திங்கள், ஏப்ரல் 27, 2009
:"இந்திய அரசு தலையிட முடியாது" - கி. வீரமணி
தினமணியில் இன்று காலைவந்த செய்தி சற்று அதிர்ச்சி அளித்தது. நல்ல வேலை கீ . வீரமணி வியாலக்கம் அளித்துவிட்டார்.
"தினமணி" நாளேட்டில் இன்று காலை (27.4.2009) வந்துள்ள செய்தி வருமாறு:"இந்திய அரசு தலையிட முடியாது" என்ற தலைப்பிட்டு இன்று காலை (27.4.2009) வெளிவந்துள்ள "தினமணி" நாளேட்டில் - ஒரு செய்தி வெளிவந்துள்ளது. புதுவையில் நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை முழுமையாகத் திரித்து, தலைகீழாக்கி, விஷமத்தனமாக செய்தியை கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கத்தில் "தினமணி" வெளியிட்டுள்ளது.கெட்டபெயர் உண்டாக்கவே இந்த வேலைநமக்கும், நம் இயக்கத்திற்கும் கெட்ட பெயர் உண் டாக்கவே இந்த ஏற்பாட்டினை - "தினமணி" நாளேடு தவறான செய்தியை - வெளியிட்டுள்ளது.இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை; இதில் இந்திய அரசு தலையிட முடியாது என்று நான் கூறு வேனா? முழுப் போர் நிறுத்தம் தேவை, இலங்கையில் நடை பெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்திட மத்திய அரசு முன்வரவேண்டும் என்பதை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி 2008-லிருந்து வற்புறுத்தி, நாளும் எழுதியும், பேசிவரும் நிலையில் இப்படிக் கூறிட முடியுமா?கூறியது என்ன?அது உள்நாட்டுப் பிரச்சினை; அதில் தலையிட முடியாது. அங்கே சண்டை நடந்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது சகஜம்தான் (18.1.2009) என்று பேட்டி கொடுத்த ஜெயலலிதாவுக்கு இன்று ஈழத் தமிழர்கள்மீது வந்துள்ள திடீர் அக்கறை தேர்தலில் அதைக் காட்டி ஓட்டு வாங்குவதற்காகவே என்பதை விளக்கியும், தமிழ்நாடு முதல்வர் ஒரு மாநில அரசின் முதல்வர்; அவரைப் பொறுத்தவரை எவ்வளவு அழுத்தங்களை உச்சத்திற்குச் சென்று தர முடியுமோ அதனைத் தந்து கொண்டிருப்ப தால்தான் இந்த அளவுக்குச் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்ற கருத்துகளைத்தான் குறிப்பிட்டேன்.மறுப்புக் கடிதம் "தினமணி"க்கு!உடனிருந்த கழகப் பொறுப்பாளர்கள் உள்பட மற்ற ஏட்டாளர்களும் சாட்சி! பேட்டியின் ஒலிநாடாப் பதிவும் எம்மிடத்தில் உள்ளது.அதற்குரிய மறுப்பினை வெளியிட வேண்டும்.
"தினமணி"க்கே இப்படி ஒரு மறுப்பினையும் வெளியிட்ட கடிதம் ஒன்றை அதன் ஆசிரியருக்கு அனுப்பியுள்ளேன்.- கி. வீரமணி, தலைவர்,திராவிடர் கழகம் -"விடுதலை" 27.4.2009
'காக்காஉட்கார பனம்பழம் விழுந்த கதை'
நகைப்புக்கிடமான இந்த உண்ணாவிரதம் திடீரென்று முடிவுக்கு வந்துள்ளது.
திங்கள் காலை ஆபீஸ் வந்தவனுக்கெல்லாம் ஒன்றுமே புரியவில்லை, டிவியில் உண்ணாவிரத அரங்கேற்றம் நாடகமாக நடந்துக் கொண்டு இருந்தது. அரசியலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் இந்த அரசியல் வாதிகள்.
இந்த தேர்தலில் காங்கிரசை கழட்டிவிட்டு ப ம க, வீ.சி , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தாலே தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவை கலைஞர் பெற்றுஇருப்பர். அதை விட்டு இப்படி நாடகம் அடுவது நல்ல மனிதனுக்கு அழகல்ல.
ஒருபக்கம் தமிழ் ஈழம் அமைத்தே தீருவோம் என்கிறார் ஜெயலலிதா. இத்தனை நாள் எங்கு இருந்தார் இந்த அம்மையார். இந்த அரசியல் வாதிகள் விளையாட இலங்கை தமிழனின் உயிர் தான் கிடைத்ததா...?
அயிந்து மணி நேர உன்ன விரததாலே இலங்கை போரை கருணாநிதி முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார் என்றால் இதை முன்பே செய்து இருக்கலாமே... அமெரிக்கா சொல்லியே கேட்காத இலங்கை அரசு கருணாநிதி சொல்லியா கேட்க போகிறது. இல்லை இலங்கை போரை சோனியா தலைமை ஏற்று நடத்துகிறாரா...?
இலங்கையின் போர் நிறுத்தம் 'காக்காஉட்கார பனம்பழம் விழுந்த கதை' ஆகிவிட்டது. எப்படியோ எம் மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.
ஞாயிறு, ஏப்ரல் 26, 2009
'தமிழனின் ரத்தம் வஞ்சம் தீர்க்கும்'
ஈழத்தில் தமிழன் படும் அவதி உலகில், சக தமிழன் பார்க்காதது. 'கல் தோன்றி மண் தோன்றா மூத்த மொழி தமிழ்' என்று கூறிவந்த நம் இனி என்ன பெருமை பேசி நம் இனத்தை வாழ வைக்கப்போகிறோம்?
இலங்கையை பூர்விக குடிகளாகக் கொண்ட இலங்கை தமிழர்கள், சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாக கொண்டு இலங்கையை ஒரு சொர்க்க பூமியாகப் படைத்தவர்கள். அப்படிப் பட்ட செல்வசீமான்கள் இன்று அதரவு இழந்து, சொத்து இழந்து, தனது உறவினர்களை பிரிந்து ரத்தம் சிந்தி இன்று சிங்களப் படைகளின் துப்பாக்கிமுனைகளில் கூனிக் குறுகி நிற்கின்றனர்.
ஏன் இந்த நிலை? இத்தனை ஆண்டுகாலமாக தொடர்ந்த போர் இன்று இறுதி நிலை வர யார் காரணம்?
ஒரே பதில் "இந்தியா"
சிங்கள போர் வெறியர்கள், தமிழர்களை வெறி கொண்டு தாக்க, பின் புலத்தில் யார் இருக்கிறார்கள்? புறமுதுகிட்டு ஓடிய சிங்கள இராணுவம் இன்று முன்னேறுவது எப்படி. இந்தியா என்ற ஒரு வல் ஆதிக்க சக்தி இந்த போரை புலிகளுக்கு எதிராக நடத்துகிறது என்பது தான் உண்மை.
இந்தியாவின் பரி பூரண அதரவு இருப்பதால், அமெரிக்க முதற் கொண்டு பல்வேறு உலக நாடுகள் வாய் திறக்க மறுக்கிறது. ராசிவ் காந்தியின் மரணத்திற்கு பழி வாங்கும் சோனியா மற்றும் காங்கிரஸ் கட்சியின் இந்த அணுகு முறைக்கு நாம் நிட்சயம் நல்ல பதில் அடி கொடுக்கவேண்டு. ராஜிவின் மரணத்திற்கு பழி வங்கவேண்டு என்று எம் இனத்தை அழிக்க நினைக்கும் நீங்கள், இந்திர காந்தியின் மரணத்திர்க்காக சீக்கியர்களை அழித்துவிடுவீர்களா?
