வெள்ளி, டிசம்பர் 16, 2011

சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது.


ந்தியாவில் மிகப் பெரிய புத்தகக்காட்சியாக வளர்ந்துவரும் சென்னை புத்தகக் காட்சி அடுத்தமாதம் (ஜனவரி)  5ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தொடங்குகிறது.


35வது புத்தகக் காட்சி ஜனவரி மாதம் 5ம் தேதி தொடங்கி  ஜனவரி 17ம் தேதிவரை நடைபெறுகிறது.  புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறையை உள்ளிட்டே அந்த நாட்களில் வருடம் தோறும் இக் காட்சி நடைபெற்றுவருகிறது.  கடந்த நவம்பர் மாதம் பதவியேற்றுக்  கொண் ஆர்.எஸ்.சண்முகம் (செண்பகா பதிப்பகம்) அவர்களின் தலைமையிலான   பபாசி நிர்வாகிகள் குழு,  முழு மூச்சுடன் புத்தகக் காட்சிக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது!.

கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், இந்த முறை கண்காட்சியில் இடம் பெறுகின்றன.  புத்தகக் காட்சியில் இடம் பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்தவன்னமே இருக்கின்றது.  அதேபோன்று புத்தகக் காட்சியில் இடம் கிடைக்காமல் திரும்பிச் செல்லும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் கனிசமான அளவில் உயர்ந்துதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகக் காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் பல்வேறு இலக்கிய உரைகள், புத்தக வெளியீடுகள், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இன்னிசை பாட்டு மன்றம் போன்ற பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இம் முறை சென்னை சங்கமம் நடத்தப்படுமா...? என்று தெரியாத  நிலையில், சென்னை புத்தகக் காட்சிக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...! 


Share/Bookmark

2 கருத்துகள் :

துரைடேனியல் சொன்னது…

Arumaiyana thagaval. Nanri. Intha thadavai Naanum varalaam enru ninaithu irukkiren.
Tamilmanam vote 1.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி துரை டேனியல்.

வாருங்கள் வந்து அந்த இன்பத்தை அனுபவியுங்கள். புத்தகக் காட்சி மறக்க இயலாத அனுபவத்தைத் தரும்.