சனி, மே 30, 2009

ஆங்கில செய்தி சேனல்களின் அரைவேக்காட்டுத்தனம்

பொதுவா குமுதத்தில் வரும் அரசு கேள்வி பதில் எனக்கு பிடிக்கும். எஸ்.எ .பி., எழுதும் காலத்திலிருந்தே அரசு பதில் படித்து வருகிறேன். அதில் நடிகையின் இடுப்பும் இருக்கும், தமிழனின் எதிர்காலமும் இருக்கும். நமக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். இதோ சமிபத்தில் வந்த ஒரு கேள்வியும் பதிலும்...

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?
ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.
சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.
இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது. அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்... இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

நன்றி
குமுதம் & புதினம்.கம

வெள்ளி, மே 22, 2009

வரலாற்றில் தேவதாசிகள்

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள குறிஞ்சி பதிப்பகம் "வரலாற்றில் தேவதாசிகள் " என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. தேவதாசிகள் பற்றி முழுமையான தகவலோடு வரும் நூல் இது எனலாம்.
விலை Rs.150/-.
304 பக்கங்கள்.
PHONE: 044 26502086

தமிழகத்தில் கலை பொக்கிஷங்களாய் திகழ்ந்த தேவதாசியர் இலக்கியத்தில், சமுகத்தில்,வரலாற்றில் பெற்றிருந்த சிறப்புகளையெல்லாம் நிழற்படம் போல இந்நூலில் விளக்கிக்கொண்டு செல்கிறார் இன் நூலில் ஆசிரியர் சி.எஸ்.முருகேசன்.

அதிலிருந்து ஒரு பகுதி....

பரத்தையர் மரபு தேவதாசியர் மரபு

தமிழர் அன்று தொட்டு இந்நாள் வரையிலும் போர், போர் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பதற்கு அவர்களின் இரத்தத்தில் இயல்பாய் கலந்துவிட்ட வீர உணர்ச்சியே அடிப்படை காரணம். இந்த வீர உணர்ச்சி மற்றும் போர் செயல்களினால் அன்றைய தமிழகத்தில் ஆடவர் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை மிகுந்தது. போரில் வெற்றி பெற்ற பகைவன் நாட்டிலுருந்து பிடித்து வரப்பட்ட பெண்களும் உள்நாட்டு பெண்களுடன் கலந்து தமிழகத்தின் பெண்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியது.

இப்படிப் பெருகிய பெண்களின் எண்ணிக்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் சிரமமேற்பட்டது. அதனால் பரத்தமையில் ஈடு பட்ட பெண்களைத் தவிர்த்து ஏனையப் பெண்களை கோவில் ஊழியம் செய்வதிலும், அரசாங்க பணிகளுக்காக ஒற்று வேலை செய்வதிலும் ஈடுப்படுதினர்.

அகவே இந்த பரத்தையர் அமைப்பு தேவதாசியர், ராஜதாசியர், சமுக தாசிகள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிந்து காணப்பட்டது.
-தொடரும்

வியாழன், மே 21, 2009

தலைவன் இருக்கிறான் நலமோடு... (படம்)

" தலைவன் இருக்கிறான் நலமோடு
நாம் இருப்போம் துணிவோடு"


நக்கீரன் வார இதழ், தலைவர் பிரபாகரன் தினமணி நாளிதழை கையில் பிடித்துக்கொண்டு டிவி பார்ப்பதுபோல் உள்ள ஒரு புகைப்படத்தை 21/05/09 அன்று புகப்பு அட்டையில் வெளியீட்டு பரப்பரப்பை ஏர்ப்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த புகைப்படம் போஸ்டர் களாக ஓட்டப் பட்டுள்ளது. தமிழக மக்கள் இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

புதன், மே 20, 2009

தினமணியின் கார்டூன்


இன்று 20 ம் தேதி இலங்கை நிலவரம் குறித்து தினமணி நாளிதழ் கருத்துப் படம் ஒன்றைவெளியிட்டுள்ளது.உங்கள் பார்வைக்கு...

செவ்வாய், மே 19, 2009

தமிழ் தாய் தனது வீர மகனை இழந்து இருக்கிறாள்

தமிழ் தாய் தனது வீர மகனை இழந்து இருக்கிறாள். செவ்வாய் மதியம் ஆங்கிலசேனல்களில் பிரபாகரனின் உடலை காட்டினார்கள். தலைவன் தப்பிவிடுவான் என்று நினைத்து இருந்த எமக்கு அந்தக் காட்சி இடியென தலையில் இறங்கியது. அய்யகோ ... எம் தலைவன் தானா அது? கண்கள் பணித்து நெஞ்சு அடைத்தது எனக்கு.

தலைவர் பிரபாகரனை ஒரு ஓடைக்கருகில் கிடைத்தி இருந்தார்கள். சயனைடு குப்பி அருந்தி தனது இன் உயிரை தனது மண்ணுக்காக விதையாக விட்டு இருக்கிறன் எம் தலைவன்.

தலையில் காயம் இருக்கிறது. இறந்த பின் அவரை சுட்டு இருப்பார்கள் அந்த கோழைகள். தப்பி ஓடும் போது சுட்டோம் என்று பொய் உரை பரப்பிவருகிறது இலங்கை இராணுவம். எம் தலைவன் இறுதிவரை களப் பணி ஆற்றியவன். போர் வீரர்களோடு தோல் நின்று இலங்கை ராணுவத்தை துவசம் செய்தவன். போர்க்களத்தில் வீர மரணம் அடைந்துள்ளார் மாவீரன் பிரபாகரன்.

தமிழன் வீதி: தீமை வந்த போதிலே, திகைத்து நிற்க வேண்டாம்...

தமிழன் வீதி: தீமை வந்த போதிலே, திகைத்து நிற்க வேண்டாம்...


தீமை வந்த போதிலே, திகைத்து நிற்க வேண்டாம்...

தினமணியில் மே 19 இல் வந்த ஒரு கவிதை மனதை நெகிழச் செய்தது. தேன்கூடு என்ற தலைப்பில் ஒன்பதாம் பக்கத்தில் இக் கவிதை வெளிவந்துள்ளது. ஐம்பதுகளில் வெளிவந்த இக்கவிதை இன்றும் பொருந்துகிறது. இது மாவீரன் பிரபாகரனுக்காக....

-மரங்களடர்ந்த ஒரு காடு சூரியன் நடுவானத்திற்கு வரும் சமயம். ஒரு குறவன் ஒவ்வரு மரமாக பார்த்துக் கொண்டு வருகிறான். சிறு கத்தி, எண்ணைதுணி, தீப்பெட்டி சகிதமாக ஒரு பாளை கூடையில் அவன் முதுகில் தொங்குகிறது. கையில் நீண்ட கோல். இவ்வாறு வரும் அவனது கண்களில் ஒரு மரக்கொம்பில் தொங்கும் ஒரு பெரிய தேன்கூடு படுகிறது.
கையில் உள்ள நீண்ட கோலால்எண்ணை துணி சுற்றி தீ வைத்து தேன் கூட்டுக்கு காட்டுகிறான். வெம்மை தாளாமல் கும்பலாக தேனீ க்கள் வெருண்டு எழுந்து பறக்கின்றன. உடலும், சிறகும் கருகி சில தேனீ க்கள் வீழ்கின்றன. புகை, கூட்டை முடி சூழ் கின்றது.
தேனீ க்கள் கலங்கி சிதற அப்போது ஒரு தேனீ மட்டும், அந்த மனிதன் செய்த கொடுமையை தம் இனத்தார் எதிர்க்காமல் உயிருக்கு அஞ்சி ஓடும் பேதமையை கண்டு பெருஞ் சினத்தோடு ஒரு கிளையில் அமர்ந்து மாற்ற தேனீ க்களை கூவி அழைக்கிறது...

"தீமை வந்த போதிலே
திகைத்து நெஞ்சம் வாடுதல்
காமு கற்வாய் வீரர்கள்
கயவர் செய்கை அல்லவோ?
நாமிங் கென்ன கோடிநாள்
நலிவு ராமல் வாழ்வோமோ?
பூமி எங்கும் சுடலை யாயிஇப்
போகு மோநம் சாவினால்?

