வெள்ளி, டிசம்பர் 30, 2011

'புயலைத் தொடரும் புதிய தலைமுறை!'

"தானாக வந்த 'தானே' புயலை தனதாக்கிக் கொண்ட புதிய தலைமுறை." 

      
    குறுகிய காலத்தில் முதல் இடத்திற்கு வந்த 'புதிய தலைமுறை' செய்தி சானல் 'தானே' புயலுக்கு சுற்றி சுழன்று செய்திகளை வழங்கியது.  தமிழகம் முழுவதும் தனது நிருபர் படையை முடுக்கிவிட்டு புயலை கவர் செய்தது  பு.த.,


நாகைமாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து அதன் நிருபர் ராமானுஜம் கொட்டும் மழையிலும் சுழன்று அடிக்கும் காற்றிலும், கடற்கரையோரம் நின்று கொண்டு செய்திகளை வழங்கிக் கொண்டு இருந்தார். பாவம் அவர்களால் காமிராவை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பக் கூட முடியவில்லை.  அப்படி ஒரு காற்று. 


செய்திகளை மெரினாவில் இருந்து செய்திகளை வழங்கிக் கொண்டு இருந்த அதன் நிருபர் மதிவாணன், அடுத்த காட்சியில் கலங்கரை   விளக்கிலிருந்துை வழங்கினார்.  காற்று அவரை அலேக்காக  தூக்கிக் கொண்டு போய்விடும்போல் இருந்தது. அப்படி ஒரு வேகம்.   இருந்தும் 'கழகு'ப் பார்வையில் மெரீனா கடற்கரை,  ஐஜி  அலுவலகம் கடற்கரை சாலை என்று
அழகாகக்  காட்டினார்கள்.  அந்த உயரத்தில், அடிக்கும் காற்றில் எப்படித்தான் பேசினார் என்று தெரியவில்லை.  வெள்ளம் சூழ்ந்த மெரீனாவைப் பார்க்கும்போது சுனாமிதான் ஞாபகத்தில் வந்தது.ஸ்டுடியோவிலிருந்து வெங்கட் மிக நேர்த்தியாக அனைவரிடமும் செய்திகளை கறந்துக் கொண்டு இருந்தார். 

இன்னொரு பக்கம் வானிலை ஆய்வு மையத்திலிருந்து  ரமணனை இம்சை செய்து,  வினாடிக்கு வினாடி  செய்திகளை வழங்கிக் கொண்டு இருந்தார் திவ்யா.  அது எத்தகைய கடினமானப் பணி என்பது நமக்கு நன்றாகவேத் தெரிகிறது.   

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் கடற்கரையோரம் நின்று செய்திகளை வழங்குவதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இருந்து அதை சிறப்பாகவே செய்தது புதிய தலைமுறை.  இப் பணி தொடர வாழ்த்துகள்.கொசுறு: சொட்ட சொட்ட நனைந்தப்படி செய்திகளை வழங்கிய ராமானுஜம், பின்னர் ரெயின் கோட் போட்டிருந்தார்.   நல்லவேளை!.

 

 

Share/Bookmark

6 கருத்துகள் :

suryajeeva சொன்னது…

உண்மையில் லோக்பால் மசோதா என்ன ஆச்சு என்று செய்தி எதிர்பார்த்து, வெறும் புயலை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க கடுப்பாக இருந்தது

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.
உங்களுக்கும், புதிய தலைமுறைக்கும் எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

REALY PUTHIYA THALAIMURAI NEWS IS GOOD MATHIVAANAN ,VENKAT,POORNIMA,RAJI, UDAYASURYA AND ALL NEWS READERS,NEWS CAPTURES R GOOD SMALL COMPARISION PUTHIYA THALAIMURAI BETWEEN STAR VIJAY MATHIVAANAN-GOPINATH. POORNIMA- D D. HARI-SIVAKARTHIKEYAN. AND BEST WISHES TO PUTHIYA THALAIMURAI

indianist சொன்னது…

how to watch Puthiya thalaimurai tv channel in mobile?

vimala rani சொன்னது…

The news of Puthiya Thalaimurai is very nice and how to get Puthiya Thalaimurai live in mobile is there any software.....

nirmaladevi சொன்னது…

Puthiya Thalaimurai News Online is very nice and I love this channel.....