ஞாயிறு, டிசம்பர் 27, 2009

"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்"


பொதுவாக நான் திரைப்படங்களை அதிகம் பார்ப்பதில்லை. தேர்ந்தெடுக்கப் பட்ட திரைப்படங்களையே பார்க்கும் வழக்கமுள்ளவன். வருடத்திற்கு 4 அல்லது 5 படம் பார்த்தாலே பெரிய விஷயம். அப்படி சமிபத்தில் பார்த்த படம்

'அவதார்'. (சென்னை சத்தியத்தில் டிக்கெட் வாங்கியது தனி கதை)


300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்காவது இடத்தை இப்போது பிடித்திருக்கிறது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான ஸ்டீபன் ஸ்பில்பேர்க், மைக்கல் பே,ரோலண்ட் எம்ரிச் வரிசையில் டைட்டானிக்,ஏலியன்ஸ், டேர்மினேட்டர் ஆகிய படங்களை இயக்கிய கனடியன் இயக்குநரான ஜேம்ஸ் கமரூனின் திரைக்கதையிலும் இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட படமே இந்த 'அவதார். 'இப்படத்தில் முப்பரிமாண தோற்றத்தில் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களைக் கவரும் நோக்குடன் எடுக்கப்பட்டிருப்பதுடன் படத்தின் கதையும் மிகுந்த சுவாரசியமாக இருப்பது இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்.

22ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பூமியிலுள்ள எரிபொருள் உட்பட கணிய வளங்கள் யாவும் தீர்ந்து விடுவதன் காரணமாக விண்வெளியில் இருக்கும் பண்டோரா எனும் கிரகத்தை முற்றுகையிட வேண்டிய தேவைக்கு மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள். ஸ்பான்சர்கள் மூலமாக (அங்கேயுமா?) படைபலத்துடன் பண்டோரா கிரகத்திற்கு செல்கிறார்கள்.
ஆனால் அங்கு வாழும் நவி எனும் மனித இனத்திலிருந்து திரிபு பட்ட ஆனால் புத்திசாலித்தனமும் நீண்ட வாலும் மிகுந்த போர்த்திறனும் மிக்க நீல நிற மனிதர்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு ஏற்படுகின்றது. நவிக்கள் 10 அடி உயரம் உடையவர்கள். கதையின் நாயகனாக வரும் ஜேக் ஒரு கடற்படை வீரர். போரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே உடல் செயல் இழந்த நிலையில் இருக்கிறார். அவர் மீண்டும் எழும்பி நடந்து(?) பண்டோராவுக்குப் போகும் வாய்ப்பு வருகிறது. ஆனால் பண்டோரா கிரகத்தில் மனிதனால் சுவாசிக்க முடியாது என்பதால் அந்தக் கிரகத்துக்குப் போக நவிகளைப் போல ஆய்வுக் கூடத்தில் மனிதர்களை உருவாக்க வேண்டும்.

அப்படி மனிதர்களின் டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கப்படும் நவி போன்ற நீல நிற மனிதர்கள் தான் அவதார் என அழைக்கப் படுபவர்கள். ஊனமுற்ற ஜேக் தனது அவதார் உருவத்தின் மூலமாக (மறு முனையில் அவர் தூக்கத்தில் இருப்பார் !?) பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் மெய் மறக்கிறார். கூடவே அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதலிலும் சிக்கிக் கொள்கிறார். பண்டோராவில் மனிதர்களின் தலையிடலை நவிகள் விரும்பவில்லை. இதனால் ஜேக் தன் இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இனமான நவிகளுக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார். அவர் எந்தப் பக்கம் சாய்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதே படத்தின் கதைக் கருவாகும்.

உண்மையில் இதுவும் ஒரு விடுதலை போரட்ட படம்தான். பூமியில் மனிதன் பிறறது இடங்களை ஆக்கிரமித்தது போக... இப்பொது வெளி கிரகத்தையும் ஆக்ரமிக்கும் காலம் வந்து விட்டதையே இந்த அவதார் படம் உணர்த்துகிறது.

இலங்கையின் பூர்வீக குடிகளான ஈழத் தமிழர்களை, எப்படி வந்தேறிகளான சிங்களவன் வளைத்து பிடித்து கொன்று வருகின்றானோ அதைப் போலவே, பூமியிலிருந்து சென்ற மனிதர்களும் அங்குள்ள பூர்வீக குடிகளான நவிகளை ஆக்கிரமித்து அவர்களின் வளங்களை கொள்ளை அடிக்க முயல்கிறார்கள். அனால், மனித இனத்திலிருந்து நவியாக மாறிய கதாநாயகன், அந்த நவி இனத்தையே காப்பாற்றுகிறான்.

அது! ஒரு பெறும் விடுதலைப் போராட்டம்.

மனிதர்கள் தாங்கள் கண்டுப்பிடித்த மனித அழிப்பு ஆயுதங்களைக் கொண்டு நவிக்களை அழிக்கிறார்கள். அவர்களின் குடியிருப்புகளைச் சின்னா பின்னமாக்குகிறார்கள். தங்கள் குழந்தைகளையும், வயதானவர்களையும் தூக்கிக் கொண்டு நவிக்கள் இடம் பெயருகிறார்கள். துன்பத்தின் வாசலில் அவர்கள் தோரணம் கட்டி துயரம் சுமந்த போது... ஈழத் தமிழா உன் ஞாபகம் தான் எனக்கு வந்தது.

சிங்களவனும் அப்படித்தானே செய்தான். சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தாங்களிடம் பெற்ற ஆயுதங்களை ஈழத்தமிழர்களை எதிராகத்தானே பயன்படுத்தினான். உறவுகளை அழித்து மிஞ்சிஉள்ளவர்களை முள்வேலியில் தானே அடைத்து வைத்திருக்கிறான்.

உணர்வால் மனிதனாக இருந்துக் கொண்டு உருவத்தால் நவியாக மாறிய கதாநாயகன், அவர்களுக்காக போராடுகிறான் என்றால், ஒரு இனத்தின் விடுதலை என்பது எத்தனை தியாகம் வாய்ந்தது, எத்தனை வீரம் மிக்கது என்பதை இந்த உலகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

கதாநாயகன் -ஜேக் தங்களுக்கு எதிராக திரும்பிவிட்டன் என்று தெரிந்த ஆக்கிரமிப்புகாரர்கள் ஜேக்கைக் கொல்ல படையொடு வருகின்றனர். போர் உக்கிரம் அடைந்து வரும் வேளையில், சுந்திரப் போரை தொடர்ந்து நடத்த ஜோக் ஒர் ஒப்பற்ற தியாகம் செய்கிறான். மனித உடலிலிரிந்து நவியாக மாறுகிறான். இனி என்ன செய்தாலும் ஜோக்கால் மனிதனாக மாறமுடியாது. அப்படி இருந்தும் அந்த தியாகத்தை ஜோக் செய்கிறான்.

சுதந்திரப் போராட்டம் என்பது எத்தகைய சக்தி வாய்ந்தது!. அதற்கு இடம், இனம் தேவையில்லை. மனம் இருந்தால் போதும்.

அந்த-அந்த இனத்தில் இருந்து வந்தவன் தான் அந்த இனத்திற்காக போராட வேண்டும் என்பது இல்லை. சக மனித இனத்தின் துயரை துடைக்க, அவன் எங்கிருந்து வேண்டுமானலும் வரலாம். எங்கிருந்து வேண்டுமானலும் குரல் கொடுக்கலாம். உலகம் சுருங்கி விட்ட வேளையில் உங்கள் ஆதரவு ஈழத்தமிழன் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்

ஓ... உலக மக்களே! இனியாவது ஈழத் தமிழனின் விடுதலைக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் சிங்களவனின் குரல்வளையை நெறிக்கட்டும். யாம் இழந்த குருதிக்கு நீதி கிடைக்கட்டும்.

நீதி வெள்ளட்டும்.

தமிழ் ஈழம் மலரட்டும்.

ஞாயிறு, டிசம்பர் 13, 2009

மாலை பொழுதின் மயக்கத்திலே...சேர்ந்தவருக்கு இன்பத்தையும், பிரிந்தவருக்குத் துன்பத்தையும் தரவல்ல மாலை பொழுதினை, நம் தமிழ் இலக்கியங்களில் என்ன ஒரு அழகியலோடு விவரிக்கிறார்கள் பாருங்கள்...!

மாலைப் பொழுது வந்தாலே மங்கையர் மனமும் உடலும் வாடும், பசலை நோய் படர்ந்த நிலையில் அவர்தம் மேனியெல்லாம் ஒருவித மாற்றத்தைக் காணும். திருமணமான பெண்டிர்களின் உயிரை உண்ணும் வேலையைச் செய்யவே இந்த மாலைப் பொழுது வருவதாக வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

"மாலையே அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது"

**********************************************************கலித்தொகையில் ஒரு காட்சி.

தம் தலைவனைப் பிரிந்த தலைவி; மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி, தோழிக்கு உரைக்கிறாள். காலையில் பகற்பொழுது காலத்தைக் கக்கி, மாலையில் மீண்டும் அதை விழுங்குகிறான். அதனால் கதிர்கள் சுருங்கி, கதிரவன் மலைவாயில் மறைந்துள்ளான். காரிருள்படர்கிறது. கார்மேக வண்ணனின் மேனி நிறைந்தது போல் வெண்ணிலவு தோன்றுகிறது. தாமரை மலர்களோ உறங்குவதுபோல் கண்மூடிக் கிடக்கின்றன, தம் புகழைத் தாமே கேட்ட பெரியார் தலை தாழ்த்தி நிறப்பதைப் போல மரங்கள் கிளை தாழ்ந்து தூயில்கின்றன.

குழலின் ஓசைபோல வண்டுகள் ஒலிக்கின்றன. தம் பார்ப்புகளை நினைத்துத் தாய்ப்பறவைகள் பறக்கின்றன. கன்றுகளை நினைத்துக் கறவைப் பசுக்கள் தம்கொட்டகைகுச் செல்கின்றன. விலங்கினங்களோ தம் வாழ்விடங்களுக்கு நோக்கி விரைகின்றன. செந்தீ வளர்த்த அந்தணர், அந்திப் பொழுதை வழிபடுகின்றனர்.

இப்படி அனைத்து உயிர்களும் மாலை நேரம் வந்தால் வீடு திரும்புகின்றனர். மணந்த, மனம் கவர்ந்த தலைவனோ மாளிகை திரும்பவில்லை. "தன் உயிரே போய்விடும் போலிருக்கிறதே" என்று தலைவி பின்வறுமாறு வருந்தி கூறுகிறாள்.

அகன்ஞாலம் விளக்கும்தன் பல்கதிர் வாயகப்
பகல்நுங்கி யதுபோலப் படுசுடர் கல்சேர
இகல்மிகு நேமியான் நிறம்போல் இருள்இரவ,
நிலவுக்காண் பதுபோல அணிமதி ஏர்தரக்
கண்பாயல் பெற்றபோல் கணைக்கால மலர்கூம்பத்
தம்புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து மரம்துஞ்ச,
முறுவல்கொள் பாவைபோல முகைஅவிழ்பு புதல்நந்தச்
சிறுவெதிர்ங் குழல்போலச் சுரும்புஇமிர்ந்து இம்மெனப்
பறவைதம் பார்ப்புஉள்ளக் கறவைதம் பதிவயின்
கன்றுஅமர் விருப்பொடு மன்றுநிரை புகுதர
மாவதி சேர மாலை வாள்கொள்
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந்தீச் செவ்வழல் தொடங்க-வந்ததை
வால்இழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்
மாலை என்மனார் மயங்கி யோரே
(நெய்தற்கலி)
-கலித்தொகை

சனி, நவம்பர் 28, 2009

தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்காக ஓர் ஆண்டில் ரூ.31 கோடி செலவு.

தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்காக ஓர் ஆண்டில் ரூ.31 கோடி செலவு.

என்ன செய்தியைப் படித்ததும் பக்குன்னு இருக்கா...?
இந்தியாவிற்குள் புகுந்து பல உயிர்களைப் பலிக்கொண்ட ஒரு தீவிரவாதிக்கு ஒரு ஆண்டில் முப்ப்ப்ப்பபப...................து கோடி செலவாம்?

இந்திய இரையாண்மையை கட்டிக் காக்கும் உங்களுக்கும் எனக்கும் இந்த அரசு செய்யும் செலவு என்ன.....?மும்பையில் உலகம் கலங்க நடத்தப் பட்ட ஒரு தாக்குதலுக்கு ஆமை வேகத்தில் ஒரு விசாரணை. ஒரு வருடம் கடந்துவிட்டது. இது வரை கசாப் விசாரணையில் எந்தவித முன்னேற்றுமும் இல்லை. அஜ்மல் கசாப்புதான் தினமும் மட்டன் பிரியாணியும், தந்தூரி சிக்கனும் சாப்பிட்டு இந்தியா வந்ததற்கான பலனை முழுமையாக அனுபவித்து வருகிறான். அந்த காலத்தில் முகளாய அரசர்கள் இந்தியா மீது படையெடுத்து தின்றதைப் போல...

அஜ்மல் காசப்புக்கு மராட்டிய அரசு (இல்லையென்றால் ராஜ் தாக்கரே கோபித்துக் கொள்வார்) தினமும் 8 1/2 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது.

மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு, இந்தியா ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் அங்கிருந்து ஒரு கடிதம் அனுப்புவார்கள். 'எங்களுக்கும் மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று. உடனே இந்தியா ஒரு கடிதத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பும் "பாகிஸ்தான் பொய் சொல்கிறது" என்று. இப்படித்தான் இந்த ஒரு வருடத்தையும் ஓட்டியது இந்திய அரசு. இன்னும் ஓட்டும்...!


ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் இருக்கும் கசாப்புக்கு உயர்தர சிகிக்சை, அங்கேயே ஒரு சிறப்பு நீதி மன்றம், அவனுக்கு ஏவல் செய்ய அரசு அதிகாரிகளின் கூட்டம்,அவன் முகம் சுளிக்காமல் இருக்க சுவையான அசைவ உணவு வகைகள் என்று ஒரு அரசு விருந்தினன் போன்றுதான் தனது வாழ் நாளை கழித்து வருகிறான்.

அதோடு, ஆர்தர் ரோடு சிறை வளாகத்தில் கசாப்புக்காக கூடுதல் பாதுகாப்புடன் கூடிய தனி அறை கட்டப்பட்டு உள்ளது. லாரி நிறைய வெடி குண்டுகளை ஏற்றிச் சென்று மோதினாலும் சேதம் அடையாத வகையில் இந்த அறை கட்டப்பட்டு வருகிறது.

இதேபோல், கசாப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜே.ஜே மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் தனி அறை கட்டப்பட்டு உள்ளது.

இதுதவிர அஜ்மல் கசாப்புக்காக வாதடும் அரசு வக்கீல் மற்றும் பிற வக்கீல்களுக்கு கட்டணமாக கணிசமான ஒரு தொகை செலவிடப்
படுகிறது!

என்ன...இப்பவே கண்ண கட்டுதா.....?

164 பேர் பலியாக காரணமாக இருந்த ஒரு கொலைகாரர்களில் ஒருவனுக்கு எதற்காக இத்தகைய சலுகைகள். அவனிடமிருந்து நாம் இன்னும் என்ன எதிர்ப்பார்கிறோம். அஜ்மல் கசாப் பாகிஸ்தானின் பரீத்கோட் என்ற இடத்தைச் சேர்ந்தவன் என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனியாக' தெரியும் போது இன்னும் ஏன் விசாரணையை நீட்டிக்க வேண்டும்.


அஜ்மல் காசப்பை பாதுகாத்து என்ன செய்யப் போகிறது இந்திய அரசு. சீனவின் துணை கொண்டு இந்தியாவில் சமுக சீரழிவை செய்துவருகிறது பாகிஸ்தான். கொள்கை அளவிலும், இராணுவ ரீதியாகவும் இரு நாடுகளும் இந்தியாவை எதிரி நாடாகத்தான் பார்க்கிறது. இலங்கைக்கும், பகிஸ்தானுக்கும் ஆயுதங்களை வழங்கி இந்தியாவை பதம் பார்க்கத் துடிக்கிறது சீனா.

இந்தியாவில் நடத்தப் படும் பல்வேறு தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் பங்குண்டு. மும்மை தாக்குதலும் பாகிஸ்தான் பிரஜைகளால் தான் நடத்தப் பட்டது என்று ஒரு சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானும் ஒத்துக் கொண்டது.

இன்னிலையில் கசாப்பை பாதுகாப்பதால் யாருக்கு என்ன லாபம்? அஜ்மல் கசாப்பை கொலை செய்தால் யாருக்கு நழ்டம்? அஜ்மல் கசாப்புக்கு கொடுரமான முறையில் தூக்குத்தண்டனை வழங்கினால் தான் இந்தியவிற்கு எதிரான சதிகளை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும்.

இப்படி விசாரனையை நீட்டிக்க....நீட்டிக்க..... ஒரு நாள் அஜ்மல் கசாப் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, சிறைச்சாலையிலிருந்து மலர் மாலைகள், மேளத்தாளத்துடன் பாகிஸ்தானியர் புடை சூழ வெளியில் வருவான்.

வெள்ளி, நவம்பர் 06, 2009

‘சீன நலனை முன்னெடுக்கிறார் இந்து ராம்’


ஈழ விடுதலைக்கு எதிராகவும், ராஜபக்சேவி்ற்கு ஆதரவாகவும், அதே நேரத்தில் திபெத்தியர்களின் போராட்டத்திற்கு எதிராகவும் தனது நாளிதழில் செய்திகளையும், கட்டுரைகளையும் தீட்டும் தி இந்து நாளேட்டின் ஆசிரியர் என். ராம், சீன நாட்டின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறார் என்று மே 17 இயக்கம் நடத்திய கருத்தரங்கில் குற்றம் சாற்றப்பட்டது.

‘தி இந்து நாளிதழும், அதன் ஆசிரியர் என்.ராமும் வாசகர்களை ஏமாற்றுவது ஏன், ஊடகங்களின் பொறுப்பு’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை சென்னை தியாகராயர் நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள தேவநாயகம் பள்ளியில் மே 17 இயக்கம் கருத்தரங்கத்தை நடத்தியது.

தமிழர்கள், ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் உண்மையை மறைத்து எப்படியெல்லாம் தி இந்து கட்டுரை எழுதியது என்பதை இந்தக் கருத்தரங்கில் பேசிய ஒவ்வொருவரும் ஆதாரத்துடன் எடுத்துரைத்தனர்.

இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த ஜி. திருமுருகன், இந்தியாவை நேசித்த ஈழத் தமிழர்கள் சிறிலங்க இனவெறி அரசால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதனால், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் கடற்பகுதி இந்தியாவிற்கு எதிரான சீனா போன்ற சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் உதவியைப் பெற்று ஒழித்த சீனா, தென்னிலங்கையில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிற்குத் தாரை வார்த்து, அதனை நன்கு காலூன்ற இடமளித்துவிட்டது. இது மட்டுமின்றி, இலங்கையின் மற்ற இடங்களிலும் சீனா பலமாகக் காலூன்றி வருகிறது” என்று கூறிய திருமுருகன், சீனா அமைத்துள்ள தளத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு உட்பட்டுத்தான் கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளது என்று கூறினார்.

இந்தியா, சீனா எல்லைப் பிரச்சனையில் சீனத்தின் பக்கம் சார்ந்த தி இந்து எழுதி வருகிறது என்று குற்றம் சாற்றிய திருமுருகன், இந்தியாவை 20, 30 துண்டுகளாக உடைக்க வேண்டும் என்று சீனத்தின் சர்வதேச இராணுவ ஆய்வு மையம் தனது இணையத்தளத்தில் எழுதியபோது அது குறித்து தி இந்து எந்தணச் செய்தியையும் வெளியிடாதது மட்டுமின்றி, அதுகுறித்து சீனா அரசு கருத்தேதும் கூறாத நிலையில், அதனை ‘அதிகப்படியான கருத்துக் கூறல்’ என்று கூறி தி இந்து அதனை சாதாரணமாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டினார்.

தி இந்து நாளேடு தொடர்ந்து ஆதரித்து எழுதிவந்த சிறிலங்க அரசு தனது நாட்டு மக்கள் மீதே தொடுத்தப் போரில் எப்படிப்பட்ட போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது என்பதை அமெரிக்க அயலுறவு அமைச்சகம் தயாரித்த அறிக்கையை மேற்கோள் காட்டி விவரித்தார் இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் எம். சுப்ரமணியம்.

மனிதாபிமானமும், உண்மை கூறல் வேண்டு்ம் என்ற நேர்மை சற்றும் இன்றி எவ்வாறு ஒவ்வொரு பிரச்சனையிலும் தி இந்து நாளிதழ் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டது என்பதை தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் ஆசிரியர் கா.அய்யநாதன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

உலகமே அதிர்ச்சியுற்ற செஞ்சோலைப் படுகொலையை கண்டுக்காதது, போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் போராடியபோது அதனை தமிழ் வெறித்தனம் என்று சித்தரித்தது, பாலஸ்தீன விடுதலைப் போரையும், ஹமாஸ் இயகத்தையும் சரியாக தனது செய்திகளில் குறிப்பிட்ட அதே நேரத்தில், ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து உண்மையை மறைத்து எழுதி வந்தததையும் எடுத்துக்காட்டிய அய்யநாதன், கச்சத் தீவுப் பிரச்சனையில் எப்படியெல்லாம் உண்மையை மறைத்து, தமிழ் மீனவர் நலனை கேவலப்படுத்தி எழுதியது தி இந்து என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தினார்.

இறுதியாக உரையாற்றிய திபெத் விடுதலைப் போராளி டென்சிங், இந்தியாவின் பாதுகாப்பிற்கும், நலனிற்கும் திபெத் விடுதலைப் பெறுவதன் அவசியத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்புடைய திபெத்தும், அதன் மக்களும் இந்தியாவின் இயற்கையான நண்பர்களாக வரலாற்றுக் காலத்திலிருந்து திகழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.

இந்தியாவை வளப்படுத்தும் ஜீவ நதிகளான கங்கை, யமுனை, பிரம்புத்திரா ஆகியன திபெத்தில் உருவாவது மட்டுமின்றி, இந்துக்கள் மிகப் புனிதமான இடமாக கருதும் கைலாயமும், மானசரோவர் நதியும் திபெத்தில் உள்ளதையும், ஆனால் திபெத் சீனத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அங்கு இந்தியர்கள் அனைவரும் சென்றுவர முடியாத நிலை உள்ளது என்றும் கூறினார்.

இந்தியாவின் தெற்கிலுள்ள ஈழத்து விடுதலைப் போராட்டமும், வடக்கில் உள்ள திபெத்தின் விடுதலைப் போராட்டமும் ஒன்றிணைவது காலத்தின் அவசியம் என்றும் டென்சிங் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தி இந்து நாளிதழின் உண்மைக்குப் புறம்பான போக்கை விமர்சித்து பத்திரிக்கையாளர்களும், வரலாற்றாளர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘பத்திரிக்கை அறமும் இந்து என்.ராமும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தை முதுபெரும் பத்திரிக்கையாளரும், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலருமான விடுதலை இராசேந்திரன் வெளியிட, அதனை டென்சிங் பெற்றுக் கொண்டார்.
www.tamilwebdunia.com
நன்றி வெப்துனியா.காம்

சனி, அக்டோபர் 31, 2009

இந்த முறை முன்கூட்டியே வருகிறது சென்னை புத்தகக் காட்சி

வருடம் தோறும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி பொங்கல் விடுமுறை வரை நடைபெறும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய புத்தகக் காட்சியாக விளங்கும் 'சென்னை புத்தகக் காட்சி' இந்த முறை டிசம்பர் இறுதி வாரத்தில் தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைப் பெற்றது. சங்கத்தின் தலைவராக கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம், செயலாளராக லெட்சுமணன் (உமா பதிப்பகம்), பொருளாளராக யுனிவர்சல் பதிப்பகத்தின் ஷாஜகான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை தலைவர்களாக சண்முகம் (செண்பகா பதிப்பகம்) , சுப்பிரமணியன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.


