மீண்டும் கணையாழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீண்டும் கணையாழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 22, 2014

கணையாழி உயரிய விருதுகள் அறிவிப்பு!


                            விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. 


          மிழ் இலக்கிய உலகில் தவிற்க முடியத அடையாளம் 'கணையாழி'.  முன்னாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக  துணைவேந்தர்  ம.இராசேந்திரன் அவர்களின் சீரிய முயற்சியால், கணையாழி மீண்டும் வெளிவந்து இலக்கிய ஆர்வலர்களின் விருப்பப் பட்டியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டது.

இலக்கிய கர்த்தாக்களுக்கான கணையாழியின் உயரிய விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.  சிறுகதைக்கான 'ஜெயகாந்தன் விருது' எஸ்.டி.ஏ. ஜோதிக்கும், கவிதைக்கான 'ஆண்டாள் விருது' கவிஞர் மலர்மகளுக்கும், கட்டுரைக்கான 'கா.சிவத்தம்பி விருது' முனைவர் பழ.அதியமானுக்கும் வழங்கப்படுகிறது.  சாகித்ய அகாதமி விருதுப் பெற்ற ஜோ.டி. குரூஸூக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.

இவ் விழாவில் நல்லி குப்புசாமி, நீதியரசர் கே.சந்துரு, கவிஞர் கலாப்ரியா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமன்பிரகாஷ், எஸ்.கே.பி கல்வி நிருவனங்களின் தலைவர் கு.கருணாநிதி போன்றோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

விருது வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை 22/02/2014) மாலை 5 மணிக்கு சென்னை முத்தமிழ் பேரவை அரங்கில் திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம் அரங்கம், (சத்யா ஸ்டூடியோ எதிரில்) நடைபெறுகிறது.

அனைவரும் வருக!

புதன், மே 04, 2011

கணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.

                                            அஞ்சலி                                         

முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி  இலக்கிய இதழின் நிறுவனருமான கஸ்தூரிரங்கன் இன்று காலமானார். அவருக்கு வயது 78.    சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் குடியிருப்பில் வசித்துவந்த அவர், சிறிதுகாலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.



முதுபெரும் பத்திரிகையாளரும் சமூக  ஆர்வலருமான கஸ்தூரிரங்கன் இன்று சென்னை கொட்டிவாக்கத்தில் காலமானார். 

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் டெல்லி நிருபராக 20 ஆண்டுகள் பணியாற்றிய அவர், டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965 ல் கணையாழி இதழை தொடங்கினார்.  கணையாழியில்  அரசியலை முதன்மைப்படுத்திய கட்டுரைகள் உலக நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர் கட்டுரைகள். அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியன கணையாழியில் வெளியாகியது.  கணையாழியை தனது உயிர் மூச்சாக நினைத்து நடத்தி வந்தார்.

பின்னர் 1992 வாக்கில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இனைந்து பணியாற்றினார். அப்போதுதான் அவருக்கு தினமணியின் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. இரண்டு ஆண்டுகள் அவர் தினமணியின் ஆசிரியராக இருந்து முத்திரையைப் பதித்தார்.  அதுவே அவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை பத்திரிகை உலகில் பெற்றுதந்தது எனலாம்.

சிற்றிதழ்களின் வாழ்வுக்காலம் குறுகியது எனும் நியதியைத் தகர்த்துப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கணையாழியை  நடத்திய பெருமை கி. கஸ்தூரிரங்கனுக்கு உண்டு.  இதோ இப்போதும் கூட....  நின்று போன கணையாழியை உயிர்பித்தப் பின்னரே தனது  மூச்சை நிறுத்தி உள்ளார் கஸ்தூரிரங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.


**********

வியாழன், ஏப்ரல் 14, 2011

கணையாழி இதழ் ஜெயகாந்தன் வெளியீடு



சிற்றிலக்கியங்களில் முதன்மையானதும் தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதுமான கணையாழி வெளியீட்டு விழா நேற்று சென்னை தி நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது.

 
  

இடையில் சில காலம் நின்று போயிருந்த கணையாழி இதழை தசரா அறக்கட்டளை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.

'கணையாழி' கலை இலக்கிய திங்களிதழை எழுத்தாளர் ஜெயகாந்தன் வெளியீட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ம. ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசும் போது " கணையாழியில் நான் எழுதியதில்லை, ஆனால் கணையாழி என்னை பற்றி எழுதியது..., எதற்காகச் சொல்கிறேன் என்றால், கணையாழி தொடாத விஷயம் ஒன்றும் இல்லை என்பதற்காகத்தான். எழுத்தை எழுதுவது ஒரு சுகம், எழுதாமல் இருப்பது ஒரு சுகம், பிறர் எழுத்தை வாசிப்பதும் சுகம்" என்றார். கூடவே " கணையாழியில் நானும் எழுதுவேன்" என்ற போது அரங்கம் அதிர்ந்தது.



முன்னதாக தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச் செய்தி விழாவில் படிக்கப்பட்டது.



எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தனது தலைமை உரையில் "1965 வாக்கில் தில்லியில் கஸ்தூரிரங்கன் கணையாழியை தொடங்கும் போது, அது அரசியல் இதழாகத்தான் இருந்தது. பிற்பாடு நான், அசோகமித்ரன், சுஜாதா போன்றோர் சேர்ந்தபிறகு அது இலக்கிய இதழாக மாறியது" என்றார். "கணையாழிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு" என்று கூறிய எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி; கணையாழியின் 'பொறுப்பாசிரியராக' தனது பொறுப்பை ஏற்றுள்ளார்.



தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரும், கணையாழியின் ஆசிரியருமான ம. ராஜேந்திரன் பேசும்போது கணையாழி "அணிகலன் அல்ல அது ஒரு அடையாளம். இவ்வளவு நாட்களாக நின்று போயிருந்த கணையாழி 'விதை உறக்கக் காலத்தில் இருந்தது' எனலாம். ஒரு விதை போட்டவுடன் உடனே முளைத்து விடுவதில்லை. அது முளைக்க சிறிது காலம் ஆகலாம், அது போல்தான் இதுவும். கணையாழி விதை போன்றது. அது இப்போது முளைத்திருக்கிறது" என்றார். தொடர்ந்து " கணையாழி என்றாலே அது கை மாறுவதுதான்" என்ற போது அரங்கம் அதிர்ந்தது. ஒவ்வொரு முறையும் அது நன்முறையில் மாறியிருக்கிறது" என்றார்.



நடிகர் நாசர் விழா துவங்கி அரைமணி நேரம் கழித்துதான் வந்தார். காலம்தாழ்த்தி வந்தமைக்கு மன்னிப்பு கேட்டுகொண்ட அவர், " போதுவாக நடிகர்கள் என்றாலே, விழா துவங்கி சிறிது நேரம் கழித்துதான் வருவார்கள் என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள். அப்படி தலைவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது வந்தால்..... என்ன சலசலப்பு நடக்கும், அதனால் என்ன நிகழும் என்பது நமக்கு தெரியும்....?! சரி... நாம் அதற்குள் போக வேண்டாம். நான் லேட்டாக வந்ததற்கு காரணம், சென்னையின் டிராபிக்தான்" என்றவர் தொடர்ந்து நனெல்லாம் 1983ல்தான் கதைகள் படிக்கத் தொடங்கினேன். பின்பு இலக்கியம் மீது அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதே கணையாழி இதழை கையில் வைத்துக் கொண்டுதான் திரிவேன்" என்றார். "இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து யாருக்கும் சொல்ல வில்லை, சொன்னால் அது அரசாங்கத்திற்கு எதிராக போய்விடுமோ என்பதால் சொல்லவில்லை " என்றபோது அரங்கம் கைத்தட்டளில் அதிர்ந்தது.





