டது. எனக்கும் அப்படிதான் இருந்தது.

 மோட்டார் வண்டிகளுக்கு சர்வோ ஆயில் போட்டால் எக்ஸ்ட்ரா  மைலேஜ் உண்டு என்று  விளம்பரம் செய்வார்கள்.  அப்படி இருந்தது அவர் சொன்னது.


கட்டிங் போட்டால் செக்ஸில் எக்ஸாட்ரா மைலேஜ் உண்டா...?! என்ன....?

இதெல்லாம் ஒரு வகையான 'மனப்பிராந்தி' என்றுதான் சொல்லவேண்டும்.   வக்கிர செக்ஸ் உணர்வுகள் உச்சம் பெறவும் குடிபோதை ஒரு காரணமாக இருக்கிறது. டாஸ்மாக் வந்தப் பிறகு இந்தமாதிரி அபத்தங்கள் அதிகமாகத்தான் ஆகிவிட்டது.
()()()

முருங்கை கீரை,காய்

செக்ஸில் அதிக நேரம் ஈடு பட மிக எளிதான இயற்கை மருந்துகள் இருக்கின்றன. கைக்கு கிடைக்கும் அதை படுக்கைக்கு பயன்படுத்த நம்மில் பல பேருக்குத் தெரிவதில்லை. அதில் ஒன்று முருங்கை மரம். முருங்கை கீரை, முருங்கைக்காய், முருங்கை விதை என்று எல்லமே செக்ஸின் வீரியத் தன்மைக்கு உதவி புரிபவை. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. பேரிச்சை, வெங்காயம் (ரொம்ப காஸ்ட்லி),லவங்கம், பெருங்காயம், பூண்டு,இஞ்சி, சாதிக்காய்,ஓமம்,பாதாம்  இதையெல்லாம் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் என்கிறது இயற்கை மருத்துவம்.

அதே போல் அமுக்கரான் கிழங்கு.  இதுவும் ஒரு சிறந்த செக்ஸ் ஊக்கி என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஆனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் நாம் இதை பயன்படுத்த வேண்டும்.

திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் என்கிறார் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எரிக் கார்ட்டி. சின்ன சின்ன சீண்டலில் தொடங்கி உச்சத்தை தொடும் விளையாட்டு வரை செக்ஸ் உறவு நீடிக்கும். 'இதற்கெல்லாமா கால நேரம் பார்ப்பார்கள். விடியும் வரை விளையாடலாமே என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்'. ஆனால் திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடத்தில் முடிந்து விடுமாம்.  ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்தே செக்ஸ் உணர்வு மிகைப்படவோ, குறையவோ வாய்ப்பு உண்டு. நீண்ட நேரம் செக்ஸில் ஈடுபட்டால்தான் முழு வெற்றி என்பது நமது கற்பனையே என்கிறார் எரிக் கார்ட்டி. இத்தகைய புரிதல் இல்லாமல்தான் கட்டிங் போட்டு  எக்ஸ்ட்ரா மைலேஜ்ஜுக்கு ஆசைப்படுகிறார்கள்.


இங்கிலாந்து சுகாதாரத்துறையோ டீன் ஏஜ் யுவன் யுவதிகளை கைமைதுனத்தில் ஈடுபடச் சொல்லி அறிவுறை வழங்குகிறது . பிரிட்டிஷ் போன்ற மேலை நாடுகளில் டேட்டிங் கலாச்சாரம் என்பது சர்வசாதாரனம். மாணவப் பருத்திவத்தில் செக்ஸில் ஈடுபடும் மாணவர்கள் அதிகம். தேவையில்லா கர்பத்திற்கும், எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களை தடுப்பதற்கும் சுய இன்பம் பயன்படும் என்கிறார்கள்.   சிறுவயது கர்ப்பம், பால்வினை நோய் போன்றவைகள் ஏற்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு நல்லதொரு வடிகாலாகவே கைமைதுனம்  பார்க்கப்படுகிறது.


 அதே நேரத்தில் இந்தியாவில் செக்ஸ் இன்னும் 'சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்ற நிலையில்தான் இருக்கிறது!. 
 ()()()
 கடைசியில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு வருவோம்.

சுய இன்பம் செய்யும் நீங்கள் எப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டீர்கள்?. ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி பாழடிக்கலாமா? என்ற ரீதியில் கேட்டுக் கொண்டு இருந்தார். அதற்கு அந்த மருத்துவரும் ஒன்றும் சொல்லவில்லை என்பதுதான் வேதனை. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பல இள வட்டங்கள் தவறான புரிதலுக்கே ஆட்படுவார்கள். சுய இன்பத்தில் ஈடுபட்டால் நாம் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பது போன்ற தவறான தகவல்களைதான் இந்த அரைவேக்காட்டு நிகழ்ச்சிகள் தருகின்றன. மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கும் போது கவனத்துடன் இருப்பது அவசியம் என்பதை இவர்கள் உணரவேண்டும். .

"சரி, அந்த 1 சதவீதம் என்னாச்சி...?" என்ற கேள்விக்கு பதில் ....

"உலகில் 99 சதவீத ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். மீதி 1 சதவீத ஆண்கள் அப்படி இல்லை என்று பொய் சொல்கிறார்கள்!"
என்பது   உலகளாவிய கருத்து!.
()()()

.

Share/Bookmark

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பிராந்தியும் அதிகம்... மனப்பிராந்தி அதை விட...

முடிவில் "நச்..."

Chellappa Yagyaswamy சொன்னது…

இந்த மாதிரிப்பதிவுகளுக்கு என்ன மாதிரி பின்னூட்டம் இடுவது என்று தெரியவிலையே! (ஓடிப்போய் 'அந்த' ஆசாமிக்கு ஒரு செயல்விளக்கம் காட்டுவது தான் சிறந்த வழி என்று படுகிறது! அல்லது, உங்கள் பதிவை நூறு பிரதிகள் எடுத்து எல்லா சேனல்களின் நோட்டீஸ்போர்டிலும் ஒட்டி விடலாம்!)

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி தித.
தமிழக அரசு விற்கும் பிராந்தியால்தான் இந்த வினை?!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Chellappa Yagyaswamy

இது போன்ற பதிவுகளை எழுதுவதே கத்தி மீது நடப்பது போன்றுதான்.
கொஞ்சம் எல்லை மீறினாலும் படிப்பவர்களை முகம் சுளிக்கச் செய்துவிடும்.

அதே நேரத்தில் இத்தகைய செய்திகளை பதிந்து உண்மையை உரக்கச் சொல்வதும் ஒரு சமூக சிந்தனைதான்.

தங்களது கருத்திற்கு நன்றி சார்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இத்தகைய உண்மைகள், இளைஞர்களை அவசியம் சென்று சேர வேண்டும் ஐயா. தவறான கருத்துரைகளால், தவறான வழிகாட்டுதல்களால், எத்துனை பேர் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு அலைகிறார்களோ தெரியவில்லை.
கத்திமேல் நடப்பது போன்ற பதிவுதான், எனினும் மாணவர்கள், இளைஞர்கள் அவசியம் படித்துப் புரிந்த கொள்ள வேண்டிய பதிவு. நன்றி ஐயா

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கரந்தை ஜெயக்குமார்.

நாட்டின் தலைநகரிலிருந்து பட்டி தொட்டி வரை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதை தீர்க்க பாலியல் கல்வி அவசியமான ஒன்று என்பதே எனது கருத்து!.

தங்கள் கருத்திற்கு நன்றி அய்யா!