தமிழ் இணைய மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இணைய மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 01, 2011

அமெரிக்காவில் இணைய மாநாடு கட்டுரைகள் வரவேற்பு.


                   அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனிய பல்கலைகழகத்தில் வரும் ஜூன் 17 ம் தேதி தொடங்க உள்ள பத்தாவது தமிழ் இணைய மாநாட்டுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கணினியினூடே   செம்மொழி' என்ற மையக் கருத்தைக் கொண்டு ஜூன் 17  முதல் 19 வரை 
நடைபெறும் இம் மாநாட்டில் கட்டுரைகளை சமர்பிக்க விரும்புவோர் தங்கள் 
கட்டுரைகளை  மார்ச் 15  க்குள் ti2011@infitt.org   என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.


கணினி வழி தமிழ்ச் சங்க இலக்கிய ஆய்வு, தமிழ் கணினி நிரல்கள்   தரவு, மென்பொருள், தமிழ் குறித்தன நிரலிகள், மற்றும் கணினி செயலாக்கிகள், தமிழைப் பயன்படுத்தும் வகையிலான கையடக்க கருவிகள், கையடக்கத் தொலைபேசிகள், அவற்றின் தர நிர்ணயப்படுத்தல், இக்கருவிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்க் கணினி நிரலிகள். இயற்கை மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழி பெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சு பகுப்பாய்வு நிரல்கள், தேடு பொறிகள், தமிழ் திறனாய்வு நிரல்கள், தமிழ் தேடு பொறிகள்.

தமிழ்  வலைப்பூக்கள்,விக்கிபீடியா நிரலிகள், செய்திப் பரப்பி நிரலிகள், தமிழ்க் கல்வி நுழைவுப் பக்கங்கள், தமிழ் மின் வணிக நிரலிகள், இணையம் மற்றும் கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல்.

மேற்கூறிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரை சமர்பிக்கலாம்.கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.

தமிழில் உள்ள கட்டுரைகளை யுனிகோட்டில் மட்டுமே அனுப்பவேண்டும்.  தேர்வு செய்யப் படும் கட்டுரையாளர்களை ஏப்ரல் 15  க்குள் தொடர்பு கொள்ளப்படும்.

கட்டுரைகள் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் இருக்கவேண்டும்.

மேற்கண்ட தகவல்களை மாநாட்டின் இந்தியப் பொறுப்பாளர் மா.ஆண்டோ பீட்டர் தெரிவித்தார்.

மேலும் விரிவான தகவல்களுக்கு கிழே  சொடுக்கவும்...


புதன், அக்டோபர் 21, 2009

23 செர்மனியில் தமிழ் இணைய மாநாடு

தமிழ் இணைய மாநாடு வரும் அக்டோபர் இருபத்தி மூன்றாம் தேதி செர்மனியில் நடை பெற இருக்கிறது.

இந்த மாநாட்டில் தமிழ் தகவல் தொழில் நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள் . வல்லுனர்கள் கூடி விவாதிக்க உள்ளனர்.

செர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடக்கும் இந்த மாநாடு, முதன் முறையாக ஐரோப்பா கண்டத்தில் நடைபுருவது குறிப்பிடத்தக்கது

'கணி வழி காண்போம் தமிழ் என்பதே இந்த மாநாட்டின் மையக் கருத்தாகும். அதாவது அனைவரும் தமிழில் கணியியை பயன்படுத்தவும் இணைய வழி கல்வி கற்க வகை செய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்' என்று சுவிசர் லாண்டில் வசிக்கும் உத்தமம் அமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழா அரசு சார்பில் அண்ணா பலகலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மு. ஆனந்த கிருஷ்ணன் கலந்து கொள்கிறார். மேலும் கணித் தமிழ் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர், தமிழ் இணையம் பல்கலைக் கழக இயக்குனர் நக்கீரன் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவிலிருந்து கலந்து கொள்கின்றனர்.

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன...