வெள்ளி, மே 22, 2009

வரலாற்றில் தேவதாசிகள்

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள குறிஞ்சி பதிப்பகம் "வரலாற்றில் தேவதாசிகள் " என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. தேவதாசிகள் பற்றி முழுமையான தகவலோடு வரும் நூல் இது எனலாம்.
விலை Rs.150/-.
304 பக்கங்கள்.
PHONE: 044 26502086

தமிழகத்தில் கலை பொக்கிஷங்களாய் திகழ்ந்த தேவதாசியர் இலக்கியத்தில், சமுகத்தில்,வரலாற்றில் பெற்றிருந்த சிறப்புகளையெல்லாம் நிழற்படம் போல இந்நூலில் விளக்கிக்கொண்டு செல்கிறார் இன் நூலில் ஆசிரியர் சி.எஸ்.முருகேசன்.

அதிலிருந்து ஒரு பகுதி....

பரத்தையர் மரபு தேவதாசியர் மரபு

தமிழர் அன்று தொட்டு இந்நாள் வரையிலும் போர், போர் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பதற்கு அவர்களின் இரத்தத்தில் இயல்பாய் கலந்துவிட்ட வீர உணர்ச்சியே அடிப்படை காரணம். இந்த வீர உணர்ச்சி மற்றும் போர் செயல்களினால் அன்றைய தமிழகத்தில் ஆடவர் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை மிகுந்தது. போரில் வெற்றி பெற்ற பகைவன் நாட்டிலுருந்து பிடித்து வரப்பட்ட பெண்களும் உள்நாட்டு பெண்களுடன் கலந்து தமிழகத்தின் பெண்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியது.

இப்படிப் பெருகிய பெண்களின் எண்ணிக்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் சிரமமேற்பட்டது. அதனால் பரத்தமையில் ஈடு பட்ட பெண்களைத் தவிர்த்து ஏனையப் பெண்களை கோவில் ஊழியம் செய்வதிலும், அரசாங்க பணிகளுக்காக ஒற்று வேலை செய்வதிலும் ஈடுப்படுதினர்.

அகவே இந்த பரத்தையர் அமைப்பு தேவதாசியர், ராஜதாசியர், சமுக தாசிகள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிந்து காணப்பட்டது.
-தொடரும்
Share/Bookmark

கருத்துகள் இல்லை :