புதன், ஜூன் 25, 2008

ஓரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்

ஜான் பெர்கின்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் Confessions of an Economic Hit man என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

அந்த நூல் இப்போது தமிழில் ஓரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. கோவையிலிருக்கும் விடியல் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் (உலக வங்கி, சர்வதேச நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி) ஆகிய மூன்றும் எப்படி கூட்டுக்களவாணிகளாகச் செயல்படுகின்றன என்பதுதான் புத்தகத்தின் சாரம்.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் வளத்தையும் பொருளாதாரத்தையும் சுரண்ட இந்த மூன்றும் எப்படி இணைந்து செயல்படுகின்றன என்பதை விலாவாரியாக விவரிக்கிறார் ஜான் பெர்க்கின்ஸ். இவரும் ஒரு பன்னாட்டு நிதியுதவி நிறுவனத்தில் பணியாற்றியவர்.

சதிகாரர் சங்கத்தின் உள்ளிருந்தவர் என்பதால் இந்தப் புத்தகத்தில் இருக்கும் எல்லா தகவல்களும் நம்பகத் தன்மை வாய்ந்தவை. இவர் இந்த நூலை எழுதப் போகிறார் என்றவுடனேயே கொலை மிரட்டல்கள் வந்தன. ஏகப்பட்ட பணம் தருவதாக ஆசை காட்டப்பட்டது. இதையெல்லாம் செய்தது சிஐஏ. அந்த வகையில் சிஐஏவே பார்த்து மிரண்ட புத்தகம் இது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. புதிதாக இம்மாதிரி டாபிக்களை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு தங்கச் சுரங்கம். பொருளாதாரப் புலிகளுக்கு மனசாட்சி இருந்தால் இந்தப் புத்தகம் அவர்கள் கண்களைத் திறக்கும். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேஷியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருப்பவர்கள் கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகம்.

வன்னியரின் ரயில்வே அன்னியருக்கில்லை! - வேலு அதிரடி”

திங்கள், ஜூன் 23, 2008

எனது கவிதை...

சூரிய குஞ்சுகள்

சாணம்
வரைந்த தரையில்
சூரிய குஞ்சுகள்.
எங்கள்
கூரை
பெற்றெடுத்த
செல்வங்கள்.

-தோழன் மபா
(கல்லூரி காலங்களில் எழுதியது.)

வெள்ளி, ஜூன் 20, 2008

வணக்கம், நான் தோழன் மபா பேசுகிறேன்...அனைவருக்கும் வணக்கம்.

எனக்கு தமிழைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் எப்போதும் கவனம் உண்டு. அது இயற்கையாக அமைந்த ஒன்று.


தமிழுக்காக தன் உயிரையும் தரத் தயாராக இருக்கும் எண்ணற்ற தமிழர்களின் நானும் ஒருவன். அதனாலேயே புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் எழுதிய கவிதை வரிகளையே எனது பதிவு தளத்தின் கருவாக வைத்துள்ளேன். நான் இயங்கும் தளமும் அதுவாகவே இருக்க விரும்புகிறேன்.

தமிழுக்காக தன் வாழ் நாட்களை தந்து தமிழர்களின் வாழ்வை திறம்படச் செய்த , செய்துக் கொண்டு இருக்கும் எண்ணற்ற தமிழ் ஆத்மாக்களுக்கு என் வலைத் தளம் சமர்ப்பணம்.

நன்றி !

அன்புடன்

-தோழன் மபா

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...