மலர்கள் எங்கும் தாவியே
மனம் சலிக்க நாமெல்லாம்
பல தினங்கள் தேடியே
பாது காத்த தேனீது
கலகம் செய்து பெற்றோமோ?
களவு செய்து வந்ததோ?
விலகி நின்றம் மனிதன் தீ
வீச அஞ்சி ஓடுவீர்?

அச்சம் மீறி ஓடிடும்
ஆண்மை யற்ற பேடிகால் !
துச்சம் ஆகும் இவுயிர்
துணிவு கொண்டு தாக்குவோம்!
பச்சை ரத்தம் பொங்கியப்
பாவி தேகம் சேர்ந்திடப்
பிச்செரிந்து போரிலே
பெருமை யோடு மாலுவோம்!"
-நன்றி தினமணி

நான் அடித்ததில் சிற்சில எழுத்துப் பிழைகள் உள்ளன. பொறுத்த அருள்க
- அன்புடன்
தோழன் மபா

திங்கள், மே 18, 2009

பிரபாகரன் சாகவில்லை.

திங்கள் மதியத்தில் இருந்தே மனது சரியில்லை. மா வீரன் வேலுபிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்று வந்த செய்திகளை கேட்டு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக வந்திருக்கும் இவ் வேலையில் எம் தலைவனின் மரணசெய்தி திட்டமிட்டு பரப்பப் படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும் இப்பகுதியில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டு, உடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுவதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்திருக்கின்றார், அப்படி இருக்க இலங்கையின் ஊடகங்களும், உலக ஊடகங்களும் மாவீரன் பிரபாகரன் இறந்து விட்டான் என்று பொய் பிரசாரம் செய்துவருகிறது.

எம் தலைவன் பிரபாகரன் இன்றும் சிங்கள பேரினவாத படைகளை எதிர்த்து தீரத்துடன் போர் புரிந்து வருகிறார் என்பதே உண்மை.

இந்நிலையில் அந்த 25 ஆயிரம் மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணமடைந்திருக்கின்றனர் எனவும் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சூசை தெரிவித்தார்.


சுமார் இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்கா படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.
போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிக்கின்றனர் இல்லை எனவும் குறிப்பிட்ட சூசை, அந்த மக்களை சுட்டுக்கொன்றுவிடுவதற்குத்தான் அவர்கள் முற்படுகின்றனர் எனவும் சூசை குற்றம் சாட்டினார்.
இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களைவிட மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.
"நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். இறுதிவரையில் நாம் அடிபணியப்போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொதுமக்களும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்" எனவும் சூசை குறிப்பிட்டார்.


அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். அந்த 25 ஆயிரம் மக்களையும் எடுக்கச்சொல்லி. காலத்தைத் தாமதித்தார்கள். தற்போது இன்னும் 20 ஆயிரம் மக்கள் வரையில் காயப்பட்டிருக்கின்றனர். அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்குகுழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்குகுழிகளுக்குள் இருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.
போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றனர்" எனவும் சூசை தெரிவித்தார்.
இதேவேளையில் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் அங்கிருந்து வெளியேறவிடாது சிறிலங்கா படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் இப்போது இல்லை எனவும் அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர் எனவும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.
இதனை வைத்துப் பார்க்கும்போது அங்குள்ள அனைவரையும் கொன்றொழிப்பதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. போர்ப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேவருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் அறிவித்து வருகின்ற போதிலும், அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் சரித்திரத்தில் இல்லாதளவுக்கு மனிதப் பேரவலம் ஒன்று இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

அறுபது ஆண்டு கால இலங்கையின் போர் வரலாற்றில் புலிகள் பல முறை இத்தகையான முடுவுரும் தறுவாயில் உள்ள போர்களை சந்தித்துள்ளனர். புலி தலைவர் பிரபாகரனும் ஊடங்களால் பல முறை சாகடிக்கப் பட்டுள்ளனர். இதுவும் அத்தகையான ஒரு வீண் முயற்சியே.... யாரும் நம்ப வேண்டாம்.

