சனி, டிசம்பர் 28, 2013

தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம்!. PART 2


                    ழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் எல்லாம் பத்திரிகைகளை நம்பிக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைக்கு ஒன்றை அனுப்பிவிட்டு அது எப்போது வரும்? என்று காத்திருப்பார்கள். அப்படி வந்துவிட்டால் அந்தப் பக்கத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, தெரிந்தவர், தெரியாதவர் எல்லாரிடமும் நான் எழுதியது  வந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் காட்டுவார்கள்.
இப்போது எல்லாரும் கையும் கணினியுமாக அலைகிறார்கள். இணையதளங்கள் பெருகிவிட்டன. ஆளுக்கொரு அல்ல...  பல பிளாக்ஸ்பாட்கள் ஆரம்பித்து, நினைத்ததை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களில் சிலர்... இவர்கள் !

முந்தைய வலைப்பதிவர்கள் அறிமுகம் பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்....


தோத்தவண்டா
ஆரூர் மூனா என்ற பெயரில் எழுதிவரும் செந்தில்குமாருக்கு திருவாரூர்தான் சொந்த ஊர். சென்னையில் ரயில்வேயில் பணிபுரியும் இவர் சினிமா, அனுபவம் என்று கலந்துகட்டி எழுதுகிறார். சினிமா பார்ப்பதையே அனுபவப் பதிவாகப் போட்டு சினிமாவைவிட விறுவிறுப்பு ஊட்டக்கூடியவர். (www.amsenthil.com)

யாரும் அழைக்காத நானும்
என் கணினியும்...

நானும் ஒரு வாரமாக பாக்குறேன். ஒரு பய நமக்கு அழைப்புவிட மாட்டேங்குறான். பிரபல பதிவர்களில் ஆரம்பிச்சு போன வாரம் வந்த பதிவர்கள் வரை ஒருத்தரை மாத்தி ஒருத்தர் அழைப்பு விடுத்துகிறாங்க. நம்மளை ஒருத்தனும் கண்டுகிட மாட்டேங்கிறாய்ங்க. சரி யாரும் நம்மளை மனுசனாகவே மதிக்கலை போல. நாமளும் யாரிடமும் ஒழுங்கா பழகியது இல்லையே. எங்க பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாத்தேன் போய்க்கிட்டு இருக்கு.

என்னை, நானும் என் முதல் கணினி அனுபவமும் என்ற தொடர் பதிவை எழுதும்படி  வந்த அழைப்பை ஏற்று அந்த அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
இருபது வயது வரை நான் கணினியை அருகில் இருந்து பார்த்தது இல்லை. படத்தில் பார்த்தது கூட "காதலர் தினம்' படத்தில்தான். அதிலும் கவுண்டமணி கையின் முட்டியால் அடிப்பதையெல்லாம் நிஜம் என்று நம்பிக்கொண்டு இருந்த அப்பாவி (நீயாடா, வெளங்கிடும்) நான்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடங்களில் கம்ப்யூட்டரை பின்பக்கமாகப் பார்த்து ரசித்து இருக்கிறேன். வங்கிக்கணக்கு கூட இல்லாததால் பேங்கு பக்கம்கூட அதுவரை சென்றதில்லை. அதனால் வங்கியில் கணினியைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

நாஞ்சில் மனோ
சொந்தக் கதை சோகக் கதை என்று ரகளையாய் தனது பதிவுகளை எழுதக்கூடியவர். நாஞ்சிலை சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், பஹ்ரைனில் பணி. மும்பையில் வாசம் என்றிருந்தாலும் காமெடியில் கலக்கவே இவருக்கு விருப்பம். அனுபவம் சார்ந்த எழுத்துக்களையே அதிகம் எழுதக் கூடியவர். (http/nanjilmano.blogspot.in)

மலையாளி பெண்கள்  

மலையாளி ஆண்களுக்கு தமிழனைப் பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்பப் பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லியிருக்கேன். அது என் அனுபவமும்கூட. மலையாளி தோழிகள் வாயால் சொல்லியும் கேட்டிருக்கிறேன். அதுக்குக் காரணம் கேட்டால் அவர்கள் சொல்வது, ""தமிழர்கள் நீங்கள் மனைவிகளை பொன்னை (தங்கம்) போல நேசிக்கிறீர்கள். வேலைக்குப் போகவிடாமல் அன்பாய் நடத்துகிறீர்கள். ஆனால் கேரளாவில் வேலை இல்லாத பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய மாட்டார்கள். அப்படியே நாங்கள் வேலைக்கு போய் படும் அவஸ்தை எங்களுக்குத்தான் தெரியும். அதில் உங்கள் ஊர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். கூடப் பிறந்த சகோதரிகளையும் அப்படியே நேசிக்கிறார்கள்.  அந்த குணம், பண்பு, பாசம், நேசம்  கேரளாவில் குறைவு மனோ'' என்பார்கள். எனக்கு இருக்கும் மலையாளி தோழிகளைப் பார்த்து கேரள நண்பர்கள் காதில் எப்போதும் புகை வரும் (தண்ணி வந்தாலாவது நல்லாயிருக்கும்)


அரசர் குளத்தான்
அரசியலில் அதிரடி எழுத்துக்கு சொந்தக்காரர். ரஹீம் கஸாலி என்ற பெயரில் எழுதும் இவர் அறந்தாங்கி அருகில் இருக்கும் அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கலந்து கட்டி எழுதினாலும் அரசியல்தான் இவருக்கு ஃபேவரைட்.
(www.rahimgazzali.com)

சித்திரை திங்கள் முதல் தேதி மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கும் கலைஞர் டி.வி., மற்ற தமிழ் மாதங்களான வைகாசி, ஆனி, ஆடி என்று எந்த மாதத்தின் முதல் தேதியையும் கண்டுகொள்ளாதது ஏன்? அதான் தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றியாச்சே, அப்புறம் ஏன் இன்னும் சித்திரை கொண்டாட்டம்? ஒருவேளை சித்திரை முதல் தேதிதான் சிங்களர்களின் புத்தாண்டாம். அதைத்தான் இப்படி மறைமுகமாக கொண்டாடுகிறதோ கலைஞர் டி.வி.

இந்திய ஊடகங்கள் எந்த செய்தியை வெளியிட வேண்டும் என்பதைவிட, எதை வெளியிடக்கூடாது என்பதில் அதிக கவனமாக இருக்கின்றன.
   - மனுஷ்யபுத்திரன்.
  
நீங்ககூட அப்படித்தான் தலைவரே... டெல்லி பெண் கற்பழிப்பு, வினோதினி ஆசிட் வீச்சு என்று எல்லாவற்றிற்கும் எதிர்க்குரல் கொடுத்துவிட்டு, சன் நியூஸ் சானலை சேர்ந்த ராஜா மீது அகிலா என்ற பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகார் பற்றி வாயே திறக்கவில்லை. அப்படி திறந்திருந்தால், சன் டி.வி. தனக்கு வாய்ப்பு கொடுக்காது என்ற பயம்தானே காரணம்.
ஒன்பது எம்.பி., பத்து எம்.பி. வைத்திருப்பவர்கள் எல்லாம் பிரதமர் கனவில் இருக்கும்போது 8192 எம்.பி. அதாவது எட்டு ஜிபி வச்சிருக்க நான் ஏன் பிரதமராகக் கூடாது?

கரிகாலன்
சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவகரிகாலன், சமூகப் பொருளாதாரம், தலித் பொருளாதாரம், சிற்பங்கள், ஓவியங்கள், கவிதை, கதை என பதிவிட்டு வருகிறார். மாறி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஆபத்தான சூழலை வெளிக்கொணர்வதில் இவரது கட்டுரைகள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. (www.kalidasanj.blogspot.com)

