சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கிறது அந்த ஹோட்டல். வியாபார நிமித்தமாக ஒரு நண்பர் என்னை அங்கு வந்து சந்திக்கும் படி கூறி இருந்தார். ஹோட்டலுக்கு சென்று அவரை தொடர்பு கொண்டால்.... "பாரில் இருக்கிறேன் வாங்க" என்றார். பார் ஹோட்டலின் தரை தளத்திற்கும் கீழே இருந்தது.
பாரில் குடிமகன்கள் சீப்பிக் கொண்டு இருக்க... ஒரு ஓரத்தில் மூன்று இளம் மங்கைகள் மைக் பிடித்து பாடிக் கொண்டு இருந்தனர். பழைய மற்றும் புதிய பாடல்களாகப் பாடி வந்திருந்த 'பார்'யாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டு இருந்தனர். பொதுவாக இத்தகைகைய நடுத்தரவர்க்க பார்களில், யாரும் பாட மாட்டர்கள். சத்தத்தை அதிகம் வைத்து நமது காதைதான் செவிடாக்குவார்கள். ஆனால், இங்கு பெண்கள் பாடுவது புதிதாக இருந்தது.
ஸ்டார் அந்தஸ்த்தில் உள்ள ஹோட்டல் பார்களில் மட்டும்தான் இத்தகைய இசை நிகழ்ச்சிகள் நடைபெரும்., அல்லது யாராவது ஒருவர் இசை கருவியை மென்மையாக இசைத்து, குடிமகன்களை உற்சாக மூட்டுவார்கள். கார்பெரேட் மனிதர்களின் வாழ்வியலில், இத்தகைய லைஃப் ஸ்டல் சகஜமான ஒன்று.
ஆனால், நடுத்தர வர்க்க குடிமகன்கள் வாழ்வில் இப்படிப்பட்ட லைப்ஸ்டைல் இல்லை. பாட்டிலை திறந்து ஒரே கல்பாவா அடித்துவிட்டு, ஆபிஸில் இருக்கும் எவனைப் பற்றியாவது சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருப்பதைதான் நாம் அதிகம் பார்த்துக் இருக்கிறோம்.
சிறிய ரக ஹோட்டல்களில் இப்படி பாடகிகளை வைத்து இசை நிகழ்ச்சி நடத்துவது சற்று நெருடலாகவே இருக்கிறது. அதிலும் அந்த மூன்று பெண்களில் இருவர் மணமானவர். பார் முழுவதும் ஆண்கள் குடித்துக் கொண்டு இருக்க, அந்த மூன்று பெண்களும், சங்கோஜத்துடன் பாடிக் கொண்டு இருந்தது வேதனையாக இருந்தது.
பார்களில் பெண்கள் பாடித்தான் ஆக வேண்டுமா....???