இலங்கை தமிழனை கொள்ள தமிழ் நாட்டில் உள்ள விமான படைத் தளங்களை இந்திய அரசு பயன் படுத்துகிறது என்பதை நாம் அறிவோமா...? விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை இந்தியஅரசு, தமிழ் நாட்டின் கடற் கரையில் நின்று வேவூ பார்க்கிறது என்பதை நாம் அறிவோமா...? இவை எல்லாம் இங்கு உள்ள எல்லா அரசியல் நாய் களுக்கும் தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா ?
வோட்டுக்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கும் இந்த நாய்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வந்தால் ஓட ஓட விரட்டி அடியுங்கள். அது இன் நாளாக இருந்தாலும் சரி முன் நாளாக இருந்தாலும் சரி....
தமிழன் ஏமாளி அல்ல என்பதை வரும் தேர்தலில் நாம் உணர்த்தவேண்டும்.
தமிழ்நாட்டிலும் உலகிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் மனம் புழுங்கி, நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நித்தம் நித்தம் மனத் துயரில் குமுறிக் கொண்டு இருக்கின்றனர்.
ஏய் ....உலகமே... இந்தியாவே....
எம் மக்கள் சிந்தும் ரத்தத்திற்கு ஒரு நாள் நீ பதில் சொல்லத்தான் வேண்டும்.
தமிழனின் ரத்தம் இந்தியாவை வஞ்சம் தீர்க்கும்.
சனி, பிப்ரவரி 21, 2009
புலிகள் முழுபலத்தையும் பாவிக்கிறார்களா?
சமீபத்தில் தமிழ் நெட் (தமிழ் இணையம்) டில் ஒரு கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. விடுதலை புலிகள் முழு பலத்தயும் பிரயோகித்து போர் செய்கிறார்களா ? என்று ஒரு வினாவினை ஏற்படுத்தி உள்ளார் திரு. தி. வழுதி அவர்கள் ஒரு கடிதம் எழுதிஉள்ளார் . இந்த கடிதத்திற்கு திரு. சபேசன் என்பவர் ஒரு நீண்ட விளக்கம் அளித்துஉள்ளார்.
குறைந்த படை அணியைக் கொண்ட எந்த இயக்கமும் தமது வீரர்களை அதிக அளவில் இறக்கி உயிர் சேதங்களை அதிகப்படுத்திக் கொள்ளமாட்டார்கள், என்பது என்னுடைய கருத்து. இப்படி இருக்க திரு சபேசனின் இந்த கடிதம் நமக்கு ஒரு நல்ல விளக்கத்தை தருகின்றன என்றுதான் சொல்வேன்.
அதோடு மடுவன்குளம் தாக்குதலின் பொது, புலிகள் அங்கு உள்ள ஒரு அணையை தகர்த்து இலங்கை ராணுவத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். மங்கோலியர்களை ஒருங்கிணைத்து உலகை வெற்றிக் கொண்ட செங்கிஸ்கான் தனது போர்களில் பல நுணுக்கங்களை பயன்படுத்தி உள்ளார். அந்த நுணுக்கங்களில் ஒன்றுதான், அணையை உடைத்து எதிரி படையினரை துவசம் செய்வது. தமிழ் ஈழ விடுதலை புலிகளும் இத்தகையான நுணுக்கங்கலையே பயன்படுத்தி உள்ளனர் என்பது என் கருத்து.
இனி அந்தக் கடிதம் உங்கள் பார்வைக்கு....
-தோழன் மபா
தி.வழுதி என்பவர் அண்மையில் எழுதிய மூன்று கடிதங்கள் பலர் மத்தியில்பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளன. இணையத்தளங்களின் ஊடாக பலமக்களைப் போய்ச் சேர்ந்த இந்தக் கடிதங்கள் பலரது கவனத்தையும்ஈர்த்திருக்கின்றன.
இந்தக் கடிதங்களில் வரவேற்கத்தக்க அம்சங்கள் பல உண்டு. ஆயினும் ஓரிருவிடயங்கள் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தி விட்டன.
இரண்டாவது கடிதத்தில் ""புலிகள் தம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பாவித்துப்போராடுகிறார்கள், தமது சக்திக்கு மீறி எல்லாவற்றையும் செய்துபோரிடுகின்றார்கள், தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும்எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள்" என்கின்ற ஒரு "செய்தியை"குறிப்பிட்டிருந்தார்.
மூன்றாவது கடிதத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது நாடுகளில் உள்ள இந்தியத்தூதரகங்களை முற்றுகையிட வேண்டும் என்றும், "தமிழீழமே இந்தியாவின்உண்மையான நட்பு நாடு" என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஒரு"ஆலோசனையையும்" கூறியிருந்தார்.
இந்த இரண்டு விடயங்கள் பற்றியும் என்னுடைய சில கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
விடுதலைப் புலிகள் தமது அனைத்து பலத்தையும், வளங்களையும் பயன்படுத்திபோரிடுகின்றார்கள் என்னும் செய்தியை தன்னுடைய ஊகிப்பின் அடிப்படையில்கூறவதாகச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால் "வன்னியின் உண்மை நிலைஇதுதான்" என்று உறுதியான முறையில் கூறுகின்றார்.
இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவதுபோன்று விடுதலைப் புலிகள் ஒரு போதும் போரிடுவது இல்லை. இன்றைய நிலையில்விடுதலைப் புலிகள் அனைத்து பலத்தையும் வளங்களையும் பயன்படுத்திபோரிட்டால், அது எதிரியின் திட்டத்தை நிறைவேற்றுவதாகவே இருக்கும்.
தமது பலத்தை பாதுகாப்பதை முதன்மையாகக் கொண்டே விடுதலைப் புலிகள் போரைஎதிர்கொள்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் தமது அனைத்து பலத்தையும் வளங்களையும் பயன்படுத்திநடத்திய போர்களும் உண்டு. உதாரணமாக ஓயாத அலைகள் மூன்றைச் சொல்லலாம்.அதில் விடுதலைப் புலிகளின் அனைத்துப் படையணிகளும், அனைத்து விதமானஆயுதங்களும், வளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன.
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி நிகழ்வில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். குடாரப்புதரையிறக்கத்திற்கான தயார்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 1500போராளிகளையும் அவர்களின் ஆயுதங்களையும், அவர்களுக்கு தேவையான மற்றையபொருட்களையும் கடலால் கொண்டு சென்று இறக்க வேண்டும். இந்தப் பணிகளைசெய்வதற்கு நுற்றுக் கணக்கான படகுகள் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன்பல சண்டைப் படகுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில் சிறப்புத் தளபதி சூசை பிரிகேடியர் பால்ராஜிடம் கூறிய தகவல்இதுதான். "உங்களைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மட்டுதான் எம்மிடம் உள்ளஎரிபொருள் போதும்". அதாவது குடாரப்பில் தரையிறங்கிய விடுதலைப்புலிகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால், அவர்களை மீண்டும் கடலால் அழைத்து வரமுடியாது.
தம்மிடம் உள்ள கடைசி வளங்களையும் பயன்படுத்தி ஓயாத அலைகள் மூன்றைவிடுதலைப் புலிகள் நடத்தினார்கள். அனைத்து வளங்களைப் பயன்படுத்தினாலும்,அடி வாங்கித் தோற்றோடிய சிறிலங்காப் படைகளால் ஒரு குறிப்பிட்டகாலத்திற்கு பதில் தாக்குதல் எதையும் பெரியளவில் செய்ய முடியாது என்பதைசரியாக கணித்தே அதைச் செய்தார்கள். அதே வேளை அனைத்து வளங்களையும்பாவித்து விட்டு நிற்கின்றோம் என்னும் எச்சரிக்கை உணர்வே விடுதலைப்புலிகளை யாழ் குடாவிற்குள் தொடர்ந்தும் முன்னேறாது தடுத்தது.
பின்பு சிறிலங்கா அரசு உலகநாடுகளிடம் இருந்து பல்குழல் பீரங்கிகள் உட்படபல நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்து சாவகச்சேரி, அரியாலை போன்ற இடங்கள்மீது படைநடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இழப்புக்களை சந்தித்த விடுதலைப்புலிகள் அப் பகுதிகளில் இருந்து பின்வாங்க வேண்டி நேர்ந்தது.
ஆயினும் சில மாதங்கள் கழித்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தீச்சுவாலைநடவடிக்கையை விடுதலைப் புலிகள் சிறந்த திட்டமிடலோடு எதிர்கொண்டுசிறிலங்காப் படைகளை ஒரு பொறிக்குள் வீழ்த்தி பெரும் அழிவுக்கு உள்ளாக்கிமுறியடித்தார்கள். ஏற்கனவே ஓயாத அலைகள் மூன்றில் ஏற்பட்ட இழப்போடு,தீச்சுவாலை முறியடிப்பும் கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதலும் சேர்ந்துசிறிலங்காப் படையினரை முடக்கிப் போட்டது.
தம்முடைய நடவடிக்கை சிறிலங்காப் படைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமீண்டும் எழ விடாமல் செய்யும் என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே,விடுதலைப் புலிகள் தமது முழ வளங்களையும் ஒருங்கிணைத்து பெரும் சமர்களைசெய்வார்கள். சிறிலங்காப் படைகள் முடங்கிக் கிடக்கும் அந்தக் குறிப்பிட்டகாலத்திற்குள் தமது படையணிகளை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதேஇதற்குக் காரணம்.
இன்றைய நிலையில் தற்காப்புச் சண்டைகள் என்றாலும் சரி, வலிந்ததாக்குதல்கள் என்றாலும் சரி, விடுதலைப் புலிகள் தமது அனைத்து வளங்களையும்பலத்தையும் பயன்படுத்துவது சரியான உத்தியாக அமையாது என்றேகருதப்படுகின்றது.
இன்றைக்கு விடுதலைப் புலிகள் தமது அனைத்து படையணிகளையும், வளங்களையும்பயன்படுத்தி சிறிலங்காப் படைகள் மீது தாக்குதல் தொடுத்தால், விடுதலைப்புலிகளால் பல பகுதிகளை மீட்க முடியும். சிறிலங்காப் படைகளும் பின்வாங்கிஓடும். ஆனால் சிறிலங்காவிற்கு முண்டுகொடுத்து போரை நேரடியாக நடத்தும்இந்தியாவும், மற்றைய உதவிகளை செய்து வரும் வல்லரசு நாடுகளும் உடனடியாகவேசிறிலங்காப் படைகளை மீளப் பலப்படுத்தி விடும்.
தன்னுடைய படையினரை நேரடியாக களத்தில் இறக்கியிருக்கும் இந்தியாவும்உடனடியாகவே மேலதிக படையினரை தருவித்து ஆட்பலப் பிரச்சனையையும் தீர்த்துவைக்கும்.
தமது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, அனைத்துப் படையணிகளையும் களம்இறக்கி பெரும் சண்டையை நடத்திய விடுதலைப் புலிகள் ஆட்பலத்திலும்ஆயுதபலத்திலும் கண்டிருக்கக் கூடிய சேதங்களை சரி செய்வதற்குள்சிறிலங்காப் படைகள் மீண்டும் அசுர பலத்தோடு எழுந்து நிற்கும். இப்பொழுதுமீண்டும் தாக்குதல் நடத்தி பலவீனப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளைமுழுமையாக தோற்கடித்தும் விடுவார்கள்.
ஆகவே அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நடத்தக் கூடியசண்டை, கடைசியில் அவர்களுக்கு பாதகமாக முடியக் கூடிய நிலையே தற்பொழுதுகாணப்படுகின்றது. விடுதலைப் புலிகள் தமது கடைசிப் பலத்தையும் பயன்படுத்திபோரிட வேண்டும் என்றுதான் சிறிலங்காவும், அதன் நட்பு சக்திகளும்விரும்புகின்றன. ஆனால் அதை விடுதலைப் புலிகள் ஒரு போதும் செய்யமாட்டார்கள்.
