வெள்ளி, ஜனவரி 21, 2011

சென்னை புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்.


 ....பாகம் இரண்டு

முதல் பாகம்


பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
'கான் அப்துல் கபார் கான்'                                                                 இந்த 34வது புத்தகக் காட்சியில் நான் அதிகம் வாங்கியது, சிறுகதைகள்தான். பொதுவாக நான் அதிகம் சிறுகதைகள் வாங்குவதில்லை. ஆனால்,  இந்த வருடம் நிறைய சிறுகதைகள் வாங்க ஆர்வம் காட்டினேன். அதில் சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை'  மற்றும் ஜே.ஜே சில குறிப்புகள்.  (இதுவரை படிக்கவில்லை).   புத்தகம் வாங்கும் போது  கண்ணன்  (சுந்தர ராமசாமியின் மகன்) அவர்களை சந்திக்க நேர்ந்தது.    தினமணி அண்ணாசாலையில் இருக்கும் போது; அப்போதைய தினமணி கதிர் ஆசிரியர் இளையபெருமாளை சந்திக்க வருவார். அப்போது பார்த்ததுண்டு.  அறிமுகப்படுத்திக் கொண்டதும்...  எழுந்து நின்று வாஞ்சையோடு விசாரித்தார்!

இவர்களது  காலச்சுவடு பதிப்பகம் இம்முறை  நல்ல விஷயம் ஒன்றை செய்திருக்கிறது. மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் கதைகளை தமிழாக்கம் செய்து நேர்த்தியான முறையில் வெளியீட்டுள்ளனர். புகழ்பெற்ற கதைகளான 'மதில்கள், பாத்துமாவின் ஆடு, சப்தங்கள், பால்யகால சகி" ஆகிய   புத்தகங்களை ஒரு சேர எடுத்தேன். இதில் மதில்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு தேசிய விருதை அள்ளியது. அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி தனது ஒப்பற்ற நடிப்பாற்றலை இத் திரைப்படத்தில் கொடுத்திருப்பார்.
                                                                *****************

எல்லை காந்தி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட 'கான் அப்துல் கபார் கான்' அவர்களின் வழ்க்கை வரலாறு 'எனது வாழ்வும் போராட்டமும் ' என்ற நூல். ஒரு போராளியின்  வாழ்க்கை வரலாறு, எப்போதும் எல்லோரும் விரும்புவதாகத்தான் இருக்கும்.   இதை கோவை தமிழோசை பதிப்பத்தார் வெளியீட்டுள்ளனர்.

*****************


                                                    
'குற்ற முத்திரை' இந்திய ஆதிவாசிகளின் அவல நிலையைக் கூறும் நூல்.  திலீப் டிசொளசா 'Branded by Law' என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய  நூலை, மக்கள் கண்காணிப்பகம்   தமிழில் மொழிபெயர்த்து வெளியீட்டுள்ளனர்.

                                                                 *****************

'சிதம்பர நினைவுகள்'-  மலையாள மூலம்  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு .
வெளியீடு:வம்சி புக்ஸ்

'இதில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற பெயரை பார்த்ததுமே புத்தகத்தை கையில் எடுத்துவிட்டேன்.  அதற்கு காரணம் இருக்கிறது. என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு இதழில்... யரோ ஒருவன்... தான் சிவாஜியை சந்தித்ததை எழுதிருந்தான்.  அந்த மகா நடிகன் தன்னிடம் அமர்ந்து பேசியதை, சிம்மம்மாக நின்று கர்ஜித்ததை,  தனக்கு ஸ்காட்ச் விஸ்கி பரிமாரியதை  என்று, ஒரு சாதாரண சந்திப்பை இலக்கியத்தரத்தோடு அந்த கட்டுரையில் விமர்சித்திருப்பார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

படித்து முடித்ததும்தான் பெயரைப் பார்த்தேன் மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று இருந்தது. இலக்கியத்தில் புறந்தள்ள முடியாத எழுத்து அந்த எழுத்து!. அன்றிலிருந்து அந்த எழுத்து என் மனதில் தங்கிவிட்டது. இது உண்மை!

இதில் ஒரு ஆச்சரியமான ஒரு விஷயம், இப் புத்தகத்தை தமிழாக்கம் செய்துள்ள  கே.வி.ஷைலஜாவும் தனது முன்னுரையில் அந்த கட்டுரையைத்தான் குறிப்பிட்டுள்ளார் என்பதுதான்.

                                                       *****************


சமூக உரிமைப் போராளி 'இம்மானுவேல் தேவேந்திரர்' பற்றிய நூல். முதுகுளத்தூர் கலவரமும் அதைத் தொடர்ந்து  இம்மானுவேல் படுகொலை செய்யப் பட்டதும் படித்திருக்கின்றேன். அதைப் பற்றி தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதால் இப் புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன்.  இதில் ஒரு விஷயம் உறுத்தியது. இம்மானுவேல் 'தேவேந்திரர்', காமராசர் 'நாடார்' என்று அவர்களது சாதிப் பெயரும் கூடவே இருந்ததுதான் ஏன் என்று தெரியவில்லை?!. வெளியீடு: பதிப்பக பெயர் இல்லை.

                                                            *****************


' தோழர்களுடன் ஒரு பயணம்' - அருந்ததி ராய்.
எதையும் எட்ட நின்று எழுதுபரல்ல அருந்ததி ராய்.   சட்டிஸ்கர் மாநிலத்தில்  தான்தேவாடாவில் அவர்  மாவோயிஸ்ட்டு தோழர்களை சந்திக்கிறார். அதன் விரிவான பதிவே இன் நூல்.வெளியீடு: பயணி.

                                                     *****************

'கண்ணாடி உலகம்' -கவிதை தொகுப்பு. வே.நெடுஞ்செழியன்.  கவிதையாளர் திருவண்ணாமலை பகுதையச்  சார்ந்தவர் என்று நினைக்கிறேன்.  நிறைய சாமி மறுப்பு...  கூடவே..நவீன முற்போக்கு தொகுப்பு !

                                                  *****************

மற்றும் 'புதுமைப்பித்தன் கதைகள்', கிரியாவின் 'தற்காலத் தமிழ் அகராதி' (தமிழுக்கு கிடைத்த வெகுமதி)   இரண்டும் முந்தயை பதிவில். 

முதலில் எடுத்த புத்தகம் கடைசியாக...ஞானியின் 'ஓ' பக்கங்கள்  2009 -20'
வெளியீடு:  ஞான பானு

 புத்தகங்கள்  பற்றிய விமர்சனம் வரும் பதிவுகளில் (அ ) நேரம் கிடைக்கும்போது.
Share/Bookmark

4 கருத்துகள் :

பத்மா சொன்னது…

wowwwwww
happy reading sir

தமிழன் வீதி சொன்னது…

நன்றி உமா, தங்களது வருகைக்கும் வாழ்த்திருக்கும்.

பத்மா சொன்னது…

நான் உமா இல்லையே !

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி பத்மா!
தவறுக்கு மிக அதிகமாக வருந்துகிறேன். மன்னிக்கவும் தோழி!
(ஒரு முறைக்கு இரு முறை பெயரை சரிப்பார்த்துக்கொண்டேன்).


தங்களது வலைப் பூ பார்த்தேன், ஒவ்வொரு பதிவையும் மிக நேர்த்தியாக, அழகாக பதிந்து இருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.