கடந்த இரண்டு வருடமாக அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்று வரும் சென்னை புத்தகக் காட்சி, இந்த முறை பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் டிசம்பர் முப்பதில் தொடங்கி ஜனவரி பத்தாம் தேதி வரை இப் பள்ளி வளாகத்தில் நடை பெறுகிறது. இதனால் பொங்கல் விடுமுறைக்கு முன்பே புத்தகக் காட்சி முடிந்து விடும், என்பது சற்று வருத்தமான செய்தி

பெருவாரியான புத்தகப் பிரியர்களும், பொது மக்களும் புத்தகக் காட்சியை பார்ப்பதற்கும், புத்தகம் வாங்குவதற்கும் இந்த பொங்கல் விடுமுறையைதான் பயன்படுத்திக் கொள்வர். அப்படி இருக்க அந்த விடுமுறை தினத்திற்கு முன்பே சென்னை புத்தக் காட்சியை முடிப்பதேன்பது பொது மக்களின் புத்தகம் வாங்கும் ஆர்வத்திருக்கு தடையாக இருக்கும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், சென்னை புத்தக காட்சியை பொங்கல் விடுமுறை வரை நீட்டிக்க வேண்டும் என்பது பெருவாரியான புத்தகப் பிரியர்களின் கருத்து.

செய்வார்களா....?

சனி, அக்டோபர் 24, 2009

திருமா செய்த தவறு...


'பாதகனை கண்டால் பழி வந்து சேரும்' இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ.... கண்டிப்பாக திருமாவளவனுக்கு பொருந்தும்.


இலங்கை சென்ற தமிழக எம்.பிகள் குழுவில் திருமா செல்லாமல் தவிர்த்து இருக்கவேண்டும். லட்சக் கணக்கான தமிழர்களை கொன்ற, அவர்களின் உறவுகளை பிரித்து அவர்களின் வாழ்வை சிதைத்த கொடுங்கோலன் ராஜபக்ஷேவை தமிழக எம்பிகள் சந்தித்ததே தவறு.


அவனை பார்த்தால் கை குலுக்க வேண்டும், சால்வை போர்த்த வேண்டும், சிரித்து பேசவேண்டும் என்பன போன்ற பல இடர் பாடுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிந்தே இந்த குழுவினர் எப்படி அங்கு சென்றனர்?


டி.ஆர்பாலு, அழகிரி,விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், ஆருன், ஹெலன் டேவிட்சன் போன்றோரை விட கனிமொழியும், திருமாவளவனும் தீவிர தமிழ் பற்றாளார் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒன்று. அங்கே சென்றால் அந்த நாயிடம் கை குலுக்க வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியாதா?


கனிமொழி, கலைஞர் சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டு. அனால், திருமாவுக்கு எங்கே போனது புத்தி. மிகப் பெரிய சமுக மாற்றங்களை முன்னெடுத்து செல்லும் போராளியான திருமாவளவன், எது நல்லது எது கேட்டது என்பதை சீர் துக்கிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.


காங்கிரஸ் நடத்திய இந்த நாடகத்திற்கு திருமாவும், தெரிந்தோ தெரியாமலயோ அரிதாரம் பூசிவிட்டார். அங்கு உள்ள தமிழர் முகாம்கள் , 'உலக துயரத்தின் வெளிப்பாடாக' இருக்கிறது என்று திருமா சொல்லப் போக... அது காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்து உள்ளது என்கின்றனர். விஷயம் தெரிந்தவர்கள்.


இதனால்தான் தி.மு.க. மத்திய அமைச்சர் ராஜாவின் துறையில் மத்திய புலனாய்வு துறை 'செப்க்ட்றோம் ஒதுக்கீடு' தொடர்பாக விசாரணை மேர்க்கொண்டுள்ளது. இது ஆளும் தி.மு.க. அரசை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.


தி.மு.க.கூட்டணியில் உள்ள திருமாவளவன், இலங்கயில் உள்ள அகதிகள் முகாமின் அவல நிலையை கூட்டம் போட்டு எடுத்து சொல்லியதும், ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கூறியதையும் தி.மு.கவும், காங்கிரசும் விரும்பவில்லை.


இதற்கிடையே இலங்கை சென்றது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க, பிரதமரைப் சந்திக்கச் சென்ற எம்.பிகள் குழுவில் திருமா இடம்பெயரவில்லை. தி.மு.க. தலைமை, தற்போது திருமாவளவனை தவிர்த்து வருகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.


இது கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றத்தான் இந்த நடவடிக்கை என்கின்றனர் வி.சிகள்.


இதற்கிடையே, "நீங்களும் பிரபாகரனோடு இருந்திருந்தால் உங்களையும் கொன்று இருப்பேன்' என்று திருமாவளவனைப் பார்த்து ராஜபக்ஷே சொன்னதாக ஊடகங்களில் செய்திவந்துள்ளது. இதை மறுத்துள்ள திருமா, ' ராசபக்ஷி நகைசசுவை' யாகத்தான் சொன்னார் என்று எரியும் தீயில் நெய்யை ஊற்றிவுள்ளார். இது தற்போது வலை தளங்களில் பற்றி எரிந்துக் கொண்டு இருக்கிறது. பலரும் திருமாவை 'குருமா' வைத்து வருகின்றனர்.


எது எப்படியோ....'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' யாகிவிட்டார் திருமாவளவன்.

புதன், அக்டோபர் 21, 2009

23 செர்மனியில் தமிழ் இணைய மாநாடு

தமிழ் இணைய மாநாடு வரும் அக்டோபர் இருபத்தி மூன்றாம் தேதி செர்மனியில் நடை பெற இருக்கிறது.

இந்த மாநாட்டில் தமிழ் தகவல் தொழில் நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள் . வல்லுனர்கள் கூடி விவாதிக்க உள்ளனர்.

செர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடக்கும் இந்த மாநாடு, முதன் முறையாக ஐரோப்பா கண்டத்தில் நடைபுருவது குறிப்பிடத்தக்கது

'கணி வழி காண்போம் தமிழ் என்பதே இந்த மாநாட்டின் மையக் கருத்தாகும். அதாவது அனைவரும் தமிழில் கணியியை பயன்படுத்தவும் இணைய வழி கல்வி கற்க வகை செய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்' என்று சுவிசர் லாண்டில் வசிக்கும் உத்தமம் அமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழா அரசு சார்பில் அண்ணா பலகலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மு. ஆனந்த கிருஷ்ணன் கலந்து கொள்கிறார். மேலும் கணித் தமிழ் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர், தமிழ் இணையம் பல்கலைக் கழக இயக்குனர் நக்கீரன் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவிலிருந்து கலந்து கொள்கின்றனர்.

செவ்வாய், அக்டோபர் 06, 2009

'விடுங்க பாஸு, இவிங்க எப்பவும் இப்படித்தான்'


தினமணியில் வந்த மதியின் கார்ட்டூன்...

"உண்மையைச் சொல்வதென்றால்
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல்
ஒரே கூட்டணியில் இருந்தால், எங்கள் தலைவருக்கு தலைவலி, தலைசுற்றல், மயக்கம், குமட்டல், வாந்தி, (பேதி)... இதெல்லாம் வருகிறது! இதுதான் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு காரணம்...! "


-இதுக்கு நான் வேற கருத்துச் சொல்லனுமாக்கும்....!

ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

இலங்கை தமிழர்களை இந்து மதமாவது காக்கட்டும் !

தண்ணிரிலும் கண்ணிரிலும் இலங்கை தமிழர்கள்.

இலங்கையில் தமிழர்கள் முள் வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து தில்லியில் இலங்கைத் தூதரக அலுவலகத்தை இந்து அமைப்புகள் கடந்த திங்கள் (21/09/09) அன்று முற்றுகையிட்டனர்.

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைப்பெற்ற இப் போராட்டத்தில் 14 இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமை நசுக்கப்படுவதையும், தமிழர்களின் இந்து கோவில்கள் புத்த விகாராக மாற்றப்படுவதையும் கண்டித்து மனு ஒன்றை குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளனர்.

இக் கூட்டத்தில் இலங்கை தமிழர்கள் பற்றி விவாதிக்கப் பட்டது. உள் நாட்டிளும், வெளி நாடுகளிலும் பாதிக்கப்படும் இந்துக்களையும் காப்பாற்ற வலியுறுத்தியும் இலங்கையில் இந்து விரோத நடவடிக்கைகளையும் தடுக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், பொதுச் செயலாளர் அர்ஜுன் சம்பத், கொளரவத் தலைவர் தவன் போஸ் போன்றோர் கலந்துக் கொண்டனர்.

இது வரவேற்கவேண்டிய ஒன்று. இந்தியர்கள்; தமிழர்களை தமிழர்களாகா மட்டும் பார்க்காமல் இந்துவாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். என்னுடைய கோரிக்கையும் அதுதான், இலங்கை தமிழர்களை இந்துவாகக் கருதியாவது அவர்களை காப்பாற்றுங்கள். தமிழுக்கும் இந்து மதத்திற்கும் பல் வேறு நல்லது செய்தவர்கள் இலங்கை தமிழர்கள்.

இந்து மதத்தின்பால் பற்று, ஒழுக்க நெறியான வாழ்க்கை, தர்ம நெறிகள் என்று உயர்ந்த எண்ணங்களோடு செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள் இலங்கை தமிழர்கள்.

தலைவர் பிரபாகரன், தமிழர்கள் உயர்பண்புகள் என்று போற்றிப் பாதுகாத்த முக்கியமான எல்லா பண்புகளையும் கொண்டவர். ஒழுக்கமான வாழ்க்கை கொண்டவர்; கொண்ட கொள்கைக்காக உயிரைவிடவும் தயாராக இருந்தவர். அரசியல் தந்திரம் என்ற பெயரில் காட்டிக் கொடுக்காதவர், பொய் பேசாதவர், நாடகம்போடாதவர், மக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்தவர்; தன் இலட்சியத்துக்காகத் தன் குடும்பத்தையும் இணைத்தவர்; தியாகத்துக்குத் தயங்காதவர்; எதிரிகளை அழிப்பதில் தயை தாட்சண்யமில்லாதவர். வீரமிக்கவர்.

சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பு உண்டு என்று ஜார்ஜ் ஹார்ட் ‘அணங்கு’ என்ற சொல்லை விளக்குவார்; அதாவது ஒரு தெய்வத் தன்மை தமிழர்களின் நிலம், இயற்கை, சிந்தனைசார்ந்து நின்றது என்றும் அதுதான் அணங்குக் கோட்பாடு என்றும் ஜார்ஜ்ஹார்ட் கூறுவார்.

முருகவணக்கம் தமிழகத்தைவிட ஈழத்தில் அதிகம். சைவத்தத்துவமும் அப்படித்தான்; இவை வீரம் சார்ந்த வழிபாடுகள். பிரபாகரன் காட்டிய வீரம் தமிழ்க்குடிக்கு அகில உலகப் பெருமையைத்தரும் முறையில் விளங்கிக் கொள்ள வேண்டிய ஒன்று. உலகில் சிறுசிறு மக்கள் கூட்டங்கள் தங்களுக்கான நாட்டை உருவாக்குவது சர்வசாதாரணம். அண்ணா அவர்கள் சங்க இலக்கியத்தை தனது அறிவுத்தோற்றவியலின் (Epistemology) அடிப்படையாக வைத்தார். சங்க இலக்கியத்தில் ஒன்றான புறநானூறு முதன்முதலில் அச்சானது 1894. அன்றிலிருந்து தமிழர்களுடைய வீரம் தமிழ்க் குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டு வருகிறது. எந்தப் பாடநூலிலும் தமிழர்களுடைய வீரம் பற்றிய செய்தி இல்லாமலில்லை


இன்று 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்பது இலங்கையில் அவதிப் படும் தமிழர்களின் நிலை. உலகம் அவர்களை கைவிட்டுவிட்டது, இங்கு உல்ல தமிழர்கள் போராடி ஓய்ந்து விட்டார்கள். இந்திய அரசு எல்லா கொடுமைகளுக்கும் துணை நின்று இலங்கை அரசின் துணையோடு தமிழர்களை அழித்து வருகிறது. இனி இந்து மதம் மூலமாகவாவது நாம் தமிழர்களை காப்பாற்றவேண்டும்.

இலங்கையில் இந்து மதத்தை காப்பாற்றியவர்கள் ஈழத் தமிழர்கள்; என்ற அளவிலாவது இந்தியாவில் உள்ள இந்து மதத்தினர் ஈழத்தமிழர்களை காப்பாற்றட்டும். இந்து மதத்தலைவர்களோடு 'தமிழன் வீதி' கொள்கை அளவில் முரண்படலாம்; ஆனால் காப்பற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கும் இருக்கிறது என்பதை இந்து மதத்தலைவர்கள் மறந்து விடவேண்டாம்.

வியாழன், செப்டம்பர் 10, 2009

இலங்கை அரசோடு சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்த தமிழ் பத்திரிகையாளார்கள்.

வரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கொடுமை சென்னை பத்திரிகை உலகில் நடந்துள்ளது. இலங்கை அரசு, இந்திய அரசின் துணை கொண்டு இலங்கையின் பூர்விக இன மக்களான ஈழத் தமிழர்களை கொன்று குவித்து அவர்களை பூண்டோடு அழித்து வருகிறது. அது தொடர்பான செய்தியை தமிழத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், விடுதலை புலிகளுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் தமிழ் பத்திரிகையாளர்களை பணத்தால் கவனித்துள்ளது.


ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திகள் நமக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.தமிழ் நாளிதழ்களுக்கு இலங்கை அரசு பணம் கொடுத்து செய்திகளை போடுகிறது என்பதை 18/01/2009 - தமிழன் வீதியில் நான் முன் கூட்டியே சொன்னேன்.
அன்று நான் எழுதியது...


'கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஈழ விடுதலை புலிகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவருகிறது தினமலர். இலங்கை அரசின் கைக்கூலி கருணாவின் துணைக்கொண்டு கட்டுரைகளை எழுதிவருகிறது. என்னமோ இலங்கை அரசு தமிழர்கள்மேல் ராணுவத்தை ஏவ வில்லை என்பதுபோலும், விடுதலை புலிகள் தான் இலங்கை அரசின் மீது போர்த் தொடுக்கிறார்கள் என்பதுபோல் செய்திகளை பரப்பி வருகிறது தினமலர்.கருணாவின் தூதுவர்கள், இலங்கை அரசின் நிதி உதவியோடு அந்தச் செய்திகளை வெளியீட முன்னணி நாளிதழ்களை தொடர்புக் கொண்டார்கள். ஆனால் எந்த பத்திரிகையும் செய்தியை வெளியீட மறுத்துவிட்டனர். ஆனால் தினமலர் நாளிதழ் மட்டுமே வெளியிட்டு தான் யார் என்பதை நிருபித்துள்ளது'


"இலங்கை அரசின் நிதி உதவியோடுதான் தற்போது தினமலர் நடத்தப்படுகிறது என்ற சந்தேகம் நமக்குள் பலமாக எழுகிறது"

18/01/2009 - தமிழன் வீதி

-------------------------------------------------------------------------------------------புதிய ஜனநாயகத்தில் வந்த செய்தி உங்கள் பார்வைக்கு...
தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம். ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.
தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.
இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.
தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.
ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? " எஸ்.ஆர். எம். மாளிகை". அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘ என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.
எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில் கொண்டு வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.
ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.
எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.
நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும் ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.
தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான
பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.
இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.


-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

திங்கள், ஆகஸ்ட் 31, 2009

பா. ஜ.க., வின் ஜின்னா புத்தி...!'கடந்த பாரளுமன்றத் தேர்தலில் பா. ஜ.க.வை நான் பெரிதும் நம்பியிருந்தேன் '

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலையில், இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி சிங்கள இனவாத அரசுக்கு பல்வேறு ராணுவ உதவிகளை செய்துவந்தது. இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிப்பு நடவடிக்கையில் சிங்கள அரசுடன் இனைந்து காங்கிரஸ் அரசு பகிரங்கமாக ஈடுப்பட்டு வந்தது. இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தன.

இந்த நயவஞ்சக காங்கிரஸ் அரசை வீழ்த்த பா.ஜ.க., வினால்தான் முடியும் என்று நினைத்து இருத்தேன். காங்கிரஸ் பிரச்சாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு இருக்க, பா.ஜ.க.,வினர் டப்பா தட்டிக்கொண்டு இருந்தனர்.

மொக்க பிரச்சார உத்திகள்.மொக்க பிரச்சார உத்திகள், பிரதமர் யார் என்று அறிவிக்காதது, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்காதது, பலம் இல்லா கூட்டணி, வியுகம் அமைத்து பிரச்சாரம் செய்யாத்து என்று இவர்கள் தோற்க ஆயிரம் காரணம்.
மற்ற கட்சியினர் காசை தண்ணிராய் செலவு செய்ய... இவர்கள் இறுக்கி கட்டிய முடிச்சை அவிழ்க்காதது. எப்படி தெரியுமென்று கேட்கலாம்? தேர்தல் விளம்பரம் தொடர்பாக தென் சென்னையில் போட்டியிட்ட இல. கணேசன் அவர்களிடம் பேச சென்றேன், அவரது அண்ணன்தான் பேசினார். பிசாத்து ருபாய்க்கு பேரம் பேசி, கடைசி வரை விளம்பரம் தரவேயில்லை. நாங்கள் புலம்பிக்கொண்டு வந்ததுதான் மிச்சம்.

காங்கிரசை தாலையில் தட்டி மூலையில் குந்தவைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த என் போன்றவர்களுக்கு, காங்கிரசின் அரிதிப் பெரும்பாண்மை அதிர்ச்சியை அளித்தது. கார்கில் போர், பொக்கரான் அணுகுண்டு வெடிப்பு என்று 5 வருடம் இந்தியாவை வழி நடத்திச் சென்றவர்கள், தடுமாறிப்போனார்கள். தமிழர்களின் வாழ்வில் விடிவு காலம் பிறக்கும் என்று எதிர்ப்பார்த்த எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

" நான் முதலில் இந்தியன். பிறகுதான் இஸ்லாமியன்" - ஜின்னா.இந்திய,பாகிஸ்தான் பிரிவினை குறித்தும் பாகிஸ்தானின் தந்தையான முகம்மது அலி ஜின்னா குறித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரிய அரசியல் புயலைக் கிளப்பியிருக்கிறது. அதன் முதல் சுற்றில் ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது புயலின் மையம் அத்வனியை நோக்கித் திரும்பியிருக்கிறது.
ஜின்னா இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானை பிரித்தது நல்லதா, கெட்டதா என்று இப்பொது நாம் ஆராயத் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால், முஸ்லிம்களுக்கு என்று தனி நாடு அமைவதை ஜின்னா எதிர்த்துதான் வந்துள்ளார்.

ஒரு வலுவான தேசியவாதியாக, உண்மையான காங்கிரஸ்காரராகத் தான் தனது அரசியல் வாழ்வை தொடங்கினார் ஜின்னா. காங்கிரசின் மூத்த தலைவர்களிள் ஒருவராக உருவெடுத்தார் அவர். " நான் முதலில் இந்தியன். அதன் பிறகுதான் இஸ்லாமியன்" எனக் கருதினார்.
கோகலேயின் ஆலொசனைப்படிதான் ஜின்னா முஸ்லீம் லீகில் சேர்ந்தார். அடிப்படை மதவாதிகளிடமிருந்தும், ஆங்கிலேயர்களின் அரவணைப்பிலிருந்தும், முஸ்லீம் லீகைக் காப்பாற்றி காங்கிரஸோடு நல்லுரவை வளர்க்க வேண்டும் என்பதுதான் ஜின்னாவின் நோக்கம்.
ரஹமத் அலியின் பாகிஸ்தான் பிரிவினைத் திட்டத்தை அவர் ஏளனம் செய்தார்.
இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அப்துல்லா ஹரூன் 1938-ல் முஸ்லீம் லீக் மாநாட்டில் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தார். பிரிவினைக்கு ஆதரவாக அப்துஸ் சத்தார் கைரி, அப்துல் மஜீத் சிந்தி ஆகியோர் கொண்டுவந்த தீர்மானங்களைத் தனது வாதத் திறமையால் தோற்கடித்தார்.

இப்படி தேச ஒற்றுமைக்காக குரல் கொடுத்த ஜின்னா, 1940 ஜனவரி முதல் பிரிவினைப் பாதையில் மெல்ல மெல்ல நடக்கத்தொடங்கினார். அவருக்கு அதரவுப் பெறுகி பாகிஸ்தான் பிரிந்தது தனிக் கதை.

பா. ஜ. க., வின் சின்ன புத்தி!

இப்படி உள்ளதை உள்ளப்படி எழுதியிருக்கிறார் ஜஸ்வந்த் சிங். இதில் கதையின் நாயகனை புகழ்ந்தும் எழுதியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸின் கிளையாகச் செயல்படும் பா.ஜ.க.,விற்கு இது பெரும் தலைவலியாக இருக்க... சற்றும் எதிர்பாராமல் ஜஸ்வந்த் சிங்கின் தலையில் கைவைத்து விட்டார்கள். முன்பு ஒரு முறை அத்வானி பாகிஸ்தான் சென்றிருந்தபோது இதே போல் ஜின்னாவை புகழ்ந்து பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டார். 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்று அவர் தப்பியது தனிக் கதை.

இப்படி ஜின்னாவைப் பற்றிப் பேசினால், அவர்களது சின்ன புத்தியால் அதை ஜீரணித்துக் கொள்ளமுடியாது என்பதுதான் உண்மை.

எது எப்படியோ! பா.ஜ.க வில் இருந்துக் கொண்டு ஜின்னாவைப் பற்றி எழுத தனி துணிச்சல் வேண்டும். அதற்காகவாவது ஜஸ்வந்த் சிங்கை நாம் பாரட்ட வேண்டும்.

இந்தியர்களால் தூற்றப்பட்ட ஜின்னாவின் ஆவி இந்த முறை எத்தனைப் பேரை 'பலி' கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை?

சனி, ஆகஸ்ட் 22, 2009

"என் அன்னைக்கு பிறகு என்னை வளர்த்தது சென்னை"

இன்று சென்னை தினம் 22/08/09சென்னை பற்றி எனக்கு எப்போதுமே ஒரு உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. நான் மாயவரம் அ.வ.அ., கல்லுரியில் இளங்கலை வணிகவியல் முடித்து, 20 நாட்கள் தான் வீட்டில் இருந்தேன். 1995 ஜுலையில் நானும், தம்பி வேல்முருகனும் சென்னை வந்தோம். இப்போ அவன் அமெரிக்காவில் ஜாகை. சென்னையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் உள்ள 'அமெரிக்கன் எம்பஸியத்திற்கு' இருவரும் அடிக்கடி செல்வதுண்டு. வழ வழப்பான தாளில் உலக நாடுகளின் வரலாறும், பல் துறைத் தகவல்களும் புதைந்திருக்கும். வாரக் கடைசியில் புகழ்ப் பெற்ற ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும். காலையில் வேலை தேடுவதும், மதியத்தில் அமெரிக்கன் எம்பஸியத்தில் இளைப்பாருவதுமாய் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டு இருந்த நாட்கள் அது!

பிறகு பத்திரிகைகளில் பணி புரிய ஆரம்பித்தவுடன், சென்னையின் நீள அகலத்தை அளக்க ஆரம்பித்தேன். சென்னையின் வளர்ச்சியை கடந்த 14 வருடங்களாக அருகில் இருந்து பார்த்து வருகிறென். அதன் வளர்ச்சி நம்மை பிரமிக்கவைக்கிறது.


சென்னையில் எனக்கு பிடித்த... பிடிக்காத பத்து.


சென்னையில் பிடித்த பத்து.


1 எளிமை மாறாத மக்கள்.

2 என்னதான் கார்ப்பொரேட் சிட்டி என்ற முகம் காட்டினாலும் ஆடி மாதத்தில் தெருவுக்குத் தெரு கூழ் ஊத்த மறக்காதது.

3 காசு இல்லை என்றாலும், கவலையே இல்லாமல் காத்து வாங்கலாம்- மெரினாவில்.

4 எப்பொதும் மக்கள் கூட்டத்தில் மயங்கிக் கிடக்கும் தி நகர் ரெங்கனாதன் தெருவும் உஸ்மான் சாலையும்.

5 நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் பெருகினாலும், தானும் வளர்ந்து தனது மக்களையும் வளர்த்து விடும் அற்புதம்.

6 மாணவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து லாகவமாய் கம்பியை பிடித்துக் கொண்டு இறங்குவதும், என்னதான் கூட்டம் கூரையை பியித்துக் கொண்டு இருந்தாலும், மேற்கூரையில் தட்டிக்கொண்டு மாணவன் பாடும் 'கானா' அழகு.

7 யாரவது சாலையில் அடிப்பட்டு விட்டால், மனித நேயத்தோடு உடனே உதவி செய்யும் மக்கள்.

8 சென்னையை பாதுகாப்பாக வைத்திருக்க, தனது தூக்கத்தையும் மறந்து காவல் பாணியாற்றும் சென்னை மாநகர காவல் துறையினர்.

9 பழமை மாறாமல் இருக்கும் திருவல்லிக்கேணியும்,சென்னையின் வர்த்தக தலை நகரான பிராட் வேயும் அதன் நெருக்கடியான தெருக்களும்.

10 "இன்னாமே...யெப்டிக் கீற... நல்லாக் க்ரியா?" என்று தமிழின் தனி இலக்கணத்தோடு பேசும் சென்னை தமிழ்.


பிடிக்காத பத்து (அத...எத்து)


1) சாலை விதிகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத மக்கள்.

2) இதைப் போல வண்டிகள் கூட இன்னும் இருக்கிறதா ? என்று நம்மை புருவம் உயர்த்தச் செய்து புகை கக்கி ஊரையே நாறடிக்கும் இரு/மூன்று/நான்கு சக்கர வாகனங்கள்.

3) ஒரு இடத்தில் குப்பையை அள்ளி ஊர் முழுவதும் கொட்டும் அசிங்கமான, நாற்றம் பிடித்த குப்பை வண்டிகள். கூடவே குப்பையை கொளுத்தி காற்றை மாசுப் படச் செய்யும் பொறுப்பில்லாத பக்கத்து வீட்டுக் காரர்கள்.

4 சென்னையில் 'சிங்கிள் டீ' குடிக்கவேண்டும் என்றாலும் மலையாளிகளிடம் தான் கேட்கவேண்டியிருக்கிறது. (டீ நல்லா இருந்தாலாவாவது சகித்துக்கொள்ளலாம்.)

5 கொழ...கொழவென சளியை சாலையில் துப்பி, குழந்தைகளும் இந்த சாலையில் தான் நடக்கிறார்கள் என்பதை மறந்த சொரனையற்ற ஜென்மங்கள்.

6 'டாஸ்மாக் பார்' பார்க்கவே கண்றாவியாய் இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப் படமால் 'ஈ யோடு ஈ யாய்' அமர்ந்து கடை மூடும் வரை சரக்கடிக்கும் நம்ம சென்னை குடிமகன்கள்.

7 தமிழையும், தமிழர்களையும் பற்றி கவலைப் படாத, . தன் தாய் மொழியாம் தமிழை மறந்து அயல் மொழிக்கு சாமரம் வீசும் சென்னை தமிழர்கள்.

8 சாலை விதிகளுக்கு நாங்கள் அப்பாற் பட்டவர்கள் என்று, ஆட்டோ / பேருந்துகளை தாரு மாராய் இயக்கி அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் "சென்னை மா நகர பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

9 சாலையில் நான்கு பேர் ஒர் இடத்தில் நின்று எட்டிப் பார்த்தால் போதும்..., அந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் அவசர அவசரமாய்' வண்டியை நிறுத்தி எட்டிப் பார்ப்பது. அப்படியும் தகவல் கிடைக்கவிட்டால், அங்கே பராக்குப் பார்த்துக் கொண்டு (அவனுக்கும் ஒன்னும் தெரியாது) நிற்பவனை பிராண்டுவது " என்ன சார்... என்ன ஆச்சி..." என்று. அலுவலகத்திற்கு கால தாமதமாய் சென்றாலும் பரவாயில்லை என்று, தகவல் கிடைத்தப் பிறகுதான் அங்கிருந்து நகர்வது.

10 "இன்னைக்கு நீ தோண்டினால்... நாளை நான் தோண்டுவேன்" என்று கங்கனம் கட்டிக் கொண்டு சென்னை சாலைகளை தோண்டிப் போட்டு பிறகு அதைப்பற்றி கவலைப் படாத... மின்சார வாரியம்/தொலை தொடர்பு துறை,குடி நீர் / வடிகால் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி.

வாழ்க சென்னை...வாழிய...வாழியவே!

வியாழன், ஆகஸ்ட் 20, 2009

"தமிழ் விக்கிபீடியாவில் -68வது இடத்தில் தமிழ்இன்று ஊடங்களும், இனையத் தளங்களும் பெருகி விட்டப் பிறகு தேடுதல் எண்பது மிகுந்த சுக அனுபவமாக மாறிவிட்டது என்றால் அது மிகையன்று.
பத்திரிகை அலுவலகங்களில் ... ஒரு நூலகம் எப்பொதும் இயங்கிக்கொண்டு இருக்கும். அதில், தங்களது படைப்புகள், புகைப்படங்கள், வரலாற்றுத் தொகுப்புகள் , இதுநாள் வரையில் வந்த நாளிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்திருப்பார்கள். இதற்காகவே பல லட்சங்களை செலவு செய்வார்கள். ஏதாவது பழைய நாளிதழ் வேண்டும் என்றால் கூட, அது எத்தனை வருடம் ஆகி இருக்கிறதோஅத்தனை வருடத்திற்கான தொகையை செலுத்த வேண்டும்.


நூலகத்திற்கென்றே மிகப் பெரிய கட்டிடத்தை பராமரித்தார்கள் எக்ஸ்பிரஸ் குழுமத்தினர். எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலமையகம், சென்னை மவுண்ட் ரோடில் இயங்கிக் கொண்டு இருந்த பொது, நான் நூலகத்தைப் பார்த்திருக்கின்றேன்.கிளப் ஹவுஸ்


ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காரர்கள் அங்கு தங்கி இருந்ததால், அதற்கு 'கிளப் ஹவுஸ்' என்ற பெயர். இன்றும் அண்ணாசாலை, ஸ்பென்சர் பிளாசா எதிரில் கிளப் ஹவுஸ் ரோடு இருக்கிறது. அந்த கிளப் ஹவுஸ்ஸில் தான் எக்ஸ்பிரஸ் குழுமம் இயங்கிக்கொண்டுஇருந்தது. அங்கு உள்ள நீச்சல் குளத்தை நாளிதழ்கள் சேமித்துவைக்கும் கிடங்காக மாற்றி இருந்தார்கள். ஒரு நாள் 80 தாவது வருட தினமணி தேவைப்பட்டதால் அதை எடுக்கச் சென்றேன்.


உள்ளே ஒரே இருட்டு, இரும்பு கிராதிகள் வானுயரத்திற்கு நிறுத்தி இருந்தது. ஒரு 40 வால்ட் குண்டு பல்ப் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு இருந்தது. அந்த இடமே பார்க்க பயம் கொள்ளக் கூடிய அளவில் இருந்தது. நீச்சல் குளத்தின் ஆழத்திலிருந்து மர ராக்குகளை கூறை வரை அமைத்து இருந்தனர். பேப்பர் தேடவேண்டும் என்றால், நீச்சல் குளத்தின் கீழே இறங்கித் தான் தேடவேண்டும். அந்தக் கட்டிடத்தின் உச்சி வரை மர ராக் நீண்டு இருக்கும். வரலாற்றின் வாசனையோடு நாளிதழ்கள் மர ராக்குகளில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும். வரிசை, வரிசையாக மர ராக்குகளை பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும். முழுவதும் பேப்பர் வாசனை, அப்போதுதான் நினைத்துகொண்டென், இதை பராமரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்று!
அந்த காலத்தில் அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, வரலாற்று ஆவணங்களை சேமித்து வைத்தார்கள்.


அனால் இன்று அந்த நிலை இல்லை. தினசரிகள் எல்லாம் 'ஸகேன்' செய்யப்பட்டு குறுந்தகடுகளாக மாற்றப் பட்டு சேமிக்கப்படுகிறது. போகட்டும், விஷயத்திற்கு வருவோம்...தமிழ்க் கலைக்களஞ்சியம்.


அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. இனையத்திள் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக 'விக்கிபீடியா' திகழ்கிறது.
விக்கி என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு "விரைவு" என்று பெயர். விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி + என்சைக்கிளேபீடியா என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிபீடியா என்ற சொல் உருவானது.68வது இடத்தில் தமிழ்2001 ம் ஆண்டு விக்கிபீடியா ஆங்கில மொழியில் தொடங்கப்பட்டு, பின்னர் பல மொழிகளில் விரிவுப்படுத்தப் பட்டது. இன்று 267 மொழிகளில் விக்கிபீடியா செய்திகளைத் தருகிறது. இதில் 28,97,231 கட்டுரைகளைத் தாங்கி ஆங்கிலம் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு 68-வது இடத்தில் உள்ளது.தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கி வருகின்றனர். 2003 முதல் இலங்கை யழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் ஒன்றரைஆண்டுகள் தன்னந்தனியே 2760 கட்டுரைகள் உருவாக்கி உள்ளார், என்ற தகவலைத் தருகிறார் மு. இளங்கோ. (விரிவான செய்திகளுக்குப் பார்க்க...பக்கம் 6, தினமணி கட்டுரை 18/08/09)நமது கடைமைவிக்கிபீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஒரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகரிப்பர். எனவே துறைசார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம், தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சடங்குகள்,மனக்கணக்குகள், தமிழில் அறிவியல் வளர்ச்சி, தமிழர்களின் வாழ்வு முறைகள், வீரம், வணிகம் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இது தமிழர்களாகிய நமது தலையாயக் கடமை.இது தொடர்பான பயிலரங்கங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.எனவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் 'விக்கிபீடியாவில்' தமிழ் கட்டுரைகளை வரைந்து தமிழின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறேன்.
***************************

புதன், ஆகஸ்ட் 19, 2009

ஒரு ஏப்ரல் மாதத்தில்...! (எனது கவிதை)

ஒரு
ஏப்ரல் மாத
பகல் பொழுதில்
அவளை- மீண்டும்
சந்திக்க நேர்ந்தது,


நடந்து முடிந்துவிட்ட
துயரங்களுக்கு-பின்
எதன்
மீதும் நம்பிக்கை
கொள்வதில்லை,


நூலிழையாய்
தொடர்ந்த... அன்பின்
வெளிப்பாடு...


பிரிவின்-பார்
பட்டதும்,


துன்பங்கள்
தோரண
வாயிலாய் மாறின,


நேருக்கு நேர்
பார்த்ததில்...


விழிகளுக்குள்
வெளிச்சம்
பறவினாலும்...


இதயம்
இறந்துவிட்டப்பின்,
விழிகளும்
குருடுதான்,
செல்லும்
வழிகளும்
கரடுதான்.


-19/04/97 இல் நான் எழுதிய கவிதை. நீங்கள் ஊகிப்பது சரிதான், நான் அப்பொது காதல் வயப்பட்டு இருந்தேன்.

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

கக்கூசுல உக்காந்து முக்குனா வரும் !"விடுங்க பாஸ். இவனுங்க எப்போவுமே இப்படித்தான்" இப்படித்தான் நினைக்த் தோன்றுகிறது இந்திய அரசைப் பார்த்து.உலகிலேயே தன் நாட்டு மக்கள் அயல் நாட்டில் அடி ,உதை பட்டாலும் இல்லை கொலையுன்டாலும் கவலைப் படாத அரசு இருக்கிறது என்றல், அது ! இந்திய அரசுதான்.


முன்னால் ஜனாதிபதியை அமெரிக்க விமான நிறுவனம் அவமானப் படித்தியப்போது இவர்கள் என்ன செய்தார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்? இவனுங்க சும்மா ஒரு (இந்திய ஆட்சியாளர்கள்) மொக்கப் பசங்க. இவர்கள் கல்லாபெட்டி நிரம்பினால் போதும் என்று நினைக்கூடிய சுயநல கிரிமிகள்.


எம் தமிழ் இனம் ;இலங்கை இனவாத அரசால் கூட்டம் கூட்டமாக, கொன்று குவித்தப்போது, அதற்கு வெண் சாமரம் வீசிய கருங்களிகள் தானே இவர்கள்?


இப்போவெல்லாம், நான் இந்தியன் என்ற வுணர்வே வரமாட்டேன்கிறது. சிலசமயம் கக்கூசுல உக்காந்து முக்கிக்கிட்டு இருப்போம் பாருங்க, அதைப் போலத்தான் இருக்கிறது என்னிடம் 'நான் இந்தியன் என்ற உணர்வு'.


ஈழத் தமிழர்களின் முப்பது வருட கனவு சில நாட்க்களிலே, கலைந்தது பாருங்க, அன்று என்னுள் கரைந்தது நான் இந்தியன் என்ற எண்ணம். 'நீங்கள் கேட்கலாம், இந்தியா பிடிக்கவில்லை என்றால் இந்தியாவை விட்டு போக வேண்டியதுதானே' என்று.


நான் ஏன் போக வேண்டு? இது எனது தாய் பூமி. எனது முன்னோர்கள் வாழ்ந்து மறைந்த தேசம். அவர்களது ஆன்மா இங்குதான் சுற்றி இருக்கிறது. இப்போதுள்ள ஆட்சியாளர்களின் முடிவால் நான் இந்தியாவை ஆதிரிக்க வேண்டும் என்பதில் அர்த்தமில்லை. ஆட்சிக்கு வந்து விட்டால் அவர்கள், நடத்துவதெல்லாம் நல்லதாகி விடாது.இன்று சாருக் கானை அமெரிக்கன் சுருக்கென்று, குத்தியவுடனே கோபம் கொப்பளிக்கிறது வட இந்திய உடகங்களுக்கு. தமிழன் குடும்பம் , குடும்பமாய் செத்தானே, அப்போதெல்லாம் உங்களுக்கு கோபம் வரவில்லையா? ஒரு வட இந்தியன் பாதிக்கப் பட்டவுடன் இப்படி கூச்சல் போடுகின்றீர். இல்லை தமிழன் இந்தியனாகத் தெரியவில்லையா? இல்லை தமிழ்கடலூர் தமிழன் ஒருவன் , ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொள்ளப் பட்டப் போது, இந்த வட இந்திய ஊடகங்கள் எங்கே சென்று இருந்தார்கள்? மலேசியாவில் தமிழர்கள் அடிப்பட்டபோது, ஏன் வட இந்திய ஊடகங்கள் கண்டுக்கொள்ளவில்லை.


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப் பட்டத்திற்கு, இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?இவர்கள் எப்போதும் தனது நட்டு மக்கள் பற்றி கவலைப்பட்டதில்லை, என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன.


தங்கள் சொந்த நாட்டு மக்கள் அயல் நாடுகளில் அடி வாங்குவதையும், இந்திய வம்சாவழித் தமிழர்கள் அயல் நாடுகளில் கொன்றுக் கூவிப்பதையும் வேடிக்கைப் பார்க்கும் ஒரே அரசு இந்திய அரசுதான்(?)


இதில் எங்கேயிருந்து வரும் இந்தியன் என்ற எண்ணம்.


வாழ்க இந்திய ஜனநாயகம் !ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2009

இந்த வாரம்...இந்த வாரம் உலகில் வலம் வந்த சில சம்பவங்கள்.
பன்றி காய்ச்சல்!


உலகம் முழுவதும் பன்றி காய்ச்சல் நோய், எல்லோர் வாயிலும் அகப்பட்டுப் போனது. (எழுதுவதால் யாருக்கும் தொற்றிவிடது).


என் நண்பன் கேட்டான் "மச்சான், பன்றிக்கு காய்ச்சல் வந்தால், மனுஷனுக்கு ஏன் ஊசி போடுறாங்க..." நல்ல கேள்வி என்று நினைத்துக்கொண்டேன்.

முன்பு வந்த சீசனில் 'சிக்கின்-குனிய' நோய் உலகம் முழுவதும் பரவியது. பொதுவாக இந்த போல் வைரஸ் கிருமிகள் முதலில் தோன்றுவது ஆசியக் கண்டத்தில் தான் என்று மேற்கு நாடுகள் பொய்யுரை பரப்பி வரும். ஆனால் இந்த முறை மெக்சிகோ என்று உண்மையை சொல்லி இருக்கிறார்கள். மெக்சிகோ தென் அமெரிக்கவில் உள்ள ஏழை நாடு என்பதால் இருக்குமோ ? (மெக்சிகோ, உலகப் பந்தில் சரியாக இந்தியாவிற்கு கீழே வருகிறது என்கிறார்களே உண்மையா?)
கே பி கைது. ஒரு நாடகம்!
என்னசொல்லி... மலேசிய அரசு இலங்கைக்கு அனுமதி வழங்கி இருக்கும்?

" நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். இல்லை என்றால் தமிழர்கள் இங்கேயும் ஆயுதம் தூக்குவார்கள். அது உங்கள் தேசத்தை துண்டாடும். அதனால் புலிகளின் மீதமுள்ள தலைவர் கே பி யை பிடித்துக் குடுத்தால் போதும். மலேசிய தமிழர்களை அடக்க எங்கள் நாடும் உங்களுக்கு உதவும். இது புத்தர் (?) மேல் ஆணை." என்று அவர்களின் காலில் விழுந்து நக்கி இருப்பார்கள். அதனால் தான் மலேஷியாவில் நடந்த கைதை, தாய்லாந்து என்று பொய்யுரை பரப்பி வருகிறார்கள் சிங்கள இனவாத அரசு.


உலகில் இதுவரை நடந்த எந்த ஒரு சுதந்திரப் போரும், முடிவில் வெற்றிதான் பெற்றுள்ளது. ஏனன்றால், தனது தாய் நாட்டுக்காக இன்னுயிர் தந்த வீரர்களின் ஆத்மா அந்த வெற்றியை பெற்று தரும்.
ஈழம் வெல்லும்.


சிலைகள் திறப்பு... இரு மனங்களின் இணைப்பு...
திருவள்ளுவர் -சர்வைன்கர் சிலை சிலை திறப்பு, நல்ல அரசுகளின் சிறப்பான செயல்பாடுதான் என்று சொல்லவேண்டு. ஏனன்றால், தமிழ் நாட்டிற்கு நீர் தரவேண்டம் என்று அணையில் விழுந்து செத்தவர்கள் கன்னடர்கள். தமிழர்களுக்கும் இவர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். எந்த வகையிலாவது தமிழகத்திற்கும், கன்னடதிருகும் எப்போதும் பிரச்சினை இருந்து வரும். அது ! காவிரி ஆகட்டும் ஓகேநக்கல் ஆக்கட்டும்.

எதாவது ஒரு தகராறு என்றால் உடனே தமிழ் சினிமா ஓடும் தியேட்டரை அடித்து உடைப்பது, நகருக்கு வரும் தமிழ் நாட்டு வண்டிகளை அடித்து நொறுக்குவது. என்று அவர்களின் அலப்பறை நம்மால் தாங்க முடியாது.

நான் கூடசிறு வயதில் பெங்களூரு தமிழ் நாட்டின் ஒரு பகுதி என்றுதான் நினைத்து இருந்தேன்(?) அந்தளவிற்கு நம்ம ஆள், அங்கு இருந்து வேர் ஊன்றி உள்ளான்.


எடியுரப்பா தமிழ் நாட்டிற்கு இடையுராக இருப்பார் என்று தான் நினை த்திருப்போம். நல்ல வேலை அவர் முன்பு இருந்தவர்கள் போல் இல்லை என்று தான் சொல்லவேண்டு. எடியுரப்பவின் முயற்சிக்கு கரம் நீட்டிய கலைஞரையும் வாழ்த்த வேண்டும்.


நல்ல முயற்சி என்றும் நன்மை தரும்.

எனது கவிதை...'வழக்கமான ஒன்டேன்று..."

வழக்கமான ஒன்டேன்று

நீ

நிற்கச் சொன்ன...

இடத்தில் அல்லாமல்,

பிறிதொரு இடத்தில்

நிற்கும் போதுதான்,

உணர்கிறேன்,

காத்திருப்பின் அவசியத்தை.

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

வலைப் பதிவாளர்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் வருமா?

(நீங்கள் எதை திறந்து வைத்தாலும் முகத்தை மூடிக் கொள்ளுங்கள்)மெக்சிகோவில் தோன்றி உலகமுழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது பன்றிக் காய்ச்சல் நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களை மிக எளிதாக தாக்குகிறதாம்.


தற்காத்துக் கொள்ள சில வழி நமக்கு.


  1. சத்தான உணவுகளையே உண்ணவேண்டும்  2. பழம், காய்கறிகளை உணவில் அதிகம் பயன் படுத்த வேண்டும்  3. காலையில் நடைப் பயிற்சி செய்யவேண்டும்  4. இரவில் அதிக நேரம் கண் விழிக்கக் கூடாது. நம்ம மக்களெல்லாம் (வலைப் பதிவாளர்கள்) இரவில் அதிக நேரம் கண் விழித்து கணினியில் லொட்டு...லொட்டு என்று தட்டிக்கொண்டு இருப்பார்கள். இப்படி அதிக நேரம் கண்விழிபதால், நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. நாம் இப்போது எச்சரிக்கையாக இருப்பது நலம்.  5. குடி, பீடி கூடாது.  6. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்  7. பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளவர்களை அருகில் சென்று தொடுதல்/பேசுதல் கூடாது.  8. சுத்தமான முக மூடிகளை, வெளியில் செல்லும் பொது பயன்படுத்த வேண்டு.இப்படி நெறைய ஆலோசனைகள் நாளிதழ்களிலும், டிவி களிலும் தொடர்ந்து வந்து நம்மை துன்புறுத்துகின்றன. இதெல்லாம் இரவில் கண் விழிக்கும் நம் போன்ற ஆட்களுக்கு பயமாகத்தான் இருக்கும். அதனால் தோழர்களே வலை பதிவினை பகலிலேயே முடித்துவிட்டு, இரவில் நிம்மதியாக தூங்குங்கள்.

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2009

"நீங்கள் ஓடி ஒளிய மக்கள் கூட்டம் தான் நல்லது..."

##குறும்பன்##

.....................நவீனம்.............

மீதமிருந்த நேரத்தில் தினமணி கதிர் எடிட்டர் சிவகுமார் சாரை பார்க்க சென்றேன், அவர் மீதமிருந்த (?) நேரத்தில் என்னோடு பேசிக்கொண்டு இருந்தார். சங்க இலக்கியம் முதற்கொண்டு சாயந்தரம் சங்கதி வரைக்கும் விலாவரியாக பேசக்கூடியவர்.

சங்கீதத்தில் அவர் ஒரு மகா அனுபவஸ்தன், அப்படி ஒரு சங்கீத ஞானம் . அதுவும் பழைய சங்கதியெல்லாம் தனிஅவர்தனமே செய்வார், அதற்கு தினமணி கதிரில், வருடம் தோறும் அவர் தயாரிக்கும் இசை மலரே சாட்சி. அவர் சங்க இலக்கியங்களை திரட்டி 'பொங்குதேர் வாழ்க்கை' என்ற புத்தகத்தை 500 பக்கங்களில் எழுதியுள்ளார். (இதை பற்றி பிறிதொரு சந்தர்பத்தில் கூறுகிறேன்)

அவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொது 'குறும்பன்' என்றொரு நூலை பற்றி சொன்னேன். எனது மனதை தொட்ட சில நூல்களில் குறும்பனுக்கும் இடமுண்டு. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், எதேட்சையாக என் கையில் கிடைத்தது. மறைந்த நெடுமாறன் மாமா வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது அருகில் உள்ள புத்தக குவியலில் கிடந்தது. வழக்கமான புத்தகம் போல் அல்லாமல், அளவிலும், அட்டையிலும் சற்றே பெரியதாக இருந்தது. அதுவே என்னை கையில் எடுக்க தூண்டியது.

அதுவரையில் அப்படி ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை நான் படித்ததில்லை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் அப்புத்தகத்தை தயாரித்து வெளியிட்டுஇருந்தனர். மிகவும் வித்தியாசமான 'குறும்பன்' என்னும் சுயசரிதை நவீனத்தை உச்பெஸ்கிஸ்தான் மக்கள் கவிஞர் குல்யாமின் (1903-1966) எழுதிஉள்ளார். அந்த உரையாடல் நிச்சயம் வெகுவாக கவரும் என்று சொல்லிவிடலாம். இதுநாள் வரையில் அந்த புத்தகத்தைப் பல இடங்களில் தேடி அலைந்திருக்கிறேன். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சில் விசாரித்தபோது 'அந்த புத்தகம் தற்போது விற்பனையில் இல்லை என்று சொன்னார்கள். அவ்வப்போது பல கடைகளில் தேடி அலைந்துஇருகிறேன்.

நேற்று சிவகுமாரிடம் அந்த புத்தகத்தைப் பற்றி சிலாகித்து சொல்லிக் கொண்டு இருக்கும்போதுதான், அவர் சொன்னார், ''அட ! பாவி அந்த புத்தகம் re-print ஆகி வந்திரிட்சிடா '' என்றார்.

வீட்டுக்கு கிளம்ப இருந்த நான், வண்டியை நேராக திருமங்கலம் சிக்னலுக்கு விட்டேன். அங்குதான் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் கண்காட்சி. நடத்தி வருகின்றனர். இரவு ஒன்பது இருக்கும், வெளிச்சத்தின் வூடே குறும்பனை தேடினேன், யாரிடம்மும் கேட்கவில்லை. நாமே கண்டுபிடிப்போம் என்று. சரியாக மூன்றாவது சுற்றில் முதல் அடிக்கில் இருந்தான் குறும்பன். சரியான கள்ளன்!

சற்றே கைகள் நடுங்க (பிரமையா?) குறும்பனை புரட்டினேன். நல்ல அச்சில் மிக நேர்த்தியாக வந்திருக்கிறது குறும்பன்.

குறும்பனைப் பற்றி சில வரிகள்...

"தப்பி ஓடி ஒழிய வேண்டுமானால் ஆள் கூட்ட நெரிசலில் அமிழ்வதைவிட மேலானது எதுவுமில்லை. சந்தை திடலின் நடுவே, திறந்த வெளியில் கண்ணுக்கு மறைவது போல எந்தக் காட்டிலும் முடியாது" - இவ்வாறு கூறுகிறான் நமது நூலின் கதாநாயகன் குறும்பன். சமயோசித சாமர்த்யமும் உள்ள குறும்பன் - சின்னச்சிறு போக்கிரி. எத்தனையோ தடவை தன் கிருத்ரி மங்களுக்கு பிறகு அவன் தலைதெறிக்க ஓடி தப்ப நேர்ந்தது, எனவே அவன் இந்த விழயத்தில் அனுபவசாலிதான்!

இந்த குறும்புகார பையனின் கதையையே இந்நூல் ஆசிரியர் கூறுகிறார். அவர் தமது பிள்ளை பருவத்தை நினைவு கூறுகிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்திய காலம் அது. அப்போது உச்பெஸ்கிஸ்தான் வாழ்க்கை இப்போதைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது.

தமிழாக்கம் : பூ. சோமசுந்தரம்.

பக்கம் 287

விலை Rs.125/-

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009

ஒரு பகல் நேரத்தில்... கவிதை

!!!!!கவிதை!!!!!!


ஒரு பகல் நேரத்தில்...
நான் எழுதிய இக் கவிதை
தினமணி கதிரில் (22/04/2001)
அன்று வெளிவந்தது.

நீ
வந்து
சென்றதற்கான
அடையாளம் எதுவும்
இல்லையென்றுதான்
நினைத்திருந்தேன்.
பார்வையும்
அப்படித்தான்
சொன்னது.
மேஜையில்
இருந்த
பூச்-ஜாடி
அப்படியே
இருந்தது.
கொடியில்
காயவைத்த
*அவளது துணியிலும்
வித்யாசம் இல்லை.
டம்ளரில்
இருந்த
பாலுக்கும்
சேதமில்லை.
இருந்தும்
கண்டு பிடித்துவிட்டேன்,
அட!
போக்கிரி
சிட்டுக்குருவியே...
அரிசியை
இப்படியா
இறைத்துவிட்டு
செல்வது...?
-தோழன் மபா
*நான் முதலில் எழுதிய கவிதையில் 'துணியிலும் வித்யாசம் இல்லை ' என்று எழுதிஇருந்தேன், இப்போது துணிக்கு முன்பாக 'அவளது' என்ற வார்த்தையை சேர்த்து எழுதி உள்ளேன்.

வெள்ளி, ஜூலை 31, 2009

புளிய மரமும் நானும்...

புளிய மரமும் நானும்...
-தோழன் மபா


எனது பால்யகால வாழ்வில் புளியமரதிற்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. என்ன இவன் பேயாக இருந்திருப்பானா என்று கேட்காதீர்கள்? வைக்கம் முகமது பஷிர் சொல்வது போல் எனது 'பால்யகால சகி' எங்கள் வீட்டு புளிய மரம். திருவாலங்காட்டில் ரயிலடி தாண்டி நடுத் தெருவில் எஙகள் வீடு. ஓடு வேயிந்த இரண்டு சுற்று உள்ள வீடு. ஒரு பக்கம் எஙகள் வீடு, அடுத்தப் பக்கம் எஙகள் பெரியண்ணன் வீடு. வீட்டின் கொல்லைப் புறத்தில் அந்த புளிய மரம். தப்பு ...தப்பு ...புளிய மரம் இல்லை, புளிய மரங்கள். இரண்டு புளிய மரங்கள் காதலன் காதலி போல் பின்னி பிணைந்து இருக்கும்.

அந்தளவிற்கு நெருக்கம்.


தாழ்வாக இருக்கும் கிளையில் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு தொங்குனவாகில் ஏறினால் சர சர வென்று உச்சி மரத்திற்கு ஏறிவிடலாம். அந்தளவிற்கு எனக்கும் என் புளியமரதிர்க்கும் இணக்கம் உண்டு. இரு மரங்கள் இணைந்தே இருப்பதால் பாதுகாப்பைப் பற்றி பயம் இல்லை. என் வயது ஒத்த பசங்களுக்கு நான் தான் தலைவன் என்பதால், என்னை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். கபடி தான் எங்களது பிரதான விளையாட்டு. புளிய மரத்திற்கு கீழே தான் நாங்கள் கபடி விளையாடும் இடம் இருப்பதால், புளிய மரத்தில் வவ்வால் தொங்குவது போல் எப்போதும் நாங்கள் தொங்கிக் கொண்டு இருப்போம் அல்லது மரத்தில் தூங்கிக் கொண்டு இருப்போம். அந்தளவிற்கு புளிய மரத்தை எங்களது வசதிக்காக மாற்றி இருந்தோம்.புளிய மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கும் என்று சொன்னேன் அல்லவா ? அந்த இடம் தான் புளிய மரத்தின் மடி. மிகவும் பாதுகாப்பான இடம். ஒரு மாதிரி கிண்ணம் போல் இருக்கும், நாம் மிக எளிதாக பொருந்தி அமரலாம். கால்களை மரத்தின் இருப் பக்கமும் போட்டுக் கொண்டால் மிக பாதுகாப்பாக அமர்து இயற்கையின் அந்த சுகமான தாலாட்டை அனுபவிக்கலாம். மரம் மிக மெதுவாக அசைந்து ஆடும். புளிய மரத்தின் இலைகள் மிக சிறியது என்பதால், சூரிய கதிர்கள் மிக அழகாக ஊடுரிவி நம் மேல் இதமாக படும்.சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் 'தாய்லந்து' நாட்டின் 'தாய் எக்ஸ்போ ' கண் காட்சி அண்மையில் நடைப்பெற்றது. அங்கு அவர்களது பாரம்பரியமான தின் பண்டம் ஒன்று வைத்து இருந்தார்கள், அது என்ன தெரியுமா? புளியம் பழத்தின் மேல் சீனி தூவி அழகான பிளாஸ்டிக் கண்டைனரில் அடுக்கி இருந்தார்கள். மக்கள் மிக ரசித்து, ருசித்தார்கள் . நானும் வாங்கலாம் என்று போனேன், பிறகு ஒரு எண்ணம் வந்தது 'நமக்கு தெரியாத புளியம் பழமவென்று, வாங்காமல் தெரிம்பினேன். இல்லத்திற்கு வந்த பிறகுதான் வாங்காதது பெரும் வருத்தமாக இருந்தது.போகட்டும் கதைக்கு வருவோம்...புளிய மரத்தில் நான், குண்டுமணி, ரமேஷ், கலியபெருமாள், லோகநாதன் என்று ஒரு பட்டாளமே விளையாடிக் கொண்டு இருப்போம். மரத்தில் படுத்து தூங்க வசதியா ஒரு பரண் அமைத்து இருந்தேன். மூங்கில் தட்டியை, இரு மரத்தின் கிளைகள் வரும் இடத்தில் படுப்பதிற்கு வசதியாக அமைத்து, அதன் மேல் பெட் சீட், தலகாணி எல்லாம் வைத்து பாதுகாப்பாக அங்கு தூங்கலாம். அந்த அளவிற்கு யனது படுக்கையை தயார் செய்து இருந்தேன். அங்கு ரேடியோ வைக்க, முகம் பார்க்கும் கண்ணாடி மாட்ட என்று, என்னால் முடிந்ததை எல்லாம் மேலே கொண்டு வைத்து இருந்தேன்.

அங்கு எப்போதும் ஒரு சுவையான பானம் செய்வோம். பழுக்காத சதைப் பிடிப்பான, செம் புளியம் பழத்தை ஒரு பாத்திரத்தில் கரைத்து கொள்வோம். கூடவே நாட்டுசர்க்கரை , உப்பு, அரைத்த மிளகாய் தூள் இதையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்தால், புளிப்பு, இனிப்பு, கார்ப்பு என்று பலவித சுவை கொண்ட நீங்கள் விரும்பும் ஒரு பானம் கிடைக்கும். இதை நீங்கள் குடிக்கும் சமயம் நிச்சயம் உங்கள் ஒரு கண்ணை மூடுவீர்கள். புளிப்பின் காரணமாக...அப்படிதான் ஒரு நாள்....

-தொடரும்.

ஒயின் ஷாப்பில் ...(கவிதை)

ஒயின் ஷாப்பில் ...

குடித்து முடித்தபின்

கசங்கி கிடந்தது

பிளாஸ்டிக் டம்ளர்.

-தோழன் மபா

புதன், ஜூலை 29, 2009

எனது கவிதை...

இரவு உணவு...

ஒரு பிடி சோறு
ஒரு குவளை பால்
ஒரு மஞ்சள் வாழைப்பழம்
கூடவே
ஒரு டிவி ரிமோட்
போதும்
இரவில்
பசியாற...
-தோழன் மபா

திங்கள், ஜூலை 13, 2009

நிச்சயம் நீங்கள் தமிழன்தான்

எனக்கு மின்னஞ்சல் மூலமாக வந்த ஒரு நகைச்சுவை உங்களுக்காக...

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க....!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க.. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு.....!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9... ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டுவருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ... லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி...!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.... எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க...!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்...!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம்.... பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க...

இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்

வியாழன், ஜூன் 25, 2009

'மூன்றாம் கட்டத்தில் - தமிழீழப் போர்

அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம்.
சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம். வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது. கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம். எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்திருக்கின்றோம். எமது மனங்களில் என்ன இருந்தாலும் - நாம் நம்ப மறுத்தாலும் - அவர் இனித் திரும்பி வரப் போவதில்லை என்பதே உண்மையானது.
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை பற்றிய தூய்மையான கனவைச் சுமந்து - 37 ஆண்டுகளாக அந்தக் கனவை நனவாக்குவதற்கு மட்டுமே போராடிய அந்த உன்னதமான மனிதர் - எமது இனத்தின் பெருந் தலைவர் - அந்தப் போராட்டக் களத்திலேயே வீழ்ந்து போனார். 'தமிழீழத் தனியரசு' ஒன்றே தமிழர்களுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் என்று அவர் நம்பினார். அதனை அமைப்பதற்குச் சிறந்த வழி என தான் நம்பிய ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியிலே தன் பின்னால் அணிதிரண்ட ஆயிரமாயிரம் போராளிகளுக்கு அவர் தலைமையேற்றார். அந்த வழியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்து - எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாமல் போராடினார். அந்த வழியிலேயே தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஒவ்வொரு போராளியையும் அவர் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே அந்தப் போராளிகளை வழிநடத்திய தனது தளபதிகளையும் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே தானும் போராடி எமது கண்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து அவர் போய்விட்டார். தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழீழத்தின் தலைமைப் போர்த் தளகர்த்தருமான மேன்மை மிகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் - தமிழர் சரித்திரத்தின் மகுடமாக, எமது நெஞ்சத்தில் நிலைத்த நினைவாக, எம்மை வழிநடத்திச் செல்லும் ஆன்ம சக்தியாக - இனி எங்கள் மனங்களிலும், அறிவிலும் வாழ்வார். அந்தப் படங்களைப் பார்த்தேன்: தமிழ்த் தேசிய இனத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாறு அங்கே சரிந்து கிடந்தது. விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச் சாரும். விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை, பொட்டு, பாணு, ராஜூ, கே.பி.... என இன்னும் சிலரைச் சாரும். விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும். ஆனால் - சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக - மனம் தளராமல் - விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.
கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை. தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?... அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?... அல்லது - வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?... அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?... அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?.. அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?.. எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் - கடைசிக் காலத்தில் - குழப்பங்கள் ஏதுமற்று அந்த மனிதர் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை என்னால் உணர முடிகின்றது. தப்பி ஓடி வேறு ஊர்களுக்குச் சென்று விடாமல் அந்த மண்ணிலேயே அவர் வாழ்ந்திருக்கின்றார். வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார். உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார். அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட 'தமிழீழம்' என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார். மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் - தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி - தன் போராளிகளை களங்களில் அணியச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார்.
ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் அணிவித்து களத்திற்கு அனுப்பிய சயனைட் நச்சுக்குப்பியை தன் கழுத்திலும் அவர் அணிந்திருக்கின்றார். எத்தனையோ கரும்புலிகளின் உடல்களில் அணிந்து அனுப்பி வைத்த வெடிகுண்டு அங்கியை - துப்பாக்கி குண்டு பட்டு தற்செயலாக வெடித்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் பொட்டம்மான் வற்புறுத்திக் கழற்றும் வரையிலும் - தன் உடலில் அவர் அணிந்திருந்திருக்கின்றார்.
எல்லாவற்றுக்கும் மேலாக - தானே துப்பாக்கியை ஏந்திப் போரிட்டு களத்தில் அவர் மடிந்திருக்கின்றார். மில்லர் முதல், திலீபன் முதல் - தான் வழியனுப்பி வைத்த ஒவ்வொரு கரும்புலி வீரரிடமும் - "நீங்கள் முன்னாலே செல்லுங்கள் நான் பின்னாலே வருவேன்" என்று எவ்வளவு தெளிவுடன் சொன்னாரோ - அதே தெளிவுடனேயே அவர்கள் பின்னாலேயே அவரும் சென்றிருக்கின்றார். தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும் படி அடுத்தவர்களிடம் கேட்காத மகோன்னதமான தலைமைத்துவப் பண்பின் இலக்கணமாக அவர் வாழ்ந்திருக்கின்றார்... வீழ்ந்திருக்கின்றார்.
முப்பது வருட காலமாகப் போராடி - சிறிது சிறிதாக அவர் பார்த்துப் பார்த்து கட்டி வளர்த்த தமிழ் சாம்ராச்சியம் - அவரது கண்களுக்கு முன்னாலேயே துகள்களாக உடைந்த நொருங்கி மண்ணோடு மண்ணாகி விட்டது. ஆனால் - இந்த முப்பது வருட காலப் போராட்டத்தில் பிரபாகரன் சாதித்தது உண்மையில் அவர் இந்த மண்ணுக்கு மேலே கட்டி வளர்த்த அந்தத் தமிழ் சாம்ராச்சியம் அல்ல. ஏனெனில் - மண்ணுக்கு மேலே கட்டப்படும் சாம்ராச்சியங்கள் எழுவதும் வீழ்வதுமே வரலாறு. பிரபாகரன் படைத்த உண்மையான சாதனை என்பது - ஒவ்வொரு தமிழனின் மனங்களுக்கு உள்ளும் அவர் கட்டியெழுப்பிய தமிழ் சாம்ராச்சியம் தான். அது நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நிற்கின்றது. அது வீழ்ச்சி அற்றது. 'தமிழீழம்' என்ற விதையை எம் ஒவ்வொருவரது ஆத்மாவிற்குள்ளும் அறிவிற்குள்ளும் அவர் ஆழப் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றார். விடுதலை பெற்ற மனிதர்களாக - மதிப்புடனும் பெருமையுடனும் - இந்த உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வெறியையும், வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் எமக்குள் அவர் ஊட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார். தமிழ்த் தேசியத்தை திடப்படுத்தி, தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தி, தமிழர் தன்னாட்சி உரிமைக் கோரிக்கையைப் பலப்படுத்தி - எங்கள் இனத்தின் சின்னமாக, எங்களது அரசியல் அடையாளமாக, எங்கள் தேசியத்தின் குறியீடாக, எங்கள் கோபத்தினதும் சோகத்தினதும் மகிழ்ச்சியினதும் வெளிப்பாடாக - தனது சாவுக்குப் பின்னாலும் நின்று நிலைத்து வாழும் வகையான ஒரு கொடியைத் தமிழுக்கு அவர் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.
இன்று இந்த உலகமும், சிங்களவர்களும், இந்தியாவும் அச்சப்படும் விடயம் -
பிரபாகரன் எங்கள் மனங்களுக்குள் கட்டியெழுப்பிவிட்டுச் சென்றிருக்கும் அந்த வீழ்த்த முடியாத சாம்ராச்சியம், அவர் எமக்கு ஊட்டிவிட்டுச் சென்றிருக்கும் உறுதியும் துணிவும் வீரமும் தான். பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் - வீரம், துணிவு, உறுதி என்பவை பற்றியெல்லாம் தமிழர்கள் புத்தகங்களில் படித்து, திரைப்படங்களில் பார்த்ததோடு சரி. ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனத் துணிந்து வந்தவர்கள் கூட இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு விட்டுக்கொடுத்து தமிழர்களின் உரிமைகளைக் கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டனர். சரியோ தவறோ - அந்த மனிதர் மட்டுமே தொடர்ந்து நடந்தார்; அந்த மனிதர் மட்டுமே - எங்கள் ஆத்ம தாகத்தின் முகமாக இந்த உலகிலே திகழ்ந்தார். அந்த மனிதர் மட்டுமே - எங்களாலும் முடியும் என்று எங்களையே நம்ப வைத்தார். தம்மைத் தாமே ஆளும் வகையான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகுவதற்கு அந்த மனிதர் மட்டுமே காரணம்.
சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் அந்த மனிதர் ஒரு புனிதமான கனவோடு வாழ்ந்தார். நாம் எல்லோருமே சுமந்த அந்தக் கனவை நிறைவு செய்வதற்குச் சிறந்த வழி எனத் தனக்குப்பட்ட ஒரு வழியில் எந்தச் சலசலப்பும் இன்றி அவர் நடந்தார்.
அந்தப் பயணத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்தவிட்டது. தவறுகளாகப் பார்க்கப்படும் இன்னும் சில நிகழ்வுகள் உண்மையிலேயே தவறுகள் தானா என்பதை அந்த வரலாறே நாளை தீர்மானிக்கட்டும். தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும் போது - அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மை தான். அவரைப் பொறுத்தவரையில் - தமிழ் மக்களை தலைநிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பது தான் அவர் வரித்துக்கொண்ட இலட்சியம். அந்த இலட்சியத்தில் களங்கமற்றவராகவே அவர் எப்போதும் இருந்தார்.
அந்த இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, அந்த இலட்சியத்திற்காகவே வீழ்ந்தும் போனார் அந்தப் பெருமனிதன்.
தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா
அவரது இழப்பைத் தாங்கும் மனத் திடம் எமக்கு இல்லாமலிருக்கலாம்; அல்லது, அவரது வீரச்சாவை ஏற்க முடியாமல் வேறு ஏதும் காரணங்கள் எம்மைத் தடுக்கலாம்; ஆனால், அத்தகைய எமது மனப் பலவீனங்களோ, அல்லது வேறு காரணங்களோ - 37 ஆண்டுகளாக எமக்காகவே போராடி வீழ்ந்த அந்த மாதலைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய இறுதி வணக்க மரியாதைகளைச் செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவையாக இருப்பது நியாயப்படுத்த முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது நாம் அவருக்கு இழைக்கும் துரோகமும் கூட. அவர் "இருக்கிறார்" என்றும் "இல்லை" என்றும் ஒரு மர்மத்தை நீடித்துச் சென்று, அவர் இருப்பதைப் போலவே ஒரு மாயையை வளர்த்துச் சென்று, திரும்பவும் எழுந்தருளி அவர் வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டிச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம். அவரது இல்லாமையை ஏற்றுக்கொண்டு, அவருக்குரிய இறுதி வணக்கங்களைச் செலுத்திவிட்டு, விடுதலைப் போராட்டம் பற்றிய முழுமையான தெளிவைப் பெற்றுக்கொண்டு, அவர் விட்டுச் சென்றிருக்கும் தலைமைத்துவ இடைவெளியைப் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்துகொண்டு - வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நாம் எல்லோருமாகச் சேர்ந்து நகர்த்துவதே தேவையானதும் நேர்மையானதுமாகும்... ஒரு வகையில் அதுவே நாம் அவருக்குக்கு வழங்கும் மரியாதையும் கூட. தேசத் தந்தை எஸ். ஜே.வி செல்வநாயகத்தி்ன் மறைவுடன் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 1' முடிவுக்கு வந்தது. தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீரச்சாவுடன் ஆயுதம் தாங்கி முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 2' முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் - தமிழர் போராட்டம் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இழந்த எமது ஆட்சியும், கடந்த அறுபது ஆண்டு காலமாக நாம் இழந்து வரும் எம் அடிப்படை அரசியல் உரிமைகளும் இன்னும் மீளவும் வென்று எடுக்கப்பட்டுவிடவில்லை. மிகக் கொடூரமான இன அழிப்புப் போருக்குள் சிக்கி - உருக்குலைந்து - முட்கம்பி வேலிகளுக்குள் முடங்கிச் சிறையிடப்பட்டிருக்கும் எமது மக்களின் கெளரவமான வாழ்வு இன்னும் மீளவும் பெற்று எடுக்கப்பட்டுவிடவில்லை.
முன்னாலே சென்றுவிட்ட அந்தத் தலைவன் வழியில் பின்னாலே செல்வதே இப்போது எம் முன்னால் உள்ள தலையாய கடமை. பிறந்திருக்கின்ற இந்தப் புதிய சூழலில் - புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் - இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்கள் என்று பிரிந்திருக்காமலும் அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் - திறந்த மனதுடன் - 'தமிழர்கள்' என்ற ஒரே அடையாளத்தின் கீழ் மட்டும் நாம் அணிதிரள்வோம். அவர் காட்டிய உறுதியுடன்... அவர் காட்டிய விடா முயற்சியுடன்... அவர் காட்டிய ஒழுக்கத்துடன்... அவர் காட்டிய இன பக்தியுடன்... - 30 ஆயிரம் தமிழ் போர் வீரர்கள் அணிவகுத்த - அவர் ஏற்றி வைத்துவிட்டுப் போயிருக்கும் எங்கள் தேசத்தின் தேசியக் கொடியின் கீழ் நாமும் அணிதிரள்வோம்.
அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து புதிய வேகத்துடன்,
முன்னெடுப்போம்... 'தமிழீழப் போர் - 3'
-தி.வழுதி

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...