மாவீரனுக்கு என்றும் மரணமில்லை.....

"இந்தியா தவறு செய்துவிட்டது!" சாடுகிறார் முன்னாள் இந்திய இராஜதந்திரி ராஜீவ் டோக்ரா - 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'


"சீனாவும் பாகிஸ்தானும் தங்களது நலனுக்கு வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டன. இறுதியில் இலங்கையினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் எங்களால் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் எமக்கு மனமில்லை" என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று புதன்கிழமை 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

"உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும். உலகம் உண்மையிலேயே இணைக்கப்பட்டதாக இருக்கும் எனில் இந்தப் பயங்கரம் குறித்த செய்தி உலகில் எங்காவது எதிர்ப்பைத் தூண்டியிருக்கும், உலகின் 24 மணி நேர செய்தி ஊடகங்களில் ஒரு சிறு பகுதியாவது இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்துச் சிறிய அளவாவது செய்தி வெளியிட்டிருக்கும்.
இன்னும் சுருங்கச் சொன்னால், இலங்கையின் சின்னஞ் சிறு பகுதியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து உலகம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். கொடும் செயல்களை செய்து முன்னேறிக் கொண்டிருக்கும் சிறிலங்கா படையினால் அந்தப் பகுதி நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டிருக்கிறது.
சுருங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய நிலப் பகுதியில்தான், ஒரு காலத்தில் தன்னாட்சி குறித்த தமிழ் இளைஞர்களின் நம்பிக்கை சுடர் விட்டுக்கொண்டிருந்தது. இப்போது அந்தப் பகுதியில் வயதான ஆண்களும் பெண்களும், புதிதாகப் பிறந்த குழந்தைகளும்தான் இருக்கிறார்கள். இளைஞர்கள் அழிந்துவிட்டனர். தங்களின் தாயகக் கனவை தங்களுடன் வேறு உலகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
தெய்வங்களுடன் தொடர்புகொள்வது கூட அவர்களுக்கு எளிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த உலகில் உள்ள கடவுள்கள் கேளாக் காதினராகவும், பேசாத வாயினரதாகவும்தான் இருக்கின்றனர்.
உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நடுவர்போல அன்றாடம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அமெக்காவோ, பாகிஸ்தானை சரிக்கட்டுவதில்தான் மும்முரமாக இருக்கிறது. சாதாரணமாக, எங்கேயாவது மனித உரிமைகள் மீறப்படுவதாக உறுதியற்ற செய்தி வந்தால்கூட வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்படும். அமெரிக்க ஊடகங்கள் வெகுவிரைவாகச் செயற்படும். உண்மையான, கற்பனையான மனித உரிமை மீறல் செய்திகளை அச்சில் ஏற்றுவதற்காக தொன் கணக்கில் செய்தித்தாள் காகிதம் அர்ப்பணிக்கப்படும். பிறகு குற்றம் சாட்டப்பட்ட தரப்பு, அமெரிக்காவின் ஆணைப்படியான ஏற்பாட்டுக்கு அடிபணியும் வரையில், அனைத்துலக அரங்குகளுக்கோ மற்றவற்றுக்கோ இழுத்து வரப்படும். ஒரே ஒரு உயிர் போயிருந்தால் கூட, ஒரே ஒரு மனித உரிமை மீறல் நிகழ்ந்திருந்தால்கூட இவை எல்லாம் நடக்கும்.
ஆனால், இலங்கையில் நாள்தோறும் நடைபெறும் அடக்குமுறைகள் குறித்து எதையுமே பார்க்காதது போல, எதையுமே கேட்காதது போல அமெரிக்கா ஏன் நடிக்கிறது? இவ்வளவு நாட்களாக அமைதியாக இருக்கும்படி அதைத் தூண்டியது எது?.
