செவ்வாய், மே 19, 2009

தீமை வந்த போதிலே, திகைத்து நிற்க வேண்டாம்...

தினமணியில் மே 19 இல் வந்த ஒரு கவிதை மனதை நெகிழச் செய்தது. தேன்கூடு என்ற தலைப்பில் ஒன்பதாம் பக்கத்தில் இக் கவிதை வெளிவந்துள்ளது. ஐம்பதுகளில் வெளிவந்த இக்கவிதை இன்றும் பொருந்துகிறது. இது மாவீரன் பிரபாகரனுக்காக....

-மரங்களடர்ந்த ஒரு காடு சூரியன் நடுவானத்திற்கு வரும் சமயம். ஒரு குறவன் ஒவ்வரு மரமாக பார்த்துக் கொண்டு வருகிறான். சிறு கத்தி, எண்ணைதுணி, தீப்பெட்டி சகிதமாக ஒரு பாளை கூடையில் அவன் முதுகில் தொங்குகிறது. கையில் நீண்ட கோல். இவ்வாறு வரும் அவனது கண்களில் ஒரு மரக்கொம்பில் தொங்கும் ஒரு பெரிய தேன்கூடு படுகிறது.
கையில் உள்ள நீண்ட கோலால்எண்ணை துணி சுற்றி தீ வைத்து தேன் கூட்டுக்கு காட்டுகிறான். வெம்மை தாளாமல் கும்பலாக தேனீ க்கள் வெருண்டு எழுந்து பறக்கின்றன. உடலும், சிறகும் கருகி சில தேனீ க்கள் வீழ்கின்றன. புகை, கூட்டை முடி சூழ் கின்றது.
தேனீ க்கள் கலங்கி சிதற அப்போது ஒரு தேனீ மட்டும், அந்த மனிதன் செய்த கொடுமையை தம் இனத்தார் எதிர்க்காமல் உயிருக்கு அஞ்சி ஓடும் பேதமையை கண்டு பெருஞ் சினத்தோடு ஒரு கிளையில் அமர்ந்து மாற்ற தேனீ க்களை கூவி அழைக்கிறது...

"தீமை வந்த போதிலே
திகைத்து நெஞ்சம் வாடுதல்
காமு கற்வாய் வீரர்கள்
கயவர் செய்கை அல்லவோ?
நாமிங் கென்ன கோடிநாள்
நலிவு ராமல் வாழ்வோமோ?
பூமி எங்கும் சுடலை யாயிஇப்
போகு மோநம் சாவினால்?

மலர்கள் எங்கும் தாவியே
மனம் சலிக்க நாமெல்லாம்
பல தினங்கள் தேடியே
பாது காத்த தேனீது
கலகம் செய்து பெற்றோமோ?
களவு செய்து வந்ததோ?
விலகி நின்றம் மனிதன் தீ
வீச அஞ்சி ஓடுவீர்?

அச்சம் மீறி ஓடிடும்
ஆண்மை யற்ற பேடிகால் !
துச்சம் ஆகும் இவுயிர்
துணிவு கொண்டு தாக்குவோம்!
பச்சை ரத்தம் பொங்கியப்
பாவி தேகம் சேர்ந்திடப்
பிச்செரிந்து போரிலே
பெருமை யோடு மாலுவோம்!"
-நன்றி தினமணி

நான் அடித்ததில் சிற்சில எழுத்துப் பிழைகள் உள்ளன. பொறுத்த அருள்க
- அன்புடன்
தோழன் மபா

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...