செவ்வாய், டிசம்பர் 06, 2011

சென்னையைச் சுற்றி நான் எடுத்த புகைப்படங்கள்....

 நமக்கு சென்னையை நீள அகலத்தில் அளக்கிற வேலை!. அதாங்க... மார்கெட்டிங் ஜாப். எங்க எதப் பார்த்தாலும் உடனே....ஒரு 'கிளிக்'. அப்படி சென்னையை சுற்றி அவ்வப்போது  நான் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...



'மெரீனாவில் எல்லோரும் ஜோடியோடு இருக்க...இந்த பனைமரம் மட்டும் தனிமையாய்...'


 
'உழைப்பின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்திய உழைப்பாளர் சிலை'

 
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும், எம்ஜிஆர்.
அது முடிந்த பின்னால்.... உறங்கும் இடம் இது...!
'கல்லறையில் காதுவச்சி கேட்டா....கடிகாரம் சத்தம் கேட்குமா....?'

 

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால்.
இப்போது புதிய சட்டமன்றக் கட்டிடத்தில் மறைந்திருக்கிறது.
  



தேவாலயத்தை சுற்றி கல்லறைகள்!: ஆங்கிலேயே அதிகாரிகளின் கல்லறைகள் தேவாலயத்தைச் சுற்றி தரையில் புதைக்கப்பற்றிருக்கிறது. (அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது) சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் எடுக்கப் பட்ட படம்.





சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் எடுக்கப் பட்ட படம்.  நந்தவனம்....

 
வடபழனி சரவணா பவன் ஹோட்டல் வாசலில் உள்ள ஈச்ச மரம்.


நேப்பியர் பாலத்திற்கு அருகில் உள்ள கூவம் ஆற்றின் முகத்துவாரம். இந்த பாலத்தை நீங்கள் நிறைய திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்.


சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகில் இருக்கும்,  போர் வீரர்கள் நினைவுத் தூண்.  
விஜிபி தங்க கடற்கரையில் வரிசை கட்டி நிற்கும் சிலைகள்.
நேப்பியார் பாலம். சினிமாவில் சென்னையின் அடையாளமாகக் காட்டப்படுகிறது...!

நேப்பியார் பாலம் லாங் ஷாட்!

அடையார் (ஆறு) கடலில் கலக்கும் கழி முகத்துவாரம்.

சென்னையில் ராஜஅண்ணாமலை புரத்தில் உள்ள ஒன்பது மாடி கட்டிடத்தில் இருந்து எடுத்தது.

சென்னையின் முக்கிய அடையாளம். LIC

திருநெல்வேலியிலிருந்து
 மதுரை செல்லும் சாலையில் இந்த பிரமாண்டமான முனிஸ்வரர் சிலை இருக்கிறது.... என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சாக்ஷாத் சென்னை நகரின் மத்தியில் இப்படி ஒரு சிலை இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
விபரம் அடுத்தப் பதிவில்....!



"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அண்ணா சொன்னது;


அது படும்பாடு நீங்கள் அறிந்தது...! "


 

10 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

படங்கள் நல்லாயிருக்குது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி யோகன்!

பூங்குழலி சொன்னது…

ராஜாஜி ஹாலை இடித்து விட்டார்கள் என நினைத்திருந்தேன் .அண்ணா நகரில் இப்படியொரு அய்யனார் சிலை இருக்கிறது ,,டவருக்கு செல்லும் வழியில் ...நல்ல பதிவு

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

கருத்திட்டமைக்கு நன்றி பூங்குழலி!
அண்ணா நகரில் ஒரு சிலை இருக்கிறது, நானும் பார்த்தேன்.

இந்த சிலை இருப்பது-----------------?
விபரம் அடுத்த பதிவில்.

('ரொம்பத்தான்....!' அப்படின்னு திட்ட வேண்டாம்.)

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

உங்களுக்குள்ள ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் ஒளிஞ்சிட்டிருக்கார் போலிருக்கே? :)

SURYAJEEVA சொன்னது…

மார்கெடிங் வேலையில் ரசிக்கத் தக்க பல விஷயங்கள் கிடைக்குமே... அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழரே

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

// உங்களுக்குள்ள ஒரு நல்ல
ஒளிப்பதிவாளர்
ஒளிஞ்சிட்டிருக்கார் போலிருக்கே? :) //

நன்றி சுரேஷ்.

எல்லாம் நுனிப் புல்தான்.! எதையும் முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை!?. என்று நினைக்கிறன்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி சூர்யா ஜீவா, மார்க்கெட்டிங் வேலையில் ரசிக்கத் தக்க பல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன....!
அதுவும் ஊடக மார்க்கெட்டிங் என்கின்றபோது சுவாரசியத்துக்கு அளவில்லை.

நேரம் வரும்போது பதிகின்றேன்.

rishvan சொன்னது…

nice clicks.... thanks to share.... www.rishvan.com

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

Thanks Rishvan.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...