கும்பகோணம் தஞ்சை சாலையில் இருக்கும் அய்யம்பேட்டையில் இருக்கிறது 'இத்தாலியன் பேக்கரி'. தஞ்சை போகும் வழியில் எதேச்சையாக காரை நிறுத்தி பப்ஸ் வாங்க... "வேற என்ன இருக்கு என்றேன்?".
"எங்க கடை ஸ்பெஷல் 'டீ காபி பிஸ்கட்' இருக்கு ட்ரை பண்ணி பாருங்க சார் " என்றார் அந்தக் கடையில் இருந்தவர்.
நீட்டு நீட்டாய் இருந்த பிஸ்கட்டை கொடுத்தார்.
வித்தியாசமான முறையில் மூன்று கைவிரல் சைசில், வரி வரியாக மொறு மொறு சுவையுடன் இருந்தது பிஸ்கட். 1957ல் அய்யாச்சாமியால் தொடங்கப்பட்ட இத்தாலியன் பேக்கரியை, தற்போது மூன்றாவது தலைமுறை நடத்தி வருகிறது. "எங்களது தாத்தாதான் இந்த பிஸ்கட்டை கண்டுபிடித்தார். இந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு இந்த பிஸ்கட்டை பற்றித் தெரியும்" என்றார் கடையில் இருந்த பேரன்.
அய்யம்பேட்டை 'டீ காபி பிஸ்கட்டை' இவர்கள் மொத்தமாய் செய்து விற்பதில்லை. அன்னனைக்கு செய்துதான் விற்கிறார்கள். 'இது எப்படி தெரியும்' என்று கேட்கிறீர்களா...?
இரவு பத்தரை மணிக்கு திரும்பி வரும்போது கடை திறந்து இருந்தது. காரை நிறுத்தி பிஸ்கட் கேட்கும் போதுதான் அவர் சொன்னார் "சொல்லியிருந்தா எடுத்து வச்சிருப்போமே சார்" என்று.
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கர கர மொறு மொறு கிரவுன்ச் !'அய்யம்பேட்டை டீ காபி பிஸ்கட்' அறிமுகப்படுத்தப்படவேண்டிய ஒன்று!.
அந்தப் பக்கம் போனால் வாங்கி சாப்பிட்டுப்பாருங்க!.
கால் கிலோ ரூ.40/-
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கர கர மொறு மொறு கிரவுன்ச் !'அய்யம்பேட்டை டீ காபி பிஸ்கட்' அறிமுகப்படுத்தப்படவேண்டிய ஒன்று!.
அந்தப் பக்கம் போனால் வாங்கி சாப்பிட்டுப்பாருங்க!.
கால் கிலோ ரூ.40/-