செவ்வாய், டிசம்பர் 31, 2013

சென்னை பார்களில் பாடும் பெண்கள்!



சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கிறது அந்த ஹோட்டல்.   வியாபார நிமித்தமாக ஒரு நண்பர் என்னை அங்கு வந்து சந்திக்கும் படி கூறி இருந்தார்.  ஹோட்டலுக்கு சென்று அவரை தொடர்பு கொண்டால்.... "பாரில் இருக்கிறேன் வாங்க" என்றார்.  பார் ஹோட்டலின் தரை தளத்திற்கும் கீழே இருந்தது.

பாரில் குடிமகன்கள் சீப்பிக் கொண்டு இருக்க... ஒரு ஓரத்தில் மூன்று இளம் மங்கைகள் மைக் பிடித்து பாடிக் கொண்டு இருந்தனர். பழைய  மற்றும் புதிய பாடல்களாகப்  பாடி வந்திருந்த 'பார்'யாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டு இருந்தனர்.  பொதுவாக இத்தகைகைய நடுத்தரவர்க்க பார்களில், யாரும் பாட மாட்டர்கள். சத்தத்தை அதிகம் வைத்து நமது காதைதான் செவிடாக்குவார்கள். ஆனால், இங்கு பெண்கள் பாடுவது புதிதாக இருந்தது.

ஸ்டார் அந்தஸ்த்தில் உள்ள ஹோட்டல் பார்களில் மட்டும்தான் இத்தகைய இசை நிகழ்ச்சிகள் நடைபெரும்., அல்லது யாராவது ஒருவர் இசை கருவியை மென்மையாக இசைத்து, குடிமகன்களை  உற்சாக மூட்டுவார்கள்.  கார்பெரேட் மனிதர்களின் வாழ்வியலில், இத்தகைய லைஃப் ஸ்டல் சகஜமான ஒன்று.

ஆனால், நடுத்தர வர்க்க  குடிமகன்கள் வாழ்வில் இப்படிப்பட்ட லைப்ஸ்டைல் இல்லை. பாட்டிலை திறந்து ஒரே கல்பாவா அடித்துவிட்டு, ஆபிஸில் இருக்கும் எவனைப் பற்றியாவது சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருப்பதைதான் நாம் அதிகம் பார்த்துக் இருக்கிறோம்.

சிறிய ரக ஹோட்டல்களில் இப்படி பாடகிகளை வைத்து இசை நிகழ்ச்சி நடத்துவது சற்று நெருடலாகவே இருக்கிறது. அதிலும் அந்த  மூன்று பெண்களில் இருவர் மணமானவர்.  பார் முழுவதும் ஆண்கள் குடித்துக் கொண்டு இருக்க, அந்த மூன்று பெண்களும்,  சங்கோஜத்துடன்  பாடிக் கொண்டு இருந்தது வேதனையாக இருந்தது.

பார்களில் பெண்கள் பாடித்தான் ஆக வேண்டுமா....???

15 கருத்துகள்:

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

// பார்களில் பெண்கள் பாடித்தான் ஆக வேண்டுமா //

இந்த கேள்வியை அந்த பெண்களிடம் கேட்டு, அவர்கள் படம் இல்லாத ஒரு பேட்டியை பத்திரிகையில் வெளியிட்டு இருக்கலாம்.

நன்றி! அய்யா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"பார்"கள் முதலில் தேவையா...?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran சொன்னது…

பாஸு... உங்களுடைய பதிவை முதல் முறையாக படிக்கிறேன்... இதான் உங்க ஸ்டைலா ?

பதிவில் கடைசி வரியும், அதற்கு முந்தய பத்தியும் எனக்கு பிடிக்கவில்லை... மற்றபடி ஓகே...

அந்த பாரின் பெயர் விலாசம் கிடைக்குமா ?

Unknown சொன்னது…

ஆண்கள் குடித்துத்தான் ஆக வேண்டுமா என்று கேட்டால் நியாயம் !

Unknown சொன்னது…



இனிய புத்தாண்டு நல் வாழ்த்து!

பதிவைப் படித்தேன்! பாவப்பட்ட பெண்கள்! என்ன சூழ்நிலையோ !!?

நலமா! நண்பரே!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@தி.தமிழ் இளங்கோ

//இந்த கேள்வியை அந்த பெண்களிடம் கேட்டு, அவர்கள் படம் இல்லாத ஒரு பேட்டியை பத்திரிகையில் வெளியிட்டு இருக்கலாம்.//

உண்மைதான் அய்யா, நல்லதொரு யோசனை.
நிருபரிடம் கூறுகிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@DD

தேவை இல்லைதான். ஆனால் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு தேவையாக இருக்கிறேதே...?!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கரந்தை ஜெயக்குமார்.

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் அய்யா!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…


@Philosophy Prabhakaran.

பிரபா ஒயின்ஸ் ஷாப் ஓனருக்கு இப்படி எழுதுவது பிடிக்காதது தெரிந்ததுதானே...?! (Fun)

தமிழன் வீதிக்கு முதல் முறையாக வருகைத் தரும் பிலாசபி பிரபாகரனுக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Bagawanjee KA.

//ஆண்கள் குடித்துத்தான் ஆக வேண்டுமா என்று கேட்டால் நியாயம் !//

உண்மையாகவே நியாயமான கேள்வி. ஆனால் அரசாங்கமே ஊத்திக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் போது 'ஆம் ஆத்மி' (சாமனியன்) என்ன செய்வான்?.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@புலவர் இராமாநுசம்.

நன்றிங்க அய்யா!
நலமாக இருக்கிறேன். தங்கள் நலம் அறிய ஆவல்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Philosophy Prabhakaran சொன்னது…

அண்ணே... வெலாசம் ?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

இன்று தெருவுக்குத் தெரு டீ கடை இருக்கிறதோ இல்லையே அம்மா ஜெயலலிதா புண்ணியத்தில் மூலைக்கு மூலை டாஸ்மாக் மதுக்கடைகள் புற்றீசல்கள்போல் முளைத்து நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. அதன்
தாக்கம்தான் இப்படி நடுத்தர ஹோட்டல்களில் பாரும் பாடகிகளும்.

மதுவைத் தவிர்ப்போம்; உடல் நலம் காப்போம்.

(இந்த கருத்துரையில் முதல் சில வார்த்தைகள் உங்கள் பதிவிலிருந்தே எடுத்துக் கொண்டேன். நன்றி!)


வந்து பார்வையிடுங்கள்:இது இந்த ஆண்டில் எனது பதிவு: (நூல் அறிமுகம்):
http://nizampakkam.blogspot.com/2014/01/keezhai-jokes121.html

இராய செல்லப்பா சொன்னது…

ஆறு வயது, ஏழு வயது சிறுமிகளை காதல், செக்ஸ் கலந்த பாடல் காட்சிகளுக்கு ஆண்டுவிழாவில் ஆடவைக்கும் ஆங்கிலப் பள்ளிகளும், டிவி நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும் நாட்டில், பெண்கள் ஓட்டல்களில் பாடுவதில் என்ன தவறு இருக்கமுடியும் நண்பரே? பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கும் மஞ்சள் காமாலைக் கண்ணர்களைத் தான் நாம் திருத்தவேண்டும். Not these singers please.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...