மாற்றம்?
மெக். டொனால்டு, பீட்சா ஹட், கே.எஃப்.சி போன்ற பன்னாட்டு உணவகங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது. இப்போது எல்லா மேலை நாட்டு உணவு விடுதிகளும் தமது ஃபிரான்சைஸ் வணிக யுக்தியில் பெரிய அளவு வெற்றி கண்டுவிட்டன என்று சொல்லலாம். இந்தக் கடைகளின் வணிகத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் பெரும்பான்மை மத்திய தர, வேலை பார்க்கும் வர்க்கத்தின் மாறிவிட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து நாம் தெளிவான பட்டியல் இட முடியாது. ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா போல இளைஞர்களின் பீ.எம்.ஐ. ஏற்றம், உடல் நலக் குறைவினை, மிகச் சிறிய வயதிலேயே பூப்படைதல் போன்ற குறைபாடுகளைக் கண்டறிந்தால் நமக்கு இந்த பாதிப்பு குறித்து தெளிவு பிறக்கும்.

-நன்றி தினமணி கதிர் (15/12/2013)

 குறிப்பு: இரண்டு  வாரங்கள் கழித்து இந்த பதிவு வருவதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  தொடர் வேலை பளு மற்றும் குடும்பத்தில் ஒரு நிகழ்ச்சி தொடர்பாகவே இந்த காலதாமதம்.

மீண்டும் அடுத்த வலைப்பதிவர்கள் அறிமுகத்தில் சந்திப்போம்!.
காத்திருங்கள்... அது நீங்களாகக் கூட  இருக்கலாம்?!.
நன்றி!

-தோழன் மபா.
Share/Bookmark

19 கருத்துகள் :

முட்டா நைனா சொன்னது…

அல்லாத்துக்கும் வாய்த்துக்கள்பா...!

Chellappa Yagyaswamy சொன்னது…

இப்படியெல்லாம் எழுதி, நம்மைப் பற்றியும் செய்தி வருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்திவிடுகிறீர்களே நண்பரே! இது நியாயமா?

2008rupan சொன்னது…

வணக்கம்
அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுக்கள்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

தங்களது புதிய வார்ப்புகளுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

வலைஞர்கள் அறிமுகப் பகுதி தினமணியில் நீங்கள் எழுதியதை இங்கும் பதிவிடுவது ரொம்பவே சந்தோஷமாக இருக்கின்றது.

த. ம. +1

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் பணி சீரிய பணி.
நன்றி ஐயா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நமது நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

கவியாழி கண்ணதாசன் சொன்னது…

செல்லப்பா அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ முட்டா நைனா.

'ரொம்ப டாங்க்ஸ் நைனா...!'

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Chellappa Yagyaswamy


அந்த 'ஏக்கம்'தானே நம்மில் பலருக்கு, எழுத்துலகத்தில் 'தாக்கத்தை' ஏற்படுத்தக் கூடிய ஆற்றலைத் தருகிறது. அதனால் வெற்றி வெகுதூரத்தில் இல்லை சார்!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ரூபன்.

தங்கள் வாழ்த்திற்கு நன்றி ரூபன்!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@தி.தமிழ் இளங்கோ.

தங்களது வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி Sir!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

மிக்க நன்றி!. நீங்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை நிஜாம் ?.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@கரந்தை ஜெயக்குமார்.

தங்களது வாழ்த்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல அய்யா!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ தித.
மிக்க நன்றி DD!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@கவியாழி கண்ணதாசன்.

வலைப்பதிவர்கள் ஏக்கத்தை போக்கதான், இந்த அறிமுகப் பதிவே!. வலையுலகம் கடலை விட பெரிதென்பதால்தான் இந்த காலதாமதம்...?!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

//மிக்க நன்றி!. நீங்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை நிஜாம் ?. //

இன்னும் சில தினங்களில் எழுதுகிறேன் நண்பரே! (இறை நாட்டம்.) தங்களின் வினாவுக்கு, ஆர்வத்திற்கு மிக்க நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அறிமோப் படுத்தப் பட்ட அனைவரும் சிறப்பாக எழுதி வருபவர்கள் . அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

Sathish Sangkavi சொன்னது…

அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

அறிமுகப்படுத்திய அண்ணன் மபா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...