அமெரிக்காவின் இந்த அக்கறையற்ற போக்குதான் ஐக்கிய நாடுகள் சபையின் செயலின்மைக்கும் காரணமாகும். அமெரிக்கா சைகை காட்டுமானால், ஐ.நா. கிளர்ந்தெழுந்து செயற்படும் என்பது உண்மைதான். அந்த ஒப்புதல் கிடைத்த உடனே, உலக ஆட்சிப்பணி அதிகாரிகள் மிகுந்த வேகத்துடன் செயற்படுவார்கள். அவர்கள் அதிகம்Œசாதிக்க முடியாவிட்டாலும் கூட, குற்றம் இழைக்கப்படும் நாட்டுக்குச் சென்று வருவார்கள், தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று வருவது, குறைந்தது உலகின் செய்தியையாவது அந்த நாட்டுக்குத் தெரிவிக்கும்.
உலகின் இந்த உயர்நிலை கவனம், அதைத் தொடர்ந்த ஊடகங்களின் பார்வையும் தடுப்புக்கேடயமாக மாறி குற்றம் இழைப்பவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், மனித உரிமை மீறல்களின் தீவிரத்தை ஓரளவுக்குக் குறைப்பதற்கும் உதவும்.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் இவை எதுவுமே நடக்கவில்லை. அக்கறையற்ற இந்தப் போக்குதான், சிறிலங்கா அரசை துணிச்சல் அடைய வைத்திருக்கிறது என்பது தெளிவு.
மேலும், இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும்படி கைவிடப்பட்டனர். தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், மருத்துவ வசதிகள் இல்லாத நிலை, சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள், நாள்தோறும் பலர் மடிவது என்பதே அங்கு நெறிமுறையாகிவிட்டது.
மனித உரிமை மீறல்களை உலகம் வகைப்படுத்துவதிலும் சாதி முறை இருக்கிறதோ என்று வியப்படைந்தால் அதுதான். இல்லாவிடில் பொஸ்னியா, கொசோவோ தொடர்பாக போர்க்கால நடவடிக்கை போன்ற செயற்பாட்டுக்கு உலகம் கிளர்ந்தெழுந்தது ஏன்? சேர்பியாவைப் பணிய வைப்பதற்காக அதன் மீது குண்டு வீசியது ஏன்? தமிழர்களின் இரத்தத்தை விடவும் வெள்ளையர்களின் இரத்தம் மதிப்பில் உயர்ந்ததோ? பின்னர் ஏன் உதவி கோரும் இலங்கைத் தமிழர்களின் கூக்குரல் உலகச சமுதாயத்தின் காதுகளில் விழவில்லை? இதில் இந்தியாவின் நிலை என்ன? நமக்கு பொறுப்பு இல்லையா?
புவியியல், வரலாறு, இனம், மொழி, மதம், பண்பாடு என அவர்களுடன் நமக்குள்ள அனைத்துத் தொடர்புகளும் அதைத்தானே வலியுறுத்துகின்றன. எப்போதேனும் அமைச்சர் ஒருவர் அரை மனதுடன் முயற்சி எடுப்பார். நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் ஒன்றை விடுப்பார். அதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதுபோல சிறிலங்கா அரசு விரைவிலேயே அதை ஒதுக்கித் தள்ளிவிடும்.
இந்த முடிவு பிரபாகரனுக்கு வேண்டும் என்பது போன்ற பழிவாங்கும் பார்வையை நமது பார்வையாளர்களில் சிலர் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனுக்கு எதிராக மட்டுமின்றி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் எதிரான இந்த வாதத்தில் ஒருவேளை வலு இருக்கலாம். அவர்களுக்காக யாரும் வாதாடவில்லை. அவர்கள் விடயத்திலும்கூட அதேபோல அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது.
மும்பாயில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் காசப் செய்த குற்றங்களையும் படுகொலைகளையும் தொலைக்காட்சியில் லட்சக்கணக்கான மக்கள் பார்த்திருக்கின்ற நிலையில், வழக்கு விசாரணையில் அஜ்மல் காசப்புக்கு விரிவான வதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது ஏன்? அஜ்மல் காசப்பும் அவனது கூட்டாளிகளும் இந்தியாவின் பொருளாதார அடித்தளத்துக்கே அறைகூவல் விடுத்தனர். 180 பேரை படுகொலை செய்தனர்.
எனினும் அஜ்மல் காசப்புக்கு அரசு”தரப்புக்கு எதிராகப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுக்கும் மற்ற விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட நாம் முடிவு செய்தாலும்கூட, பாதுகாப்பற்ற வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகளை நாம் எப்படி விட முடியும்? அவர்கள் மீது நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? அவர்களைப் பற்றி நாம் அக்கறைப்பட வேண்டியதில்லை என்று சிலர் வெட்கமின்றி வாதாடுகிறார்கள். நம்முடன் மரபுவழி உறவுள்ள இந்தியத் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்குக் குடிபெயர்வதற்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர் என்றும், மற்றவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள், அவர்களிலும் பெரும்பகுதியினர் பயங்கவாதிகள், இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டும் இல்லை என்பதற்கு இத்தகைய மனிதர்களே வாழும் எடுத்துக்காட்டு. நமது உலகம் மற்றவர்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டு பரிவு காட்டாத உணர்ச்சியற்ற உலகம் என்பதற்கு இவர்களே சான்று. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு வரலாற்று வழிப்பட்ட உறவு. அதுவே பலவழிகளிலும் அவர்கள்பால் நம்மைப் பொறுப்புள்ளவர்கள் ஆக்குகிறது. அத்தகையதொரு பொறுப்புணர்வை நிறைவேற்றும் வகையில்தான் இராமர் இலங்கைக்குச் சென்றார்.
வருந்தத்தக்க வகையில், இந்தியா அடிக்கடி அதன் சொந்த மக்களின் துன்பங்களைக் கண்டும் அசையாமல் இருந்து வருகிறது. இல்லாவிடில், உகண்டாவில் கொடுங்கோலன் இடி அமீனால் நமது மக்கள் ஒடுக்கப்பட்டபோது, நாம் அவர்களது உதவிக்குச் சென்றிருப்போம். பிஜித் தீவில் உள்ள இந்தியர்களுக்கு உதவி செய்திருப்போம். கரீபிய நாடுகளில் உள்ள இந்திய மரபுவழித் தமிழர்கள் இழிவுடன் நடத்தப்படுவதற்கு எதிராக உறுதியுடன் குரல் கொடுத்திருப்போம். அவர்களைப் போலவே, நமக்கு அண்டையில் உள்ள இலங்கைத் தமிழர்களையும் அவர்கள் விதிப்படி நடக்கட்டும் என்று கைவிட்டு விட்டோம்.
தேர்தல் மட்டும் வரவில்லை என்றால் அவர்கள் அப்படியேதான் விடப்பட்டிருப்பார்கள். திடீரென, அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. பதிலுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களாக அது மேற்கொண்டு வந்த முயற்சிகள் பயன் அளித்துள்ளதாகக் கூறி வருகிறது.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசு”ஒப்புக் கொண்டுவிட்டதாக அது தெரிவித்துள்ளது.
தமிழர்கள் சிக்கியிருக்கும் பகுதி சிறிய பகுதியாகச் சுருங்கிவிட்டதால், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது தேவை இல்லை என்பதால், படை நடவடிக்கைகளின் அளவை சிறிலங்கா ஓரளவுக்குக் குறைத்துக் கொண்டுவிட்டது என்பதுதான் உண்மையான காரணம்.
நாம் நேர்மையானவர்களாக இருந்தால், அரசினுடைய நெருக்குதல் இலங்கையில் பயனளிக்கத் தொடங்கிவிட்டது என்பது உண்மையாக இருந்தால், இதைச் செய்வதற்கு இவ்வளவு காலம் அது ஏன் காத்திருந்தது? என்று மத்திய அரசிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிற, முடமாக்கப்படுகிற, விதவைகள் ஆக்கப்படுகிற, ஆதரவற்றவர்கள் ஆக்கப்படுகிற வரையில் அது ஏன் காத்திருக்க வேண்டும்? எதையும் செய்வதற்கு மனமற்ற, அக்கறையற்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
இதற்கிடையே, நமது அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் தங்களது படை சார் நலனுக்கு நல்ல வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இறுதியில் சிறிலங்காவினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். நம்மால் வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் மனமில்லை." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-நன்றி
புதினம்.கம

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...