புதன், அக்டோபர் 09, 2013

பொது இடத்தில் மூக்கு குடைய தடை?

           சீ
னாவிலிருந்து உலக சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்கள் உலக நாடுகளில் நடந்துக் கொள்ளும் முறை பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்துவிடுகிறதாம். இதனால் சீன அரசாங்கம் 64 பக்க கையேட்டை  தயாரித்து வழங்கியுள்ளது. இதில் வெளி நாடுகளுக்கு சீனர்கள் சென்றால் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்ற ஒழுக்க விதிகள் அதில் வரையறுக்கப்பட்டுள்ளது.


பொது இடத்தில் மூக்கு குடைய தடை, மூக்கில் உள்ள முடியை ஒழுங்காக வெட்டி இருக்க வேண்டும், பொது கழிவரைகளில் அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது, சூப் மற்றும் நூடுல்ஸ் சாப்பிடும்போது உறிஞ்சி குடித்து சத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என்று பட்டியல் நீள்கிறது.

சரி, இந்த விஷயத்தில் இந்தியர்கள் எப்படி...?


 ஒருமுறை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார் இங்கிலாந்து பிரதமர்.  பிரதமர் நேரு அவருக்கு டெல்லியை சுற்றி காட்டினார். அப்படி காட்டும் போது, மக்கள் சாலை   ஓரங்களில் அமர்ந்து 'டூ டாய்லட்' போய்கொண்டு இருந்தனர். இதைக் கண்டு முகம் சுளித்தார் இங்கிலாந்து பிரதமர்.  நேருவுக்கோ முகம் அவமானத்தால் வாடிவிட்டது.

அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்துக்கு செல்லக் கூடிய வாய்ப்பு பிரதமர் நேருவுக்கு கிடைத்தது. வழக்கம்போல் இங்கிலாந்து பிரதமர் நமது பிரதமரான நேருவை அழைத்துக் கொண்டு லண்டனை சுற்றிக் காட்டினார்.  அப்போது,  தேம்ஸ் நதிக்கரையோரம் ஒருவன் அமர்ந்து 'டூ டாய்லட்' போய்கொண்டு இருந்தான். பிரிட்டீஷ் பிரதமரை அவமானப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தே என்று நேருவுக்கு சந்தோஷமாகிவிட்டது.  "பாருங்க உங்க நாட்டிலும் இப்படிதான் இருக்காங்க" என்றார் நேரு . இங்கிலாந்து பிரதமருக்கோ தலை சுற்றிவிட்டது. கோபத்தில் முகம் சுளித்த அவர்,  டூ டாய்லட் போனவனை அழைத்துவரச் சொன்னார் "நீ யாரு எங்கேயிருந்து வர்ற, பொது இடத்தில் இப்படி செய்வது அசிங்கமில்லையா?"  என்றார்.

"சாரி...துரை,  நான் இந்தியாலேருந்து வர்றேன். இங்க இப்படி போகக்கூடதுன்னு எனக்குத் தெரியாது!" என்றான் அவன்.  மீண்டும் பல்பு வாங்கினார் நமது பிரதமர்.

இந்தியர்கள் பற்றி இப்படி நகைச்சுவையாக கதை சொன்னாலும், பெருவாரியான இந்தியர்கள் இன்றும் பொது வெளிகளில்தான் மலம் கழித்துக் கொண்டு இருக்கின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட இன் நிலை இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.   கிராமம் என்றால் ஆற்றாங்கரை, தோப்பு, வயல்வெளிகள்,திடல்கள் என்று இருக்கும். ஆனால் சென்னை பொன்ற நகரங்களில் பிரதான கழிப்பிடமே ரயில் பாதை ஓரங்களில்தான் நடக்கிறது.

பொது இடங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற ஒழுக்க விதிகளை இந்திய அரசாங்கமும் ஏற்படுத்த வேண்டும். வெளி நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு எந்தவித விதிகள் இல்லையென்றாலும் கூட, அட்லீஸ்ட் உள் நாட்டிலாவது சில பொது விதிகளை ஏற்படுத்த வேண்டும்.   'இந்தியர்களுக்கு பொது இடமும், அவர்களது வீட்டு கக்கூஸும் ஒன்றுதான்' என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.                                     பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி.....?                                


 • பஸ்டாண்டு மூலை, குப்பை தொட்டி ஓரம், சுவர் ஓரம், ஓரமாய் இருக்கும் மரம் இதையெல்லாம் பார்த்தா சட்டுன்னு பேண்டு ஜிப்பை கழட்டிடுவான்.
 •  நடக்கிற வழியில எச்சில் துப்ப இவன விட்டா ஆள் இல்லை. 
 •  வெற்றிலை, பான்பராக் போடுறதே சுவர் மூலையிலும், மாடிப்படி ஓரத்திலும் துப்புவதற்காகத்தான்.
 • எதிரில் ஆள் இருப்பதையே மறந்து 'மூக்கை தூர்' வாருவதில் இவன் கில்லாடி.
 •  தனது 'வாய் துர் நாற்றம்' அடிப்பதைக் கண்டு பிறர் முகம் சுளிக்கிறார்கள், என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாது அறிவாளிகள்(?) இந்தியாவில் அதிகம்.
 •  ஒரு மனிதனுக்கும் இன்னோரு மனிதனுக்கும் உள்ள சராசரி இடைவெளி எது என்பது கூட சராசரி இந்தியனுக்கு தெரியாது.  எங்கு  நின்றாலும் சக மனிதனோடு ஒட்டிக் கொண்டுதான் நிற்பான். 
 •  பொது இடத்தில் மெதுவாய் பேச தெரியாத, வேகத்தில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவன். 
 •  ஹோட்டல்களில் தயிர் சாதத்தை முழங்கை வரையில் ஓழுக விட்டு, முழங்கையிலிருந்தே நாக்கால்சர்ரென்று பெரும் சத்தத்துடன் நக்கக் கூடிய சக்தி படைத்தவன்.
 •  சட்டை அது எதற்கு?  என்று கேட்கக் கூடியவர்கள் இருண்டு பேர் .ஒருவர் வயலில் வேலை செய்யும் விவசாயி.  மற்றொருவர் கோயிலில் வேலை செய்யும் குருக்கள். ரெண்டு பேருமே சட்டை போடாமதான் திரிவாய்ங்க. 
 •  தனது காதை குடைந்து, முகத்தை அஷ்டகோணத்தில் காட்டி மற்றவரை பயமுறுத்துவதில் இவன் எக்ஸ்பட். 
 •  கொஞ்சமும் யோசிக்காமல் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு இவன் சொறிய,  பார்ப்பவர்கள்தான் முகத்தை திருப்பிக்கொள்ளவேண்டும். 
 •  எத்தகைய உயர் நிலையில் இருந்தாலும், அருகில் சாப்பிடுபவர்களைப் பற்றி கவலைப்படாமல் 'சவக் சவக்'  என்று சத்தம்போட்டு சாப்பிடுவர்கள் பல பேர்.  சாப்பிடும் போது சத்தம் வராமல் சாப்பிடக் கூடிய குறைந்தப் பட்ச அறிவுக்கூட இவர்களிடம் இருக்காது. 
 •  ஹோட்டலில் கை கழுவும் இடத்தில் நின்றுக் கொண்டு 'புர்'ரெண்டு கொஞ்சம், சங்கோஜப்படாமல் மூக்கை சிந்துவதில் இந்தியவர்கள் எல்லோரையும் திரும்பிப் பார்க்க செய்வார்கள். 
 • நைட்டு நைட்டியை பகலிலும் போட்டு, கடைக்கார அண்ணாச்சியை அலற விடுவதில்  வீட்டு அம்மணிகளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்?. 
 •  காது குடைய பஞ்சு வைத்த பட்ஸைவிட, பைக் கீ, ஊக்கு, ஹேர் பின், தீக்குச்சி என்று கைக்கு கிடைத்தெல்லாம் பயன்படுத்தும் அதி புத்திசாலிகள் நாம்தான்.   
 •  20 லட்சம் பொறுமான காரில் சென்றாலும், கார் கண்ணாடியை இறக்கிவிட்டு,  காலி வாட்டர் பாட்டிலை ரோட்டில் வீசிச் செல்வதில், நமக்கு நிகர் நாமே?!
 •  என்னதான்  குப்பை தொட்டி பெரிய சைசில் இருந்தாலும், குப்பையை தொட்டிக்கு வெளியே விசிறிவிட்டு செல்வதில் உலகிற்கு நாம்தான் முன்னோடி.
(இன்னும் வேறு ஏதாவது மிச்சம் மீதி இருந்தா சொல்லுங்க நண்பர்களே....?!)

இப்படி பொது இடத்தில் கொஞ்சமும் சங்கோஜமின்றி  பொத்தாம் பொதுவாய் போட்டுத் தாக்குவதில் இந்தியர்கள் உலக பிரசித்தம். பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று சீனாவைப் போன்றே நாமும் ஒழுக்க விதிகளை அமுல் படுத்தலாமே....?
செய்வார்களா......?!.

Share/Bookmark

5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை உண்மைகள்... அவரவர் உணர்ந்து திருந்த வேண்டும்... வேறு வழியில்லை...

Chellappa Yagyaswamy சொன்னது…

இம்மாதிரி நம்மால் முடியாதவற்றை சீனர்கள் எளிதாக அமுல்படுத்தி விடுகிறார்கள் என்பதில் தான் அவர்களின் பொருளாதார வளர்ச்சியின் ரகசியம் அடங்கியிருக்கிறதோ?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

உண்மைதான் DD. பொது இடத்தில் நாகரிகமாக நடந்து கொள்வது பற்றி, பெரும்பாலன மக்களுக்கு பிரங்கையே இருப்பதில்லை.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Chellappa Yagyaswamy

இருக்கலாம் சார், அவர்களுக்கு அரசியல் கட்சிகளைப் பற்றி கவலை இல்லை. நமக்குதான் ஆயிரம் அரசியல் கட்சிகள். முன்னே போனால் இடிப்பார்கள், பின்னே போனால் கடிப்பார்கள். இதனாலயே சில அடிப்படையான விஷயங்களைக் கூட முடிக்க முடியாமல் கிடப்பில் போடப்படுகிறது!.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பொது இடங்களில் அசுத்தம் செய்வதையும், அநாகரிகமாக நடந்து கொள்வதையும் மக்கள் உணர்ந்து திருந்த வேண்டும் ஐயா. அரசாங்கமும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும், போதுமான கழிவறை வசதிகளைச் செய்து தருதல் வேண்டும்.