விடுதலைப் புலிகள் தமது பலத்தை முடிந்தளவு பாதுகாத்தபடியே, போரின்எல்லைகளை விரிவுபடுத்தி, எதிரிக்கு பெரும் இழப்பைக் கொடுத்தபடி போரைநீடித்துக் கொண்டு போவார்கள் என்பதே இன்றைக்கு எதிர்பார்க்கக் கூடியஒன்று.
இந்திய அரசு இந்தப் போரில் இருந்து விலகும் வரை இதைத் தவிர வேறுவழியேதும் இருக்கப் போவதில்லை. அந்த வகையில் இந்திய அரசை இந்தப் போரில்இருந்து விலகச் செய்வதற்கான வேலைகளில் இறங்க வேண்டியதே அனைத்துத்தமிழர்கள் முன் உள்ள பெரும் பணியாக இருக்கின்றது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களை முற்றுகை இடலாம் என்றுதிரு வழுதி அவர்கள் யோசினை சொல்லியுள்ளார். அதையும் செய்யலாம். ஆனால் அதுமட்டுமே போதுமானது அன்று.
உலகில் உள்ள இந்தியத் தூதரகங்கள் என்பவை இந்திய அதிகார மையத்தைபிரதிநிதித்துவம் செய்பவையாக இருப்பவை. இந்தியாவின் ஆட்சியில் உள்ளஅரசாங்களை பிரதிநிதித்துவம் செய்பவை அல்ல. அரசாங்கங்கள் மாறிக்கொண்டிருப்பன. அரசு என்பது மாறுவது இல்லை. இந்திய அரசை இயக்கிக்கொண்டிருக்கும் இந்திய அதிகார மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்தூதரகங்களை முற்றுகையிடுவது ஒரு அளவுக்கு மேல் பலனைத் தரப் போவது இல்லை.
ஒரு நாடு தன்னுடைய நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக இந்தியஅரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கலாம். ஆனால் அந்த நாட்டில் வாழும் ஒருசிறு தொகையைக் கொண்ட புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தினால் குறிப்பிடக்கூடிய அழுத்தம் எதையும் கொடுக்க முடியாது.
மின்னஞ்சல்கள் அதற்கான குப்பைத்தொட்டிக்குள் போனால், கடிதங்களும்அதற்கென்று உள்ள குப்பைத்தொட்டிக்குள் போகும். அவ்வளவுதான்.
"தமிழீழம்தான் இந்தியாவின் உண்மையான நண்பன்" என்று இந்தியாவிற்குவிளங்கப்படுத்தலாம் என்று நம்புவதும் அர்த்தமற்றதாகவே இருக்கின்றது. நாம்சொல்லும் காரணங்கள் இந்தியாவிற்கு புரியவில்லை என்று உண்மையிலேயே யாராவதுநம்புகின்றீர்களா? இந்தியாவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் அத்தனைமுட்டாள்களா?
தன்னுடைய நலன்களை முன்னிலைப்படுத்தும் இந்திய அதிகார மையம் இந்திய அரசைவழிநடத்துவதே இன்றைய பிரச்சனைகளுக்கு காரணம். இவர்களுடைய நலன்கள் வேறுவகையானவை. பனிப்போர் காலத்தில் இருந்த இந்திய நாட்டின் நலன்களைப் பற்றிநாம் இன்றைக்கும் இவர்களோடு பேசிக் கொண்டிருப்பதில் பலன் ஏதும் இல்லை.
"நாங்கள்தான் உங்கள் நண்பன்" என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தால், அவர்களிடம் இருந்து ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான் வருமேதவிர, வேறு ஒன்றும் நடக்கப் போவது இல்லை.
தமிழீழம் உருவாவது இந்திய அதிகார மையத்தின் நலன்களுக்கு எதிரானது என்றுஅவர்கள் கருதுகிறார்கள். நீண்ட கால நோக்கில் தமது இருப்பைப் தமிழீழத்தின்உருவாக்கம் பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றார்கள். நேபாளத்தில்ஏற்பட்டுள்ள மக்கள் ஆட்சியைக் குழப்புவதற்கு இவர்கள் செய்கின்ற சதிவேலைகளும் இது போன்ற கருத்தின் அடிப்படையிலானதே.
இந்திய அதிகார மையத்தின் நலன்களுக்கு ஏற்றபடி எம்மால் நடக்க முடியாதுஎன்பதும், அப்படிச் செய்வதானது எமது விடுதலைப் போராட்டத்தையே காவுகொடுப்பதற்கு ஒப்பானது என்பதுமே யதார்த்த நிலையாக இருக்கின்றது.
இந்த நிலையில் இந்திய மக்களினதும், உலக மக்களினதும் மனச் சாட்சியைத்தட்டியெழுப்பும்படியான அறப் போராட்டங்களை தொடர்வதோடு, தமிழ்நாட்டிலும்உலகின் மற்றைய நாடுகளிலும் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து இந்தியசிறிலங்கக அரசுகளின் இனவழிப்பு யுத்தத்தை எதிர்கொள்வதுதான் இன்று எமக்குமுன் உள்ள வழி.
- வி.சபேசன் (13.02.09)
நன்றி :சபேசன்
புதன், பிப்ரவரி 18, 2009
"ஒரு வெங்காயமும் புரியவில்லை...?"
இதில் என்ன ஆட்சர்யம் இருக்குன்னு கேட்க்கலாம் ? அந்த ஆட்சர்யம் என்னவென்று பின்பு கூறுகிறேன்.
இந்த அறிவிப்பு; படைப்பாளிகளின் குடும்பத்தில் பெரும் கூக்குரலை ஏற்ப்படுத்தி உள்ளது. காந்தி கண்ணதாசன் (கவிஞர் கண்ணதாசனின் மகன்) சற்று காட்டமாகவே கேட்டுள்ளார். " கண்ணதாசனின் நூல்களை நாட்டுடமை யாகுவதை எங்கள் குடும்பம் எக் காலத்திலும் ஒத்துக்கொண்டதில்லை. இனியும் ஒத்துக்கொள்ள போவதில்லை, எங்களைப் பொறுத்தவரை கண்ணதாசனின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும் நிலையில் இல்லை. அவருடைய எழுத்துக்களை தக்க முறையில் மக்களிடையே எடுத்துச் செல்கிறோம்" என்கிறார்.
கண்ணன் (எழுத்தாளர் சுந்தரராமசாமியின் மகன்) கூறும்போது "ஒரு படைப்பாளி இறந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்னரே அவரது படைப்புகள் நாட்டுடமையாகும். ஆனால், சுந்தரராமசாமி இறந்து 3 ஆண்டுகள் ஆகும் முன்னரே அவரது படைப்புகள் நாட்டுடமை யாக்குவது, அவரது சொத்தை அபகரிப்பதுபோல்" என்று குமுறுகிறார். (இருக்காதபின்னே...!)
இப்படி படைப்பாளிகளின் குடும்பத்தின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு, ஏன் தந்தை பெரியாரின் எழுத்துகளை இது வரையில் நாட்டுடமை யாக்கவில்லை. இதை தான் ஆட்சர்யம் என்றேன்.
தந்தை பெரியாரின் எழுத்துகளை நாட்டுடமையாகி விட்டால் அவரது எழுத்துகளைப் போட்டு கல்லாக் கட்ட முடியாதே என்று நினைக்கிறார் கீ. வீரமணி. பெரியாரின் படைப்புக்களை கால வரிசைப்படி வெளியீட முயன்றார் கொளத்தூர் மணி. படைப்புகள் தயாராகி வெளயிடும் முன் நீதி மன்றத்தில் இடைக் கால தடை உத்திரவு வாங்கினார் வீரமணி. தந்தை பெரியாரின் எழுத்துகள் தன்னைத் தவிர வேறு யாரும் வெளியிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இருக்கிறார் வீரமணி.
