வெள்ளி, நவம்பர் 04, 2011

ஆறு அமைச்சர்களை நீக்கி, நூலக இடமாற்ற பிரச்சனையை திசை திருப்பிய ஜெயலலிதா.

  

ஜெயலலிதா


ந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடை பெறுகிறது என்றார் கலைஞர். 
அதை நன்கு உணர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. ஒரு கோட்டை அழிக்காமல் சின்னதாக்கும் பழைய தந்திர கோட்பாட்டை இங்கு பயன்படுத்திருக்கிறார். 

அண்ணா நூலக மாற்றத்திருக்கெதிராக  டிவியிலும் பத்திரிகையிலும் இனையத் தளத்திலும் மக்களின்  எதிர்ப்பால் நேற்று தமிழகமே சற்று பதற்றமாகத்தான் இருந்தது.  பல்வேறு அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு பேஸ் புக், ட்வீட்டர் வரை  நேற்று ஜெயலலிதா கடும் கண்டனத்திற்கு உள்ளானர்.  கடந்த 6-7 மாதத்தில் புதிய சட்டசபை மாற்றம், செம்மொழி நூலகம் மற்றும் அண்ணா நூலக  இடமாற்றம் என்று மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார்.

 நூலக மாற்றத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட பொது நல வழக்கில்,  நீதி மன்றம் இன்று இடைக் கால தடையை விதித்து,  ஜெயலலிதாவின் தலையில் குட்டியிருக்கிறது.  இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை குறைக்க என்னிய ஜெயலலிதா, அதிரடி உத்திரவாக தனது ஆறு அமைச்சர்களை நீக்கி, முந்தைய செய்தியினை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளார்.  

நீதிமன்றத்தால் நடத்தப்படுகிறதா  தமிழக அரசு?

இல்லை என்றால் நாளை வரும் அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நீதிமன்ற தடையுத்திரவுதான் முதல் பக்கத்தில் அல்லது முதல் இடத்தில்  வந்திருக்கும். ஆறு அமைச்சர்களை நீக்கியதன் மூலம், இந்த செய்தியினை தலைப்புச் செய்தியாக மாற்றியிருக்கிறார்.  இப்படி செய்யவும் காரணமிருக்கிறது. சமச்சீர் கல்வியை அமல் படுத்தவேண்டும் என்று நீதிமன்றம்  சொன்னபிறகே  ஜெயா அரசு சமச்சீர் கல்வியை அமல் படுத்தியது.

இப்போது அண்ணா நூலக மாற்றத்திற்கும்  நீதி மன்றம் தடை உத்திரவு போட்டிருக்கிறது. இப்படி தமிழக அரசே இப்போது நீதி மன்றத்தால்தான்  நடத்தப்படுகிறது என்னும் அளவிற்கு தமிழக அரசின் தலையில் அவ்வப்போது குட்டி,  நல் வழியில் செல்ல உத்திரவு இடுகிறது நீதிமன்றம்.

இல்லையென்றால் ஏன் இந்த அறிபறியில் ஆறு அமைச்சர்களை நீக்க வேண்டும்.  நீக்குவதற்கு ஆயிரம் காரணம் இருந்தாலும், அதை செய்ய இது நேரம் அல்லவே....?

ஒரு பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க மற்றொரு பிரச்சனையை கிளப்பியுள்ளார் ஜெயலலிதா. 

இது புத்திசாலித்தனமா....? இல்லை புத்தி பிசகியத்தனமா....?

Share/Bookmark

4 கருத்துகள் :

உலக சினிமா ரசிகன் சொன்னது…

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி! உலக சினிமா ரசிகன்.
வந்திடுவோம் வாழ்த்துக்களை தெரிவித்திடுவோம்.

பூங்குழலி சொன்னது…

இப்படியெல்லாம் சால்ஜாப்பு வேலை செய்து பழக்கப்பட்டவர் அல்ல ஜெ ...மந்திரிசபை மாற்றம் அவருக்கு பெரிய விஷயமே அல்ல ....அவராட்சியில் செய்தியை பார்த்து விட்டுதான் மந்திரிகள் வேலைக்கே கிளம்ப வேண்டியிருக்கும் ..இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை .

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி பூங்குழலி.

இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது. 5 ம் தேதியிட்ட நாளிதழ்களின் தலைப்புகளைப் பார்த்ததால் தெரியும். அண்ணா நூலக நீதிமன்றத் தடை இரண்டாம் இடத்திலும், 'அமைச்சர்கள் மாற்றம்' தலைப்புச் செய்தியாகவந்திருப்பதை....இல்லையென்றால் என்னாகியிருக்கும். நீதிமன்றத் தடைதான் பிரதான இடம் பிடித்திருக்கும்.