திங்கள், செப்டம்பர் 12, 2011

78ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தினமணி.





தினமணி  பற்றி சில சுவராசியத் துளிகள்.....
1932இல் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 13ஆவது நினைவு நாளன்று, அதன் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களால் தினமணி தொடங்கப்பட்டது.  பின்னர் திரு.ராம்நாத் கோயங்கா அவர்களால் சீரிய முறையில் வளர்க்கப்பட்டு,  நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளோடு உயர்ந்து நிற்கிறது தினமணி.

  • தொடங்கிய நாள் முதல் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. அதனாலயே அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பை தொடர்ந்து சாம்பாதித்துக் கொண்டு வருகிறது. (பணம் காசு சம்பாதிப்பது குறைவுதான். )
  • நெருக்கடி நிலையின்போது அதிகம் பாதிக்கப்பட்டது தி இந்தியன் எஃஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்கள்தான். 
  • 2007வரை  சென்னை கிளப் ஹவுஸ் சாலையில் இயங்கி வந்த தினமணி,  தனது ஜாகையை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு மாற்றிக்கொண்டது.
  • இடையில் சிறிது தொய்வை சந்தித்த தினமணி, ஆசிரியர் வைத்தியநாதனின் வருகைக்குப் பின்னர் சற்று தெம்பாக  நடைபோட்டு வருகிறது.
  • தமிழகத்தில் மக்கள் மனமாற்றதிற்கு முக்கிய காரணியாக தினமணி திகழ்ந்துவருகிறது.
  • தினமணி தனது முதல் பக்கத்தில் அரை பக்கத்திற்கு மேல் விளம்பரம் பிரசுரிக்கமாட்டாது.  ஏனென்றால் 'அது  வாசகர்களின் பகுதி, அதை முழுமையாக ஆக்ரமிக்க நமக்கு அதிகாரம் இல்லை' என்று பதில் வரும்.   இவ்வேளையில் தினமலர் , தினத்தந்தி மற்றும் தினகரனை நினைத்துப் பாருங்கள்.  தினமலரில் முதல் பக்கத்தில் வெறும் 'ஷாக்' என்றுதான் இருக்கும். மீதி இடம் முழுவதும் விளம்பரம் நிறைந்திருக்கும். ஷாக் யாருக்கு....? அதன் வாசகர்களுக்கா....?
  • தமிழகத்தின் மிகப்பழமையான நாளிதழ் தினமணி.
  • டி.எஸ் சொக்கலிங்கம், ஏ.என் சிவராமன், ஆர்.எம்.டி. சம்பந்தம் போன்ற திறன்படைத்தோர் ஆசிரியர்களாக பணி புரிந்துள்ளனர்.
  • பதிப்பக விளம்பரங்கள் தினமணியில்தான் முதலில் வரும். எப்படி சினிமா எடுப்பவர்கள் முதலில் 'தினத்தந்தியில் விளம்பரம் செய்வார்களோ, அதேபோல் புத்தக விற்பனை விளம்பரம் முதலில் தினமணிக்குதான் வரும்.
  • பதிப்பகங்களின் பாதுகாவலன் தினமணி.  சென்னையில் வருடம் தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்  தினமணிதான் முக்கிய ஸ்பான்சர்.
  • மதராஸ் ராஜதானியிலிருந்து தமிழ்நாடு பிரிந்த 50தாவது வருடத்தை 'தங்கத் தமிழகம்' என்ற பெயரில் 100 பக்க (முழு பக்கம்) ஆளவில் சிறப்பிதழாக  கொண்டுவந்து சாதனை செய்தது தினமணி.  தமிழகத்தின் தகவல் களஞ்சியாமாகத்  தங்கத் தமிழகம் இன்றும் திகழ்கிறது.  தினமணிக்கு  நிகர்  தினமணிதான் என்பதை நிருபித்தது.
  • தங்கத் தமிழகம் சிறப்பாக வெளிவர  அன்றைய தினமணி கதிர் ஆசிரியர் சிவக்குமாரின் பங்கு போற்றுதலுக்குரியது. (தங்கத் தமிழகம் பெயர் உபயம்... அடியேன் என்பதையும் இத் தருணத்தில் சிரம் தாழ்த்திக் கூறிகொள்கிறேன்)
  • மாணவர் மலர், மருத்துவ மலர், தீபாவளி மலர் மற்றும் இசை மலர் என்று வருடம் தோறும் என்னற்ற சிறப்பிதழ்களை கொண்டு வருகிறது.
  • தினமணி வெளியீட்ட  'அண்ணா நூற்றாண்டு மலர்', 'செம்மொழி கோவை' சிறப்பிதழ் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
  • கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டை ஒட்டி எல்லா  நாட்களும் நான்கு பக்கத்தில் சிறப்பிதழை வெளியிட்டு தமிழுக்கு சிறப்பு சேர்த்தது.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி தினமணி மீது அவ்வப்போது கருத்து யுத்தம் நடத்தினாலும்,  தினந்தோறும் தினமணியை வாசிக்காமல் இருக்கமாட்டார் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.
  • தினமணி கருணாநிதியை வாழ்த்தினாலும் தாழ்த்தினாலும் அடுத்த நாள் அது முரசொலியில்  எதிரொலிக்கும்.
  • தமிழ் நாளிதழ்களில் இன்றும் தலையங்கம் வருவது தினமணியில்தான்.
  • ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு அவர்களது செய்திகளை தாய் உள்ளத்துடன் வெளியிடும் தினமணி.
  • இலங்கையில் நடைபெற்ற  போரில் பிரபாகரன் கொல்லப்பட்டபோது, தனது முதல் பக்கத்தில் 'பிரபாகரன் வீர மரணம்'  என்று வெளியிட்டு அந்த மாவீரனுக்கு மரியாதை செய்தது தினமணி.
  • இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன் கொல்லப்பட்டபோது தினமணி தீட்டிய தலையங்கம்,  உலகத் தமிழர்களால் பெரிதும் பேசப்பட்ட, . முக்கியமான தலையங்கமாக இன்றும் கருதப்படுகிறது.
  • மற்ற பத்திரிகைகளில் கற்பழிப்பு, கள்ளக் காதல், கொலை போன்ற சம்பவங்கள் பெரிதுப்படுத்தபட்டு வரும்போது...அந்த செய்தி தினமணியில் ஒரு காலத்தில்தான் வரும்.  சில நேரங்களில் வராமலும் போகும்.
  • விபத்தில் இறந்தவர்கள் அல்லது கொலையுண்டவர்களின் புகைப்படங்களை அப்படியே வெளியிடாது தினமணி. மாறாக அவர்கள் உயிரோடு (live pixure) இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையே வெளியீடும்.
  • தமிழக நாளிதழ்களில் தினமணியை மட்டுமே அதிகம்பேர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
  • தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தினமணியையே அதிகம் தேர்வு செய்கின்றனர். .
  • அன்மையில்  புது தில்லியில் தனது 8வது பதிப்பை தொடங்கியது தினமணி.
  • இன்றும் சிலர் தினமணியை தனிப்பட்ட முறையில் சேமித்து பாதுகாத்து வருகின்றனர்.
  • இப்படி என்னற்ற தகுதிகளை கொண்டது தினமணி நாளிதழ். இந்த வரலாற்றுதினத்தில்  தினமணியை வாழ்த்தி வணங்குகிறது தமிழன்வீதி.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...