தசரா அறக்கட்டளை.  தமன் பிரகாஷ், சாமிநாதன், ராஜேந்திரன் எனும் மூவரின் முதல் எழுத்துக்களைக் கொண்ட 'தசரா' 1994 அக்டோபரில் கலை இலக்கிய மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட அமைப்பாகும். இதில் தமன் பிரகாஷ் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு மார்வாடி. அவர் அட்சரசுத்தமாக தமிழ் பேசியது காதுகளுக்கு இனிமையாக இருந்தது. இவர்களின் மூலதனம்தான் கணையாழியை மூண்டும் தமிழர்களின் விரல்களில் அணிவித்தது.

முன்னதாக நா. சுவாமிநாதன் வரவேற்புரையாற்ற, தமன் பிரகாஷ் முன்னிலை வகித்தார். விழாவில் ட்ராஸ்கி மருது, பாடலாசிரியர் நா.முத்துகுமார், ரெ.பாலகிருஷ்ணன்,கவிஞர் குட்டி ரேவதி போன்றோர் சிறப்புரையாற்றினார்கள். விழா முடிவில் கவிதா பதிப்பகம் சேது. சொக்கலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினர்.



கீழே


விழா அரங்கம் இளைஞர்களால் நிறைந்திருந்தது.


கணையாழி ஆண்டு சந்தா கட்ட நிறைய பேர் ஆர்வம் காட்டினார்கள்.


விழாவில் ஞானி, ஈரோடு தமிழன்பன் ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், கனித்தமிழ் ஆண்டோ பீட்டர் போன்றோரை பார்க்க முடிந்தது.


விழா தொடங்கும் முன்னர் அங்கிருந்த கேண்டினில் அனைவருக்கும் டீ, பிஸ்கட் தரப்பட்டது.


விழா ஏற்பாடுகளை கவிதா பதிப்பகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

















விழாத் துளிகள்!?

வியாழன், மார்ச் 31, 2011

மீண்டும் வருகிறது 'கணையாழி'

சிற்றிதழ்களில் முதன்மையானதும், இலக்கிய உலகின் லட்சினையுமான  'கணையாழி' மீண்டும் வெளிவருகிறது. சில வருடங்களுக்கு முன் சில பல காரணங்களால் வெளிவராமல் இருந்த 'கனையாழி' இதழ்; வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் மீண்டும் வெளிவரயிருக்கிறது.



தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் எம்.ராஜேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பபாசியின் தலைவர் சொக்கலிங்கம் அவர்களை (கவிதா பதிப்பகம்) பதிப்பாளராகக் கொண்டு கணையாழி இதழ் வெளிவருகிறது. இது கணையாழியின் நீண்ட நெடிய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.


சிற்றிதழ்களின் வாழ்வுக்காலம் குறுகியது எனும் நியதியைத் தகர்த்துப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெகுசில இதழ்களே வெளிவந்துகொண்டிருக்கின்றன. அத்தகைய இதழ்களில் முக்கியமானது: 'கணையாழி' மாத இதழ். செய்திகளையும், சுவையான பகுதிகளையும் தாங்கிய இதழாகப் தினமணியின் முன்னாள் ஆசிரியார் மற்றும் பத்திரிக்கையாளர் கி. கஸ்தூரிரங்கனால் டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965 இல் டெல்லியில் தொடங்கப்பட்டது



தொடக்க நாட்களில் இது புது தில்லி வட்டார அறிவிஜீவிகளுக்காக நடத்தபட்டதாக ஒரு கணிப்பு நிலவியது. பின்னர் சற்று விரிவடைந்து இலக்கிய தன்னுணர்வுகளைத் தூண்டியதாக சொல்லப்படுகின்றது. திஜானகிராமன், என்.எஸ். ஜெகநாதன், சுஜாதா, பாலகுமாரன்,அசோகமித்ரன், க.நா.பாலசுப்ரமணியன்,இந்திரா பார்த்தாசாரதி ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன.

