அசைவ உணவை தவிர்ப்பது ஆபத்து
"சைவ உணவே சிறந்தது, அசைவ உணவை தவிர்ப்பது நல்லது'' என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.வெறும் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சில வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது. மூளை சுருங்கும் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறியுள்ளனர். "பி12" வைட்டமின் சத்து பால், இறைச்சி, மீன், ஈரல் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.இவற்றை சாப்பிடாத வர்களுக்கு "பி12" குறைபாடு ஏற்பட்டு மூளை திறன், உடல் திறன், ஞாபக சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.குடிப்பழக்கம் உள்ளவர் களும், இந்த பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகம். அசைவ உணவும் அவசியம் என்பதற்காக கொழுப்பு சத்துஉணவை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக