'காதல் வைபோகமே காணும் நன்னாள் இதே' இந்தப் பாடல் மீது எனக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உண்டு. ஆர்ப்பாட்டமான துள்ளல் இசைக்கு இப்பாடலை தயக்கமின்றி கை காட்டலாம்.
சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தில்
மலேஷியா வாசுதேவன் எஸ். ஜானகி ஆகியோரின் இளமைக் குரலில், கேட்கும் போதெல்லாம் இப்பாடல் நமக்குள் உற்சாகத்தை பீய்ச்சி அடிக்கும். பாடலில் பல்லவி கொஞ்சம் போர் ரகம்தான், பாடலின் தொடக்கமே சுலோவாக இருக்கும். பிற்பாடு சரணத்தின் போது.... டாப் கியரில் எகிற ஆரம்பித்து, கேட்ப்பவர்களை அப்படியே கிறுகிறுக்க வைத்துவிடும்.
என்னைப் போல பெருவாரியான இசைஞானியின் ரசிகக் குஞ்சுகளுக்கு இது இளையராஜா பாடல் என்ற உள்ளார்ந்த புலகாங்கிதம் இருந்தது. கடைசியில் பார்த்தால் இது அவரது தம்பி கங்கை அமரனின் பாடல் ! அடடா... என்னவோரு இசைப் படையல் ?! சும்மா கடாவெடட்டி விருந்து வைத்திருப்பார்.
அதுவும் சரணத்தில் வரும் இந்தப் பகுதி 'ஏ' கிளாஸ் !
கோடை காலத்தில் தென்றல்
குளிரும் பெளர்ணமி திங்கள்
வாடைக் காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்
வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு (காதல் வைபோகமே)
போகட்டும், இந்த விலாவரிப் பதிவே....
இந்த வீடியோவுக்குதான்.
குளிரிலம் கல்லூரி குமாரிகள் இப் பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள். எந்தக் கல்லூரி என்று தெரியவில்லை? வண்ண வண்ண புடவையில் கூலர்ஸ் சகிதமாக அவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே... ஆஸம் !....ஆஸம் !! சேர்ந்திசைப் போல... எல்லோரும் ஒன்றிணைந்து ஆடியிருக்கிறார்கள். ஆட்டத்தின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டுவிடுகிறது.
என்ன... இவர்கள் ஆடும் ஆட்டத்தின் முழு வீடியோவும் கிடைத்தால் கண் குளிர்ச்சியாக... ஜென்ம சாபல்யம் அடையலாம். ஹூம்... ? !
படம்: சுவரில்லாத சித்திரங்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
#சுவரில்லாதசித்திரங்கள்
#கங்கைஅமரன்