இந்த பதிவின் தொடர்ச்சி.....
இன்று போகி என்பதால் பெரும்பாலான சாலைகள் குறைவான போக்குவரத்தோடேயே இருந்தது. மதிய உணவை ஸ்டேர்லிங் ரோடு சங்கீதாவில் முடித்துவிட்டு, சென்னை புத்தகக் காட்சியில் நுழையும் போது கூட்டம் களைகட்டியிருந்தது.
உள்ளே நுழைந்து இரண்டு சுற்று முடிவதற்குள் கை கனத்தவிட்டது.
இந்தவருடம் என்னை பெரிதும் கவர்ந்தது 'புதுமைப்பித்தன் கதைகள்' முழுமையான தொகுப்பு. சந்தியா பதிப்பகத்தின் மற்றுமொரு அங்கமான புதுமைப்பித்தன் பதிப்பகம் இத் தொகுப்பினை வெளியீட்டுள்ளனர்.
அதில் ஒரு ஆச்சரியமான் விஷயம் புத்தகத்தின் எடை, மிக எளிதாக நாம் தூக்கிப் படிக்கும் விதத்தில் அமைந்திருந்ததுதான். சுமார் 799 பக்கங்களில் ஆச்சர்யம் மூட்டும் அளவில் இப் புத்தகம் வெளிவந்துள்ளது. இதை எம். வேதசகாயகுமார் தொகுத்துள்ளார்.
விலையும் குறைவுதான் ரூ350/-
நான்வாங்கிய வேறுசில புத்தகங்கள்.
- கிரியாவின் தமிழ் அகராதி
- ஞாநியின் 'ஓ' பக்கங்கள் தொகுப்பு
- வைக்கம் முகமது பஷிரின் சிறுகதைகள் (காலச்சுவடு பதிப்பகத்தார் மிக நேர்த்தியாக இப் புத்தகங்களை வடிவமைத்துள்ளனர்) பாராட்டுகள்.
- இம்மானுவேல் கொலைவழக்கு
- இந்திய பழங்குடியினர்.
- கான் அப்துல் கபார் கான் - வரலாறு
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக