வியாழன், நவம்பர் 03, 2011

'அதிகார போதையும் தவறான பாதையும்'


அண்ணா நூற்றாண்டு நூலகம்


"தேவையான உள்கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட ஒரு நூலகத்தை மாற்ற வேண்டியது இல்லை"


அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது ஜெயலலிதாவின் இந்த அதிரடி உத்திரவு. ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகத்தை இப்படி குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் முடிவு யாரும் எதிர்பாராத ஒன்று. 
கருணாநிதி அரசு செய்த நல்ல திட்டத்தை,ஜெயலலிதா இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மாற்றுவது,அவருக்கு வாக்களித்த மக்களுக்கு
 இழைக்கப்படும் துரோகம்.


சென்னை கோட்டூர்புரத்தில், 8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. 

பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எனும் சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Pediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 1.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.  அதிகார போதையால் ஜெயலலிதா செய்யும் தவறுகள்,  நிச்சயம் அவருக்கு மக்கள் மன்றத்தில்  சரிவைத்தான் ஏற்படுத்தும்.  



மிழகத்தின் பெரிய அரசாங்க மருத்துமனைகளிலும் குழந்தைகளுக்கு தேவைப்படும் அவசியமான மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது . குறிப்பாக குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் chemotherapy drugs க்கு , பலநேரங்களில் shortage இருக்கும்.  சிகிச்சையின்போது ஏற்படும் vomiting , secondary infections controll பண்ண தேவைப்படும் higher antibiotics ஆகியவற்றிக்கு வெளியேவுள்ள தனியார் மருந்துக்கடையில்தான் drugs வாங்கவேண்டியிருக்கும் . இந்தநிலைமையில் இருக்கும் அரசுமருத்துமனைகளின் தரத்தை இதுவரை உயர்த்தியதாக தெரியவில்லை , இவர்கள்தான் குழந்தைகளின் நலனுக்காக நூலகத்தை அரசுமருத்துவமனையாக்க முயற்சிக்கிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தேவைப்படும் அடிப்படை மருந்துகள்கூட கிடையாது , தமிழக அரசாங்கம் குழந்தைகளின் மருத்துவ நலனில் காட்டும் அக்கறை மிகவும் மோசமானது ... மருத்துவனை விரிவாக்கம் கண்டிப்பாக தேவைப்படும் சூழல்தான் இது , ஆனால் அதை நூலகத்தை மாற்றித்தான் செய்வேன் என்பது மிகவும் கீழ்த்தரமானது. Source  Facebook .


குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை  எழுப்ப முடியும். 

அதற்காக தேவையான உள்கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட ஒரு நூலகத்தை மாற்ற வேண்டியது இல்லை. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போது அமைந்திருக்கும் இடம், அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை.  இதிலேயே மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்தவும் முடியும்.

ஆகவே, ஜெயா அரசு தனது அமைச்சரவை முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே தமிழக மக்களின் தற்போதைய கோரிக்கை. 

மனம் மாறுவாரா ஜெயலலிதா....?


கடைசி செய்தி: 

முன்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த செம்மொழி நூலகத்தை மாற்றினார். இப்போது ஆசியாவின் இரண்டாவது நூலகமான அண்ணா நூலகத்தை மாற்றியிருக்கிறார்.  

ஜெயலலிதாவிற்கு நூலகமென்றாலே பிடிக்காதா....?

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//மனம் மாறுவாரா ஜெயலலிதா....? // no.no.no.no.no. no.no.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

சுஜி, மாறாவிட்டால் மாற்றுவோம்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...