தமிழ் மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

இந்த வாரம்: சில பரிசுகளும் சில விருதுகளும்.





      

சென்னையில் நடந்த இரு வேறு விழாக்களில் சில          விருதுகளும் சில பரிசுகளும்  அறிவிக்கப்பட்டது.



 எம்.ஏ. சிதம்பரம் அறக்கொடை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை அறக்கொடை அறிவித்துள்ளது.
         
டாக்டர் எஸ்.வி. சண்முகம்
  

 டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது: தமிழ் இலக்கியம் மற்றும் மொழி பங்களிப்பில் சிறந்து விளங்கும் தமிழ் அறிஞர்களுக்கான டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது தமிழறிஞர் டாக்டர் எஸ்.வி. சண்முகத்துக்கு வழங்கப்பட உள்ளது.

 டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது: நுண்கலைகளான சித்திரம், சிற்பம், இசை, நாடகம், நாட்டியம், படைப்பிலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது தமிழ் கவிதைத் துறையில் சிறந்து விளங்கும் கவிஞர் வாலிக்கு வழங்கப்பட உள்ளது.
 
எம்.பி. ராமச்சந்திரன்
    

 டாக்டர் ஏ.சி. முத்தையா விருது: சிறந்த முதல் தலைமுறை தொழில் முனைவோராக சிறந்து விளங்கும் சாதனையாளருக்கான டாக்டர் ஏ.சி. முத்தையா விருது தொழிலதிபர் எம்.பி. ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது.

 இந்த விருதுகள் டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியாரின் 93-வது பிறந்த நாளான அக்டோபர் 12-ல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வழங்கப்படும். விருது பெறுவோருக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரி அனந்தன், கௌதம நீலாம்பரனுக்கு இலக்கியப் பரிசு
குமரி அனந்தன்                                                                                                                       
கௌதம நீலாம்பரன்
     
 

 குமரிஅனந்தன், கௌதம நீலாம்பரன் ஆகியோருக்கு 2011-ம் ஆண்டுக்கான சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

"தினத்தந்தி' நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனாரின் பிறந்த நாளில் ஆண்டுதோறும் "மூத்த தமிழறிஞர்' விருது, இலக்கியப் பரிசு ஆகியவற்றை தினத்தந்தி வழங்கி வருகிறது.

வெள்ளிப் பட்டயத்துடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்ட மூத்த தமிழறிஞர் விருது இந்த ஆண்டு குமரிஅனந்தனுக்கு வழங்கப்பட உள்ளது.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

தமிழ் மணம் அபிமானிகளுக்கு..... நன்றி!




தமிழ் மணம் இந்த வார நட்சத்திர அறிமுகமாக அறிவித்து ஒரு வாரமாகிவிட்டது.  சரியாக சுதந்திர தினதன்று எனது பதிவுகள் தொடங்கியது எனது அதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த ஒருவாரமும் அந்த அறிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேனா என்று தெரியவில்லை?.  

நான் எழுதிய சில பதிவுகளில்  எனக்கு திருப்திதந்த பதிவுகள் எது என்றால்  கீழே இருக்கும் இந்த பதிவுகளைத்தான் சொல்லவேண்டும்.
2 உங்கள் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள்.
இந்த இரண்டு விஷயங்களும் ரொம்ப நாளாக எனக்குள் உருத்திக்கொண்டு இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து 'டாஸ்மாக்'கையும்,  தமிழில் பெயர் எழுதும்போது 'ஆங்கிலத்தில் இன்ஷியலை' எழுதுவதையும் நாம் ஒழித்தாகவேண்டும். . இந்த செய்தி ஒரு சதவீதமாவது மக்களுக்கு சென்றிருந்தாலே போதும்,  எனது பதிவுக்கு வெற்றிதான். 

இந்த இரண்டு பதிவுக்கும் நிறைய பின்னோட்டங்கள் வந்திருக்கின்றன. நிறைய நண்பர்கள் முக நூல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.  அவர்களுக்கு எனது  நன்றி!

'தொல்லைத் தரும் தில்லை தீட்சதர்கள்' 'சுதந்திர தினத்திலிருந்து முழு நேர தமிழ் தொலைகாட்சியாகிறது டிஸ்கவரி சேனல். 'வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் சென்னையில் விபச்சாரம் பெருகும் ஆபத்து!? போன்ற பதிவுகள் பதிவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 
தமிழ்மணம் வாயிலாக எனது பதிவை வாசித்த உலகளாவிய  தமிழ் மணம் அபிமானிகளுக்கு எனது இதயம் கனிந்த  நன்றிகள். ..
தமிழ் மணம் இணைய தளத்தை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டு இருக்கும் தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு எனது இதயம் கனிந்த  நன்றி!

 தொடர்ந்து எழுத  எனக்கு உதவிபுரிந்த எனது சகதர்மபத்தினி கிரிஜா, எனது மகள் இரக்சிதா, மகன் சபரிஷ் பாபு   ஆகியோருக்கும் நன்றிகள் பல....

தமிழ் மணத்தில்  எனது நட்சத்திர பதிவுகள் ஞாயிறு இரவா அல்லது திங்கள் இரவா எப்போது  முடியும், என்பது சரியாகத் தெரியாததால் உங்களுக்கு முன்கூட்டியே நன்றி உரைக்கின்றேன்.

இது ஒரு புதுமையான அனுபவம்!.

தொடர்ந்து உங்களது ஆதரவை எதிர்நோக்குகின்றேன்.

வணக்கத்துடன்
-தோழன் மபா.

























ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...