ஞாயிறு, ஜூலை 01, 2012

'மனமும் மனிதனும்', 'நாக படை' - புத்தக விமர்சனம்



               தினமணி ஆசிரியரை பார்க்கும்போதெல்லாம் புத்தகம் பற்றி பேசுவது தவிற்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.  பணியின் நிமித்தம் அவரை எப்போதாவது பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும்.  அடிக்கடி சந்திக்கக் கூடிய சூழ்நிலையில் நாம் இருந்தாலும், அவர் இல்லை.  அப்படி ஒரு பிஸியான மனிதர்!.

அது நாள் வரையில் ஒரு மார்கெட்டிங்க் மனிதராகவே அவரிடம் அடையாளம் காணப்பட்ட நான் , ஏதோ ஒரு  சந்தர்ப்பத்தில் எனது புத்தக வாசிப்பையும்,  வலைத் தளம் நடத்துவதையும் தெரிவித்திருந்தேன்.

அதன் அடிப்படையில்,  நூல் அரங்கத்திற்கு புத்தக விமர்சனம் எழுதுங்கள் என்றார்.  சொல்லி  மூன்று நான்கு மாதம் ஓடிவிட்டது.  திடீரென்று அவரது உதவியாளர் ராணி மேடம், லைனில் வந்தார்.  " சார் உங்களிடம் கொடுக்கச் சொல்லி,  இரண்டு புத்தகம் கொடுத்தாங்க "  என்றார்.

புத்தகம் கிடைக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே தினமணி கதிர் ஜீவா சார்,  போனில் தொடர்புகொண்டு..... " சார், உடனே அந்த 'மனமும் மனிதனும்' புத்தகத்திற்கு விமர்சனம் அனுப்புங்கள் என்றார். 

 'அடடா....என்னடா இது,  நமக்கு வந்த வாழ்வு!'  என்று நினைத்துக் கொண்டு உடனே எழுதிக் கொடுத்தேன்.

'மனமும் மனிதனும்', 'நாக படை' இரண்டுமே தினமணியில் வெளிவந்துவிட்டது!. 

 இனி விமர்சனம்.....

                                                                            
'மனமும் மனிதனும்' 
-தமிழருவி மணியன்.
          
           ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர்.  ஆசைகளின்றி வெற்றிடமாக பிறக்கும் மனிதனின் மனதில்,  'ஆசை'  என்ற மிருகம் குடியேறி விடுகிறது.  அகோரப் பசி கொண்ட அந்த மிருகம் மனிதன் இருக்கும் வரையிலும்,  இறக்கும் வரையிலும் அவனை விடுவதாக இல்லை.  அதன் கட்டுபாட்டில் இருக்கும் மனிதனை அடக்கும் ஒரு அங்குசமாக வெளிவந்திருக்கிறது தமிழருவி மணியன் எழுதிய 'மனமும் மனிதனும்' என்ற இப் புத்தகம்.
 
   
எது தற்போதைய தேவையோ அது  இப்புத்தகத்தில் விரவிக் கிடக்கிறது. 

வாழ்வுபற்றி தனக்குள் எழுந்த சிந்தனைகளை மிக விஸ்தாரமாக விளக்கியிருக்கிறார் இன் நூல் ஆசிரியர்.     வாழ்வியல் தத்துவங்களை உரசி  தீப்பொறிகளை ஏற்படுத்தி  உங்களுக்குள் வெளிச்சத்தை உண்டாக்குகிறார். அன்பு, பாசம், மனிதம், நட்பு, காதல், சமுகம் என்று வாழ்வின் அனைத்து பக்கங்களையும் இப் புத்தகம் தொட்டு செல்கிறது.

'மனதை மாற்றும் மந்திர சாவி இந்த மனமும் மனிதனும்'.

நூல் விலை: ரூ 45/-
பக்கங்கள்   : 128
வெளியீடு  : 
கற்பகம் புத்தகலாயம் வெளியீடு
4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்க அருகில்)
தி. நகர், சென்னை-17
தொ.பே: 044 24314347


                                                                  ()()()()()()()()()()()()


'நாக படை'
-இந்திரா செளந்தர்ராஜன்.


கண்ணில் பட்ட இடத்தை எல்லாம் கடை விரித்து, பிளாட் போட்டு விற்கும்
காலகட்டத்தில் மிரட்டலோடு வந்திருக்கிறது 'நாக படை'. கொஞ்சம் பழைய வாசனை அடிக்கும் கதைதான். இருந்தலும் இந்திரா செளந்தர்ராஜன் போன்ற
எழுத்தாளர்களால் பாதை மாற முடியாதே...?!
      

நாகானாங்குறிச்சி என்னும் ஊர்,  பெயருக்கேற்ப  'பாம்பு' பயம் அந்த ஊரையே நாகம் போல்   சுற்றி வளைத்துள்ளது.

நாகத்தை குல தெய்வகமாக வணங்கும் அந்த ஊரில்,   வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரின் குடும்பம் வாழ்ந்து வருகிறது.   ஜமீன்தாரின் நிலம் ஒன்று விற்பனைக்கு காத்திருக்க.... நிலத்தில் ஆங்காங்கே ஆள் உயர பாம்பு புற்றுகள் ஆக்கிரமித்துள்ளன. அந்த  இடத்தை வாங்க முயலும் பலரும் பல்வேறு வகைகளில் பாம்பு கடித்து இறந்துவிடுகின்றனர். அதனாலேயே யாரும் அந்த நிலத்தை வாங்க முன்வருவதில்லை.

ஜமீன்தாருக்கோ அந்த நிலத்தை விற்றுவிட்டு சிங்கப்பூரில் செட்டிலாகிவிட
ஆசை.  நிலத்தை விற்க முயற்சி செய்யும்போதெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் தடங்கல் ஏற்படுகிறது.  இதனாலேயே ஜமீன்தார் மகளின் திருமணமும் தள்ளிப் போகிறது.

இன் நிலையில் அந்த நிலத்தை வாங்க வரும் கருணாகரனுக்கும் பாம்புகள் படம் (?) காட்டுகின்றன.  அதிலிருந்து மீண்டு, பகுத்தறிவுக் கொண்டு கருணாகரன் வெற்றி பெற்றானா என்பதே கதை.

இப்புத்தகத்தில் நாக படை என்ற கதை மட்டுமல்லாமல் 'சொர்ணதாரா'  என்ற
கதையும் இருக்கிறது. தங்கம் குவிந்திருக்கும் 'தங்க திட்டு' என்ற இடத்தை
தேடிச் செல்லும் இரு நண்பர்கள் பற்றிய கதை என்றாலும் இங்கேயும் தனது
'ட்ரேட் மார்க்' கதை சொல்லும் போக்கின் மூலம் நம்மை மாய உலகில்
தள்ளிவிடுகிறார் எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்.

நாகம், காடு, மாந்திரிகம், தங்கவேட்டை, அருபம், சித்தர்கள்  என்று
வாசிப்பில் வித்தியாச களம் காண முயலும் வாசகர்களுக்கு 'நாக படை' நல்லதொரு  அமானுஷ்ய அனுபவம்.
  
பக்கம் : 224
விலை: ரூ 100/-
திருமகள் நிலையம்
புதிய எண்-13, பழைய எண் 28
சுக்கான்ஸ் அப்பார்ட்மெண்ட்ஸ்
சிவபிரகாசம் சாலை
தி.நகர்
சென்னை-17
044 24342899,24327696.

                                                                     ()()()()()()()()()()()()()()()

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...