.1965 லிருந்து 1970 வரை டெல்லித் தமிழர்களுக்காக அரசியலை முதன்மையாகப் படுத்திய செய்திப் பத்திரிகையில் உலக நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர் கட்டுரைகள். அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியன வெளியாகியது. 1970 லிருந்து 1975 வரை அரசியலுடன் புதுக் கவிதைகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது. சிறந்த கதைகள், நாடகங்கள், சமூகவியல் சிந்தனைகள் ஆகியவை இடம் பெறலாயின. 1975 லிருந்து 1980 வரை கதைகள் துணுக்குகளுக்கு முதன்மை தரப்பட்டது. அரசியல் செய்திகள் துணுக்குகளாக அளிக்கப்பட்டன. தொடர் கதைகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. 1980 முதல் 1985 வரை அரசியல் பெரும் பகுதி நீக்கப்பட்டு குறுநாவல்களின் ஆதிக்கம் தொடங்கியது.கதை கவிதைகளும் அதிகம் இடம் பெறத் தொடங்கின. கணையாழி, படிப்படியாகச் சில மாறுதல்களைப் பெற்றது.



1995 முதல் கி. கஸ்தூரிரங்கனால் தொடர்ந்து நடத்தப்பட்ட கணையாழி, நின்று போகக் கூடிய சூழலில் தசரா அறக்கட்டளை சிறிது காலம் பொறுப்பேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது. 'கணையாழி' 1965 முதல் 1991 வரை பெரிய வடிவிலும், 1991 ஜனவரி முதல் 1993 வரை டைஜஸ்ட் வடிவிலும் 1993 டிசம்பர் முதல் பழைய வடிவிலும் வெளிவந்தது.



நான்காவது இதழிலிருந்து அசோகமித்திரன் பொறுப்பாசிரியர் ஆக்கப்படார். 1968 செப்டம்பர் திங்கள் முதல் இந்திரா பார்த்தசாரதி ஆசிரியர் குழுவில் இணைந்தார். இது முதல் கல்வியாளர் தொடர்பும் பாதிப்பும் கணையாழியில் ஏற்பட்டது. 1972 ஆம் ஆண்டிலிருந்து கே. சினிவாசன் ஆசிரியர் குழுவில் இல்லை. இந்திராபார்த்தசாரதி போலந்தில் இருந்த காலத்தில் முழுக்க அசோகமித்திரன் பொறுப்பில் கணையாழி இருந்தது. 1987 பிப்ரவரி திங்களில் இந்திரா பார்த்தசாரதி மீண்டும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். 1988 ஜீன் திங்களில் அசோக மித்திரன் பொÚப்பிலிருந்து விலகிக்கொண்டார். ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர்களைப் பொறுத்துக் கணையாழியின் இலக்கியத்தன்மையில் ஏற்ற இறக்கம் இருந்திருக்கிறது. கணையாழியில் ஆசிரியர் பொப்றுபு மாறிமாறி அமைந்தால் ஒரு கலவைத் தன்மை பெற்றதாக இருந்தது .மாலன், மலர் மன்னன், இயக்குநர் ஜெயபாரதி, ஞாநி, அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரும் கணையாழிப் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆரம்ப காலத்தில் பத்திரிக்கையாளருக்கு பெரும் பங்கு இடமளித்த கணையாழி பிறகு எழுத்தாளருக்கு இடம் அளிக்கத் தொடங்கியது. திஜானகிராமன், அசோகமித்த்ரன் ஆகியோர் கணையாழியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வரும் 'கணையாழி' மீண்டும் வருவது நமக்கெல்லாம் மகிழிச்சியே....! கணையாழி இன்னும் பல காலங்களைக் கடந்து வாழ... தமிழன்வீதி வாழ்த்துகிறது!

 

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன...