ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 22, 2016

கள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை



                    ள்ளப்படகில் வந்த இளைஞரை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகரக் காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு புதன்கிழமை இரவு வந்த இலங்கை வவுனியா காந்திகுளத்தைச் சேர்ந்த த.மோகன்தாஸ் (22), வேலை கேட்டு மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

பாஸ்போர்ட், விசா ஆகியன தன்னிடம் இல்லை என தெரிவித்த அவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அவர் கள்ளப்படகு மூலம் ராமேசுவரம் வந்து, அங்கிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது. 

இதில், பாஸ்போர்ட், விசா இல்லாமல் தமிழகத்துக்குள் நுழைந்தது தவிர மோகன்தாஸ் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்போ, குற்றச்செயலில் ஈடுபடும் எண்ணமோ அவரிடம் இல்லை என போலீஸார் இலங்கை துணை தூதரகத்திடம் அறிக்கை அளித்துள்ளது.

இதையடுத்து, மோகன்தாஸ் மீதான சட்டரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்து, இலங்கை அனுப்புவதற்கு முயற்சிகளை இலங்கை துணை தூதரகமும், சென்னை காவல்துறையும் மேற்கொண்டுவருகின்றன.

இதற்காக அவருக்கு தாற்காலிகமாக பாஸ்போர்ட் வழங்குதற்கு இலங்கை துணை தூதரகம் சம்மதித்துள்ளது என்றும் ஒரிரு நாள்களில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதால் அவர் வேப்பேரி காவல் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளி, மார்ச் 18, 2016

இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் இப்போது புழல் ஜெயிலில்.





த.மோகன் தாஸ் (வயது 22)இலங்கை வவுனியா காந்தி குளம்

             புதிய விடியலை நோக்கி இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞன் ஒருவன் இப்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறான். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வவுனியா காந்தி குளத்தைச் சேர்ந்த த.மோகன் தாஸ் (வயது 22) என்ற இளைஞர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கள்ளத் தோனி மூலம் இராமேஸ்வரம் வந்திருக்கிறார். தனது தந்தை இறந்துவிட்ட நிலையில், தனக்கான் புதிய வாழ்வை இந்தியாவில் தொடங்க அந்த அப்பாவி இளைஞன் வந்திருக்கிறான். சிலநாள்கள் சுற்றித் திரிந்த பின் மதுரைக்கு வந்து, சிம்கார்டு வாங்கி தனது குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார்.
பணம் முழுமையாகச் செலவானதால் சென்னைக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணச்சீட்டு இன்றி வந்து, பல்வேறு நிறுவனங்கள், கடைகளில் வேலை கேட்டு யாரும் அளிக்காததால் சாலையோரத்தில் தங்கியதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டால் வேலை கிடைக்கும் என சிலர் கூறவே சென்னை வேப்பரியில் உள்ள கமிஷனர் அலுவகத்திற்கு வந்திருக்கிறார்.
இலங்கை தமிழரான தனக்கு வேலை வாங்கித் தருமாறு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை கேட்டபோது, அந்த இளைஞர் தன்னிடம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். அவரைப் பிடித்து வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடந்தி , அவருக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என க்யூ பிரிவு போலீஸார் விசாரித்தனர். எவ்வித ஆவணமும் இன்றி கள்ளப்படகில் வந்ததாக மோகன்தாûஸ கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார்.
()()()()()
"சிங்களர்கள் ஆக்கிரமிப்பால் பறிபோன வாழ்வாதாரம்'
தமிழகம் வந்ததற்கான காரணம் குறித்து போலீஸாரிடம் மோகன்தாஸ் கூறியதாவது:-
போருக்கு பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சிங்களர்களை குடியமர்த்தி வருகின்றனர். இதற்காக தமிழர்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் சிக்கியுள்ளனர். வெளிநாடு செல்ல முறையாக கடவுச்சீட்டு, விசா பெறுவது இயலாத காரியம். ஆகவே, சிலரிடம் கடன் பெற்று கள்ளப்படகில் தமிழகம் வந்தேன். இங்கு கடவுச்சீட்டு, விசா பெற்று மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.
வேலை கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபோது, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையரகத்துக்கு செல்லும்படியும் சிலர் கூறினர். ஆனால், தவறாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தபோது, சிக்கினேன் என்றார்.
பால் மணம் மாறாத அந்த முகத்தை பார்க்கும் போது, மனம் பதபதைக்கிறது. இந்த சிறு வயதில் நாடு விட்டு நாடு வந்து இப்படி சிறையில் மாட்டிக் கொண்ட அந்த இளைஞனுக்கு என்ன உதவி செய்வது என்று தெரியவில்லை. அவனது வாழ்க்கை எப்படி மாறும் என்றும் புரியவில்லை?. அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது. எப்படி என்றுதான் புலப்படவில்லை.
பொழுது விடியட்டும் என்று காத்திருக்கிறேன்.
18/03/2016.

சனி, ஜூன் 23, 2012

இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! தபால் தலை வெளியீட்ட சிங்கள அரசு.


தமிழர்களின் பூர்வீகத் தீவான இலங்கையில், சிங்களவர்கள் குடியேறுவதை காட்டும் இலங்கை அரசின் தபால் தலை. 




          1956-இல் 'விஜயனின் வருகை' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை அன்றைய சிங்கள இனவாத அரசு வெளியீட்டது. தமிழ் அரசி கரையில் வீற்றிருக்க, விஜயனின் தலைமையிலான சிங்களவர்கள் தங்களது 'சிங்க உருவம்' பொறித்த கொடியுடன் கப்பலில்  கரை ஒதுங்க வருகின்றனர்.

சிங்களர்கள் வந்தேறிகளாக இலங்கை கரையில் ஒதுங்கும்  உண்மையை உலகிற்கு சொல்லும் பொருட்டு அந்த தபால் தலை இருந்தது.  இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிங்கள தலைவர்கள் இத் தபால் தலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகி விடும். எனவே, இந்தத் தபால் தலையை வாபஸ் பெற வேண்டும்" என்று கூறினார்கள்

அதுகாறும் நாங்கள்தான் இத் தீவின் பூர்வ குடிகள் என்று முழங்கிவந்த சிங்கள பேரினவாத அரசு, சுதாரித்துக் கொண்டு இத் தபால் தலையை திரும்ப பெற்றுக் கொண்டது. அதற்குள் இத் தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது. 

இத் தபால் தலையை இலங்கை அரசு தனது 500வது வருட  கொண்டாட்டத்தின் போது வெளியீட்டதா என்று தெரியவில்லை?

தினத்தந்தியில் வந்ததை நானும் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டேன்.  இதை எனது முக நூலில்   சமீபத்தில் வெளியிட சுமார் 356 பேர் இப் புகைப்படத்தை share செய்துக் கொண்டார்கள். 

                                   காலங்கள் மாறி காட்சிகள் மாறினாலும்,
                       வரலாற்றை திருத்தி வாழ்க்கையை அழித்தாலும்
                                                உண்மைக்கு அழிவில்லை.
                                     தனி ஈழம் வெகு தூரத்தில் இல்லை. 






செவ்வாய், ஜனவரி 10, 2012

இணையத்தை கலக்கும் 'யாழ்பாண கொலைவெறி' !




இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் ஜெர்ரி ஸ்டாலின் எழுத்தில், இசையில் வெளியாகியுள்ள "கொலைவெறிடா' பாடல் இணையத்தின் மூலம் பட்டி, தொட்டியெல்லாம் பிரபலமாகி வருகிறது.

முழுக்க, முழுக்க தமிழில் "யூ டியூப்பில்' வெளியாகியுள்ள "கொலைவெறிடா' பாடலை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கேட்டு ரசித்துள்ளனர். யாழ்ப்பாணம் செயின்ட் பேட்ரிக் கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர் இப்போது கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். இசைஆர்வம் காரணமாக அவ்வப்போது சில கவிதைகளுக்கு இசைவடிவம் கொடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில், நடிகர் தனுஷின் "கொலைவெறி' பாடலின் அடிச்சுவடைப் பின்பற்றி ஜெர்ரி வெளியிட்டிருக்கும் "யாழ்ப்பாணத்திலிருந்து கொலைவெறிடா' பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாடலின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் நகர எல்லையில் சிங்கள மொழியில் வைக்கப்பட்டிருக்கும் எழுத்துப் பலகை காண்பிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, "என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா' எனத் தொடங்கும் பாடல் வரிகள் ஒரு தமிழ் இளைஞரின் கோபத்தை ஆக்ரோஷமாகக் கொப்பளிக்கிறது.

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் 
கொஞ்சம்...
கம்பனின் வரிகள்...
வள்ளுவன் குறள்கள்...
பாரதி கவிகள் எங்கே?

என்று இந்தப் பாடலின் வழியாக 28 வயதாகும் யாழ்ப்பாணத் தமிழர் ஜெர்ரி கேட்கும் கேள்விகள் உலகத் தமிழர்களின் காதுகளில் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.உள்நாட்டு போருக்குப் பின்னர் இலங்கையில் தமிழின் அடையாளம், தமிழர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இப் பாடல் தமிழர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே தனுஷின் "கொலைவெறிடி' பாடலுக்கு இணையாகப் இந்தப் பாடலும் இணையத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. 

நன்றி தினமணி.

புதன், செப்டம்பர் 21, 2011

அமெரிக்காவை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்குத் தடை.



ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நியூயா‌ர்க்கிற்கு வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அ‌திகா‌ரிகள் அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.




நியூயா‌ர்‌க்கிற்கு வெளியில் ஏனைய மாநிலங்களுக்குச் செல்வதால், போர்க்குற்றச்சா‌ற்றுகள் சுமத்தப்படக் கூடும் என்பதாலேயே சிறிலங்கா அதிபரை அங்கிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.



ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்களுக்கு நியூயோர்க்கில் மட்டுமே இராஜதந்திர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.



சிறிலங்கா அதிபர் ராஜபக்ச தனது உறவினர்களை சந்திப்பதற்கும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.



அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையினால் அவரது திட்டங்கள் கைவிடப்பட்டு நியூயா‌ர்‌க்கில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
 



அதே நேரத்தில் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்தால் சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. திருப்பதியில் பூரண கும்பம் வைக்கப்படுகிறது...? இந்தியா போன்று அமெரிக்காவில் ராஜபக்சே சகஜமாக நடைபோட்டால் அவர் பிணமாகத்தான் இலங்கை திரும்பமுடியும் என்பதை உணர்ந்தே அமெரிக்க அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது, என்பதை நம்மால் உணரமுடிகிறது.
.

வியாழன், செப்டம்பர் 08, 2011

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டி ஈழத்தமிழர்கள் பட்டினி போராட்டம்.




செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 12 ஈழத் தமிழர்கள், தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கவேண்டி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிவுள்ளனர்.  நெடுங்காலமாக இந்த சிறப்பு முகாம்களில் 41 ஈழத்தமிழர்கள் எந்தவித விசாரனையுமின்றி இவர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
 
     


சிறப்பு முகாம்களுக்கும் சாதாரன முகாம்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.  சாதாரன முகாம் என்றால், நீங்கள் வழக்கமான வேலைகளை கவனிக்கலாம். வெளியே வேலைக்குச் செல்லலாம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம். ஆனால், சிறப்பு முகாம் என்றால் அது ஒரு ஜெயில் வாழ்க்கை போன்றதுதான். இங்கு அடைத்துவைக்கபட்டுள்ள இவர்கள்,  வழக்கமான  முகாம் போன்று வெளியே நடமாட முடியாது.   எதுவாக இருந்தாலும் அரசின் அனுமதி பெற்றுதான் வெளியே செல்ல முடியும். 



இப்படி தொடர் இன்னல்களை அனுபவித்த வந்த இவர்கள், தங்களை இந்த சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வேண்டி,  கடந்த திங்கள் முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டதை துவக்கி உள்ளனர்.   இது தொடர்பாக தங்களது கோரிக்கையை  தமிழக முதல்வர், உள்துறை செயலாளர், காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊடகங்கள் என்று   அனுப்பியுள்ளனர்.

அதில் கூறியதாவது....! 
     

     ஐயா!
மேற்படி ஈழத்தமிழர்களாகிய நாம் செங்கற்பட்டு சிறப்புமுகாமில் மிக நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். எமது குடும்பங்கள் எங்களைப்பிரிந்த நிலையில் ஈழத்தில் வாழமுடியாமல் இங்கு வந்து இங்கும் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வித வாழ்வாதாரமும் அற்ற நிலையில் பசி, பட்டினியால் வாடுகின்றனர்.

எங்களில் அனேகமானவர்கள் மீது தேவையற்ற பொய்யான வழக்குகள்
சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுபின்னர் கனம் நீதிபதி அவர்களின் ஆணைப்படி பிணையில் (ஜாமீன்) வெளியே வரும்போது சிறைவாயிலிலே வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு சிறப்புமுகாமில்  டைக்கப்பட்டுள்ளோம். சிலர் எவ்வித வழக்குகளுமில்லாமல் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இங்கு மொத்தமாக நாற்பத்தொரு(41) பேர் உள்ளோம்.

ஐயா!
இங்குள்ளவர்கள் யாரும் இந்திய இறையாண்மைக்கு எதிரான பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களென்று சொல்வதற்கில்லை.

 நாங்கள் பலதடவைகள் கேட்டு அகிம்சையாக போராட்டங்களை நடத்தியும் எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை. எனவே நாம் காந்திய வழியில் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். எனவே எங்களதும் எங்களின் குடும்பங்களினதும் வாழ்க்கையினை கருத்தில் கொண்டு எம்மை விடுதலை செய்யும் வரை  எதிர்வரும் 05-09-2011 திங்கட்கிழமையிலிருந்து உண்ணாவிரத்ததினை மேற்கொள்ளவுள்ளோம் என்பதையும் அத்துடன் நாங்கள் மருத்துவச்சிகிச்சைக்கோ வேறு எதுவித முதலுதவிச்சிகிச்சைக்கோ எங்களை உட்படுத்திக்கொள்ள அனுமதிக்கமாட்டோம்.

ஒன்றில் விடுதலையாகவேண்டும் அல்லது மரணமே முடிவாகினாலும் அதற்கும் சித்தமாக இருக்கின்றோம் என்பதனையும் தங்களின் கருணை உள்ள கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

 நன்றி.
இங்கனம்
உண்மையுள்ள
செங்கற்பட்டு சிறப்புமுகாம்
உண்ணாவிரதிகள்.

05-09-2011 உண்ணாவிரதம் இருக்கும்
உண்ணாவிரதிகளின் பெயர் விபரம் கீழ்வருமாறு,

1. மோ.தேவாகரன்
2. ஏ.கே.சேக்பரித்
3. செ.நாராயணதாஸ்
4. S.அருள்குலசிங்கம் ரமேஸ்
5. கணேசலிங்கம்
6. சந்திரகாந்தன்
7. செ.கிருஷ்ணலிங்கம்
8. அ.செல்வராசா
9.ரா.செந்தூரன்
10.யோ.சிறிஜெயன்
11.பா.தர்மராசா
12.ச.கிரிதரன்

சொந்த நாட்டில் துயரம் என்றுதான், தங்களது தொப்புல் கொடி உறவான தமிழகத்திற்கு வந்துள்ளனர். ஆனால், இங்கு வந்தும்,  மத்திய அரசின் தவறான கொள்கையால் சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்துவைத்து சித்ரவதை செய்கின்றனர். இங்கு அடைத்து வைத்துள்ளவர்களால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்ற போர்வையில் மத்திய  அரசு  இந்த தவறான முடிவை தொடர்ந்து செய்துவருகிறது.   சொந்த மண்னை பிரிந்து, சொந்தங்களை பிரிந்து, சொத்துகளை இழந்து துயரத்தின் விளிம்பில் இருக்கும் இவர்களை சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது 'தமிழன் வீதி'


செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த வீட்டை சுற்றுலாத்தளமாக மாற்ற இலங்கை அரசு முயற்சி!?

                                                                                              தமிழ்மணம் நட்சத்திர பதிவு !

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வசிப்பிடத்தை விரைவில் சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கான முயற்சிகளை இலங்கை அரசு எடுத்துவருகிறது.   


தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வீடு
 

  முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு சந்திப்பிலிருந்து  ஒட்டுசுட்டான் செல்லும் வழியில் முக்கிய வீதியில் இருந்து சுமார் 4கிலோ மீட்டர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது இந்த வீடு. அடர்ந்த காட்டுப் பகுதியில் மிகுந்த பாதுகாப்பு அரண்களோடு அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.  வெளியில் இருந்து பார்ர்க்கும் போது ஒரு விவசாயின் வீடு போல் காட்சி அளிக்கும் அந்த வீடு, எளிதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் ஏற்படாதவன்னம் கட்டப்பட்டுள்ளது.

இந்த வீட்டிற்கு அண்மைக்காலமாக அதிகளவில் தென்னிலங்கை சிங்கள மக்கள் வந்து செல்கின்றனர். பெருமளவில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் கூட வந்து செல்கின்றனர். அவர்கள் வீட்டின் காட்டுமான அமைப்பைப் பார்த்து வியந்து போகின்றனர். அந்தளவிற்கு உயர் மட்ட பாதுகாப்போடு அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.  

முன்புறத்தில் பாதுகாப்பு அரண்


வெளியில் சாதாரண வீடுபோன்று தோற்றமளிக்கும் இந்த வீடு எத்தகைய தாக்குதலுக்கும் சிதைவுறாத வகையில் உள்ளே பாதுகாப்பான ஆழமான பதுங்குகுழிகளைக் கொண்டுள்ளது.
சுற்றிப்பார்க்கும் சிங்கள இரானுவத்தினர்




பதுங்கு குழி



இரும்பிலான ஏணிப்படி


கதவில் சிங்கள எழுத்து


மேலும் ஒவ்வொரு பதுங்குகுழிப் பாதைக்கும் கனமான இரும்புக் கதவுகள் போடப்பட்டுள்ளது. பதுங்கு குழியிலிருந்து மேலே ஏறிவர உறுதியான இரும்பு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பாதுகாப்போடு இருக்கும் இந்த வீட்டில் நிச்சயம் தலைவர் தங்கியிருப்பார் என்று இலங்கை அரசு நம்புகிறது.   அதனாலேயே இந்த வீட்டை சுற்றுலாத்தளமாக மாற்றி காசு பார்க்க நினைக்கிறது சிங்கள அரசு.

ஆனால் இங்கு பிரபாகரன்தான் தங்கினார் என்பதற்கான எந்த ஆதாரமும் இது வரை இலங்கை அரசுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் படையினர் காவலிருக்கும் இடத்தை பார்வையிடும் இலங்கை போலீஸ்




செவ்வாய், ஜூலை 26, 2011

இலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.




18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னது.

இப்படி இலங்கை அரசிடமிருந்து பணத்தையும், பொருளையும் வாங்கிக்கொண்டு சிங்கள அரசுக்கு ஆதரவாக செயதிகளை வெளியீட்டுவந்துள்ளனர் இங்குள்ள சில கருங்காலி பத்திரிகையாளர்கள். இந்த கொடுமையை செய்ய, அவர்கள் சிங்கள அரசுக்கு தனது மனைவியையும், மகளையும் கூட்டிக் கொடுத்து மாமா வேலை பார்த்து பணம் சம்பாதித்து இருக்கலாம்.



Thanks: http://www.vinavu.com/2009/09/04/spy/
தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.




இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும்திறமையாகக் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.
அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம். ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.
தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.
இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய்விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறதுஎன்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.
தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.
ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டுஎஸ்.ஆர்.எம்என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.
எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில் கொண்டு வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.
ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.
எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.
நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும் ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.
தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்
பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.
இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.


-புதிய ஜனநாயகம், செப்டம்பர்௨00௯



ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...