உயர்ந்த நோக்கத்தில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தந்தை பெரியாரின் கொள்கைகள் இன்னும் நாட்டுடமை யாக்கவில்லை என்பது அவரது கொள்கைகளுக்கு எதிரானது அல்லவா? பலருக்கும் இந்த சேதி சற்று அதிர்ச்சி யாகத்தான் இருக்கிறது.
பல கழக அரசுகள் வந்து வந்து போகும் நிலையில், தந்தை பெரியாரின் எழுத்துகள் எப்படித்தான் இத்தனை நாட்கள் நாட்டுடமை ஆகாமல் இருந்ததோ தெரியவில்லை. "ஒரு வெங்காயமும் புரியவில்லை...?"
சனி, ஜனவரி 31, 2009
'எந்த மட்டை எந்த குட்டையில் விழுமோ?'
ஆயிற்று ! ஒரு மாதமாகிவிட்டது. தமிழன் வீதியில் பதிந்து... முந்தய பதிவிற்கும் இந்த பதிவிற்கும் ஒரு நீண்ட இடைவெளி. காலையில் 6.20 க்கு வீட்டை விட்டு புறப்பட்டால் இரவு ஒன்பது மணியாகி விடுகிறது வீடு வந்து சேர.
அண்ணா நுற்றாண்டை முன்னிட்டு தினமணி நாளிதழ் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளி கொண்டுவர இருக்கிறது. அதற்கான பணிகள் மற்றும் விளம்பரம் தொடர்பாக ஊர் ஊரக அலையவேண்டி இருக்கிறது. நேரம் இதற்கே செலவிடப் படுவதால், சொந்த வேலைக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.
இதற்கிடையில் தமிழகத்தில் நிறைய மாறுதல்கள். புரட்சி தமிழன் முத்துகுமாரின் மரணத்திற்கு பிறகு காட்சிகள் நிறையவே மாறி இருக்கிறது. ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கையில்,தமிழர் கொல்லப்படுவதை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டன பொதுக் கூட்டம், உண்ணா நிலை என்று பல்வேறு போராட்டங்களை அறிவித்தாலும், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு. நிச்சயம், இது வரும் பாராளும் மன்ற தேர்தலில் எதிரொலிக்கும். இனி காங்கிரசால் கனவில் கூட தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.
இலங்கை தமிழர்க்காக போராடுவதில் நீ பெரியவனா இல்லை நான் பெரியவனா என்று தமிழகத்தில் பல பரீட்சை நடந்துக் கொண்டு இருக்கிறது. இதில் அமைதியாக இருந்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார் செல்வி ஜெயலலிதா.
ராமதாசின் நியாயமான கேள்விகளுக்கு 'அண்ணன் இப்போ சாக மாட்டேன், திண்ணை இப்போ காலியாகது', என்கிறார் கருணாநிதி. இந்த அறிவிலிகளை என்ன வென்று சொல்வது. எல்லாவற்றிலும் தனது சுய லாபத்தை பார்க்கும் சுயநல அரசியல்வாதிகள்.
ஈழ தமிழருக்கு ஆதரவான போராட்டங்களில் பா. ம. கா., வி. சி., ம.தி.மு.கா., போன்ற கட்சிகள் பல லகரங்களை செலவிட்டுள்ளன. தி. மு. கா., வும் தன் பங்கு க்கு ஒரு பக்க விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. இல்லன ஒட்டு போயிடுமே!.
இந்த நிகழ்வுகளில் ப.ஜா.கா., வும் வலை விரித்து காத்து இருக்கிறது.
'எந்த மட்டை எந்த குட்டையில் விழுமோ?'
ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !
ஜே.ரங்கராஜன் இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...
