ஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் வெற்றிலை பாக்கு மீது ஒரு கிரேஸ் வந்துவிட்டது. வயசாயிட்டான்னு தெரியலை?! 😆
மாயவரம் போயிருந்த போது, லாகடத்தில் நல்ல கும்பகோணம் கொழுந்து
வெற்றிலையும், நிஜாம் பாக்கும் கூடவே ஏஆர்ஆர் சுகந்த பாக்கும் வாங்கிக்
கொண்டேன்.
ரெண்டு வெற்றிலையை
எடுத்து ஈரம் போக வேட்டியில் துடைத்து, ஆள்காட்டி விரலில் கொஞ்சோண்டு
சுண்ணாம்பை எடுத்து சுமார்ட் போனை தடவுவது போல் வெற்றிலையில் தடவி, நிஜாம்
பாக்கை சேர்த்து, வெத்தலையை நறுவிசாக மடித்து காம்பு மற்றும் நுனி
கிள்ளி ரெண்டு மடிப்பு மடித்து கடைவாயில் வைத்து நறுக்கென்று கடிக்கும்
போது மொத்த சுகந்தமும் வாயிக்குள் ஊழிக் காற்றாய் சுழன்றது !
இப்படி வெற்றிலையை மடித்துக் கொண்டு இருந்த என்னை விநோதமாக பார்த்தார் என் அப்பா. 'என்னாச்சுடா உனக்கு ? ' என்றார் கவலையாய்.
'சும்மா'என்றேன்.
--------
ஊரில் நம்ம பெரிசுகள் வெற்றிலை போடும் அழகே அழகு ! மேற்படி வெற்றிலையை எல்லா சிஷ்ருயையும் செய்து, சவ்வுதாளில் இருக்கும் பன்னீர் புகையிலையை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலில் லாவகமாக எடுத்து உள்ளங்கையில் வைத்து சிறு உருண்டையாக உருட்டி கடைவாயில் அதக்குவார்கள். அதற்குள் அந்த பன்னீர் புகையிலை வாசனை ஏரியாவே கமகமக்கும். அதுவும் கும்பகோணம் பன்னீர் புகையிலையின்னா கேட்கவே வேண்டாம், வாசனை ஒரு தூக்கு தூக்கும் !
அதுவும் கிராமத்தில் சில மூப்பர்கள் வெற்றிலை பாக்கை வெற்றிலைப் பெட்டி (செல்லமா அதற்கு செல்லமுன்னு பெயர்) வைத்து க் கொள்வார்கள், சிலர் சுருக்கு பை , ரெக்சின் ஷீட், பிளாஸ்டிக் தாள் என்று விதவிதமாக வைத்துக் கொள்வார்கள்.
ரெக்சின் ஷீட்டோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டோ சதூரமாக வெட்டி, மடிக்க தோதா ஒரு முனையில் நூலைக் கட்டி வைத்துக் கொள்வார்கள். உள்ளே வெற்றிலை , பாக்கு அல்லது லெட்சுமி சீவல், புகையிலை பொட்டலம், சுண்ணாம்பு டப்பி கூடவே ஒரு பாக்கு வெட்டி என்று சகலமும் இருக்கும்.
அதை அவர்கள் வைத்துக் கொள்ளும் அழகு இருக்கிறதே , அப்பப்பா.... அப்படி ஒரு அழகு !
கோடி ரூபாய் கொடுத்தால் கூட அப்படி பத்திரமாய் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
வெற்றிலை பெட்டிக்கும் பாக்கு பொட்டலத்திற்கும்
அப்படி ஒரு முக்கியத்துவம் சாமானியனின் வாழ்வில்.
-மபா