சனி, நவம்பர் 29, 2008

வாத்து மடையர்களின் இலக்கியம்.


ஏனோ... இப்போவெல்லாம் கவனம் இலக்கியம் மேல் திரும்புவதில்லை.

கல்லூரி காலங்களில் எங்களுக்கு நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்திய பெருமை கோமல் சுவாமிநாதனின் " சுபமங்களா" வுக்கு உண்டு. தேடி நின்று நித்தம் படித்த காலங்களில் எங்களுக்கு நல்ல இலக்கிய அறிவை தந்தது சுபமங்களா. நவீன இலக்கியம், தலித் இலக்கியம், முற்போக்கு இலக்கியம், ஹை-கூ கவிதைகள் என்று இலக்கியத்தின் பல பரிமாணங்களையும், கற்று தந்தது சுபமங்களா. மாயவரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடையில் சுபமங்களா வந்ததும் எடுத்து வைத்துவிடுவார்கள். அந்தளவிற்கு அதன் தாக்கம் எங்கள் மீது இருந்தது.

அப்படியெல்லாம் இலக்கியம் பார்த்த எங்களுக்கு, தற்போது உள்ளதெல்லாம் நல்ல இலக்கியமாக தெரியவில்லை.

வாத்து மடையர்களின் இலக்கியம்.

இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு, எழுதுபவனுக்கும்புரியாத, படிப்பவனுக்கும் புரியாத பாஷையில் பேசி ஓவராய் மப்பு அடித்து பிதற்றும் குடிகாரனை போல் உளரும் இந்த காலத்து வாத்து மடையர்களின் இலக்கியம் எனக்கு சுத்தமாய் பிடிப்பதில்லை.

அதை விட கொடுமை, பெண்களின் ஜனன உறுப்புகளை கொண்டு உதாரணங்கள் சொல்வதும், பால் மாறி உறவு கொள்வதை ஏற்று கொள்ளும் கொடிய மூளை மழுங்கியவர்களின் கூட்டம். இந்த கூட்டங்களின் பெருவாரியான மனிதர்களை (?) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள அவர்கள் எழுதும் எழுத்துகளைப் பார்த்தாலே தெரியும். படித்தோமானால் மூளைதான் நசிந்து போகும்.

அதுவும் இந்த வலை பதிவாளர்களின் வலைகளை பார்த்தால் வாந்திதான் வருகிறது. வலை பதிவாளர்கள் தான் பதிவில் , எத்தனையோ நல்ல விழயங்களை தங்களது. பதிவில் யோனியும், ஆண்குறியும் உரசுவதை சொல்வது நாகரிகம் யன்றும் இலக்கியம் என்றும் நினைக்கிறார்கள்.


இதில் நாராசமாய் வார்த்தை வேறு, ரோட்டில் போகும்போது பார்ப்போமே... துணியை தூக்கிக்கொண்டு எவனாவது ஒன்னுக்கு இருப்பான்அது போல் ங்கோத்தா...ங்க்ம்மா... என்று அருவருப்பான வார்த்தை வேறு. இந்த அருவருப்பான வார்த்தைகள் தான் நவீன இலக்கியம் என்று நினைக்கிறார்கள்.


அதோட... குடிப்பதை பற்றிய விலாவாரியான விரிவாக்கம் வேறு. ஜெயகாந்தன் கூட பாண்டிசேரியில் பீர் அடித்ததை, மிக அழகியலோட விவரித்து இருப்பார்.

ஆனால் இவர்கள் விவரிக்கும் முறையே வேறு. சிலரின் எழுத்தில் குடிப்பதை பற்றித்தான் அதிகமாக இருக்கும். அதன் பல் வேறு பரிமானங்களையும் எடுத்துரை ப்பதையே தங்களது முக்கிய பணியாக வைத்துள்ளனர்.

குடிப்பது, படுப்பது இதுதான் வாத்து மடையர்களின் நவீன இலக்கியம்.

வாழ்க இவர்களது இலக்கியப் பணி.


-தோழன் பா


Share/Bookmark

1 கருத்து :

சுரேஷ் கண்ணன் சொன்னது…

அன்புள்ள ம.பா.,

நல்ல பதிவு. :-)

உங்களுடைய பதிவுகளை
http://www.tamilmanam.net/index.html
அல்லது

http://www.tamilish.com/

போன்ற வலைத்திரட்டிகளில் இணையுங்கள். இதன் மூலம் அதிகம் பேர் உங்கள் பதிவைப் படிக்க முடியும்.