புதிய வார்ப்புகள்!
தினமணி தீபாவளி மலர் வேலை தெடங்கியபோதே, இம் முறை வலைப்பதிவர்கள் பற்றி எழுத சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
தீபாவளி மலர் தயாரிப்புத் தொடர்பாக, மீட்டிங் நடைபெறும். இதில் தினமணி ஆசிரியர், மலர் குழுவினர், விளம்பர பிரிவு, பத்திரிகை விற்பனை பிரிவு, அச்சகப் பிரிவு போன்ற பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு, மலரின் பக்கங்கள் தொடங்கி, எத்தனை பிரதி அச்சிடவேண்டும்,எப்போது சந்தைப்படுத்த வேண்டும், எந்த வகையான அச்சு, பேப்பர் தரம், எத்தனை பக்கம் விளம்பரம், எடிட் ரேஷியோ போன்றவை விவாதிக்கப்படும்.
| |
| இரண்டாம் பக்கம் |
![]() |
| முதல் பக்கம் |
கிட்டத்தட்ட 15 நாள் அவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி, புகைப்படங்களைப் பெற்று கட்டுரையை முழுமைப்படுத்தி அளித்துவிட்டேன்.
தினமணி தீபாவளி மலரில் வரும் என்று எதிர்பார்த்தால், வழக்கம்போல் நமக்கு சனியன் சகடை வேலை செய்தது. இடப்பற்றாக் குறையால் திபாவளி மலரில் அக் கட்டுரை வெளிவரவில்லை.
எல்லோருக்கும் போனை போட்டு சிரமத்திற்கு வருந்துகிறோம் என்ற ரீதியில் சொல்லபோக, எல்லோரும் ஓகே என்றார்கள்.
பிறகு வலைப் பதிவர்கள் கட்டுரையை தினமணி கதிரில் வெளியிடுவது என்று எடிட்டோரியலில் முடிவு செய்து, தயார் நிலையில் இருக்க, மீண்டும் ஒரு ட்விஸ்ட் 4 பக்கத்திற்குப் பதிலாக இரண்டு பக்கம்தான் கிடைத்தது . இரண்டு பக்கம் என்பதால் 12 வலைப்பதிவர்களிலிருந்து 6 வலைப்பதிவர்கள் என்றானது.
மீண்டும் போன்... மீண்டும் எஸ்கியூஸ்....!
அந்தா இந்தா என்று கடந்த வாரம் ஞாயிறு (17/11/2013) அன்று தினமணி கதிரில் 'புதிய வார்ப்புகள்' என்ற வலைப்பதிவர்கள் பற்றிய எனது கட்டுரை வெளியானது. இதில் 'யாழிசை' வலைத்தளம் மட்டும் 'தினமணி ஞாயிறு கொண்டாடத்தில்' முதல் பக்கத்தில் வெளிவந்தது.
இணையத்தில் படிக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்....
http://epaper.dinamani.com/185393/Kadir/17112013#dual/6/1
http://epaper.dinamani.com/185381/Kondattam/17112013#page/1/1
இக் கட்டுரையின் முக்கிய நோக்கமே இணைய எழுத்தாளர்களை, அச்சு ஊடகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். வலைப் பதிவில் வாகை சூடிய அவர்களை அச்சு ஊடகத்தில் அறிமுகம் படுத்தவே இந்த முயற்சி!.
மிக நேர்த்தியான முறையில் பிரபல எழுத்தாளர்களுக்கு சவால் விடும் வகையில் எழதும் இவர்களது எழுத்துகளே, வருங்காலத்தை ஆள போகிறது. என்னாலான சிறு முயற்சி இது. விடுபட்ட வலைபதிவர்கள் பற்றிய கட்டுரை, இனி வரும் வாரங்களில் ஞாயிறு கொண்டாடத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இம் முயற்சி தொடரும்!. நிறைய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது!.
அன்புடன்
-தோழன் மபா.
